0 9
சிவகங்கை மாவட்ட கிராம வழக்கு மன்றங்கள்
காரைககுழ ௮ழகபபா பலகலைககழக முனைவர் படடததீறகாக
(Ph.D) அளிக்கபெறும் ஆய்வேடு
ஆயவாளர்
R.ஒளங்கோ
பகீவு எண் : ௮4/,HD517/9285
நெறியாளர்
முனைவா மு.பாண்டி
பக பலக உ We
9
ர ALAGAPPA படுப்பா.
தமிழ்த்துறை அழகப்பா பல்கலைக்கழகம்
காரைக்குடி
ருவம்பர் 2005
முனைவர் மு.பாண்டி எம்.ஏ., எம்.,ஏ., எம்.ஃபில்., பி.எச்.டி. இணைப்பேராசிரியர்,
தமிழ்த்துறை, அழகப்பா பல்கலைக்கழகம், காரைக்குடி-630 003.
மேற்பார்வையாளர் சான்றிதழ்
“சிவகங்கை மாவட்ட கிராம வழக்கு மன்றங்கள்” என்னும் பொருளில் முனைவர் (1.1.) பட்டத்திற்காக திரு. ஆர். இளங்கோ அவர்கள் செய்துள்ள இவ்வாய்வு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறையில் (பகுதிநேரம்) அவரால் தன்னியலாகச் செய்யப்பட்டது என்றும், இவ்வாய்வின் மீது வேறு எந்தப்பட்டமும் ஆய்வாளருக்கு அளிக்கப்படவில்லை என்றும், நான் அறிந்தவரை இப்பொருளில் இதுவரை வேறு எவரும் ஆய்வு செய்யவில்லை என்றும் உறுதியளிக்கின்றேன்.
இடம்: காரைக்குடி தட் நாள் : த [1,05 / ம ண் Dd
மேற்பார்வையாளர்.
௬ அ பக்க றகுழ் கரைககுடி-030 005, வஇறைத்தலை
, தமிழ்த்துறை, அழகப்பா பல்கலைக்கழகம் வாரைக்குடி-630 004.
R. இளங்கோ எம்.ஏ, எம்.ஏ., எம்ஃபில்., எம்.எட்., பி.எல்., முதுநிலை விரிவுரையாளர்,
ஆறுமுகம்பிள்ளை சீதையம்மாள் கல்லூரி,
திருப்பத்தூர்.
ஆய்வாளரின் உறுதிமொழி
“சிவகங்கை மாவட்ட கிராம வழக்கு மன்றங்கள் என்னும் பொருளில் முனைவர் (11%.19.) பட்டத்திற்காகச் செய்யப்பட்டுள்ள இவ் ஆய்வு என் சொந்த முயற்சியில் உருவானதேயாகும். இதற்குமுன் வேறு எந்த ஆராய்ச்சிப் பட்டத்திற்கும் இவ் ஆய்வேடு அளிக்கப்படவில்லை என்று உறுதி
கூறுகின்றேன்.
இடம்: காரைக்குடி
நாள் : 03 11.0? 3: இஃ ப (RK. இளங்கோ) ஆய்வாளர் உறுதிக் கையொப்பம்.
ஞா ர் ரி 8. அர பதன்
| சடா) மாயா] ரசி
நன்றியுரை
சிவகங்கை மாவட்ட கிராம வழக்கு மன்றங்கள்'' என்னும் தலைப்பில் ஆய்வினை மேற்கொள்ளுவதற்கு ஒப்புதல் அளித்த காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் அவர்களுக்கும் பதிவாளர் அவர்களுக்கும், நன்றி.
காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் பகுதிநேர ஆய்வாளராச் சேர்ந்து "சிவகங்கை மாவட்ட கிராம வழக்கு மன்றங்கள்'' என்னும் தலைப்பில் ஆய்வு மேற்கொள்ளுவதற்கு ஒப்புதல் அளித்த அழகப்பா பல்கலைக்கழகத் தமிழ்த்துறைத் துறைத்தலைவர் முனைவர் மு.பாண்டி அவர்களுக்கு என் உள்ளார்ந்த நன்றியினை
தெரிவித்துக்கொள்கிறேன்.
காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் பகுதிநேர ஆய்வாளராகச் சேர்ந்து முனைவர் பட்டத்திற்காக ஆய்வு செய்வதற்கு இசைவளித்துப் பல்லாற்றானும் ஊக்கப்படுத்திய திருப்பத்தூர் ஆறுமுகம்பிள்ளை சீதையம்மாள் கல்லூரியின் தாளாளர் நா. ராமேஷ்வரன் அவர்களுக்கும் கல்லூரியின் முதல்வர் அவர்களுக்கும்
பெரிதும் நன்றி,
இவ் ஆய்வுமுயற்சி தொடங்கப்பெற்று முழுமைப்பெறத் தோன்றாத் துணையாய் விளங்கிய எனது ஆய்வு நெறியாளர் முனைவர் மு.பாண்டி அவர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றியை உரித்தாக்குகிறேன்.
ஆய்வு தொடங்கிய நாள் முதல் பல்லாற்றானும் உதவிகள் புரிந்தும், தட்டச்சுப் படிகளைத் திருத்தியும் உதவிய மதுரை யாதவர் கல்லூரித் தமிழ்
உயராய்வு மையத்தின் பேருரையாளர் முனைவர் வீ. மோகன் அவர்களுக்கும் என் அன்பு கலந்த நன்றியினை உரித்தாக்குகின்றேன்.
கள ஆய்வில் தகவல் சேகரிப்பின் போது வேண்டிய தகவல்களைக் கொடுத்துதவிய தகவலாளர்களுக்கும் என் நன்றியைக் தெரிவித்துக்கொள்கிறேன்.
ஆய்வுக்கு வேண்டி நூல்களைக் கொடுத்துதவிய மதுரை காமராசர் பல்கலைக்கழக நூலகத்தார்க்கும், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக நூலகத்தாருக்கும் மதுரை மத்திய நூலகத்தார்க்கும், திருப்பத்தூர் ஆறுமுகம்பிள்ளை சீதையம்மாள் கல்லூரி நூலகத்தாருக்கும் என் நன்றி.
ஆய்வேட்டினைத் தெளிவாகவும் செம்மையாகவும் தட்டச்சுச் செய்து
கொடுத்துதவிய மதுரை அழகர் கம்ப்யூட்டர்ஸ் நிறுவனத்தார்க்கும் நன்றி.
R. இளங்கோ
சுருக்கக் குறியீட்டு விளக்கம் அகநானூறு இளம்பூரணர் உரையாசிரியர் கலித்தொகை திருநெல்வேலி, தென்னிந்திய சைவ நூற்பதிப்புக் கழகம் கிளவியாக்கம் திருக்குறள் குறுந்தொகை சிலப்பதிகாரம் செய்யுள் சொல்லதிகாரம் திருமுருகாற்றுப்படை தொகுப்பாசிரியர் தொல்காப்பியம் நீச்சினார்க்கினிய௰ர் நற்றிணை நாலடியார்
பக்கம்
பக்கங்கள் பட்டினப்பாலை பதிப்பாசிரியர் பாடல் எண் பற்நானூறு
பெரும்பாணாற்றுப்படை
சித்தாந்த
இயல்
உள்ளுறை
ஆய்வு அறிமுகம்
கிராம வழக்கு மன்றங்களின் தோற்றமும் வளர்ச்சியும்
சிவகங்கை மாவட்டக் கிராம வழக்கு மன்றப் பஞ்சாயத்துக்களின் வகைகள்
கிராம வழக்குகளின் வகைகள்
சிவகங்கை மாவட்டக் கிராம வழக்கு மன்றங்களின் செயற்பாடுகள்
சிவகங்கை மாவட்டக் கிராம வழக்கு மன்றங்களும்
இக்காலச் சட்டநடைமுறைகளும்-ஒப்பீடு
சிவகங்கை மாவட்டக் கிராம வழக்கு மன்ற வழக்குகளும் மக்கள் வாழ்வியலும்
முடிவுரை
துணைநாற்பட்டியல் பின்னிணைப்புக்கள் பின்னிணைப்பு-[- தகவலாளர் பட்டியல்
பின்னிணைப்டு-11- தகவலாளர் பட்டியல்
பின்னிணைப்பு-111-கள ஆய்வு ஊர்களின் பட்டியல்
பின்னிணைப்பு-1V- அடிக்குறிப்புக்கள்
பின்னிணைப்பு--புகைப்படம் மற்றும் வரைபடம்
பின்னிணைப்பு-V1- கள ஆய்வில் சேகரித்த வழக்குகள்
பக்கம் 1-9 10-88
89-115
16-193 194-266
267-310
௮11-380
381-389 390-406
ஆயவு அறிமுகம்
ஆய்வு அறிமுகம்
மனிதனுடைய தேவைகள் மனிதனைச் சமூக உயிரியாக மாற்றி இருக்கின்றன. மனிதன் கூடிவாழும் போது தன் தேவைகளை நிறைவு செய்து கொள்ளவும், தங்களுக்குள் ஏற்படும் சிக்கல்களையும், பிணக்குகளையும் தீர்த்துக் கொள்ளவும் ஒரு குழுவை அமைத்தான். அக்குழு கால வளர்ச்சியில் சமூக அமைப்பாக உருவாகியது. சமூக வளர்ச்சியில் 'அரசு' என்ற நிருவாக அமைப்புத் தோன்றியது. சமூக அமைப்பு முறை ஒழுங்கு பெறவும், அரசு நிருவாகம் முறையாகச் செயல்படவும் அடித்தளமாக அமைந்தவை சிற்றூர்கள் ஆகும். சிற்றூர் மக்களின் வாழ்வியல் நெறிமுறைகளை, ஒழுக்கங்களை பண்பாட்டினைப் பேணிக்காக்கவும், சமுதாயக் கட்டுக்கோப்பை ஒழுங்குபடுத்தி, மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்காகவும் 'கிராம வழக்கு மன்றங்கள்' தோன்றின. இம்மன்றங்கள் 'அரசு' என்ற அமைப்புத் தோன்றுவதற்கு முன்னரே கிராமங்களில் தோன்றியவை. இம்மன்றங்களே தொன்று தொட்டுக் கிராமங்களில் 'ஊராட்சி முறை' செழிக்கக் காரணமாயின. ஆய்வுப் பொருள்
'நாட்டுப்புறவியல்' என்பது பல்வேறு கூறுகளைத் தன்னகத்தே கொண்டது. 'கிராம வழக்கு மன்றங்கள்' நாட்டுப்புறவியலின் அடிப்படைக் கூறுகளுள் ஒன்றாகும். அம்மன்றங்கள் நாட்டுப்புற மக்களின் வாழ்க்கை முறைகளையும், சமூகப் பண்பாட்டுப் பழக்க வழக்கக் கூறுகளையும் தன்னகத்தே கொண்டு திகழ்வன. வட்டாரத்திற்கு வட்டாரம் தனித்தன்மைகள் உண்டு. சிவகங்கை மாவட்ட மக்களின் வாழ்க்கை முறைகளையும் பண்பாட்டுக் கூறுகளையும் கண்டறியும் நோக்கில்
“சிவகங்கை மாவட்ட கிராம வழக்கு மன்றங்கள்” என்பது ஆய்வுத் தலைப்பாக
அமைகின்றது. ஒரு வட்டாரப் பகுதியில் வாழும் மக்களின் பண்பாட்டையும், கிராம வழக்கு மன்றங்களின் நடைமுறைகளையும் ஆய்வு செய்யும் நோக்கிலும், கால அளவு கருதியும் சிவகங்கை மாவட்ட கிராமங்களிலுள்ள வழக்கு மன்றங்கள் என்று ஆய்வுப்பொருள் வரையறை செய்யப்பட்டுள்ளது. இம்மாவட்டம் பல்வேறு இன மக்களும், வேளாண்மையை முதன்மைத் தொழிலாகக் கொண்ட பொருளாதார நிலையில் ஏற்றத்தாழ்வுகளைக் கொண்ட மக்களும் வாழும் பகுதியாகும். சிற்றூர், நாட்டுப்புறம், ஊரகம், கிராமம் என்ற பலசொற்கள் ஊரைக்குறித்த போதிலும் 'கிராமம்' என்ற சொல் பெருவழக்காக இருப்பதால் இச்சொல் கையாளப்பெற்றுள்ளது. ஆம்வின் நோக்கம்
பழங்குடி மக்களின் பண்பாட்டு வடிவங்களாகவும் பழக்க வழக்கங்களின் எச்சங்களாகவும் விஞ்சியிருப்பவை கிராம வழக்கு மன்றங்களாகும். 'பஞ்சாயத்து' என்பது 'சிற்றூர் வழக்கு மன்றம்' என்றும், 'கிராம வழக்கு மன்றம்' என்றும் அழைக்கப்படுகின்றது, அது ஐந்திற்கும் மேற்பட்ட நடுநிலையான ஊர்ப்பெரியவர்கள் கூடி விவாதிக்கும் 'நியாய சபை' யாகும். ஒரே பண்பாட்டு இயல்புடைய சிற்றூரைச்சேர்ந்தவர்கள் அவர்களுக்குள் தோன்றும் சிக்கல்களைத் தீர்க்க ஏற்படுத்தப்பட்ட அமைப்பு 'சிற்றூர்ப் பஞ்சாயத்து' ஆகும். அது கிராம மக்களின் வழக்காடு மன்றமாக அமைந்திருப்பதால் அதனைக் 'கிராம வழக்காடு எனக் குறிப்பிடுவர். பழங்காலத்தில் மனிதர்கள் நாடோடிகளாகக் காடுகளில் வேட்டைத் தொழிலை மேற்கொண்டு வாழ்ந்து வந்தார்கள். பின்னர் நீர்நிலைகள் கொண்ட செழிப்பான ஆற்றுப் பகுதிகளை நாடி ஓரிடத்தில் நிலையாகத் தங்கி வாழத் தொடங்கினர்கள். இவ்வாறு மனிதர்கள் கூட்டம் கூட்டமாக வாழத் தொடங்கிய
வாழ்க்கை முறையினையே வரலாற்று ஆய்வாளர்கள் 'இனக்குழு' வாழ்க்கை முறை
எனச் சுட்டிக் காட்டியுள்ளனர். இவ்வாழ்க்கை முறையில் மனிதன் தமக்கென்று வீடுகளை கட்டி வாழத்தலைப்பட்டான். இவ்வாறு ஓரிடத்தில் நிலையாக வாழ்ந்த இனக்குழுவே பின்னர் சிற்றூராகப் பரிமாண வளர்ச்சி பெற்றது. 'வழக்கு மன்றம்" என்ற அமைப்பு முறையானது கிராமம் என்ற அமைப்பு மனிதன் கூடி வாழத் தலைப்பட்ட போது தோன்றியிருக்க வேண்டும். அம்மன்றங்கள் கிராம மக்களிடையே ஏற்பட்ட சிறு சிறு சிக்கல்களையும், கிராமக் குழுக்களிடையே ஏற்பட்ட சிக்கல்களையும் தீர்க்கும் நோக்கத்தைக் கருத்தில் கொண்டு தோன்றியுள்ளது.
இலக்கியம் மற்றும் கல்வெட்டுச் சான்றுகளைக் கொண்டு நோக்கும் போது (கிராம) சிற்றூர் வழக்கு மன்றங்கள் 'மன்றம்' 'பொதியில்' 'அம்பலம்' 'அவை' 'அறங்கூறவையம்' 'அறக்களம்' முதலான பல்வேறு பெயர்களில் சங்ககாலம் முதல் சோழர் காலம் வரையில் தொடர்ந்து இருந்து வந்துள்ளமையை அறியமுடிகிறது. இச்சிற்றுூர் வழக்கு மன்றங்கள், நீதிமன்றங்கள் பெருகியுள்ள தற்காலத்திலும் மக்களின் நம்பிக்கையைப் பெற்றிருப்பது சுட்டத்தக்கதாகும். இக்கிராம வழக்கு மன்றங்களின் அமைப்புமுறைகள், செயற்பாடுகள், பணிகள், நீதி வழங்கும்முறைகள், தண்டனைகள் ஆகியவற்றைக் கண்டறிந்து வெளிப்படுத்துவதும், இக்கிராம வழக்கு மன்றங்களின் மூலமாக வெளிப்படலாகும் மக்களின் வாழ்க்கை முறைகளையும் பண்பாட்டுக் கூறுகளையும் எடுத்துரைப்பதும் இவ் ஆய்வின் நோக்கமாகும். இவ்வாய்வில் கிராம வழக்கு மன்றங்கள் என்பது சிவகங்கை மாவட்ட கிராம வழக்கு மன்றங்களையே குறிக்கும். ஆய்வுக்களம்
இவ் ஆய்வின் களமாக சிவகங்கை மாவட்ட ஊர்கள் (கிராமங்கள்)
அமைகின்றன. சிவகங்கை மாவட்டத்தில் இளையாண்குடி, மானாமதுரை,
சிவகங்கை, தேவகோட்டை, காரைக்குடி, திருப்பத்தூர், ஆகிய ஆறு வருவாய் வட்டங்களும், இளையாண்குடி, காளையார் கோவில், மானாமதுரை, திருப்புவனம், சிவகங்கை, கல்லல், கண்ணங்குடி, தேவகோட்டை, சாக்கோட்டை, திருப்பத்தூர், சிங்கம்புணரி ஆகிய பதினொன்று ஒன்றியங்களும் அமைந்துள்ளன. இவற்றுள் சாக்கோட்டை, தேவகோட்டை, கண்ணங்குடி, ஆகிய மூன்று ஒன்றியங்கள் நீங்கலாக எஞ்சியுள்ள எட்டு ஒன்றியங்களில் அமைந்துள்ள கிராமங்கள் அடங்கிய பகுதியே இந்த ஆய்விற்குரிய களம் ஆகும், இந்தக் கிராமங்களுள் 120 கிராமங்களை மாதிரி முறையில் (Sவஹழliறஜ Methods) தெரிவு செய்து முந்நூற்றுக்கும் மேற்பட்ட தகவலாளர்களைச் சந்தித்துப் பேட்டிகளின் மூலம் ஆய்விற்குரிய அடிப்படைத் தகவல்கள் திரட்டப்பட்டுள்ளன.
ஆய்வு முன்னோடிகள் கிராம மக்கள் பண்பாடு மிக்க கண்ணியமான மரபு வாழ்க்கையினை
வாழ்பவர்கள். அவர்கள் தங்கள் உடல் உழைப்பில் சமூகத் தேவைகளைக் கூட்டுறவுடன் நிறைவேற்றி வாழ்ந்து வருபவர்கள். அவர்கள் வாழ்வியலை நெறிப்படுத்தி ஒழுங்கு முறையில் அமைவதற்குக் 'கிராம வழக்கு மன்றங்கள்' துணைநிற்கின்றன. தமிழகத்தில் இதுவரை ஒன்றிய, வட்டார அளவில் சில எம்ஃபில், ஆய்வுகளும், கட்டுரைகளும் இப்பொருள் பற்றி வெளி வந்துள்ளன. சான்றுகளாக, சு. காவேரி, மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் 'சட்டத் தமிழ்' (1987) என்ற தலைப்பில் எம்ஃபில், பட்டத்திற்காகவும், வே. முருகேஸ்வரி, மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் 'சிற்றூார் வழக்கு மன்றத்தின் அமைப்பும் செயல்பாடும்' (1955) என்னும் தலைப்பில் எம்ஃபில், பட்டத்திற்காகவும் சமர்ப்பித்துள்ள ஆய்வேடுகளைக் குறிப்பிடலாம். மாவட்ட அளவில் சிவகங்கை மாவட்ட வழக்கு மன்றங்கள் பற்றிய இவ் ஆய்வே முதல் முன்னோடி ஆய்வாக
அமைகின்றது.
ஆய்வு ஆதாரங்கள் (SOURCES)
முதன்மை ஆதாரங்கள் (Primary Sources)
சிவகங்கை மாவட்டத்திலுள்ள ஆறு வட்டங்களில் 120 கிராமங்களில் வாழும் கள்ளர், தேவர், அகமுடையார், மறவர், கோனார், செட்டியார், நாடார், நாயுடு, முதலியார், கவுண்டர், பிள்ளை, (வெள்ளாளர், துளுவ வெள்ளாளர்), ரெட்டியார், பண்டாரம், குயவர், ஆசாரி, பள்ளர், பறையர், சக்கிலியர், குறவர், சாணார், பளியர் ஆகிய சாதியினரைச் சேர்ந்த முந்நூறுக்கும் மேற்பட்ட தகவலாளர்களிடம் பேட்டியின் மூலம் (ரீ) பெற்றப்பட்ட கிராம வழக்குகள், வழக்குகள் தொடர்பான தகவல்கள் இவ்ஆய்வின் முதன்மைச் சான்றாதாரங்களாகும். கிராம வழக்கு மன்றங்களின் நடைமுறைகள், செயற்பாடுகள், பணிகள், தீர்ப்பு வழங்கும் முறை, தண்டனைகள், தண்டனைகளை நிறைவேற்றும் முறை ஆகியனவற்றில் ஆய்வாளர் உற்று நோக்குதலின் மூலம் (Participatant Observation) கண்டறிந்த
தகவல்களும் இந்த ஆய்விற்கு முதன்மைச் சான்றாதாரங்களாகும். துணைமை ஆதாரங்கள் (Secondary Sources)
இவ்ஆய்வுப் பொருள் தொடர்பாக இதுகாறும் வெளிவந்துள்ள இலக்கியங்கள், வரலாற்றுச் சான்றுகள், கல்வெட்டுக்கள், திறனாய்வு நூல்கள், ஆய்வுக் கட்டுரைகள், இதழ்களில் இடம் பெற்ற செய்திகள் ஆகியன துணைமைச் சான்றுகளாகக் கொள்ளப்பட்டுள்ளன. ஆய்வு அணுகுமுறைகள் (Approaches)
கிராம வழக்கு மன்றங்களின் தோற்றம் மற்றும் வளர்நிலைக் காணும் நிலையில் வரலாற்றியல் அணுகுமுறையும் (Historical Apறpறr௦ach), நாட்டுப்புற
மக்களின் வாழ்வியலைக் காணும் வகையில் சமுதாயவியல் அணுகுமுறையும்
(Sociological Approach), வழக்குகளிலும் பாதிக்கப்பட்ட மற்றும் தண்டனை பெற்றவர்களின் மன உணர்வுகளை வெளிக்கொணரும் பொருட்டு உளவியல் அணுகுமுறையும் (Psychological Approach) பயன்படுத்தப்பட்டுள்ளன. கிராம வழக்கு மன்றங்கள் பற்றிய ஆய்வாகையால் நாட்டுப்புறவியல் நெறிமுறையில் (Folklore Research Methodology) தேவையான இடங்களில் பகுப்புமுறைத் திறனாய்வும் (Analytical Criticism), விளக்கமுறைத் திறனாய்வும் (Descriptive Criticism) பின்பற்றப்பட்டுள்ளன. இயல் பகுப்பு
ஆய்வேடு முன்னுரை, ஆய்வு முடிவுரை நீங்கலாகப் பின்வரும் ஆறு இயல்களை உள்ளடக்கியுள்ளது.
1. கிராம வழக்கு மன்றங்கள் - தோற்றமும் வளர்ச்சியும்
2. கிராம வழக்கு மன்றங்களின் வகைகள்
லீ. கிராம வழக்குகளின் வகைகள்
4. சிவகங்கை மாவட்ட கிராம வழக்கு மன்றங்களின் செயல்பாடுகள்
ல. சிவகங்கை மாவட்ட கிராம வழக்கு மன்றங்களும் இக்காலச் சட்ட
நடைமுறைகளும் - ஒப்பீடு
6. சிவகங்கை மாவட்ட கிராம வழக்கு மன்றங்களும் மக்கள் வாழ்வியலும் ஆய்வு அறிமுகம்
ஆய்வு அறிமுகத்தில் ஆய்வுப் பொருள், நோக்கம், களம், முன்னோடிகள்,
ஆதாரங்கள் (முதன்மை, துணைமை), அணுகுமுறைகள், இயல்பகுப்பு பற்றிய
செய்திகள் விளக்கப்பட்டுள்ளன.
'கிராம வழக்கு மன்றங்களின் தோற்றமும் வளர்ச்சியும்! என்னும் முதல் இயலில் 'பஞ்சாயத்து' சொல்லும் பொருளும், இனக்குழுச் சமுதாய வாழ்க்கை, கிராமங்களின் தோற்றம், தொல்காப்பியர் காலம் முதல் ஆங்கிலேயர் காலம் வரை கிராம வழக்கு மன்றங்களின் வளர்ச்சி, நீதிமுறை, அரசு நீதி மன்றங்களின் தோற்றமும் செயல்பாடுகளும், கிராம வழக்கு மன்றங்கள் பற்றிய வரலாறு கல்வெட்டுச் சான்றுகள், தமிழ் இலக்கியங்களில் காணப்படும் வழக்கு மன்றங்கள் பற்றிய சிந்தனைகள் இடம் பெற்றுள்ளன.
'திராம வழக்கு மன்றங்களின் வகைகள்' என்னும் இரண்டாம் இயலில் அமைப்பு விளக்கம், சிற்றூர் வழக்கு மன்றத்தின் அமைப்பு, குடும்பப் பஞ்சாயத்து, சாதிப்பஞ்சாயத்து, ஊர்ப்பஞ்சாயத்து, கிராமப் பஞ்சாயத்து, நாட்டுப் பஞ்சாயத்து ஆகிய பஞ்சாயத்துக்களின் அமைப்பு முறை வகை தொகைப்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளன.
'கிராம வழக்குகளின் வகைகள்' என்னும் மூன்றாம் இயலில், ஆய்வாளர் களத்தில் (Field Study) சேகரித்த வழக்குகள் வகைப்படுத்தி விளக்கப்பட்டுள்ளன. வழக்குகளின் உள்ளடக்கச்செய்திகளையும் அடிக்கருத்துக்களையும் அடிப்படையாகக் கொண்டு உரிமையியல் வழக்குகள், குற்றவியல் வழக்குகள், குடும்ப வழக்குகள், பொதுப்பிரச்சினைகள் தொடர்பான வழக்குகள் என பகுக்கப்பட்டுள்ளன.
சிவகங்கை மாவட்ட கிராம வழக்கு மன்றங்களின் செயற்பாடுகள்' என்னும் நான்காம் இயலில் வழக்குகளின் தொடக்கம், வழக்குகளை முன் வைத்தல், மண்டுப் பணம் வைத்தல், பண்டாரத்தின் மூலம் ஓலை அனுப்புதல், பரம்பரை உரிமை, அஞ்சூர் நாட்டு வழக்கு மன்றம், பஞ்சாயத்து முறை, பூவந்திக் கிராம வழக்கு மன்றம், அரசனூர்க் கிராம வழக்கு மன்றம், தமராக்கி நாட்டு வழக்கு மன்றம்,
பஞ்சாயத்தும் இளவட்டங்களும், அல்லி நகரம்-வழக்குமன்றம் சிவகங்கை ஒன்றியம்
ஆறூர் நாட்டு வழக்கு மன்றம், பாகனேரி நாட்டின் கிராமங்கள், பாகனேரிக் கள்ளர் நாடுகளும், மறவர் நாடுகளும் நாட்டுக்கூட்டம், நாட்டுக் கூட்டத்தின் செயற்பாடு, வழக்குகளைத் தீர்த்தல், கிராமக் கூட்டம், வாசல் வழி நிருவாக அமைப்பு, தேசத்தார் கூட்டம், வழக்கு விசாரணை, பிரதிவாதியின் மறுப்பு, சாட்சிகள், வழக்கு மன்ற விவாதங்கள், வழக்கு மன்றம் செயல்படும் விதம், கிராம வழக்கு மன்றங்கள்- தீர்ப்புகள் வழங்கும் முறைகள், தீர்ப்புகளை ஏற்றுக் கொள்ளுதல், தண்டனைகளின் இன்றிமையாமை, சங்ககாலத் தண்டனை முறைகளும் சிவகங்கை மாவட்ட கிராம வழக்கு மன்றங்களின் தண்டனை முறைகளும்-ஒப்பீடு என்பன பற்றிய செய்திகள் சுட்டப்பட்டுள்ளன.
"சிவகங்கை மாவட்ட கிராம வழக்கு மன்றங்களும் இக்காலச் சட்ட நடைமுறைகளும்-ஒப்பீடு' என்னும் ஐந்தாம் இயலில், நீதி மன்றம், நீதிபதி, அரசின் அதிகாரங்கள், வழக்கு வகைகள், வழக்கு முறையீடு, நீதிமன்ற நெறிமுறைச் சட்டம், நீதிமன்ற நெறிமுறை, சிவகங்கை மாவட்ட கிராம வழக்கு மன்றங்களில் முறையீடு, குற்றவியல் வழக்குகளும் உரிமையியல் வழக்குகளும், வழக்குரைப்போர் வாதி, எதிர்வாதி அல்லது பிரதிவாதி, விவாதம் நடைபெறும் முறை, சான்றுகள், சான்றுகளின் வகைகள், சான்றுகளை மதிப்பிடுதல், நீதிமன்றத்தின் முன் சான்றினை வைத்தல், மறுவிசாரணையும் மேல்முறையீடும், தீர்ப்பும் தீர்ப்பினை நிறைவேற்றுதலும், இக்கால நீதிமன்ற நடைமுறைகள், சிவகங்கை மாவட்ட கிராம வழக்கு மன்றங்களின் நடைமுறைகள்-ஒப்பீடு, கிராம வழக்கு மன்றங்களின் நன்மைகள், தீமைகள், இன்றைய நீதிமன்றச் சட்ட நெறியும் அன்றைய அறநெறியும் ஆகிய செய்திகள் தெளிவுப்படுத்தப்பட்டுள்ளன.
'சிவகங்கை மாவட்ட கிராம வழக்கு மன்ற வழக்குகளும் மக்கள் வாழ்வியலும்'
என்னும் ஆறாம் இயலில், கிராம வழக்கு மன்ற வழக்குகளின் வாயிலாக
வெளிப்படும் மக்களின் வாழ்வியல் செய்திகள் விளக்கப்பட்டுள்ளன. வழக்குத்
தொடுப்பதன் நோக்கம், பாதிப்பு, பொறாமை, பழிவாங்கல் முதலான உளவியல் காரணங்களாகும். வழக்குகளில் வெளிப்படும்-வாழ்வியல் பிரச்சினைகள் உண்மையானவை, வழக்குத் தொடுத்தல், தீர்ப்பு, முடிவு, ஏற்பு, மேல்முறையீடு, தீர்ப்பின் எதிர்பார்ப்புகள் மனநிறைவு அல்லது நிறைவின்மை போன்றவை வழக்குகளின் வெளிப்பாடுகளாகும். தீர்ப்பின் விளைவுகளாகத் தெய்வத்திடம் முறையீடு, மண்தூற்றல், பலிபோடுதல், காசு வெட்டுதல், சத்தியம் செய்தல் முதலான செயல்கள் நடைபெறுகின்றன. கிராம வழக்கு மன்றங்களின் வழக்குத் தீர்ப்பக்களை அடிப்படையாகக் கொண்டு சமூக இயக்கம் அமைகின்றது. சாதிகள் இணைப்பு, குடும்பங்கள் இணைப்பு, கிராமம், ஊர் இயக்கம் முதலான கிராம வழக்கு மன்றங்களைச் சார்ந்தும் மையமிட்டும் அமைந்துள்ளன. கிராம மக்களின் பழக்க வழக்கங்கள், உணவுகள், உடைகள், அணிகலன்கள், விழாக்கள், வழிபாடுகள், சமூக மதிப்புகள், படிநிலைகள், ஏற்றத்தாழ்வுகள், குடிகள் இருப்பிடம், ஊர் அமைப்பு, இனசாதிய வேறுபாடுகள், உறவுமுறை, பாலியல் என்ற நிலைகளிலும், தொழில்கள் உரிமைகள், கடமைகள், உரிமைகள் மறுப்பு முதலானவைகளும் இவ்வியலில் நோக்கப்பட்டுள்ளன.
'ஆய்வு முடிவுரை' என்னும் பகுதியில் 'சிவகங்கை மாவட்ட கிராம வழக்கு மன்றங்கள்' என்னும் இந்த ஆய்வில் கண்டறிந்த ஆய்வு முடிபுகள் நிரல்படத் தொகுத்துத் தரப்பட்டுள்ளன.
ஆய்வுக்குப் பயன்பட்ட தமிழ், ஆங்கில நூல்கள் அகராதிகள், இதழ்கள், கட்டுரைகள் துணைநூற்பட்டியலில் இடம் பெற்றுள்ளன.
'பின்னிணைப்பு'ப் பகுதியில் தகவலாளர் பட்டியல், களஆய்வு மேற்கொண்ட
ஊர்களின் பட்டியல், சிவகங்கை மாவட்ட வரைபடம், சேகரித்த வழக்குகள் ஆகியன
இடம்பெற்றுள்ளன.
இயல்-1 கிராம வழக்கு மன்றங்களின் தோற்றமும் வளர்ச்சியும்
இயல் - 1
கிராம வழக்கு மன்றங்களின் தோற்றமும் வளர்ச்சியும்
சிற்றூர்கள் இந்தியாவின் முதுகெலும்பாகவும் உயிர்நாடியாகவும் விளங்குகின்றன. இந்திய நடுவணரசும் 1955ஆம் ஆண்டு சிற்றூர்களின் இன்றியமையாமையைக் கருத்தில் கொண்டு சிற்றூர்களுக்குத் தன்னாட்சி உரிமையினை வழங்கியுள்ளது. பண்டைக்காலத்தில் ஒவ்வொரு சிற்றூரும் நிதி, நீதி, நிருவாகம் ஆகிய மூன்று நிலைகளிலும் தன்னிறைவு பெற்று விளங்கியுள்ளது. சிற்றூர்களை . நிருவகிப்பதற்கென்று மக்கள் தாங்களாகவே ஓர் அமைப்பினை ஏற்படுத்திக் கொண்டு நிருவாகம் செய்து வந்துள்ளனர். அது 'கிராம சுயாட்சி' என அழைக்கப்பட்டுள்ளது. பண்டைய சிற்றூர் நிருவாக அமைப்புகள் 'ஊர்ச்சபை', 'பஞ்சாயத்து மன்றம்', 'நாட்டுக்கூட்டம்' எனப் பல பெயர்களில் அழைக்கப்பட்டன. இத்தகைய அமைப்பு முறைகள் சிற்றூர் மக்களிடையே தோன்றிய சிக்கல்களுக்கும், அவர்களிடையே நிலவிய கருத்து வேறுபாடுகளினால் ஏற்பட்ட முரண்பாடுகளுக்கும் தீர்வு காண்பதற்குப் பயன்பட்டன. 'பஞ்சாயத்து' என்ற சொல்லாட்சி 'ஊராட்சி மன்றம்' என்னும் பொருளிலும், சிற்றூர் மக்களின் 'வழக்கு மன்றம்' என்னும்
பொருளிலும் இன்றும் ஆளப்பட்டு வருவதைக் காணலாம்.
இவ்வியல் 'பஞ்சாயத்து'-சொல்லும் பொருளும், வழக்கு மன்றங்களின் தோற்றம், இனக்குழுச் சமுதாய வாழ்க்கை, கிராமங்களின் தோற்றம், இலக்கியச் சான்றுகள், ஆட்சியாளர்கள் ஆட்சிமுறையில் சிற்றூர் வழக்கு மன்றங்கள், கிராம வழக்கு மன்றங்களின் தோற்றம், வளர்ச்சி நிலைகளை எடுத்துரைப்பதாக
அமைகின்றது.
'பஞ்சாயத்து' - சொல்லும் பொருளும் " பஞ்சாயத்து' என்னும் சொல்லிற்கு “Village Jury’ என்றும் “An assembly of
fire or more persons’ என்றும் தமிழ்-ஆங்கில அகராதிகள் பொருள் விளக்கம் தருகின்றன! "இது பெரும்பாலும் ஐந்திற்கும் மேற்பட்ட நடுவர்கள் கூடி விவாதிக்கும் 'நியாயசபை' எனத் தமிழ் சொற்களஞ்சியமும்''” விளக்கம் தருகின்றது. "இன்றைய மக்கள் வழக்காற்றில் இதனைச் 'சாதிப் பஞ்சாயத்து' என்றும் 'சாவடிக்கோர்ட்' என்றும் அழைக்கின்றார்கள்." இதுவே 'கிராம வழக்கு மன்றம்', 'கிராமப் பஞ்சாயத்து', 'நாட்டுப் பஞ்சாயத்து', 'கட்டப் பஞ்சாயத்து! என்னும் பொருள்களில் இவ்ஆய்வுரையில் சுட்டப்படுகின்றது.
மேலே சுட்டிக்காட்டப்பட்ட கருத்துக்களிலிருந்து 'பஞ்சாயத்து' என்பது 'சிற்றூர் வழக்கு மன்றம்' என்றும், 'கிராம வழக்கு மன்றம்' என்றும் அழைக்கப்படுவதனையும், அது ஐந்திற்கும் மேற்பட்ட நடுநிலையான ஊர்ப் பெரியவர்கள் கூடி விவாதிக்கும் 'நியாயசபை' என்றும் அழைக்கப்படுகின்றது. ஒரே பண்பாட்டு இயல்பு கொண்ட சிற்றூர் மக்கள், அவர்களுக்குள் தோன்றும் சிக்கல்களைத் தீர்க்க ஏற்படுத்தப்பட்ட அமைப்பாக அது செயல்பட்டுவருவதனால் அதனை 'ஊர்ப்பஞ்சாயத்து' என்றும் கூறுவர். பெரும்பாலும் ஊருக்குப் பொதுவான இடமாகிய சாவடியில் (மந்தைத்திடல்) நடைபெறுவதனால் அதனைச் 'சாவடிக் கோர்ட்' என்றும், கிராமப் பெரியவர்களின் வழக்காடு மன்றமாக அமைந்திருப்பதனால் 'வழக்கு மன்றம்! என்றும் பல்வேறு பெயர்களால் அழைக்கப்பட்டு வந்திருப்பதைக் காணலாம். 'சாதிப்பஞ்சாயத்து' என்பது வேறு;
'ஊர்ப்பஞ்சாயத்து' என்பது வேறு; முன்னது ஒரே சாதிக்குள் நடக்கும் பஞ்சாயத்து
அமைப்பு முறையாகும். பின்னது ஊரிலுள்ள அனைத்துச் சாதியினருக்கும் பொதுவானதாகும். வழுக்கு மன்றங்கள் - தோற்றம்
வழக்கு மன்றங்களையும் அங்கு நடைபெற்று வந்த பஞ்சாயத்துக்களின் தோற்றம் பற்றியும் ஆராய்வதற்கு முன்னர் சிற்றூர்களின் (கிராமங்கள்) தோற்றம் பற்றி எடுத்துரைப்பது இன்றியமையாததாகும். ஏனெனில் சிற்றூர்கள் தோன்றிய
பின்னரே வழக்கு மன்றங்கள் தோன்றியிருத்தல் வேண்டும். 'இனக்குழு'ச் சமுதாய வாழ்க்கை
"மனிதன் தொல்பழங்காலத்தில் நாடோடிகளாகக் காடுகளில் விலங்குகளை வேட்டையாடியும் இயற்கையாகக் கிடைக்கும் காய், கனி, கிழங்கு ஆகியனவற்றை உண்டும் வாழ்ந்து வந்தான். இதனை 'வேட்டைச் சமூகம்' என்பர். பின்னர் நீர்நிலைகள் கொண்ட செழிப்பான ஆற்றுப் பகுதிகளை நாடி ஓரிடத்தில் நிலையாகத் தங்கி வாழத் தொடங்கினான். இவ்வாறு மனிதர்கள் கூட்டம் கூட்டமாக வாழத் தொடங்கினர். இவர்களின் வாழ்க்கை முறையினையே
வரலாற்று ஆய்வாளர்கள் 'இனக்குழு வாழ்க்கை முறை' எனச் சுட்டியுள்ளனர்.!'*
கிராமங்களின் தோற்றம்
'கிராமம்' என்பது வடசொல்லாகும். தமிழில் இதனைச் 'சிற்றூர்' எனவும் 'பட்டி' எனவும் கொள்ளலாம், ''வேட்டைச் சமூகத்தில் காடுகளிலும் குகைகளிலும் நாடோடிகளாக வாழ்ந்துவந்த மனிதன் இனக்குழுச் சமூக வாழ்க்கையில் தமக்கென்று வீடுகட்டிக் கொண்டு வாழத் தலைப்பட்டான். இவ்வாறு ஓரிடத்தில்
நிலையாக வாழ்ந்த இனக்குழுவே பின்பு சிற்றூராகப் பரிணாம வளர்ச்சி பெற்றது.
இவ்வாறு மனிதன் சிறிய கூட்டமாகக் கூடி வாழத் தலைப்பட்ட போது, மனிதனுடைய சமுதாயத் தேவைகளும் அதிகமாயின. எல்லோராலும் தனித்தனியாக அனைத்துத் தேவைகளையும் நிறைவு செய்து கொள்ள முடியவில்லை. எனவே, மனிதர்களுடைய தேவைகளை நிறைவு செய்து கொள்ளும் பொருட்டு ஒருவர் உதவி மற்றவர்களுக்குத் தேவைப்பட்டது. இவ்வாறு மனிதனுடைய தேவைகளின் பொருட்டு மனித சமுதாய உறவுகள் ஏற்பட்டன. இந்த உறவுகளின் அடிப்படையில் குடும்ப வாழ்க்கை ஏற்பட்டது" என்பர். குடும்ப வாழ்க்கையில் கணவன்-மனைவியர் உறவு நிலைத்த இடத்தினைப் பெற்றது. குடும்பத்தின் தலைவனாகக் கணவன் இருந்தான். இக்குடும்பப் பொறுப்புக்களையும் நிருவாகத்தினையும் கணவன் ஏற்று நடத்தி வந்தான்.
“மனிதன் கூடிவாழத் தலைப்பட்டபோது பல்வேறு சிக்கல்களும் பிரச்சினைகளும் தோன்றலாயின. இச்சிக்கல்கள் குடும்பத்திலும் குழுவிலுமாகத் தோன்றின. இத்தகையச் சிக்கல்களைத் தீர்த்துக் கொள்ளுவதற்காக ஒரு குழுவிலுள்ள அனைத்துக் குடும்பத் தலைவர்களும் ஒன்று கூடி தங்களுக்குள் ஒருவனை வீரத்தின் அடிப்படையில் தேர்வு செய்தனர். அவனே அக்குழுவிற்குத் தலைவன் என்று அழைக்கப்பட்டான்" என்பர். அக்குழுவின் தலைவன் தன் குழுவிலுள்ள குடும்பங்களில் ஏற்படும் பிரச்சினைகளையும், குழுவிற்குள் ஏற்பட்ட ஒட்டுமொத்தமான பொதுச் சிக்கல்களையும் மற்றவர்களுடன் கூடிக் கலந்து ஆலோசித்துத் தீர்த்து வைத்தான்,
மனிதனுடைய இந்த வளர்ச்சி நிலையே வழக்கு மன்றத்தின் (பஞ்சாயத்து) தோற்றம் ஆகும். வழக்கு மன்றம் என்ற அமைப்பு முறையானது சிற்றூர் என்ற அமைப்புத் தோன்றி மனிதன் கூடி வாழத் தலைப்பட்ட போது தோன்றியிருக்க
வேண்டுமென்றும், அம்மன்றங்கள் ஊர்மக்களிடையே ஏற்பட்ட சிறுசிறு
சிக்கல்களையும், கிராமக் குழுக்களிடையே ஏற்பட்ட ஒட்டுமொத்தமான சிக்கல்களையும் கருத்தில் கொண்டு தோன்றியது என்பதையும் அறிய முடிகின்றது. இவ்வமைப்பு முறையானது சிற்றூர்களிடையே தோன்றி விளங்கியதனால் 'சிற்றூர்ப் பஞ்சாயத்து' எனவும் அழைக்கப்படுகின்றது. சங்ககாலம் முதல் தமிழ்நாட்டில் சிற்றூர் வழக்கு மன்றங்கள் இருந்துள்ளன என்பதை இலக்கியச் சான்றுகள் வழி அறிய முடிகின்றது. இலக்கியங்கள் வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் கண்ணாடியாகவும், மக்களின் சமுதாய வாழ்க்கை முறைகளிலிருந்து தோன்றுவதகாவும் அமைகின்றன. ஒவ்வொரு காலக் கட்டத்திலும் நடக்கக் கூடிய சமுதாய நிகழ்வுகளையும் வாழ்வியல் மெய்ம்மைகளையும் இலக்கியங்கள் பதிவு செய்து, அவற்றைப் பிரதிபலித்துக் காட்டுகின்றன. கடந்த கால வரலாற்றினையும் சமுதாய அமைப்பு முறையினையும் புரிந்து கொள்ளுவதற்கு இலக்கியங்களே முக்கியமான ஆவணங்களாக அமைகின்றன.
தொல்காப்பியர் காலம்
தொல்காப்பியர் தம் காலத்தில் நிலவிய சிற்றூர் வழக்கு மன்றங்களை 'அவையம்'” என்ற சொல்லால் குறிப்பிட்டுள்ளார். இது 'அவையம்' என்ற பகுதியில்
விரிவாக இடம் பெற்றுள்ளது. சங்க இலக்கியங்கள்
சங்ககாலத் தமிழகச் சிற்றூர்களில் ஏற்பட்ட வழக்கு மன்றங்களின் அமைப்பு முறையினையும், அவை செயல்பட்ட முறையினையும், அதன் பல்வேறு பெயர்களையும் அதற்கான காரணங்களையும் அறிவிக்கும் சான்றுகளாகவும் ஆவணங்களாகவும் சங்க இலக்கியங்கள் அமைகின்றன. பண்டைய தமிழகத்தில் சிற்றூர் நிருவாகத்தைக் கவனிக்க ஊர்ப்பொதுமக்கள் ஒன்று கூடி தங்களுக்குள்
மூத்த பெரியவர்களைக் கொண்டு ஓர் அமைப்பினை ஏற்படுத்திக் கொண்டனர்.
அக்காலத்தில் சிற்றூர் நிருவாகத்திற்கென்று வரையறுக்கப்பட்ட நீதிமன்றங்கள் போன்ற அமைப்புகள் இல்லை. எப்பொழுது சிக்கல்கள் எழுகின்றதோ அப்பொழுது கிராமத்திலுள்ள பெரிய மனிதர்கள் ஒன்று கூடித் தீர்வுகளைக் கண்டுள்ளார்கள். இது வழி வழியாகவும் பரம்பரை பரம்பரையாகவும் வந்த ஓர் அமைப்பு முறையாகும்.
"சிற்றூர் விவகாரங்களை மேற்பார்த்தல்' என்னும் பொருள் நிலையில் 'மன்றம்', 'பொதியல்', 'அம்பலம்', 'அவை' என்னும் சொல்லாட்சிகள் சங்க இலக்கியங்களில் பயின்று வந்துள்ளன. இவை ஒரு பொருள் குறித்த பல சொற்களாகும், திருமுருகாற்றுப்படையில் மன்றமும் அம்பலமும் வெவ்வேறு நிறுவனங்கள் போலக் கூறப்படுகின்றன. 'உரையாசிரியராகிய நச்சினார்க்கினிய௰ர் 'மன்றம்' என்பது சிற்றூர் மக்கள் யாவரும் வந்து வீற்றிருக்குமாறு ஊர் நடுவில் அமைந்த 'மரத்து அடி' என்று கூறிப் 'பொதியில்', 'அம்பலம்' ஆகிய இரண்டையும் ஒன்றாகக் கருதுகின்றனர். அவர் கருத்துப்படி 'அம்பலம்' என்பது உயர்த்திக்கட்டிய திண்ணை போன்றதாகும்." "அவர் 'மன்றம்' அல்லது 'மன்று' என்பதை 'அம்பலம்'
119 110
எனக் குறிப்பிட்டுள்ளார்."” 'மதுரைக்காஞ்சி தலகாரியங்களைக் கவனிக்க 'அவை கூடிற்று எனக் குறிப்பிடுகின்றது. ஒளவையார் புறநானூற்றுப் பாடலில் 'முன்னூர்ப் பொதியிலைப்' பற்றிக் குறிப்பிட்டுள்ளார். 'அப்பாடலில் சிற்றூரின் முன் அமைந்துள்ள பொதியிலில் ஏதிலாரும், யாத்ரிகரும், பாணரும் தங்குவதைக் குறிப்பிடுகின்றார். பொதுவில் யாவரும் வழிபடுவதற்குரிய இடம் 'பொதியில்' என்பது நச்சினார்க்கினி௰ர்” விளக்கம் ஆகும். 'பொதியில்' என்னும் சொல் 'பொதுஇல்' என்பதிலிருந்து பெறப்பட்டதாகும்.” 'நிழல் தரும் மரத்தின் அடியில் ஆன்ம விசாரம், லெளகிக விசாரம் என்பனவற்றை மேற்கொண்ட புத்தர் ஞானம்
பெறுதல், சிவபெருமான் யோகம் பயிலல், சிற்றூர் முதியோர் கூடுதல் போன்றவை
நிகழ்ந்தன. மரத்தைச் சுற்றி உயர்த்திக் கட்டப்பட்ட இருக்கை இருப்பினும் அம்மரமும் மன்றம் அல்லது பொதியிலின் ஒரு பகுதியே ஆகும். வேப்ப மரத்தின் அடி மன்றம் பலர் கூடுதற்கு ஏற்ற இடமாகும். அம்மரம் நோய் தீர்க்கும்
பண்புடைத்தாகும்."”
சங்க இலக்கியச் சான்றுகளை நோக்கும் போது 'பொதியில்' என்பது சிற்றூரில் பெரும்பாலும் அதற்கு வெளியில் அமைந்த ஓரிடமாகும். அவ்விடம் மரத்தடியில் இருந்தது. அவ்விடத்தில் இளைப்பாற வருவோரும், பொழுது போக்காக, வம்பு பேச வருவோரும் பொறுப்புள்ள அரசியல் பேசுவோரும், அரசியல் நீதிமன்றப் பணிகளோடு தொடர்புடைய கிராமப் பொதுமக்களும் கூடும் இடமாகும். அது முற்றிலும் ஒரு சிற்றூர் நிறுவனமாகும். இருப்பினும் அங்குத் தலை நகரிலுள்ள 'அறக்களத்து அவைபோல' நீதி, நிருவாக விவகாரங்கள் விவாதிக்கப்பட்டுள்ளன. சிற்றூர்களில் எழுந்த சிறு சிறு சிக்கல்களையும் பிரச்சினைகளையும் தீர்த்து வைக்கும் சிற்றூர் நிறுவனங்களாக மன்றமும் பொதியிலும் ஈடுபட்டு வந்துள்ளன. இக்காலத்துப் பஞ்சாயத்து அமைப்புக்களை விட அவற்றிற்கு மிகுந்த அதிகாரம் இருந்துள்ளது. 'மன்றம்' மற்றும் 'பொதியில்' வழக்கு மன்றத்தார் தீர்ப்புகளுக்கு எதிராக மேல்முறையீடு செய்யும் அமைப்பு சங்க காலத்தில் இல்லை. சிற்றூர் முதியவர்கள் இவ்வமைப்பில் முழுமையான அதிகாரம் செலுத்தி வந்துள்ளனர்.
சங்க காலத் தமிழகத்தில் ஒவ்வோர் சிற்றூரிலும் இத்தகைய 'ஊராட்சி மன்றம்' இருந்து வந்துள்ளது. ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் ஊர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டனர். வாக்காளர் ஊரின் பகுதிக்குரிய பிரதிநிதிகளின் பெயர்களை எழுதிக் குடத்தில் போடுவர். அதிகாரிகள் குடத்தின் முத்திரையை நீக்கி
ஒவ்வொரு ஓலையாகப் படிப்பர், இதனை,
இக்காலக் கட்டத்தில் பக்தி இலக்கியம் ஒன்றே மேலோங்கி வளர்ந்தது. அவற்றுள் சைவ நூல்களாகிய பன்னிரு திருமுறைகளும், பன்னிரு ஆழ்வார்களின் பாடல் தொகுப்புகளாகிய நாலாயிர திவ்வியப் பிரபந்தமும் குறிப்பிடத்தக்கவையாகும். இந்நூல்களில் சங்க இலக்கியங்கள் மற்றும் நீதி இலக்கியங்களில் பயின்று வந்துள்ள 'மன்றம்', 'அவை', 'அம்பலம்' போன்ற சொல்லாட்சிகளே 'சிற்றூர் வழக்கு மன்றம்' என்ற பொருளில் ஆளப்பட்டிருக்க வேண்டும். இவை பற்றிய இலக்கியச் . சான்றுகள் கிடைக்கவில்லை. ஆனால், பல்லவர் காலத்திய சிற்றூர் வழக்கு மன்றங்கள் பற்றிய செய்திகள் கிடைக்கின்றன.
காப்பிய இலக்கியங்கள்
தமிழ்க் காப்பிய இலக்கியங்களில் 'ஐம்பெருங்குழு', 'எண்பேராயம்' பற்றிய செய்திகள் இடம்பெற்றுள்ளன. சிலப்பதிகாரம்”, மணிமேகலையில் ஐம்பெருங் குழுவினரையும் எண்பேராயத்தினரையும் பற்றிய குறிப்புக்கள் இடம் பெற்றுள்ளன. 'பெருங்கதை*யிலும் இவை பற்றிய குறிப்புள்ளது. சேக்கிழாரின் பெரிய புராணத்தில் (தடுத்தாட்கொண்ட புராணம்) 'மன்றாடி'”* என்னும் சொல்லாட்சி இடம் பெற்றுள்ளது.
சிற்றிலக்கியங்கள் மற்றும் தற்கால இலக்கியங்களான சிறுகதை, புதினம், கவிதை ஆகியனவற்றிலும் சிற்றூர் வழக்குமன்றங்கள், அவற்றின் செயற்பாடுகள் பற்றிய செய்திகள் பயின்று வந்துள்ளன. ஆய்வுச் சுருக்கம் கருதி இவ்வியலில் அவை பற்றிய செய்திகள் தவிர்க்கப்பட்டுள்ளன. சங்க மூவேந்தர் கால ஆட்சிமுறை
மக்களாட்சியை அடுத்த மன்னராட்சியில் மன்னனே வலிமை மிக்கவன்
ஆவான், அவனைக் கட்டுப்படுத்தியதாகக் கூறப்படும் கட்டுப்பாடுகள்
கொள்கையளவிலேயே இருந்தன. அவற்றை மன்னன் ஏற்றுக்கோடலைவிடப் புறக்கணித்தலே பெரும்பான்மையாக இருந்தன. ஆதலால் சங்க மூவேந்தர் கால ஆட்சியில் மன்னனின் நற்பண்புகளைப் பொறுத்தே நல்லாட்சி நடைபெற்று வந்துள்ளது. ''வரி இறுத்தற்காகவும் பொது அமைதியைக் குலைப்போரிடமிருந்து காக்கவுமே மன்னன் தனது அரசின் எல்லைப் பகுதிகளோடும் தொடர்பு கொண்டிருந்தான். அவை நீங்கலாக, மக்கள் பெரும்பாலும் தங்கள் ஊர்ப்பொதுக் காரியங்களைத் தாங்களே கவனித்துக் கொண்டனர். ஆதலால் மன்னனால் எல்லா விதத்திலும் கவனிக்க முடியாத கிராமத்திலுள்ளோர் தமது ஊரிலுள்ள செல்வந்தர், அனுபவமுடையோர், செல்வாக்குடையோர், அறிஞர் என்போர் வாயிலாகத் தங்களைத் தாங்களே ஆண்டு கொண்டனர். இவையே அக்காலக் கிராம சுயாட்சி, தல தன்னாட்சி என்பனவற்றிற்கு அடிப்படைக் காரணங்கள்'”* என்பது நோக்கத்தக்கதாகும். ஆனால் பிற்கால அரசியல் முறையான சுயாட்சிக்கருத்தை ஆதிகால நிறுவனங்களுக்குப் பயன்படுத்துதல் பொருந்தாது. “திருக்குறளில் கூறப்பட்டிருத்தல் போல, சங்க கால ஆட்சிமுறையில் ஒரு மத்திய அரசும், தல நிறுவனங்களும் அடங்கின.” என்று வி.ஆர். இராமச்சந்திர தீக்ஷிதர் கூறுகின்றார். திருக்குறளில் தல நிறுவனங்கள், மத்திய அரசு என்பன பற்றிய குறிப்புக்களே இல்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
"கிராமம் என்பதே இந்தியாவில் எப்போதும் போல ஆட்சி நிருவாகத்தின் அடிப்படைப்பகுதியாகும். பொதுவாகக் கிராமம் தனது விவகாரங்களைத் தானே கவனித்துக் கொண்டது. 'ஊர்' என்பது நகரமாக இருக்கலாம்; ஆனால் அது 'சேரியை விடப் பெரியதாகும். சேரி என்பது ஒருபக்க ஊரேயாகும்.''? கிராமப் பிரச்சினைகளை மேற்பார்த்தல் என்னும் நிலையில் சங்க இலக்கியங்களில்
பின்வரும் சொற்கள் ஆளப்பட்டுள்ளன.
20
மன்றம்
'மன்றம், பொதியில், அம்பலம், அவை என்பவை ஒரு பொருள் பல சொற்களாகும். 'மதுரைக்காஞ்சி'யில் தல காரியங்களைக் கவனிக்க 'அவை' கூடிற்று” என்னும் குறிப்பு வந்துள்ளது. திருமுருகாற்றுப்படையில் மன்றமும் அம்பலமும் வெவ்வேறு நிறுவனங்கள் என்பது போலச் சுட்டப்பட்டுள்ளன. அதன் உரையாசிரியரும் 'மன்றம்' கிராமத்து மக்கள் யாவரும் வந்து வீற்றிருக்குமாறு ஊர் நடுவில் அமைந்த மரத்தடி என்று கூறிப்பொதியலையும் அம்பலத்தையும் ஒன்றாகக் கருதுகின்றார். அவர் கருத்துப்படி 'அம்பலம்' என்பது உயர்த்திக்கட்டிய திண்ணை போல்வதாகும்."? மலைபடுகடாத்திற்கு உரையெழுதிய நச்சினார்க்கினியர் 'மன்றம்' அல்லது 'மன்று' என்பதை 'அம்பலம்' என்கிறார்.” அன்றியும் அம்பலத்தில் எங்கும் திரிதரும் கூத்தர் தங்குவதையும் காட்டுகின்றார். ஊரில் பெரியவர்கள் ஒன்று கூடும் போது அவ்விடத்திற்கு 'மன்று' அல்லது மன்றம் என்பது பெயராகும். இச்சொல் வழக்குச் சங்க இலக்கியங்களில் பரவலாகக் கையாளப்பட்டுள்ளன. இதற்குச்
சான்றுகளாகப் பின்வரும் தொடர்களைக் குறிப்பிடலாம்.
7782
“மன்று நிறையு நிரை” -எனப் புறநானூறும்,
220)
"மன்று தொறு நின்று குரவை” -என மதுரைக் காஞ்சியும்,
சத
“மன்றில் குரவை பிணைந்த மால்''”'-எனப் பெரியாழ்வார் திருமொழியும்,
"மூதூர் வேம்பிணென்குழை மலைந்து"“-எனப் புறநானூற்றுப் பாடலடிகளும், மன்ற வேம்பின் மாச்சினை யொண்டளிர் நெடுங்கொடி யுழிஞைப் பலரோடு மிடைந்து
செறியத் தொடுத்த தேம்பாய் கண்ணி!
21
எனப் புறநானூற்றுப் பாடலடிகளும் 'மணந்து', 'மன்றம்' என்னும் சொற்களை எடுத்தாண்டிருப்பது இவ்விடத்தில் சுட்டத்தக்கதாகும். மன்றம், மன்றாடியார்
'மன்றம் என்றும் சொல்லுக்குச் சபை, நியாய சபை, ஊருக்கு நடுவாய்யுள்ள மரத்தடிப் பொதுவிடம் முதலிய பொருள்கள் தமிழ்ப் பேரகராதியில் இடம் பெற்றுள்ளன... பொதுச்சபையில் வழக்கினை எடுத்துப் பேசுவோர்க்கும் வழக்கினைத் தீர்ப்பவர்க்கும் 'மன்றாடி' என்ற பெயர் வழங்கியதாகச் செ. இராசு கூறுகின்றார்.” "பழைய மன்றாடி போலுமிவன்'' எனப் பெரியபுராணம் கூறுகின்றது. ''ஊரின் பொதுவிடத்தில் அமைந்துள்ள அவையாகிய மன்றத்தில் அமர்ந்து வழக்குகளை ஆராய்ந்து தீர்ப்பு வழங்குபவர் 'மன்றாடி' எனப் பெயர் பெறுகின்றார். மன்றத்தில் அமர்ந்து வழக்குகளை ஆராய்ந்து தீர்ப்பு வழங்கிய ஆயர் மன்றாடி எனப் பெற்றனர்'”? என்று ௮, முத்துசாமி குறிப்பிடுகின்றார். ந. சுப்பிரமணியன், ''மன்றம் என்பது சிற்றூரின் நடுவில் ஒரு பெரிய மரத்தடியில் அதைச்சுற்றி அமைக்கப்பட்ட திண்ணை. இந்தத் திண்ணை ஒரு மேடை போன்றிருக்கும். ஆகவேதான் பிற்காலத்தில் நாடக மேடைகளை மன்றம் என்றனர். இம்மன்றத்தில் கிராமத்திலுள்ள இடையர்கள் தங்கள் மாடுகளைக் கொணர்ந்து கட்டிவைப்பர். ஆதலால் மாட்டிடையர்களுக்கு 'மன்றாடிகள்' என்னும் பெயர் உண்டு.” என்று சுட்டுகின்றர். அவர் ஆடு, மாடுகளைக் கொண்டு வந்து மன்றத்திலே கட்டி வைத்த காரணத்தால் 'மன்றாடி' என்னும் பெயர் அமைந்தது என்று குறிப்பிடுவது பொருத்தமாகத் தோன்றவில்லை.
அம்பலம் செய்பவர் அம்பலக்காரர் எனவும், கருத்து மாறுபாடுற்றுப் பிணக்குக்
கொண்டவர்களைச் சேர்த்து வைப்பவர் 'சேர்வை' எனவும் சுட்டப்பெறுவது போல்
22
மன்றத்திலமர்ந்து வழக்காடி நீதி வழங்குபவர் 'மன்றாடி' எனக்கொள்ளுவதே பொருத்தமுடையதாகும். மன்றாடி என்னும் சொல் உயர்வுப் பன்மைக்குரிய 'ஆர்' என்னும் விகுதி பெற்று மன்றாடியார் என வழங்கப் பெற்றது. மன்றாடியார் எனப்பட்டப் பெயர் கொண்ட ஆயர் தமிழகத்தில் கோவை மாவட்டத்தில் ஆங்காங்கே மிகச் சிலர் மட்டுமே உள்ளனர். தொழில் காரணமாக அமைந்த இப்பட்டம் பெயர் கள்ளர், கவுண்டர் முதலிய பிற சாதியினரிடத்தும் காணப்பெறுகின்றது.
பொதியில்
142
'முன்னூர்ப் பொதியிலைப்'” பற்றிக் கூறும் ஒளவையார் கிராமத்தின் முன் அமைந்துள்ள பொதியிலில் ஏதிலாரும், யாத்ரிகரும், பாணரும் தங்குவதைக் குறிக்கின்றார். பொதுவில் "யாரும் வழிபடுவதற்குரிய இடம் 'பொதியில்' என்பது நச்சினார்க்கினியர் விளக்கமாகும்." ''வேடர்களாகிய எயினர்கள், கிராமத்து மன்றங்களில் அவர்கள் பெயர்த்து வந்த மாடுகளைக் கட்டிவைத்தனர்.'* '"பொதியிலில் உள்ள மரத்தில் யானைக் கன்றுகள் கட்டப்பட்டு நிற்றலைப் புறநானூறு கூறுகின்றது.” "அதன் அருகில் மாட்டுக் கொட்டில் ஒன்று இருக்கும்; அதில் பசுக்களைக் கட்டிவைத்தனர். ஆதலால் மாட்டிடையர்களுக்கு மன்றாடிகள் என்பது பெயராயிற்று."
வேதிகை
"நாலடியாரில் 'வேதிகை' என்னும் இடம் குறிக்கப்படுகின்றது. அது ஊர் நடுவில் மரங்களைச் சுற்றியமைந்த வட்டமான, நீள்சதுரமான அல்லது சதுரமான
ஒரு கட்டடம் ஆகும்." "வழிப்போக்கர்களுக்குத் தங்குமிடமாக வேதிகை
23
பயன்பட்டுள்ளது. இதிலிருந்து பிற்காலத்து மன்றம் எழுந்ததாகக் கருதலாம். ஏனெனில் மன்றம் என்பது அதன் தொடக்க காலத்தில் ஒரு திண்ணை போன்ற உயர்ந்த மேடையாகவே இருந்துள்ளது. பொதியிலை மேற்பார்வையிட போரில் சிறைபிடிக்கப்பட்ட மகளிரை பயன்படுத்தினர்; அவர்கள் அதனைச் சாணத்தால்
A8 rr
மெழுகிச் சுத்தமாக வைத்திருந்தனர். பொதியில்' என்னும் சொல் பொது இல்
என்பதினின்றும் பெறப்பட்டது.” 'நிழல் தரும் மரத்தின் அடியில் ஆன்ம விசாரம், லெளகிக விசாரம் என்பனவற்றை மேற்கொண்ட கெளதமபுத்தர் ஞானம் பெறுதல், சிவபிரான் யோகம் பயிலல், கிராமத்து முதியோர் கூடுதல் போன்றன நிகழ்ந்தன. மரத்தைச் சுற்றி உயர்த்திக் கட்டப்பட்ட இருக்கையிருப்பினும், அம்மரமும் மன்றம் அல்லது பொதியிலில் ஒரு பகுதியாகும். வேப்ப மரத்தின் அடி மன்றம் பலர் கூடுவதற்கு ஏற்ற இடமாகும். ஏனெனில் நோய் தீர்க்கும் பண்பினைக்
1௦0
கொண்டிருந்தது:
பொதியில் என்பது சிற்றூர் வெளியில் அமைந்த ஓரிடமாகும், அது மரத்தடியில் அமைந்கிருந்தது. அது இளைப்பாற வருவோர்க்கும், பொழுது போக்கிற்காக வம்பு பேச வருவோர்க்கும், பொறுப்புள்ள அரசியல் பேசுவோர்க்கும் அரசியல் மற்றும் நீதிமன்ற அலுவல்களோடு தொடர்புள்ள ஊர் பொதுமக்களும் கூடும் இடமாகத் திகழ்ந்தது. "இவ்விடம் பண்டைய சமய அலுவல்களோடு ஒன்றியமைந்த இடமாகும். அது முற்றிலும் ஒரு கிராம நிறுவனமாகும். ஆயினும் அதனைத் தலைநகரிலுள்ள 'அவை'யோடு பொருத்தி, அங்கு மன்னனது அறக்களத்து அவைபோல நீதி-நிருவாகப் பிரச்சினைகளை விவாதித்துள்ளனர். ௧.௮. நீலகண்ட "சாஸ்திரி கூறுவது போல, பிற்காலத்தில் சோழர் ஆட்சியில் நடைபெற்ற விரிவான உயர்தர கிராம சுயாட்சி அமைப்பு முறை ஓரளவே இத்தொடக்கக் கால
உரி]
நிறுவனங்களினின்றும் பிறந்ததாகக் கருதலாம்.
24
கிராமங்களில் எழுந்த சிறுசிறு தகராறுகளையும் பிரச்சினைகளையும் கிராம நிறுவனங்களான மன்றமும் பொதியிலும் தீர்த்து வைப்பதில் ஈடுபட்டன என்பதைத் தெளிய முடிகின்றது. இக்காலத்துப் பஞ்சாயத்துக்களை விட அவற்றிற்கு மிகுந்த அதிகாரம் இருந்தது; ஏனெனில் நவீன காலத்தில் போன்று, அவர்கள் தீர்ப்பிற்குப் பிறகு மேல்முறையீடு செய்து விண்ணப்பஞ்செய்து கொள்ளப் படிப்படியான அதிகார வர்க்கம் ஒன்று இல்லை. வேறு வழியின்றிக் கிராமத்து முதியோர்கள் ஏராளமான அதிகாரங்களைச் செலுத்தியுள்ளனர். பணம், சாதி, வயது அடிப்படையில் அம்முதியோர்கள் செயல்பட்டனர். அவர்கள் தங்களைத் தாங்களே தேர்ந்து கொண்டனர். அவர்கள் முதியோராசவும், செல்வாக்குடையோராகவும், செல்வந்தராகவும் இருந்த காரணங்களினால் கிராமத்திலுள்ளவர்கள் அவர்கள் தலைமையை எதிர்க்கவில்லை. அவ்வதிகாரங்களையேற்ற முதியோர்களுக்கு எவ்விதப் பிரதிபலனும் அளிக்கப்படவும் இல்லை. அவர்கள் அவையத்தார்களாக இருந்து பொதுப்பணிகளைச் செய்து வந்துள்ளனர், மண்டலங்கள்
"அரசு மாநிலங்கள், மாவட்டங்கள், வட்டங்கள், பிரிவுகள் என்று நிருவாக
முறையில் சங்க காலத்தில் பிரிக்கப்படவில்லை. மொத்த அரசும் 'மண்டலம்' என்றழைக்கப்பட்டுள்ளது. சிலப்பதிகாரத்தில் மன்னர்களை 'மண்டில மாக்கள்!” என்று குறிக்கப்பட்டுள்ளது. 'திருக்குறளில் இம்மண்டலங்கள் பற்றிய குறிப்புக்கள் இல்லை. சோழ மண்டலம், சேர மண்டலம், பாண்டி மண்டலம், கொங்கு மண்டலம், தொண்டை மண்டலம் ஆகிய மண்டலங்கலாக அன்றையத் தமிழகம் விளங்கியது. கொங்கு மண்டலமும், தொண்டை மண்டலமும் முற்காலத்தில் கொங்கு நாடாகவும், தொண்டை நாடாகவும் இருந்து பின்னர் மண்டலங்கள் ஆகியிருக்கலாம். 'நாடு'
மண்டலத்தின் ஒரு பகுதியாகும். மண்டலத்திற்கு அடுத்தாற் போல உயர்ந்த பிரிவு
25
நாடு ஆகும். அக்காலத்தில் 'கூற்றம்' என்னும் ஒரு பிரிவும் இருந்துள்ளது.
வி.ஆர். இராமச்சந்திர தீக்ஷிதர் குறிப்பிடுவது போல 'நாடு' என்பது கூற்றத்தின் ஒரு
2]
பகுதி என்று உறுதியாகக் கூறமுடியாது. “உ.வே. சாமிநாதையர் குறிப்பிடுவது போல கூற்றம் என்பது நாடு என்பதன் பகுதி என்றும் சொல்லிவிட முடியாது''* கூற்றம் என்பது மருவிப் பிற்காலத்தில் 'கோட்டம்' என்றாயிற்று. "கூறு (பிரிவு), கோடு (கிளை) என்பனவற்றிற்கு இணையான சொற்களாகக் கருதலாம், 'ஊர்',
ரா
என்பது நகரமாகும். பெரிய கிராமம் 'பேரூர்' ஆகும். "சிறிய கிராமம் 'சிறூர்'
1156 லபல
ஆகும் "பழைய கிராமம் 'மூதூர்' ஆகும்.
ஐம்பெருங்குழுவினர்
சங்ககால அரசியலைத் தெளிவாகத் தெரிந்து கொள்ளுவதற்கு ஐம்பெருங் குழுவும், எண்பேராயமும் துணைபுரிகின்றன. சிலப்பதிகாரம்”, மணிமேகலை”, மதுரைக்காஞ்சி? ஆகிய சங்க இலக்கியங்களில் ஐம்பெருங் குழுவினரையும் எண்பேராயத்திணையும் பற்றிய குறிப்புக்கள் இடம் பெற்றுள்ளன. 'பெருங்கதையிலும்'* இவை பற்றிய குறிப்பு உள்ளது. ஆனாலும் சங்க இலக்கியங்களில் இந்நிலையங்களின் அமைப்பு, செயற்பாடுகள், அதிகாரங்கள் ஆகியனபற்றிய குறிப்புக்கள் மட்டுமே இடம் பெற்றுள்ளன. "ஐம்பெருங் குழுவினர்கள் புரோகிதர், படைத்தலைவர், தூதுவர், ஒற்றர், அமைச்சர் ஆகியோர் ஆவார்கள்.” வே. கனகசபை ஐம்பெருங்குழுவினரைப் பற்றிக் குறிப்பிடும் பொழுது, இக்குழுவினரை மனத்தில் கொண்டு ஆட்சி முறை வல்லாட்சியிலிருந்து முற்றிலும் வேறுபட்டது; அரசனுடைய அதிகாரங்கள் ஐந்து மன்றங்களால் கட்டுப்படுத்தப் பெற்றது; மக்கள் பிரதிநிதிகள், புரோகிதர், மருத்துவர், சோதிடர்
அல்லது சகுனம் பார்ப்போர், அமைச்சர் என்போர் ஆவார் என்று குறிப்பிடுகின்றார்.
26
பிரதிநிதி சபை மக்களின் உரிமைகளையும், சலுகைகளையும் பாதுகாத்தது. தலைநகரில் இவ்வொவ்வொரு குழுவும் கூடுதற்கும் அலுவலகப் பணிகளை மேற்கொள்ளுதற்கும் தனித்தனி இடங்கள் ஒதுக்கப்பட்டிருந்தன என்றும்
சுட்டிக்காட்டியுள்ளார்.'??
எஸ்.கே. ஐயங்கார் 'ஐம்பெருங்குழு என்பதும் ஐந்து பகுதிகள் கொண்ட, அங்கீகரிக்கப்பட்ட மக்களின் சபை என்பதும், அது மறைமுகமாகச் செயல்பட்டது
164
என்பதும் தெளிவு என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் ஐம்பெருங் குழுவினரை 'அவை மன்னனிடை நிகழ்ந்த மன்றம்; எல்லா முக்கியமான செயற்பாடுகளுக்கும் அதனைக் கலந்தாலோசிப்பது மன்னனுடைய கடமை' என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.'” 'இவ்வாறு குறிப்பிட்ட எஸ்.கே. ஐயங்கார் பின்னர் இதனை மறுத்துக் கூறுவதனைப் போன்று மன்னன் இவர்களில் முக்கியமானவர்களைப் பெொறுக்கியிருக்க வேண்டும்; அல்லது சிலவகை அதிகாரிகளை எல்லோருடைய நலன்களையும் பாதுகாக்கும் முறையில் அமைக்கும் ஏற்பாடுகள் இருந்திருக்க வேண்டும்; இவர்கள் மன்னர்கள் விரும்பியபோது அவர்களுக்கு அறிவுரை வழங்கினர்'** என்று குறிப்பிட்டுள்ளார். முதற்பகுதியில் இம்மன்றத்திற்கு அறிவுரை வழங்க உரிமை உண்டு எனக் கூறிய அவர் இரண்டாம் பகுதியில் கலந்தாலோசிக்கும் சலுகை மன்னனுடையது என்பதால் இவை ஒன்றுக்கொன்று முரணானவையாகத் தோன்றுகின்றன.
'வி.ஆர். இராமச்சந்திரதீகஷிதர் ஐம்பெருங்குழுவினரைப் பற்றிக் குறிப்பிடும் போது, 'தடைகள், மன்றம், புரோகிதர், பொதுமக்கள் கருத்து என்பவற்றால் அரசனது அதிகாரம் மிகுதியாகக் கட்டுப்படுத்தப்பட்டமையினால் அவன் தனது
167
அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தத் துணியவில்லை' என்று குறிப்பிட்டுள்ளார்.
27
'வே. கனகசபை மேற்கோள்காட்டி வி.ஏ. ஸ்மித் என்னும் வரலாற்று ஆய்வாளர், 'தமிழ் மன்னர்களுடைய வரம்பில்லா ஆட்சியைக் கட்டுப்படுத்த மக்கள்', புரோகிதர், கணி, மருத்துவர், அமைச்சர் என்போர் கூடிய ஐந்து பெரிய மன்றங்கள் இருந்தன எனச் சுட்டிக்காட்டியுள்ளார்.
769
'மதுரைக்காஞ்சியில் ஐம்பெருங்குழுவைப் பற்றிய குறிப்புள்ளது. "அப்பாடலின் உரையாசிரியர் குறிப்பிடுவதைப் போல முன்னரே 499ஆம் அடியில்? அமைச்சர் கூறப்பட்டுவிட்டமையால் எஞ்சிய நான்கு பகுதிகள் இங்குக் கூறப்பட்டன. நச்சினார்க்கினி௰ர் கருத்துப்படி அவர்கள் 'புரோகிதர், தானைத் தலைவர், தூதுவர், ஒற்றர் என்போர் ஆவார். இப்பட்டியல் அடியார்க்கு நல்லார் கூறுவதோடு ஓக்கும், பிற்கூரிய உரையாசிரியர் மக்கள், அந்தணர், மருத்துவர், நிமித்தர், அமைச்சர் என்னும் இன்னொரு பட்டியலைக் கூறி அது ஏற்கவியலாது என்று நீக்கியுள்ளார். அங்ஙனம் நீக்கியது பொருத்தமாகவே உள்ளது. ஏனெனில் அப்பட்டியல் விநோதமானது. அதில் 'மக்கள்' யாவரும் சேர்க்கப்பட்டிருப்பதோடு அரசியலில் யாதொரு தொடர்பும் இல்லாத மருத்துவர், கணி என்போரையும் சேர்த்துள்ளது. நீச்சினார்க்கினியரும் அடியார்க்கு நல்லாரும் உரையாசிரியர்களாதலின், அவர்கள் மரபு தவறாமல் பொருத்தமான பட்டியலைத்
தந்திருப்பர் என நம்பலாம்.'”!
ஐம்பெருங்குழு அமைச்சர், புரோகிதர், சேனாதிபர், தூதர், ஒற்றர் என்போரைக் கொண்டதாகும். இப்பட்டியல் திவாகரத்திலிருந்து பெறப்பட்டதாகும். இப்பட்டியிலில் அரசியல் பணிகளை மேற்கொள்ளுபவர்களே சேர்க்கப்பட்டுள்ளனர். அமைதிக்கால நிருவாகப் பொறுப்பேற்போர், அறநூல் வாதிகளைச் சமயநோக்கால்
விளக்குவோர், இராணுவம், வெளிநாட்டுப் பிரச்சினைகள், இரகசியமாக
28
வேவுபார்த்தல் என்னும் துறையினர் ஐம்பெருங்குழுவினர் ஆவர், நச்சினார்கினியரும் அடியார்க்குநல்லாரும் தந்துள்ள பட்டியல் ஒழுங்காகவும் முறையாகவும் அமைந்திருப்பதனால் இவ்வைந்து அரசியல் அலுவலர்களும் சேர்ந்த
குழுவினை 'ஐம்பெருங்குழு' என்று கொள்ளலாம்,
'ஐம்பெருங்குழுவினரைப் 'பஞ்சமாவர்க்கம்' என்று வடமொழிப் படுத்தியுள்ளனர். வடநாட்டு ஆட்சி மரபில் இத்தகைய நிலையம் ஒன்று காணப்படாமையால் இது இவ்விடத்தில் பொருந்தாது. எஸ்.கே. ஐயங்கார் குறிப்பிடும் பஞ்சமகாப் பிரதாணி'”” என்பது ஐம்பெருங்குழு அன்று; ஏனெனில் குழு பிரதானியன்று.
'வீரசோழனுடைய பித்தாபுரம், செல்லூர்ப் பட்டயங்களிற் கூறப்படும்
778
'பஞ்சப்பிரதான்' என்பதும் ஐம்பெருங்குழுவன்று”” அதே போன்று மராட்டியரது
'அஷ்டப்பிரதான்' என்பதும் எண்பேராயம் அன்று. ஏண்பேராயத்தினர்
'நச்சினார்க்கினியர் சரணத்தலைவர், கருமகாரர், கனகச் சுற்றம், கடை காப்பனார், நகரமாந்தர், படைத்தலைவர், யானைவீரர், இவுளி மறவர் என்போர் கூடியது எண்பேராயம்'”* என்று குறிபிட்டுள்ளார். "இப்பட்டியலை அடியார்க்கு நல்லாரும் ஏற்றுக்கொண்டுள்ளார்."'”” இப்பட்டியலும் திவாகரத்தைப் பின்பற்றியதே ஆகும். ' சிலப்பதிகாரப் பழைய உரையாசிரியர் (அரும்பத உரையாசிரியர்) இப்பட்டியலையும் மாற்றிப் பின்வருபவர்கள் தான் மன்னடைய அணுக்கர்கள் என்று குறிப்பிட்டுள்ளார். சாந்து, பூ, கச்சு, ஆடை, பாக்கு, இலை, கஞ்சுகம்
(சட்டை), நெய் என்பனவற்றை அரசனுக்குத் தருவோர் அரசனுடைய
29
ஏவலாளர்களாகவே இருந்துள்ளனர். இவர்கள் அரசியல் நிருவாக முக்கியத்துவம் பெற்றவர்கள் அல்லர். இவர்களை என்பேராயத்தோடு சேர்த்து ஐம்பெருங் குழுவினர் எனப் பேசியிருக்கமாட்டார்கள். ஆதலால் அனுபவம் மிக்க பெரிய உரையாசிரியர்கள் தரும் பட்டியலே மிகுதியும் ஏற்றுக்கொள்ளத்தக்கதாகும். அப்பட்டியல் பின்வருமாறு: 1. கரணத்தியலவர் (கணக்கர்கள்), 2. கருமகாரர் (செயலக அலுவலர்), 8. கனகச் சுற்றம் (பொக்கிஷ அதிகாரிகள்), 4. கடைகாப்பாளர் (கோயில் காவலர்), 5. நகரமாந்தர் (நகரத்திலுள்ள பெரியோர்கள்; இவர்களிடம் அரசன் மக்களது நலன்களைக் கேட்டு அறிந்து கொள்வான்), 6. படைத்தலைவர்
(காலாட்படைத் தலைவர்), 7. யானைவீரர், 8. இவுளி மறவர் (குதிரை வீரர்கள்)?”
'நகரமாந்தர்' என்போர் நகரத்திலுள்ள எல்லா மக்களும் ஆவர். ஐம்பெருங்குழு, எண்பேராயம் ஆகியனவற்றை நச்சினார்கினியர், அடியார்க்கு நல்லார் போன்ற உரையாசிரியர்கள் கூறியிருப்பதால் அவற்றை ஏற்றுக் கொள்ளலாம். இப்பதின் மூவர் மட்டுமே சங்ககால அரசியலில் இடம் பெறுவதற்குத் தகுதியுடையவர்களாக விளங்கியுள்ளனர். இக்குழுவினர் ஒவ்வொருவருக்கும்
தனிப்பட்ட பொறுப்பு இருந்துள்ளது.
'॥யொதீயில்', 'அம்பலம்'
இம்மன்றமானது 'பொதியில்' அல்லது 'அம்பலம்' என்னும் சொற்களால் வழங்கப்பட்டுள்ளது. 'மன்றம்', 'பொதியில்', 'அம்பலம்' ஆகியவை ஒரே பொருளைக் குறிக்கும் சொற்கள் போலத் தோற்றமளிக்கின்றன. எடுத்துக்காட்டாக மதுரைக்காஞ்சியில்,
"அவை இந்த பெரும் பொதியில்
77
சான்றோரிருந்த பெரிய அம்பலம்
30
என்று குறிப்பிடப்படுவதைக் கொண்டு சிற்றூர் 'அவை' எனப்படும், நிருவாக சபை
எனப்பொருள் கொள்ளலாம். "திருமுருகாற்றுப்படையில் 'மன்றம்', 'அம்பலம்' ஆகியவை வெவ்வேறானவை என்பது போலத் தனித்தனியே குறிப்பிடப்பட்டுள்ளன.!”” திருமுருகாற்றுப்படை உரையாசிரியர் 'மன்றம்' என்பது
கிராமத்தின் நடுவில் எல்லா மக்களும் வந்து அமர்ந்த 'மரத்தின்அடி' என்று குறிப்பிடுவதோடு, 'பொதியில்' என்பது அம்பலத்திற்குச் சமம் எனப்பொருள் கொண்டு 'அம்பலம்' என்பது சற்று உயரமாகப் போடப்பட்ட மண்மேடை என்று குறிப்பிடுகின்றனர். ஆதலால் அக்காலத்தில் 'மன்றம்', 'அம்பலம்', ஆகியவை ஒன்றெனவே கருதப்பட்டுள்ளமை புலனாகின்றது. மலைபடுகடாமிற்கு உரையெழுதிய நச்சினார்க்கினியர் அம்பலத்தில் தங்கியிருந்து நடமாடுவோர் பற்றியும் குறிப்பிட்டுள்ளார். பட்டப் பெயர்கள்
"முல்லை நில மக்களின் பட்டப்பெயர்களாக அம்பலகாரர், கரையாளர், கீதாரி, கோன் அல்லது கோனார், சேர்வை, தாஸ், நம்பி, நாயுடு, பிள்ளை, மணியக்காரர், மந்திரி அல்லது மந்தடி, மன்றாடியார், யாதவ், ரெட்டி போன்றவை வழக்கில் உள்ளன. இவையேயன்றி 'முகுந்தன்' என்னும் பட்டப்பெயர் ஒன்றும் இவர்களிடையே காணப்பெறுவதாக இரா. தேவஆசீர்வாதம் குறிப்பிடுகின்றார்.”? இப்பட்டப்பெயர்களுள் பல்வேறு சமுதாயப் பிரிவினர்களுக்கும் பட்டப்பெயர்களாக அமைந்துள்ளன. இன்று தமிழகத்திலுள்ள ஒவ்வொரு பிரிவினரிடையேயும் ஒன்றுக்கு மேற்பட்ட பட்டப்பெயர்கள் காணப்படுகின்றன.
"சங்ககாலத்தில் எந்தவொரு சமுதாயப் பிரிவினரிடத்தும் பட்டப்பெயர்கள்
வழங்கப்பெறவில்லை. இவையனைத்தும் இடைக்காலத்துத் தோன்றியவை என
31
ந.மு. வேங்கடசாமிநாட்டாரும்''? ''குலப்பட்டங்களும் மரபுப் பெயர்களும் அண்மைக்
காலத்திலேயே தோன்றின; அவற்றுக்கு என்ன பொருள் கண்டாலும் அவை தோன்றியதற்கான அடிப்படைக் காரணம் அறிய முடியவில்லை என டபுள்யூ.
பிரான்சிசும்'"”
குறிப்பிட்டுள்ளனர். ஆதலால் பட்டப்பெயர்கள் மிகவும் பிற்காலத்தில் தோன்றியவையே என்பதை அறியமுடிகின்றது.
இன்று காணப்பெறும் குலப்பட்டங்களைப் போன்று பழங்காலத்தில் சிறப்புப் பட்டங்கள் வழக்கில் இருந்துள்ளன. அப்பட்டங்கள் அனைத்தும் இன்று போல் பெயருக்குப் பின்னரே இடம் பெறாமல் பெயருக்கு முன்னே இடம் பெற்றுள்ளன. இதனால் தொல்காப்பியர்,
"சிறப்பி னாகிய பெயர்நிலைக் கிளவிக்கும் இயற்பெயர்க் கிளவி முற்படக் கிளவார்''”£
என்ற வரையறையினை ஏற்படுத்தியுள்ளார். இவ்வரையறைப்படி சங்ககாலத்தில் கானப்பேரெயில் கடந்த உக்கிரப்பெருவழுதி, பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி போன்ற சிறப்புப் பெயர்கள் இயற்பெயருக்கு முன்னர் வழங்கி வந்துள்ளன. தமிழ் வேந்தர் தமிழகத்தை ஆட்சி செய்த போது அவர்தம் சிறப்பான ஆட்சிக்கு உறுதுணைபுரிந்த அரசியல் மற்றும் படைத்தலைவர்களுக்கு ஏனாதி, காளிங்கராயன், காவிதி, மழவராயன், மூவேந்தவேளாண், பல்லவராயன் போன்ற சிறப்புப் பட்டங்கள் வழங்கப்பட்டுள்ளன. இச்சிறப்புப் பட்டங்கள் எவரெவர்க்கு வழங்கப்பெற்றனவோ அவரவர் மட்டுமே அவற்றைத் தத்தம் பெயர்களுக்கு முன்னர் கொண்டிருந்தனர். இவ் வகையில் 'அம்பலகாரர்' என்பதும் ஒரு சிறப்புப் பட்டப் பெயரேயாகும். அம்பலகாரர்
"அம்பலம்' என்னும் சொல்லுக்கு ஊரவை, கற்றோரவை, பலர்கூடும்
வெளியிடம், சிற்றூர் அலுவல்வகை முதலிய பொருள்கள் கூறப்பட்டுள்ளன.
32
ஊரவையில் அமர்ந்து தம் இண்ட நுழைபுலத்தால் மற்றவர்களுடைய வழக்குகளை ஆராய்ந்து நீதி வழங்கும் ஒருவரே ஊரவைத் தலைவராக விளங்க முடியும்; அவரைத் தலைவராகக் கொண்டே அவ்வூரும் இயங்கும்,
"அறிவுடை யோனா றரசுஞ் சொல்லும்''** என்னும் புறநானூற்றுப் பாடல் உறுதி செய்கின்றது.
"சில ஊர்களில் அறிவுடைய ஒருவரை, அவர் எவ்வினத்தவராக இருந்தாலும் 'அம்பலகாரர்' என அழைக்கும் வழக்கம் உள்ளது. அம்பலகாரர் என்னும் பட்டம் அவர் ஒருவரை மட்டுமே சாரும். ஆயருள்ளும் இத்தகுதி பொருந்தியவர் 'அம்பலகாரர்' என்று அழைக்கப்பெறுகின்றார். இப்பட்டப்பெயர் பூண்டுள்ள ஆயர்கள் இராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை முதலிய மாவட்டங்களில் சில ஊர்களில் காணப்பெறுகின்றனர், அம்பலகாரர் என்னும் பட்டப்பெயர் கள்ளர், வலையர் முதலிய சாதியினரிடத்து இன்று மிகுதியாகக் காணப்பெறுகின்றது' என ௮, முத்துசாமி சுட்டிக்காட்டியிருப்பதும் இவண் மனங்கொள்ளத்தக்கதாகும். அவை
"சங்ககாலத்தில் மக்கள் ஒன்றுகூடி பொதுவாழ்வு பற்றி விவாதித்து
ஆராய்ந்து செயல்பட்ட இடம் 'அவை, 'அவையம்' என்ற சொற்களால்
குறிக்கப்பட்டுள்ளது."”* "இந்த 'அவையம்' அரசன் பங்கேற்ற அவையம், அரசனால் அமர்த்தப்பட்டோர் அவையம், பொதுமக்கள் மட்டும் பங்கேற்ற அவையம், உற்றார் உறவினர் கூடிச் செயல்பட்ட அவையம் எனப் பல திறத்தவையாகக் காணப்படுகின்றது. அவையின் தன்மை பற்றிய பல கருத்துக்கள் இதனால் தெளிவாகின்றன." "இலக்கியங்களில் 'அவை' என்பது மக்கள் கூடி இருக்கும் ஓர்
158... என்றும் "அது 'அவைக்களம்''? என்றும் கூறப்பட்டுள்ளன.
அமைப்பு
33
"நல்லவர்கள் கூடியிருக்கும் அவை 'நல்லவை'”? எனப்பட்டது. வயது முதிர்ந்தோர்களுக்குப் பொதுவாக அவையில் முதன்மையிடம் அளிக்கப்பட்டுள்ளது. அக்கால மக்கள் சான்றோர் கூடி இருக்கும் அவை பிறரது துன்பங்களை விரைவில் போக்கும் என நம்பிக்கை கொண்டிருந்தனர் என்பதைப் புறநானூற்றுப் பாடல்!” தெளிவுப்படுத்துகின்றது.
மக்கள் மட்டும் பங்கேற்ற அவையங்கள் ஊர்ப்பகுதியில் இருந்தன. செங்கண்மா (செங்கம்) என்னும் ஊரில் மக்கள் கூடிப் பொது வாழ்வைப் பற்றி உரையாடி ஓர் அவையில் வீற்றிருந்ததை, "நல்லோர் குழீஇய நூறவில்
௨7/92
அவையம் என்னும் மலைபடுகடாம் பாடலடி சுட்டிக்காட்டுகின்றது. "இது
அரசன் இருந்த 'நாள்மகிழ்' இருக்கை அவையிலிருந்து வேறுபட்டது என்பது
தெளிவாகக் காட்டப்பட்டுள்ளது. மதுரை நகரிலும் இதுபோன்ற 'அவையம்'
1193
இருந்ததாக மதுரைக்காஞ்சியில் குறிப்புள்ளது.
"கான்டூர்' என்னும் ஊரில் தவறு செய்த ஒருவனுக்கு மக்கள் அவை முறை
7194
செய்த நிகழ்ச்சியினை அகநானூற்றுப் பாடல் விளக்கமாக எடுத்துக் கூறுகின்றது. உழவர் போர் அடித்துத் தூற்றினர். கடுங்காற்று வீசியதால் அதிலிருந்து கிளம்பிய தூசி அருகிலுள்ள பரதவரின் உப்பளங்களில் படிந்து அவர்கள் விளைவித்த உப்பை மாசுபடுத்தியது. இதனால் உழவர்களுக்கும், பரதவர்களுக்கும் பூசல் ஏற்பட்டது. சேற்றை வாரி இறைத்துக் கொண்டு ஒருவருக்கொருவர் சண்டைபோட்டுக் கொண்டனர். இதனைக் கண்ட நரைமூதாதையர் அவர்களிடையே தோன்றிய சண்டையை விலக்கி விட்டனர். தூசியைப் போக்கிக் கொள்ளும் உழைப்பிற்குத் தெம்பூட்டும் கூலியாக பூவைக் காய்ச்சி இறக்கிய தேறலைப் பரதவர்களுக்குக்
கொடுக்கச் செய்தனர்,”
34
தொல்காப்பியர் காலத்தில் அவையம்
தொல்காப்பியர் வாகைத் திணையைப் பற்றிக் குறிப்பிடுகையில் எட்டு வகையான 'அவையம்' பற்றியும் குறிப்பிடுகின்றார். அவர் வாகைத் திணையில் அறத்தால் வெற்றி பெறுவோர் பற்றிக் குறிப்பிடும் போது,
"எருதும் எருமையும் கைக்கொண்டு உழுதொழிற் சிறப்பால் வெற்றி பெறுவோரும், யானை, குதிரை முதலிய விலங்கினங்களைக் கொண்டு பகை நீக்கி வெற்றி பெறுவோரும், அரசுரிமையைக் கைவிட்டு அருளியல் நெறியைக் கடைப்பிடிப்போரும், குடிபிறப்பு கல்வி, ஒழுக்கம், வாய்மை, தூய்மை, நடுநிலைமை,
அழுக்காறின்மை, அவாவின்மை ஆகிய எண்குணங்களை 'உடையராய்'
'நடுநிலைமை தவறாது' பகை நொதுமல் நட்பு ஆகிய முத்திறத்தாரையும் ஒப்பக் கருதித் தீர்ப்பு வழங்கும் அவையத்தோரும், இல்லறத்தார்க்கு உரியவாகக் கூறப்பெற்ற ஒழுக்க நெறிகளில் தவறாது நிலைபெற்று அவ்வொழுக்க நெறிகளைக் காத்து நிற்போரும், பெரும்புகழ் தரும் பயக்கும் இடையீடில்லாத கொடையை ' வழங்குவோரும், தம்மைப் பழித்தோரைத் தாம் பொறுக்கும் தகைமையோரும், படை குடி கூழ் அமைச்சு நட்பு அரண் ஆகிய ஆறானும் சிறப்புற்று விளங்கும் அரசரும், அருளொரு பொருந்தி துறவு நெறி மேற்கொண்டோரும், எப்பொருள்களிலும் பற்றற்று நிற்போரும் அறத்தின் பாற்பட்ட வெற்றியினைப் பெற்றோர் ஆவர்” எனக்குறிப்பிட்டுள்ளார். இதனால் தொல்காப்பியர் அறநெறிப்பட்ட நீதி நெறிமுறைகளில் நம்பிக்கை கொண்டிருந்தார் என்பது புலனாகின்றது. தொல்காப்பியர் புறத்திணையியலில்,
1197
"எட்டுவகை நுதலிய அவைத்தானும் எனக் குறிப்பிட்டுள்ளார். இதற்கு உரையெழுதிய நச்சினார்க்கினியர், ''எண்வகைக்
குணத்தினைக் கருதிய அவையத்தாரது நிலைமையானும்; அவை குடிப்பிறப்பு, கல்வி,
35
ஒழுக்கம், வாய்மை, தூய்மை, நடுவுநிலைமை, அழுக்காறின்மை, அவாவின்மை என விடையராய், அவைக்கண் முந்தியிருப்போர் வெற்றியைக் கூறுதல்”? எனக் குறிப்பிட்டுள்ளார், ஆதலால் தொல்காப்பியர் காலத்தில் பகை, நொதுமல், நட்பு ஆகிய முத்திறத்தாரையும் ஒப்பக்கருதித் தீர்ப்பு வழங்கும் அறங்கூறும் அவையம் இருந்துள்ளமை புலனாகின்றது.
"சங்கநூல்களிலும் பதினெண் கீழ்க்கணக்கு நூல்களிலும் 'ஊராண்மை'
பற்றிய செய்திகள் காணப்படுகின்றன.” "அவையம் பொதுவாக நீதிமன்றங்களாகவே செயல்பட்டுள்ளன. நெறிமான அவையம், அறங்கூறு அவையம், நாளோலக்க மண்டபம் என்ற பெயர்களில் அவையம் வழங்கப்பட்டு வந்துள்ளன. பக்தி நெறி மேலோங்கிய காலத்தில் கோயில்கள் நீதி மன்றங்களாகச் செயல்பட்டன. இந்த மன்றங்களில் அரசன் நீதி வழங்கியதாகவும், அரசர் இல்லாத போது சிற்றூர்களில் உள்ள மன்றங்களில் புத்திக்கூர்மையுடைய பிராமணர்கள்
+1100
தீர்ப்புக் கூறியதாகவும்” கூறப்படுகின்றது.
"உரைமுடிவு காணான் இளமையோன் என்ற
நரைமுது மக்கள் உவப்ப நரைமுடித்துக்
சொல்லால் முறை செய்யின் சோழன்" எனப்பழமொழி நானூறு சுட்டுகிறது. கரிகாற்சோழன் இளமைக் காலத்தில் நீதி வழங்கிய திறத்தை மா. இராசமாணிக்கம் எடுத்துக்காட்டியுள்ளார்.'! சிற்றூர்க் காரியங்களை நரை முதிர்ந்த மக்கள் கவனித்து வந்துள்ளனர். கரிகால் சோழன் சிறியவனாகையால் வழக்கின் உண்மையான முடிவை ஆராயும் அறிவு நிரம்பப் பெறாதவன் என இகழ்ந்த முதியோர்கள் மனம் மகிழும்படி நரைமுடிதரித்து முதியவர்
போல் வேடமிட்டு வழக்கை நல்லமுறையில் விசாரித்துச் சரியான தீர்ப்பை
36
வழங்கினான் என்பதைப் பழமொழி நானூறில் வரும் இப்பாடல் சுட்டிக்
காட்டுகின்றது.
“சிலப்பதிகாரத்தில் பாண்டியன் நெடுஞ்செழியன் ஆராயாமல் தவறுதலாக நீதி வழங்கிய முறையை 'வழக்குரைகாதை' விளக்கமாக எடுத்துப் பேசுகின்றது, சேக்கிழாரின் பெரிய புராணம் தடுத்தாட் கொண்ட புராணத்தில் கிழவடிவம் பூண்டு வந்த சிவபெருமான் சுந்தரமூர்த்தி நாயனாரை ஆட்கொண்டவிடத்து திருவெண்ணெய் நல்லூர் சபையில் நியாயம் கூறிய விதத்தைச் சேக்கிழார் விரிவாகவும் விளக்கமாகவும் எடுத்துரைத்துள்ளார். இந்த வழக்குகள் மூலம் சிற்றூர் மன்றங்களில் (நல்லூர்) நல்ல முறையில் வழக்கினை விசாரித்துத் தீர்ப்புக் கூறியுள்ள முறையினை அறிய முடிகின்றது.
"விஜய நகரப் பேரரசின் ஆட்சிக்காலத்தில் பல ஊர்களில் நியாய
மன்றங்கள் இருந்ததாக அறியமுடிகின்றது. 'நாயக்' என்ற பட்டத்துடன் ஓர் உத்தியோகஸ்தர் மட்டும் இந்தப் பணியில் ஈடுபட்டிருந்தார் என்று தெரிகின்றது." இவ்வாறு காலந்தோறும் தமிழ்நாட்டில் கிராமங்களில் 'நியாயசபை' இருந்துள்ளமையையும், அங்கு நீதி வழங்கப்பட்ட முறையினையும் தமிழக வரலாற்றுச் சான்றுகள் நிறுவிக் காட்டுகின்றன. நீதிமன்றம்
இந்தியாவின் அரசியல் நிலையங்கள், பிறநாட்டு அரசியல் நிலையங்களினின்றும் முற்றிலும் வேறுபட்டிருந்தன. இதற்கு அடிப்படையான காரணம் இந்தியாவின் தனிப்பட்ட சமுதாய அமைப்பு எனலாம். ' பண்டைய
இந்தியாவில் 'சட்டம்' இயற்றப்படவில்லை; சமூகத்தில் தொன்று தொட்டு நிலவி
37
வந்த "நேர்மை, 'நேர்மையற்றது', 'முறையானது', 'முறையற்றது' என்னும்
கருத்துக்கள் மட்டுமே வேரூன்றியிருந்தன. இதனை ந. சுப்ரமணியன்,
"இந்தியாவிற்கே உரித்தான தனிப்பட்ட சாதி அடிப்படையில் அமைந்த சமுதாய அமைப்புக் காரணமாகச் சட்டம், நீதிமன்றங்கள், நீதி வழங்குதல் போன்றனவற்றில் ஓரளவு விரைப்பு (நெகிழாத்தன்மை) காணப்படுவது இயல்பே. சிறப்புரிமைகளும் கடப்பாடுகளும் அறியப்பட்டன; அவற்றை எடுத்துக்கூறினர், சமுதாய அமைப்பை மாறாமல் பார்த்துக் கொள்ளும் வெளிப்படையான பொறுப்பையுடைய அரசன் அவற்றை உறுதிப்படுத்தி நடைமுறையும் படுத்த வேண்டியிருந்தது" என்று குறிப்பிடுகின்றார். ஆதலால் நெடுங்காலமாக இங்கனம் நிறுவப்பெற்ற சமூக மரபுகளைப் போற்றுவதே சட்டத்தின் தன்மையாயிற்று. நிறுவப்பட்ட சமுதாய ஒழுங்கிணைப்பு (800181 Norms) புரட்டும் முயற்சி அனைத்தையும் அடிப்படையான குற்றம் எனக் கருதினர். மிக அதிகமான தண்டனைகள் இத்தகைய குற்றங்களுக்கு அளிக்கப்பட்டன.
பிற குற்றங்களுக்கு எளிமையான தண்டனைகள் வழங்கப்பட்டன. சமுதாய ஒழுங்குநிலை தடுமாறினால் மிகவும் பாதிக்கப்படுவது மன்னனேயாதலால் அத்தடுமாற்றம் நடைபெறாமல் மன்னன் பார்த்துக் கொண்டான். நாட்டின் எழுதாச் சட்டத்தின் அதிகாரத்தைக் கொண்டும், படைகளின் பலத்தைக் கொண்டும் அரசன் சட்டத்தையும், ஒழுங்கையும் தனது ஆட்சியில் இயன்றவரை அமைதியாகவும் தேவையான போது வன்முறையிலும் நிலைநாட்டியுள்ளான். உலகியல் அதிகாரங்களைத் தன்னகத்தே கொண்ட மன்னன் நீதியின் மூலமாக விளங்கினான்; நீதி நிருவாகத்திற்குப் பொருத்தமானவர்களைத் தேர்ந்து அவர்கள் மூலம் நீதியை நிருவாகித்து வந்துள்ளான். நகரங்களிலும் கிராமப்புறங்களிலும் நீதியை வழங்கும்
மன்றங்கள் இருந்துள்ளன. தலைநகரில் மன்னனும் பிற இடங்களில் அவனுடைய
38
பிரதிநிதிகளும் இம்மன்றங்களின் தலைமைப் பொறுப்பினை ஏற்று நீதி வழங்கியுள்ளனர். அக்காலத்தில் நாட்டுத் திட்டம் என்பது பறையறைந்து
அறிவிக்கப்பட்ட மன்னனின் ஆணைகள் ஆகும்.
ஆராய்ச்சி மணி
'தலைநகரங்களில் இருந்த நீதி மன்றங்களை 'அவை' என்றனர். கிராமங்களில் நீதி எளிமையாக வழங்கப்பட்ட இடம் 'மன்றம்' எனப்பட்டது. நீதிபதிகளின் கடமைகளையாற்றத் தனிப்பட்ட அலுவலர்கள் நியமிக்கப்பட்டனர்"?5 என்னும் கருத்தினை வலியுறுத்தும் சான்றுகள் இல்லை, "மன்னனது 'அரண்மனையின் முன்றில்' அவனது அவை கூடிய நீதிமன்றமாகவும் விளங்கியுள்ளது. மன்னனது அரண்மனை வாயிலில் ஆராய்ச்சி மணியொன்றும் கட்டப்பட்டிருந்தது. தன் மகன் ஒரு பசுவின் கன்றினைக் கொன்றதாக அவன்மீது குற்றம் கண்டு கொலைத்தண்டம் விதித்த மனுநீதிச் சோழனது அரண்மனை வாயிலில் ஆராய்ச்சி மணியொன்றிருந்தது. வழக்குத் தொடர்ந்த பசு ஆராய்ச்சி மணியையடித்து மன்னனுக்கு அறிவித்தது.” பாண்டியன் நெடுஞ்செழியனின்
மனைவியான கோப்பெருந்தேவி தான்கண்ட தீக்கனாவினைக் கூறும் போது,
நங்கோன்றன் கொற்றவாயின் மணிநடுங்க
நடுங்கும் உள்ளம்!
என்கின்றனர். "ஆராய்ச்சி மணி ஆங்கு இருந்தபோதும், அரண்மனை வாயிலாக நெருங்கிய கண்ணகி வருத்தமிகுதியல் அதனைப் பொருட்படுத்தாமல்!" வாயிலோனைக் கூவி அழைத்து அவள் கூற்றை மன்னனுக்குத் தெரிவிக்குமாறு
பணிக்கின்றாள்."? ''இந்நிகழ்ச்சியால் யாதொரு வழக்கினையும் வற்புறுத்தாமல்
39
வழக்காளரைத் தம்முன் கொண்டு வர ஆணையிட்டமை புலனாகின்றது." இந்த எடுத்துக் காட்டுக்களால் சோழ, பாண்டி அரண்மனைகளில் இத்தகைய ஏற்பாடு காணப்பட்டமையை உணரலாம். பொதுவாக, அரண்மனைக் காவலர்கள் புறத்தாரையும் முன் அனுமதி பெறாதவர்களையும் அரண்மனைக்குள் விட மாட்டார்கள் என்பதனால் இவ் ஆராய்ச்சி மணி தேவைப்பட்டது எனலாம்.
அறங்கூறவையமும் மன்னனின் தலைமையும்
“தலைநகரத்தில் அறங்கூறவையத்திற்கு மன்னனே தலைமை தாங்கினான். இம்மன்றங்களில் நீதிபதியாக விளங்குவதற்குத் தனிப்பட்ட சில அலுவலர்கள் நியமிக்கப்பட்டதாக சான்றுகள் இல்லை, சீர்மையும், கல்வியும், பண்பும் நிறைந்த 'அறிஞர்குழு' ஒன்று இந்த அறங்கூறவையங்களில் செயல்பட்டுள்ளது. மன்னனுக்கு நீதிகளை எடுத்துரைத்தல் அவர்களது கடமையாகும். வயதில் இளைய மன்னனாகிய கரிகாற் சோழனைக் குறிக்கும் போது பழமொழி நானூறு 'உரைமுடிவுகாணான் இளையோன்"! என்று குறிப்பிடுகின்றது. "இதனால் 'உரை' என்பது 'வாதி மற்றும் பிரதிவாதிகளின் வாதங்கள்' என்பதனையும், 'உரை முடிவு' என்பது 'தீர்ப்பு' என்பதனையும், அறிவுடை அமைச்சர்களின் வாதங்களைக் கேட்டுத் தீர்ப்புக்கூற வேண்டியது மன்னனுடைய கடமை என்பதனையும் அறியலாம். நீதி வழங்குவதற்காகக் கூட்டும் அரசவை 'அறக்களம்' என்றழைக்கப்பட்டது. பிற்கால உரையாசிரியர்கள் இத்தொடரினைத் 'தருமாசனர்' என்று மொழி பெயர்த்துள்ளனர்.!!"“ "கற்றுவல்ல நீதி அறிவுரையாளர்களைப்: பொதுவாக 'அறங்கூறு அவையம்'' 'அறக்களத்து அந்தணர்" என்றனர். பிந்திய தொடரினைச்
சிலப்பதிகார அரும்பத உரைகாரர் 'தரூமாசனத்துக் கருத்தாக்கள்' அதாவது
'அறங்கூறவையத்து அலுவலாளர்' என்று விளக்கியுள்ளார். அறங்கூறவைத்தார் சில
40
வரலாற்றாய்வாளர்கள் குறிப்பிடுவது போல பிராமணர்கள் இருந்துள்ளனர் என்பதற்குச் சான்றுகள் இல்லை. மதுரைக் காஞ்சியில் காவிதிப் பட்டம் பெற்ற அமைச்சர்கள் அறங்கூறவையத்தில் இருந்தமை பேசப்படுகின்றது. திருவள்ளுவர் 'அந்தணர்' என்னும் சொல்லினை,
“அந்தணர் என்போர் அறவோர் மற்று எவ்வுயிர்க்கும்
செந்தன்மை பூண்டு ஒழுகலான்'!!* என்று குறிப்பிட்டுள்ளார். ''ஆதலால் 'அந்தணர்' என்போர் அறக்களத்தோர் என்றும் நேர்மையும் நியாய உணர்ச்சியும் கொண்டவர்கள் என்பதும் பெறப்படுகின்றன. இளகிய உள்ளமும், தாராள மனப்பான்மையும், நீதி வழங்கும் திறனும், நியாய உணர்ச்சியும் பெற்ற நீதி அறிவுரையாளர்கள் 'அந்தணர்' எனப்பட்டனர். இது பின்னர் சாதியைக் குறிக்கும் சொல்லாயிற்று. கிடைக்கும் இலக்கியச் சான்றுகளைக் கொண்டு அணுகும் போது மன்னர்களில் பெரும்பாலோர் தக்கோராலேயே
அறிவுறுத்தப் பெற்றுள்ளனர் என்பது புலனாகின்றது." இருவர் தம்முள் முரண்பட்டு வந்தால் அவர்களது வழக்கை நடுநிலை பிறழாகிருந்து கேட்டு, நன்கு ஆராய்ந்து உண்மையைத் தெளிந்து முடிவாகத் தீர்ப்புக் கூறும் இடமே அறங்கூறவையும் ஆகும். இதனை மதுரைக் காஞ்சி,
"சிறந்த கொள்கை அறங்கூ றவையம்'"?
எனச் சுட்டுகின்றது. ''அந்த அவையத்திலிருந்தோர் கல்வி, கேள்வி, ஒழுக்கம் ஆகியனவற்றில் சிறந்த அறவோராக, நடுவுநிலைமை கொண்டோராக
இருந்தனர்.” இதனைப் புறநானூறு பல பாடல்கள் சுட்டிக்காட்டுகின்றது. "சான்றோ ரிருந்த அவையத்து" "அறமறக் கண்ட நெறிமாண் அவையம்'"* "மறங்கெழு சோழ குறந்தை அவையத் தறநின்று நிலையிற்று
77124
41
சான்றோர் இருந்த அவையம் என்பதனால் அறிவும் ஒழுக்கமும் நேர்மையுமுடைய சான்றோர்கள் அந்த அவையத்தில் இருந்தனர் என்பதைப் புறநானூறு சுட்டிக் காட்டுகின்றது. உறந்தையில் இருந்த அறங்கூறவையத்தில் அறம் நிலை கொண்டிருந்தது என்பதனால் அறநெறி வழுவாது அங்கு நீதி வழங்கியுள்ளனர் என்பதும் புலனாகிறது.
அறிவால் நிறைந்த சான்றோர்களைத் தேர்ந்தெடுத்து அரசனே அறங்கூறவையத்தில் அமர்த்தி வைத்தான். அவர்கள் அறநெறி தவறாது நீதி வழங்கியுள்ளனர். இதனை,
“அறநிலை திரியா அன்பின் அவையத்துத்
திறனில் ஒருவனை நாட்டி மெலிகோல்
1124
செய்தே னாகுக
என்று ஒல்லையூர் தந்த பூதப் பாண்டியன் கூறிய வஞ்சின மொழியால் உணரலாம். மன்னர்கள் குடிமக்களுக்கு நீதி வழங்குவதை முதன்மையான பணியாகக் கருதி, அறங்கூறவையத்தை விழுமிய முறையில் நடத்தி வந்துள்ளனர் என்பதைப் புறநானூற்றுப் பாடல்களின் மூலம் அறியலாம்.
ர்
"சங்க காலத்தில் நீதி மன்றம் அவை' அல்லது 'அவையம்' என்றழைக்கப்பட்டது. நியாயம் வழங்கும் நிலையில் செல்வாக்கும் நல்கூர்ந்தவர்களுக்குிமிடையே வேறுபாடு காண்டல் தவறு என்று அறங்
"8 அவை'யுடன் கலக்காமல் மன்னனே
கூறவையத்தினர் எச்சரிக்கப்பட்டுள்ளனர். தீர்ப்புக்கள் வழங்கியதும் உண்டு. ஆனால் சங்க இலக்கியங்களைப் பொறுத்தவரை
மன்னனின்றி அவையத்தாரே தீர்ப்பு வழங்கிய 'அவையங்கள்' இல்லை,
42
நீதி வழங்கிய முறை
“அவையத்திடம் தொடர்ந்த வழக்கு 'குறை' எனவும், வழங்கிய நியாயம்
'முறை' எனவும் பட்டன? "முறைபிறழாமை பெரியதோர் பண்பாகப் போற்றப்பட்டது. மாதவர் நோன்பும் மடவார் கற்பும் வான்பிழையாமையும் மன்னவன் கோலை நோக்கி நிகழ்ந்தன”? என்று புலவர்கள் குறிப்பிட்டுப் பாடல்களை இயற்றியுள்ளனர். "சாட்சி கூறியவன் 'கரி' அல்லது 'கரியோன்'
எனப்பட்டன. அவன் கூறிய சாட்சி 'கரி' எனப்பட்டது.”
"குறை நேர்ந்தவர்கள் அனைவரும் நீதிமன்றத்தை அணுகியுள்ளனர். காதலில் ஏமாற்றமடைந்தவர்கள் தங்கள் காதலியை அடைய நீதிமன்றத்தை
நாடியுள்ளார்.
அவ்வாறு மன்றத்தை நாடிய காதலற்குக் காதலி உரியவள் என்று மன்றம் கருதினால், ''அம்மன்றமே அவர்களுடைய மன்றலுக்கும் ஏற்பாடுகளைச் செய்தன. அம்மணம் ஊர்ப்பொது மன்றத்தில் நடைபெற்றுள்ளது. தான் மணக்க விரும்பிய மகளுக்கு முளை விலை அளிக்க வேண்டியதை மன்றம் (அவை)
1120
எடுத்துரைத்தது. அறங்கூறவையத்தார் தகுதிகள்
"வயதும் அனுபவமும் அறங்கூற வையத்திலுள்ள நீதிபதிகளுக்குரிய தகுதிகள் என்று பொதுமக்கள் கருதியுள்ளனர்.'! ஆங்கிலச் சொற்களான 'செனட்' (nate) 'கவுன்சில் ஆப் எல்டர்ஸ்' (பே! ௦1 Elders) என்னும் சொற்களும் இக்கருத்தினையே வலியுறுத்துகின்றன. ''இதற்குச் சான்றாக இளம் வயதிலேயே அரசனாகப் பட்டமெய்திய சோழ மன்னன் கரிகாலன் நீதிபதியாக அவையத்தில்
அமர்ந்து நீதி வழங்கியமையைக் குறிப்பிடலாம். வழக்குத் தொடர்ந்தவர்களும்
43
அவையத்தாரும் அம்மன்னது இளம்வயது, அவனது நீதி வழங்கும் திறமைக்கு இடையூறாக இருக்குமோ என்று ஐயப்பட்டனர். இளையவனாசிய நுண்புலமைமிக்க மன்னன் இதனைக் கண்டு, அவையின்று விலகிச் சென்று ஒரு நரைமுடியணிந்து முதியவனாகத் திரும்பி வந்து வழக்கினைக் கேட்டுத் தன்னைக் குறைகண்டவர்களும் வியக்க நியாயம் வழங்கினான். இதனைப் பழமொழி நானூறு தெளிவாக எடுத்துக் கூறுகின்றது. இக்கதையின் வரலாற்று உண்மை எவ்வாறு அமைந்திருப்பினும், வயதும் மதிநுட்பமும் அனுபவமுமே நீதி கூறும் அறங்கூறவைத்தார் தகுதிகள் என்பதை இக்கதையின் மூலம் அறிய முடிகின்றது. அத்துடன் மக்களின் முறையீடுகளை மன்னனே விசாரித்துத் தீர்ப்புக் கூறியுள்ளான் என்பதையும் அறிய முடிகின்றது. காவிதிப்பட்டம் பெற்ற அமைச்சர்கள்
'அவையத்தாரிடையே காவிதிப் பட்டம் பெற்ற அமைச்சர்களும் இருந்துள்ளனர்; அவர்கள் அறத்தை அறிந்தமைக்கு அறிகுறியாக அவர்களுக்கு இப்பட்டம் வழங்கப் பெற்றுள்ளது. அவர்கள் நன்மை, தீமைகளை நன்கு உணர்ந்திருந்தனர்; மன்னனுடைய குணத்தையும் அறிந்திருந்தனர். இருப்பினும் தமது எண்ணங்களை அவர்கள் எளிதில் வெளிப்படுத்தவில்லை. அவர்கள் இரக்கம், நீதி ஆகிய பண்புகளிலிருந்து சிறிதும் வழுவாதவர்கள், அவர்தம் நற்பண்புகளால்
அவர்கள் புகழ் அடைந்துள்ளனர்.” அவர்கள் அவையில் அமர்ந்திருந்த போது
"அவர்துகில்'' என்னும் ஒருவகைத் தலைக்கணி அணிந்திருந்தனர். அது இக்காலத்தில் வழக்கறிஞர்கள் கருஞ்சட்டை அணிதல் போலக் காட்சியளித்தது. குற்றமும் தண்டனையும்
"கோவலனைக் கொன்று வருமாறு பாண்டியன் நெடுஞ்செழியன்
ஆணையிட்ட போது விசாரணை, தீர்ப்பு, அறிவுரை, ஆலோசனை என்பனவற்றில்
44
யாதொன்றும் மேற்கொள்ளப்படவில்லை. அது மன்னன் மனம் போனவாறு இட்ட ஆணையாகும். இந்த 'அநீதியை' கண்ணகி பாண்டியன் நெடுஞ்செழியனுக்கு அறிவுறுத்திய பொழுது 'கள்வனைக் கோறல் கடுங்கோலன்று' என்று கூறி அவள் கூற்றை மறுக்கின்றான். ஆயினும் குற்றம் அறங்கூறவையத்தில் நிரூபிக்கப்படவில்லை என்பதை மறந்து பாண்டியன் அங்ஙனம் கூறுகின்றான்.” "இதனால் பாண்டியன் நெடுஞ்செழியனுக்குக் கிடைத்த தண்டனை அவன் தனக்குத் தானே மேற்கொண்டதாகும். மன்னன் குற்றவாளியாகும் போது அக்குற்றவாளியையும் மன்னன்தான் தண்டிக்க முடியும். குற்றம் செய்த தனது கையைத் தானே அரிந்து கொண்டே குலசேகரபாண்டியனின் வரலாற்றுச் செய்தி, 'தனக்குத்தானே விதித்துக்
1136
கொள்ளும் ஒறுப்பிற்கு' ஓர் எடுத்துக்காட்டாகும்.
"அரசனின் காவல் தோட்டத்திலிருந்து ஆற்றோடு சென்ற மாங்காய் ஒன்றினைத் தின்ற குற்றத்திற்காக ஒரு பெண்ணைப் பல்குன்றக் கோட்டத்துத் தலைவனான நன்னன்சேய் நன்னன் என்பான் கொல்லுவித்தான். அவளது பெற்றோர்கள் அப்பெண்ணைத் தண்டனையிலிருந்து விடுவிப்பதற்காக என்பத்தொரு களிறுகளையும் அவள் எடையுள்ள தங்கப் பதுமையொன்றினையும் தருவதற்கு ஓப்பியும் அதனைக் கேளாது அப்பெண்ணைக் கொல்லத் துணிந்தான் அம்மன்னன். ஆயினும் இம்மன்னனின் இவ்விந்தையான நடத்தை, பண்பாடும் நல்லெண்ணமும் கொண்ட சான்றோர்களால் வெறுக்கப்பட்டமையும் சிந்திக்கத் தக்கதாகும். ''பல தலைமுறைகளுக்குப் பின்னர் பெருந்தலைச் சாத்தனார் என்னும் புலவர் இளங்கண்டீரக்கோ, இளவிச்சிக்கோ என்னும் இரண்டு சிற்றரசர்களைக் கண்டபோது முந்தியவனை அன்போடு தழுவிப் பிந்தியவனைத் தொடவும் கூச்சப்பட்டார். இவ்வேறுபட்ட அணுகுமுறைக்குப் பிந்தியவனாகிய இளவிச்சிக்கோ
காரணம் கேட்டபோது, 'இளவிச்சிக்கோ கொடியோனான நன்னனின்
45
வழித்தோன்றலாதலால் தொலைவில் நிறுத்தத் தக்கவன்' என்றார் பெருந்தலைச் சாத்தனார்.” "நேர்மையற்ற நடத்தையை எதிர்க்கும் பண்பு கூர்மையானதாக இருந்ததால் பிற்காலத்தவர்கள் அக்கொடுங்கோலனை, 'பெண்கொலை புரிந்த rl
நன்னன் என்றே அழைத்தனர்.
அக்காலத்தில் சொத்துரிமை பற்றிய வழக்குகளும் (0111), குற்ற வழக்குகளும் (Criminal) தொடரப்பட்டன. "பாண்டியன் நெடுஞ்செழியனிடம் கண்ணகி முறையிட்ட வழக்கு கொலையோடு தொடர்புடையதாகும், அவையில் வழக்குத் தொடர்வதற்குக் காலவரையறை யாதொன்றும் இல்லை. கோவலன் மதுரையை அடைவதற்கு நெடுநாளைக்கு முன்னரே பொற்கொல்லன் கோப்பெருந்தேவியின் சிலம்பினைத் திருடிவிட்டான்; அவன்மீது பொற்கொல்லன் காலம் தாழ்த்தியே மன்னனிடம் பழி சுமத்துகின்றான். காலவரையறை கடந்ததனால் அவ்வழக்குப் பட்டுப்போகவில்லை. மனுநீதிகண்ட சோழன் வரலாற்றில் குற்றம் நிகழ்ந்த உடனேயே பசு வழக்குத் தொடர்ந்து விட்டதாயினும், மிகப் பிற்பட்ட காலத்தில் தான் மன்னனால் குற்றாவாளியைக் கண்டுபிடிக்க முடிந்தது. அக்கால நீட்டிப்புத் தண்டனையை மறுத்துவிடவில்லை. பழமொழி நானூற்றுப் பாடலொன்று"! காலம் . கடந்துவிட்ட நீதிநிருவாகச் செயல்முறையைப் பற்றிக் குறிப்பிடுகின்றது. "பல நாட்களுக்கு முன்பு இளவரசன் குற்றம் இழைத்தான் (காலம் கடந்து விட்டதாயினும்) உண்மையையுணர்ந்த மன்னன் கடுந்தண்டனையைக் குற்றவாளிக்கு விதித்தான். இங்குக் 'காலை கழிந்ததன் பின்றையும்' என்னும் தொடரை அப்பாடல் ஆளுகின்றது. இந்த வழக்கின் முடிவையும் 'முறைமைக்கு
மூப்பிளமை இல்' என்று சுட்டிக்காட்டுகின்றது.'*! இங்குக் கூறிய இரண்டு
எடுத்துக்காட்டுக்களிலும் 'குற்றவியல்' குற்றங்களே இழைக்கப்பட்டன. ஒன்று
46
திருட்டு; மற்றையது கொலையாகும். பொதுவாகக் குற்றங்கள் நாட்கடந்துவிட்டால் 'காலாவதி ஆகிவிடுதல்' (உ ௦7 Limitation) சொத்துடைமை பற்றிய வழக்குகளில் மட்டுமே தொடர்புடையதாகும். சங்க காலத்தில் சொத்துரிமை பற்றிய வழக்குகளில் 'காலாவதிச் சட்டம்' எம்முறையில் செயல்பட்டது என்பதற்குரிய சான்றுகள் கிடைக்கவில்லை.
வழக்கு விசாரணையும் சாட்சிகளும்
"அவையில் நடைபெற்ற வழக்கு விசாரணை மிகவும் எளிமையான
முறையில் அமைந்திருந்தது. கிராம நீதி சபையான 'மன்றத்தில்' அது அதனினும் எளியமுறையிலேயே அமைந்திருந்தது. வாதி, பிரதிவாதிகள் வழக்கினைத் தாக்கல் செய்த பின்னர் சாட்சிகள் அழைக்கப்பட்டனர்; பின்னர் அவர்கள் வாக்குமூலங்கள் கேட்கப்பட்டன; அல்லது எழுத்து மூலமாகக் குறித்துக் கொள்ளப்பட்டன. அந்தச் சாட்சிகளை அடிப்படையாகக் கொண்டு நியாய சபை அறிவுரையாளர்கள் , அவ்வழக்கொடு தொடர்புடைய சட்டத்தை ஆராய்ந்து மன்னனுக்கு அறிவித்தனர். மன்னன் இறுதியாகத் தீர்ப்பளித்துள்ளான். வழக்கோடு தொடர்புடையோரும் சாட்சிகளும் பிரமாணத்தின் பேரில் வாக்கு மூலம் அளிக்குமாறு பணிக்கப் பெற்றனர். பிரமாணம் என்பது மன்னனுடைய கால்களைத் தொட்டுச் சூளுரை
71142
கூறுதல் ஆகும்.
"சாட்சிகள் மிகுதியாகக் குறிக்கப்படுகின்றனர், சான்றோர் 'பொய்க்கரி' கூறார் என்பது பொதுவான கருத்தாகும்.** "புகார் நகரில் இருந்த ஒரு பூதம் பொய்ச்சாட்சி கூறியோரைக் கொன்று தின்று வந்தது என்பது கதையாகும்!” "பொய்க்கூறுதல் பாவம்; பொய்க்கரி கூறுதல் அதனினும் பெரிய பாவம்; அது
சட்டப்படியும் குற்றமாகக் கருதப்பட்டது. சட்டமன்றத்தில் பிரமாணத்தில் பேரில்
47
பொய் கூறியவர்களது நா துண்டிக்கப்பட்டது.'* திரிபுபட்ட அல்லது பொய்யான சாட்சி கூறுதலும் தவறாகும். தேவையான பொருத்தமான சாட்சியைத் தெரிந்தும் கூறாமல் இருத்தலும் தண்டனைக்குரியதாகும்.''!*”
"திருக்குறள் நல்லாட்சியைக் குறிக்கும் 'செங்கோன்மை' என்னும் அதிகாரத்தில் மன்னனது நியாய முறையைப் பற்றிப் பேசுகின்றது. மன்னனது நீதிக்கு அவனது செங்கோலே ஒரு கட்புலனாய சின்னமாகும், நீதியின் நடுவுநிலைமை (முறை) முதலிய பண்புகளை அது குறித்தது. ஆகவே சங்கத் தமிழர்களுக்கு நல்லாட்சி என்பது நேர்மையான அல்லது செம்மையான (செங்)
கோல் என்பதாயிற்று, குற்றங்களும் தண்டனைகளும்
"சங்க காலத்தில் ஆண்முலையறுத்தலும், மகளிர் கருச்சிதைத்தலும்,
149 ர
அந்தணர்த்தப்புதலும் பெருங்குற்றங்களாகக் கருதப்பட்டன. நன்று கோறலையே
மிகப்பெரிய குற்றமாகத் திருவள்ளுவர் கூறியுள்ளாரெனினும்'"? 'நன்றிகோறல்' என்பது சட்டப்படி ஒப்பந்தம் மீறுதல் குற்றத்தின் அடங்காததால் அது சட்டத் தண்டனைக்குப் புறம்பானதே ஆகும், சிலப்பதிகாரத்தில் குற்றம் சாட்டப்பட்ட கோவலன் அரசன் ஆணைப்படி உடனடியாகக் கொலைத்தண்டனையைப் பெற்றான். ஏனெனில் திருட்டுப்போன சிலம்பு அரசிக்குரியதாகும், பல்குன்றக் கோட்டத்து நன்னன் சிறுமியைக் கொல்வித்த வரலாறும் இத்தகையதே. அந்தச் சிறுமி ஆற்றில் வீழ்ந்து போன மாங்கனி ஒன்றினை எடுத்துத் தின்றது குற்றமாகும். ஏனெனில் திருட்டுப்போன மாங்கனி மன்னனுடையதாகும். ஆதலால் சங்க காலத்தில் களவுக்குத் தண்டனை திருடியவர்களின் தலைகளை வெட்டி விடுதல்
என்பது உறுதியாகின்றது.
48
"பிறனில் பிழைதல்' கடுங்குற்றமாகக் கருதப்பட்டதாயினும் 'வரைவின் மகளிர்' செயற்பாடு ஒரு தொழிலாகவே கொள்ளப்பட்டது. அவர்கள் தண்டிக்கப்படவில்லை. ஆனால் பிறனில் விழைதல் குற்றத்திற்குத் தண்டனை
பரல்]
சிரச்சேதமாக இருந்துள்ளது. "வேற்று நாட்டு அல்லது பகைப்புலத்து ஒற்றர்கள் பிடிபட்டால் அவர்கள் உடனடியாகக் கொல்லப்பட்டனர்". "மன்னனுடைய உடைமைப் பொருள் திருட்டுப்போனால் குற்றம் சாட்டப்பட்டவனுடைய எடைக்கு நிகரான தங்கப்பதுமைகளை அதற்கு ஈடாக அளிக்கும் மரபும் அக்காலத்தில் rls
இருந்துள்ளது என்பதைப் 'பெருங்கதை'''* சுட்டிக்காட்டுகின்றது.
71144.
"சேக்கிழாரின் பெரியபுராணத்தில்-தடுத்தாட்கொண்ட புராணத்தில் சிவபெருமான் சுந்தரமூர்த்தி நாயனாரிடம் அவர் தமது அடிமை என்று கூறிய வாதமும், அவ்வாதத்தையொட்டி நிகழ்ந்த சட்ட விசாரணை முறைகளும் பிற்கால
1152
வழக்கின்பாற்பட்டவையே. ஆயினும் அவ்வழக்கு அவையில் ஒரு வழக்கினைக் கூறுதல், அவையத்தார் தொடர்புடைய குறிப்புக்களை ஆய்தல், சாட்சிகளின் வாக்கு மூலங்களை எழுதிக்கொள்ளுதல், வாதி, பிரதிவாதிகளின் வாக்கு மூலங்களையும் குறித்துக் . கொள்ளுதல், பிறகு விரைவாக வழக்கினை விசாரித்துத் தீர்ப்புக் கூறுதல் போன்றனவெல்லாம் தொடக்க நிலைகளிலேனும் சங்க காலத்திலும் காணப்பட்டன எனக் கொள்ளலாம்.
மன்னன் ஆணைப்படி மணிமேகலை சிறையிருத்தப்பட்டாள். அச்சிறைச் சாலையை "'அதிர்கழல் வேந்தன் அடிப்பிழைத்தாரை, ஒறுக்குந் தண்டத்துறு சிறைக் கோட்டம்'"5 என்று வருணித்துள்ளார் அதன் ஆசிரியர். சிறையிருத்தலே ஒரு
தண்டனை என்று கருதப்பட்டதா? அல்லது சிறைச்சாலையின் மறைவிடத்தில்
49
பொதுமக்கள் கண்ணில்படாமல் குற்றவாளிக்குக் கடும் தண்டனை வழங்கப்பட்டதா?
என்பது புலனாகவில்லை.
"சங்ககாலத்தில் ஐயப்பட்ட குற்றவாளிகளும் கொடிய முறையில் தண்டிக்கப்பட்டுள்ளனர். சோழன் கிள்ளிவளவன் தனது பகைவனான மலையமானின் இருமக்களையும் யானைக்கிடுமாறு ஆணையிட்டான். இது வழக்கு மன்றத்தின் அருகாமையில் நடைபெற இருந்தது. அப்போது கோவூர்கிழார் குறுக்கிட்டு அவ்விருவரையும் கொடும் மரணத்திலிருந்து காப்பாற்றியுள்ளார்.!”” மனுநீதிச்சோழன் கதையை நோக்குமிடத்து, இம்மனுநீதி கண்ட சோழன் 'ஹமுராபி' சட்டமுறையையே பின்பற்றியுள்ளான்; மனுநெறியைப் பின்பற்றவில்லை என்பது புலனாகின்றது. ஏனெனில் இருகால், நாற்கால் விலங்குகளைக் கொன்ற குற்றத்திற்கான தண்டனையைக் குறிப்பிடவந்த மனு,
"ஒரு மனிதன் கொல்லப்பட்டால், கொலையாளியின் குற்றம் ஒரு திருடனுடைய குற்றம் போன்றதே; பெரிய விலங்குகளான பசுக்கள், யானைகள், குதிரைகள் கொல்லப்படின் அதிற்பாதிக் குற்றமாம்; சிறு ஆடு, மாடுகளை உடற்கு ஊறு செய்யின் இருநூறு பணம் அபராதமாம்.' என்று குறிப்பிட்டுள்ளார். மனுவைப் பின்பற்ற வேண்டுமென்ற எண்ணம் மனுநீதிகண்ட சோழனுக்கு இருந்திருக்குமேயானால், அவன் தனது மகனுக்கு இருநூறுபணம் அபராதம் விதித்திருப்பானேயன்றி அவனைத் தேர்க்காலிற் கடத்திக் கொன்றிருக்க மாட்டான். இவற்றைக் கருத்தில் கொண்டு நோக்கும் போது சங்க காலத்தில் ''தண்டனைகள் நியாயமானவைகளாகவும் எளிமையானவைகளாகவும் இருந்தன? என்னும் கூற்றை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
உருத்திரங் கண்ணனார் என்னும் சங்கப்புலவர் தொண்டைமான்
இளந்திரையன் என்னும் மன்னனைப் பற்றிக் குறிப்பிடும் போது, அவன் முறை
50
வேண்டி வருவோர்க்கும் குறைவேண்டி வருவேரர்க்கும் அவரவர் விரும்புபவனவற்றை வழங்குவான் என்பதை,
"'முறைவேண்டு நர்க்குங் குறைவேண்டு நர்க்கும்
வேண்டுப வேண்டுப வேண்டினார்க் கருளீ'60 என்று குறிப்பிடுகின்றார். இவற்றையெல்லாம் நோக்கும்போது பண்டைய தமிழ் மன்னர்கள் காட்சிக்கு எளியவராக இருந்து, குறைகேட்டு, அறம் தவறாத வகையில் நீதி வழங்கியுள்ளனர் என்பதையும் மறுக்க முடியவில்லை. தம்முள் முரண்பட்டு வருவோர்க்கு நீதி வழங்கும் அறங்கூறவையத்தில், தாமே அவற்றை எடுத்துக்கூறி முறை செய்யும் சான்றோரும் இருந்துள்ளனர். முறைவேண்டி வருவோர் தமது குறையைக் கேட்போர்க்கு நன்கு விளக்கும் வகையில் முறைபடக் கூறும் திறமை இல்லாதவராக இருப்பின், அவர்கூறுவதைக் கேட்டு, அவர்க்காகத் தாமே நின்று திறம்படக் கூறி முறை செய்யும் சான்றோரும் அவையத்தில் இருந்தனர் என்பதை,
நல்லோர் குழீஇய நாநவில் அவையத்து
வல்லா ராயினும் புறமறைத்துச் சான்றோரைச்
சொல்லிக்காட்டி சோர்வின்றி விளக்கி
நல்லதின் இயக்குமவன் சுற்றத் தொழுக்கம்'!? என்னும் புறநானூற்றுப் பாடல் விளக்குகின்றது.
கள்ளூர் என்னும் ஊரில் நெறிதவறிய ஒருவன் செய்த தவற்றினை அவ்வூர்
மன்றத்தார் கேட்டறிந்து, அக்கொடியவனை மரக்கிளையில் இறுகப் பினைத்தனர். அவன் தலையில் சாம்பலைப் பெய்து அவமானப்படுத்தித் தண்டித்தனர் என்பதை,
*கரும்பகல் படப்பைப் பெரும்பெயர்க் கள்ளூர்த்
திருநுதற் குறுமகள் அணிநலம் வவ்விய
அறணி லாள னறியே னென்ற
திறனில் வெஞ்சூ லறிகரி கடாஅய்
முறியார் பெருங்கிளை செறியப் பற்றி
31
நீநுதலைப் பெய்த ஞான்றை வீநுசா லவையத் தார்ப்பினும் பெரிதே” என்னும் அகநானூற்றுப் பாடல் தெளிவுப்படுத்துகின்றது. இதிலிருந்து ஊர்
அவையினர் குற்றம் செய்தோரை அவமானப்படுத்தித் தண்டித்தமையை அறியலாம். சோழர் கால நீதிமுறை
"சோழ மன்னன் வாய்மொழியாகப் பிறப்பித்த ஆணையைக் கோட்டத்து அவையினரான நாட்டார்கள், பிரமதேயக் கிழவர்கள், தேவதானத்து ஊர்களிலார், பள்ளிச் சந்தங்கள், கண முற்றூட்டு, வெட்டிப்பேறு, நகரர்கள் ஆகியவர்கள் நிறைவேற்றி வைத்துள்ளார்கள். நாட்டாரின் சபையான நாடும், பிரமதேயத்தின் சபையும், ஊர்ச்சபையான ஊராரும், அரசாணையின் மேல் பிறப்பித்த கட்டளைகளை மத்தியஸ்தனும், கரணத்தானும் ஆவணத்தில் எழுதி வைத்துள்ளார்கள். சபையின் தலைவனுக்குத் 'திருவடிகள்' என்று பெயர். சபையின் கூட்டங்களுக்கு உறுப்பினர் அனைவரும் வந்து அதன் நடவடிக்கைகளில் கலந்து கொள்ள வேண்டும் என்ற கட்டுப்பாடு உண்டு. அப்படிக் கலந்து
கொள்ளாதவர்களுக்குத் தண்டப் பொன் விதிக்கப்பட்டது."
'ஊரார்' தீட்டிய ஆவண ஓலையில் கையொப்பமிட வேண்டிய பொறுப்பு மத்தியஸ்தனைச் சார்ந்தது. இம்மத்தியஸ்தனுக்குக் 'கரணத்தான்' என்றும், 'வேட்கோவன்' என்றும், 'கரணத்தான் வேட்கோவன்' என்றும் வேறுபெயருண்டு. சிற்றூர் நிருவாகம்
சிற்றூர்கள் அனைத்தும் மத்திய அரசின் உறுப்புக்களாகவே விளங்கின. பல சிற்றூர்கள் சேர்ந்தது கூற்றமாகும்; கூற்றத்திற்குக் 'கோட்டம்' என்றும், 'நாடு'
என்றும் பெயருண்டு. பல கூற்றுக்கள் சேர்ந்தது ஒரு வளநாடாகும். பல
52
வளநாடுகள் சேர்ந்தது ஒரு மண்டலம் ஆகும். மன்னனுக்கு அருகாமையிலேயே எப்பொழுதும் காத்துக் கொண்டிருக்கும் சில நிருவாக அலுவலர்களுக்கு 'உடன்
கூட்டம்' என்று பெயர்.'''*
'நீதி வழங்கும் பொறுப்பு ஊர்ச்சபையினரிடமும், குலப்பெரிய தனக்காரரிடமும் ஒப்படைக்கப்பட்டிருந்தது. வழக்குகளை விசாரிக்கவும், தீர்ப்பு வழங்கவும் விதிகளும் முறைகளும் வகுக்கப்பட்டிருந்தன. கரணத்தான் துணையுடன் நீதிமன்றங்கள் செயல்பட்டன. ஆவணச் சான்றுகளைக் கொண்டும், பிறர்கூறும் சான்றுகளைக் கொண்டும், தாங்கள் நேரில் கண்டனவற்றைக் கொண்டும் நீதிமன்றத்தினர் வழக்குகளை விசாரித்துத் தீர்ப்புக் கூறினர். நீதிபதிகள் தம்மிடம் விசாரணைகள் இருந்து வந்த வழக்குகளில் தாங்கள் நேரில் கண்டனவற்றையும், தனிப்பட்ட முறையில் அறிந்தனவற்றையும் கொண்டு தீர்ப்புக்கள் கூறுவது இன்றைய இந்திய சாட்சிய சட்டத்திற்கு முரணானதாகும் என்பது இங்குக்
குறிப்பிடத்தக்கதாகும்.
"உயிரைப் பற்றிய குற்றங்கள் என்றும், உடைமைகளைப் பற்றிய குற்றங்கள் என்றும் இப்போது செய்யப்பட்டுள்ள பாகுபாடுகள் சோழர்காலத்தில் இல்லை. குற்றங்களைப் பெரும்பாலும் கிராம நீதிமன்றங்களே விசாரித்துத் தீர்ப்புக் கூறின. குற்றங்களுக்குரிய தண்டனையாகக் குற்றவாளிகளின் உடைமைகளைப் பறிமுதல் செய்வதைத்தான் 'கிராம அவை' முறையாகக் கொண்டிருந்தன. திருட்டு, பொய்க் கையொப்பம், விபச்சாரம் ஆகியவை கொடுங்குற்றங்களாகக் கருதப்பட்டன.“ இக்குற்றங்களைச் செய்து தண்டனைகளைப் பெற்றவர்கள் ஊராட்சி அவைகளில் அமரும் தகுதியை இழந்தவர்கள் ஆவர். குற்றங்களுக்குப் பெரும்பாலும்
சிறைத்தண்டனைகள் விதிக்கப்படுவதில்லை. குற்றவாளிகள் கோயில்களுக்கும்,
53
மடங்களுக்கும் இவ்வளவு தானம் கொடுக்க வேண்டுமென்று தீர்ப்புகள்
வழங்கப்பட்டன. கிராமதல ௬ய ஆட்சிமுறை (Autonomous Rural Institutions)
'சோழர் காலத்தில் நாட்டாச்சி முறையில் (கிராம தலசுய ஆட்சிமுறை) கிராம நிருவாகத்திற்குச் சிறப்பிடம் கொடுக்கப்பட்டது. கிராமத்தின் நிருவாகம் நாட்டின் அரசாட்சிக்கு அடிப்படையாக அமைந்திருந்தது. முதலாம் பராந்தகனின் உத்தரமேரூர்க் கல்வெட்டொன்று இந்தக் கிராம தலசுய ஆட்சி முறையின் அமைப்பையும், அது கொண்டிருக்க வேண்டிய பொறுப்புக்களையும் சுட்டிக்
1167
காட்டுகின்றது. 'இந்த முறையானது கி.பி,800ஆம் ஆண்டிலேயே பாண்டிய
நாட்டில் பிராமணருடைய கிராமங்களில் கையாளப்பட்டு வந்ததாகத் திருநெல்வேலி
மாவட்டத்தில் மானூரில் கண்டெடுக்கப்பட்ட மாறஞ்சடையனின் கல்வெட் டொன்று" குறிப்பிடுகின்றது.
உழுதுண்டு வாழ்ந்து வந்த வேளாண் மக்கள் குடியிருந்த இடத்திற்கு 'ஊர்' என்று பெயர். அவ்வூர் ஆட்சியை நடத்தி வந்த குழுவினருக்கு 'ஊரார்' என்றும் 'ஊரவர்' என்றும் பெயர். பிராமணரின் குடியிருப்புகள் அகரம், பிரமதேயம், சதுர்வேதி மங்கலம் என்றழைக்கப்பட்டன. ற்கும் 'கிராமங்கள்' என்று பெயர். "கிராமங்களின் ஆட்சியை நடத்தி வந்த குழுக்களுக்கு, 'சபை' என்று பெயர். வணிகர் மிகுதியாக வாழ்ந்த இடத்தில் 'நகரம்' என்ற சபை ஊராட்சிப் மேற்கொண்டிருந்த வேளாண்குடிமக்களுடைய குழுக்கள் 'சித்திரமேழி' என்ற பெயரில் நடைபெற்று வந்தன. அக்குழு உறுப்பினர்கள் 'சித்திரமேழிப் பெரிய
நாட்டினர்' என்றழைக்கப்பட்டனர். 'நானாதேகி' என்னும் 'திசையாயிரத்து
54
ஐந்நூற்றுவர்', தச்சர், கம்மாளர், கைவல் கம்மியர் ஆகியோர் தமக்குள் அமைத்துக் கொண்ட 'இரதகாரர்' ஆகிய நிறுவனங்கள் குணநலம், குலநலம், வாணிகநலம் ஆகியனவற்றிக்குத் தொண்டுபுரிந்து வந்துள்ளன."
ஊராட்சிகள், கிராம சபைகள், சித்திரமேழிகள் ஆகியவை அனைத்தும் பண்டைய பழக்க வழக்கங்கள், அறவொழுக்கம், புண்ணியம், பாவம் என்ற சமயச்சார்புள்ள நம்பிக்கைகளின் அடிப்டையிலேயே செயல்பட்டு வந்துள்ளன. அவற்றுக்கென்று தனிச்சட்டங்களும் விதிகளும் வகுக்கப்படவில்லை, அச்சபைகள் செய்த விசாரணைகளும், அவை மேற்கொண்ட முடிபுகளும் ஊர்க்குடிமக்கள் அனைவரையும் கட்டுப்படுத்தக்கூடியன. அம்முடிபுகள் காலம் தாழ்த்தப்படாமல் உடனுக்குடன் நிறைவேற்றி வைக்கப்பட்டன. தற்சார்பு, ஒருபக்கத் தீர்ப்பு
ஆகியனவற்றை இச்சபைகளின் நடவடிக்கைகளிலும், தீர்ப்புக்களிலும் காண்பதறிது. குற்றமும் தண்டனையும்
"சோழர் காலத்தில் குற்றங்கள் அறநூலுக்கு மாறானவை, அரசியலுக்கு மாறானவை, தெய்வத்திற்கு மாறானவை என மூவகைப்படுத்தப்பட்டன. குடி, பொய், களவு, காமம், கொலை ஆகிய குற்றங்கள் அறநூலுக்கு மாறானவை. இவை ஐம்பெருங்குற்றங்கள் எனப்பட்டன, பிறரிடம் வாங்கிய பொருளை மறுத்தலும், தன்னிடம் உள்ள பிறர் பொருளை மறைத்தலும், கள்ளக் கையெழுத்தும், ஆள்மாறாட்டமும் பொய்யுள் அடங்கும். இறையிநுக்காமையும், உறுபொருள் கவர்தலும், பகையொற்றும், அறைபோதலும் அரசனது பொருளைக் கவர்தலும், அரசனது இன்பப் பொருளை நுகர்தலும், ஊருக்கு அல்லது நாட்டிற்கு இரண்டகம் செய்தலும் அரசற்கு இரண்டகம் செய்தலும் அரசாணையை மீறலும் 71170
கொள்ளையடித்தலும் கலகம் செய்தலும் அரசியலுக்கு மாறான குற்றங்களாகும்.
இக்குற்றங்களுக்குத் தண்டம், மானக்கேடு, வேதனைப்பாடு, சிறைப்பு,
55
வேலைநீக்கம், கொலை ஆகியன தண்டனைகளாக வழங்கப்பட்டன. அவற்றுள் 'தண்டம்' என்பது தொகையிறுப்பு, தண்டத் தீர்வை, கோயில் விளக்கெரிப்பு என மூவகைப்படும். 'தொகையிறுப்பாவது' ஒரு குறித்த தொகையை மொத்தமாகச் செலுத்துவதாகும். 'மானக்கேடு' என்பது முகத்தில் செம்புள்ளி, கரும்புள்ளி குத்திக் கழுதை மேலேற்றி ஆன்மயந் தோய்ந்த அலகாலடித்து ஊர்வலம் வருவித்தலும் குலத்தினின்று விலக்கி வைத்தலும் ஆகும். 'வேதனைப்பாடு' என்பது குற்றவாளிகளைத் தூணில் கட்டி வைத்து ஐம்பது முதல் நூறு அடிவரை அடித்தல், கல்லேற்றுதல், கிட்டிபூட்டல், நடைவிளக்கெரித்தல் எனப் பலவகைப்படும். 'நடைவிளக்கெரித்தல்' என்பது தலையில் அகல்விளக்கேற்றி ஊர்வலம் வருவித்தல் ஆகும், 'கிட்டி' என்பது கெண்டைக்காலை நெருக்கும் ஒருவகைக் கருவியாகும், 'சிறைப்பு' என்பது தளையிட்டுச் சிறைக்கோட்டத்தில் வைத்தலாகும். 'கொலை' என்பது வெட்டல், கழுவேற்றல், விலங்கால் கொல்வித்தல், சித்திரவதை செய்தல் என நால்வகைப்படும். யானையைவிட்டு மிதிப்பித்தல், விலங்கால் கொல்வித்தல் ஆகும். எருமைக்காலில் கட்டியோட்டுதலும், வண்டிச்சக்கரத்தில் கட்டியோட்டுதலும் போல்வன சித்திரவதையாகும். ஞா. தேவநேயனின் இக்கூற்றுக்கு இலக்கியச் சான்றுகளோ, கல்வெட்டுச் சான்றுகளோ கிடைக்கவில்லை." இத்தகைய குற்றங்களும் அக்குற்றங்களுக்குரிய தண்டனைகளும் சங்ககாலத்திலும் சோழர் காலத்திலும் நடைமுறையில் இருந்துள்ளன.
"சோழர் காலத்தில் இம்முவகைக் குற்றவாளிகளுக்கே 'குடவோலையிடப் பெற்றமை' பொதுத் தண்டனையாகும்.'? கட்குடிக்கும் இதனைத் தவிர வேறு
தண்டனையில்லை.
36
பாண்டியர்கால நீதிமுறை
பாண்டிய மன்னர்கள் காட்சிக்கு எளியவராக இருந்து குடிமக்களின் முறையீடுகளைக் கேட்டு முறை வழங்கி வந்தனர் என்பதைச் சிலப்பதிகாரத்தில் கண்ணகி முறையீட்டில் அறியலாம். குடிமக்கள் மன்னனிடம் குறைகளை முறையிடுதற் பொருட்டுப் பாண்டியர் அரண்மனைப் புறவாயிலில் ஆராய்ச்சி மணி கட்டப்பட்டிருந்தது. அரசன் எக்காரியத்தைச் செய்தாலும் ஐம்பெருங் குழுவினரையும் எண்பேராயத்தினரையும் கலந்து ஆலோசித்தப் பின்னரே செய்வான். நாட்டுப் பெருவிழாக்களிலும், நாட்டுப் பெருஞ்செயல்களிலும் இக்குழுவினர் பங்கு கொண்டிருந்தனர்.
"பாண்டிய மன்னர்களின் நிருவாகத்தில் 'ஊர்ச்சபையார்', 'நாட்டதிகாரிகள்', 'கோயில்கண்காணிப்பாளர்' ஆகியோர் முக்கியப் பங்கு பெற்றிருந்தனர். நாட்டதிகாரிகள் தம் நாட்டைச் சுற்றிப்பார்த்து, அங்குள்ள ஊர்ச்சபையார், கோயிற் கண்காணிப்பாளர், அறநிலையப் பாதுகாப்பாளர் ஆகியோர் தத்தங் கடமைகளைச் செவ்வனே நிறைவேற்றி வருகின்றனராவெனக் கண்காணிப்பதும், ஊர்க்கணக்கு, கோயிற்கணக்கு, அறநிலையக் கணக்கு முதலியனவற்றைத் தணிக்கையிடுவதும், குற்றம் கண்டவிடத்துத் தண்டிப்பதும், ஆங்காங்குள்ள வழக்குகளைத் தீர்த்து வைப்பதும், அரசாணைகளை நிறைவேற்றுவதும், ஊாச்சபைத் தேர்தலை
1774
முன்னின்றி நடக்தி வைப்பதும்''"“ நாட்டதிகாரிகளின் பணிகளாகும்.
"சிற்றூர்கள் நாட்டதிகாரிகளின் கண்காணிப்பிலும் பேரூரான நகரங்கள் மன்னனது நேரடிக் கண்காணிப்பிலும் இருந்தன. ஊர்ச்சபையாருள், ஒவ்வொரு வாரியத்தாரும் தத்தம் கடமையைச் செய்து வந்தனர். 'ஊர் வாரியத்தினர்' உரிமை வழக்கு, குற்ற வழக்கு ஆகிய இருவகை வழக்குகளையும் விசாரித்துத் தீர்க்கவும் தண்டிக்கவும் முழு அதிகாரம் பெற்றிருந்தனர். அவரால் தீர்க்க முடியாத
57
வழக்குகளும், தீர்த்த வழக்குகளின் மேல் முறையீடுகளும் (றற) அரசனிடம்
கொண்டு செல்லப்பட்டன.!”*
ஊர்க்குடியிருப்பையும் வெள்ளாண்மையையும் இரவில் காவல் செய்வதற்கு ஊர்ச்சபையினரால் 'பாடிகாவலன்' நியமிக்கப்பட்டனர். ஊரவையாரின் ஊராட்சி 'ஊராண்மை' என்றும் 'ஊரமை' என்றும் அழைக்கப்பட்டன. ஊர்ச்சபைக் கூட்டம் காளமுதியும் பறைசாற்றியும் அறிவிக்கப்பட்டன, ஊர் வழக்குகளைத் தீர்ப்பதற்கும், ஊரில் சட்ட திட்டங்களை ஏற்படுத்துவதற்கும் ஊர்த்தலைவன் கூட்டிய கூட்டம் ஊர் மண்டபத்திலோ, ஒரு
மரத்தடிமிலோ, வெள்ளிடையிலோ நடைபெற்றுவந்தன.
"ஆள்நிலப்பிரிவான ஒரு கூட்டூரின் பகுதியாக ஒரே குலத்தார் அல்லது ஒரே இனத்தார் பெரும்பான்மைமினராகச் சிற்றூரில் அவ்வக்குலம், இனம், இடத்திற்கேற்ப அம்பலக்காரன், ஊராளி, கவுண்டன், கிழவன், குடும்பன், சேர்வை, நாடாள்வி, நாட்டம்பலம், நாட்டாண்மைக்காரன், பட்டத்துப் பிள்ளை, பண்ணாடி, பெரிய தனக்காரன், மணியக்காரன், மன்றாடி, மூப்பன் முதலிய பெயர்களில் ஒன்றைப் பூண்டு, ஊராரால் தேர்ந்தெடுக்கப்படாமல் தந்தையினின்று மகனுக்கு வரும் வழிமுறை உரிமைப்படி ஊர்த்தலைவனாக இருந்தவன், தன் ஊர் வழக்குகளில் கொலையொமழிந்த பிற வழக்குகளையெல்லாம் தானே தீர்த்து வைத்துள்ளான்"? என்பார்.
"ஊர்ச்சபையார், அவ்வப்போது சில குற்றங்களையும் செய்து வந்துள்ளனர். தம் குற்றத்தை மறைத்தற்பொருட்டும், தம்மேல் குற்றத்தை ஏற்றாமல் பாதுகாத்தற் பொருட்டும் ஊர்ச்சபையார் நாட்டதிகாரிகளுக்கும், தம்மை வினவ வரும் மேலதிகாரிகளுக்கும் கையூட்டும் கொடுத்து வந்துள்ளனர் என்பதைச் சடவர்மன் சுந்தரபாண்டியன் ஆட்சிக்காலத்தில், ஓர் ஊர்ச்சபையார், வாரப் பற்றிலிருந்தும்,
கடமைப் பற்றிலிருந்தும் வரும் வாரத்தையும் கடமையையும், சடாவர்மன்
58
சுந்தரபாண்டியனுடைய அதிகாரிகளின் நட்பைப் பெறச் செலவிட்டனர்” என ஞா. தேவநேயன் எடுத்துக் காட்டியிருப்பதிலிருந்து அறியலாம். அறங்கூறவையத்தார் நீதிவழங்கிய முறை
“தலைநகரிலிருந்த அறங் கூறவையத்தில், பொதுவகையான வழக்குகளை யெல்லாம் அவ் அவையத்தாரே தீர்த்து வைத்துள்ளனர். இதற்குச் சான்றாகப் பரஞ்சோதிமுனிவரின் திருவிளையாடற்புராணத்தில் தனபதிச் செட்டியார் வழக்கை மதுரை அறங்கூறவையத்தாரே தீர்த்து வைத்திருப்பதைக் குறிப்பிடலாம்,” சிறப்பானதும் மன்னனொடு தொடர்புடையதுமான வழக்குகளை மன்னனே இம்மன்றத்திலிருந்து தீர்த்து வைத்துள்ளான். ''நகரங்களிலிருந்த அறமன்றத்தார், வழக்காளி (Plகinீரர[ எதிர்வழக்காளி (Dசரீசாப்கா!) ஆகிய இருவரின் வாக்கு மூலங்களையும் பலமுறை கேட்டு, கரியும் (Witறக55), சான்றும் (34௦6) இருப்பின் அவற்றை அடிப்படையாகக் கொண்டும், நடுநிலைமையாய்த் தீர்த்தும் முறை செய்து வந்தனர். இதனை, "இருவர்தம் சொல்லையும் எழுதாங் கேட்டே"
என்று அதிவீரராம பாண்டியனும்,
"இருவர் சொல்வழக்கு நோக்கி யனுவதித் திரண்டு நோக்கி"! என்று பரஞ்சோதிமுனிவரும் எடுத்துக்காட்டி இருப்பதன் மூலம் அறியலாம்," ஆதலால், பாண்டியர் கால வழக்குகளில் கரியும் சான்றும் இல்லாத 'நாலுத்திப் பட்டறிவு! (சுருதியுக்தியனுபவம்) கொண்டு நடுநிலைமையாகத் தீர்ப்புகள்
சொல்லப்பட்டுள்ளன எனலாம். வழக்கை நன்றாக அறிந்து கொள்வதற்கும்,
59
வழக்காளரின் உண்மையைக் கண்டறிவதற்கும், அறங்கூறவையத்தார் வழக்கைப்
பலமுறை கேட்டுள்ளனர் என்பதையும் இதன் மூலம் அறியலாம்.
பல்லவர்கால நீதிமுறை
பல்லவர் ஆண்ட தமிழ்நாட்டில் 'கோட்டம்', 'நாடு', 'ஊர்' என்னும் நாட்டுப்பிரிவுகள் காணப்படுகின்றன. ஆந்திர நாட்டுப் பகுதிகளின் பெயர்களையும், தமிழ்நாட்டுப் பகுதிகளின் பெயர்களையும் நோக்கும் போது பல்லவர், தமக்கு முன்பிருந்த தமிழ் மன்னர்கள் தொண்டை நாட்டுப்பிரிவுகளுக்கு வைத்திருந்த பெயர்களை அப்படியே தங்கள் ஆட்சியிலும் கையாண்டு வந்துள்ளனர் என்பது புலனாகின்றது. தொண்டை நாடு பல்லவர்களுக்கு முன்னரே இருபத்து நான்கு . கோட்டங்களாகப் பிரிக்கப்பட்டிருந்தது.
"பல்லவப் பெருநகரங்களில் அறங்கூர் அவையங்கள் இருந்தன. அவை 'அதிகரணங்கள்' எனப் பெயர் பெற்றிருந்தன என்பதை மகேந்திரவர்ம பல்லவன் எழுதியுள்ள பத்தனில்கம், பிரகசனம்' என்ற நூலால் அறியலாம். அறங்கூர் அவையத்துத் தலைவர் 'அதிகரண போசகர்' எனப்பட்டனர். 'அதிகரணம்' என்பது பெரிய அறங்கூர் அவையாகும். கரண அலுவலாளர் (தலைவர்) 'அதிகாரிகள்' எனப்பட்டனர்.” சிற்றூர்களில் சான்றோர் அறங்கூர் அவையத் தலைவர்களாக இருந்தனர். மூன்றாம் நந்திவர்மன் (கழற்சிங்கன்) காலத்தில் திருவெண்ணெய் நல்லூரில் 'ஊரவை' இருந்தது. அது வாழ்க்கை விசாரித்து முடிவு கூறியதைப் பெரியபுராணம் விரிவாகப் பேசுகின்றது. வழக்கில் முடிவு கூற ஆட்சி, ஆவணம், அயலார் காட்சி ஆகிய மூன்று சான்றுகள் தேவைப்பட்டன. இவற்றுள் 'ஆட்சி' என்பது நீண்ட காலமாகக் கையாண்டு வரும் ஒழுக்கமாகும். ' 'ஆவணம்' என்பது
வழக்கை முடிவு செய்ய உதவும் சுவடி, ஓலை முதலிய எழுத்துச் சீட்டுகளாகும்.
60
அயலார் காட்சி' என்பது வழக்கு நிகழ்ச்சியைக் கண்ணால் கண்டவர் கூறுவதாகும். ஒப்பந்தம் 'இசைவு' (ஸப!) எனப்படும். த் ஊரார் கையெழுத்துக்களையும் கையொப்பங்களையும் தனியாக ஊர்ப்பொது அரசாங்க அறச்சாலைப் பாதுகாப்பில் வைக்கும் பழக்கம் அக்காலத்தில் இருந்தது. சிற்றூர்களில் இந்த அறங்கூர் அவைய அலுவலாளன் 'காரணத்தான்' எனப்பட்டான். பத்திரங்களில் சாட்சிகளாகக் கையொப்பமிட்டவர் 'மேல் எழுத்திட்டவர்' எனப்பட்டனர்.'90
"இத்தகைய அறங்கூர் அவையங்களில் லஞ்சம் தாண்டவமாடியது என்பதை மகேந்திரவர்மனின் 'மத்தவிலாசம்' என்ற நூல் குறிப்பிடுகின்றது. பல்லவர் காலத்தில் இந்த உயர்நீதி மன்றம் 'தருமாசனம்' எனப்பட்டது. அது பல்லவப் பேரரசின் பொதுமன்றம் ஆகும். அது அரசனது நேரான மேற்பார்வையில் இருந்தது. 'அதிகரணம்' என்றும் அறங்கூர் அவையம் குற்ற வழக்குகளை விசாரிக்கும் மன்றம் எனவும், 'தருமாசனம்' என்னும் உயர்நீதி மன்றம் பிற வழக்குகளை விசாரிக்கும் மன்றம் எனவும் குறிப்பிடுகின்றனர்.'”””
பல்லவரின் அரசியலில் மன்னனே நீதியின் தலைவனாகச் செயல்பட்டான். கோட்டங்களிலும், சிற்றூர்களிலும் நீதி மன்றங்கள் இயங்கி வந்தன. காஞ்சிபுரத்தில் நடைபெற்ற நீதி மன்றத்திற்கு 'அதிகரணம்' என்று பெயர். கோட்ட நீதி மன்றங்கள் விதித்த தண்டனை 'அதிகரண தண்டம்' என்றும், சிற்றூர்களில் நடைபெற்றுவந்த நீதி மன்றங்கள் விதித்த தண்டனை 'கரணதண்டம்' என்றும் அழைக்கப்பட்டன.
நாடும் ஊரும்
'நாடு' என்பது சிற்றூரை விடப் பெரியதாகும். கோட்டத்தைவிடச்
சிறியதாகும். 'நாட்டார்' என்பவர் அப்பகுதிக்கு உரிய சான்றோர் ஆவார், 'ஊரார்'
61
என்பர் சிற்றூரைச் சேர்ந்த அறிஞர் ஆவார். ஊரை ஆண்ட அவையினர் 'ஆள்வார்' எனப்பட்டார். ஒரு நாட்டிற்கு உட்பட்ட எந்தச் சிற்றூரைப் பற்றிய செய்தியானாலும் இம்முத்திறத்தாரும் கலந்தே தங்கள் கருத்துக்களைத் தெரிவித்து வந்துள்ளனர்.
ஊரார் சிற்றூர்ச் சபையாருடன் (ஆள்வார்) கலந்து வேலைகளைச் செய்தனர். ஊர் அவையார் 'பெருமக்கள்' எனப்பட்டனர். இப்பெருமக்கள் உழவு, கோவிற்பணி, அறங்கூறல் (நீதி வழங்கல்) முதலான பணிகளை மேற்கொண்டு வந்துள்ளனர். ஊர் அவை பல உட்பிரிவுகளாகப் பிரிந்து பல துறைகளிலும் சிற்றூர் ஆட்சியைத் திறம்படச் செய்து வந்துள்ளது. அக்காலத்தில் இத்தகைய ஊர் அவைகள் இருபது இருந்தன எனப்பட்டங்களும் கல்வெட்டுக்களும் குறிப்பிடுகின்றன. இத்தகைய ஊர் அவைகளே கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டில் சுந்தரர் காலத்தில் திருவெண்ணெய் நல்லூரிலும், திரு நீலகண்ட நாயனார்
1182
காலத்தில் சிதம்பரத்திலும் இருந்ததைப் பெரியபுராணம் குறிப்பிடுகின்றது. ஊர் அவைப்பிரிவுகள்
ஊர் அவைக்குள் பல பிரிவுகள் இருந்தன. ஒவ்வொரு பிரிவும் 'வாரியம்' (Committee) எனப்பட்டது. 'ஏரிலாரியப் பெருமக்கள், "தோட்ட வாரியப் பெருமக்கள்' எனப் பல வகுப்புப் பெருமக்கள் கொண்ட முழு அவையே 'ஊரவை'யாகும். சிற்றூர்களை நேரடியாக அரசியல் பொறுப்புக்கு உட்பட்டு ஆண்டவர்கள் 'ஆளுங்கணத்தார்' எனப்பட்டனர். இவர் ஊரவையாரின். வேறானவர் ஆவார். இவ்வாறு பல்லவர் ஆட்சிக்காலத்தில் சிற்றூர் வழக்கு மன்றங்கள்
செயல்பட்டு வந்திருப்பதைக் காணலாம்.
62
பிற்காலச் சோழர்கள் நீதிமுறை
பிற்காலச் சோழப் பேரரசு "நிருவாக வசதிக்காகப் பல மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டிருந்தது. அரச குமாரர்கள் அல்லது நெருங்கிய உறவினர்கள் மாநில ஆளுநர்களாக நியமிக்கப்பட்டனர். மண்டலங்களிலுள்ள நிதி, நீதி நிருவாகங்கள், அறப்பணி, ஆலயப்பணி ஆகியனவற்றில் கீழ்மட்ட நிருவாகப் பிரிவுகளையும் நிருவாகிகளையும் இவர்கள் கண்காணித்தனர். மண்டலங்கள் பல கூற்றங்களாகப் பிரிக்கப்பட்டிருந்தன. நாடுகள் பல சேர்ந்தது 'கூற்றம்' அல்லது 'வளநாடுகள்' எனப்பட்டன. இவை பற்றிய தெளிவான விளக்கங்கள் இவ்வியலில் 'சோழர் கால நீதிமுறை', "சிற்றூர் நிருவாகம்', 'கிராமதலசுய ஆட்சிமுறை', குற்றமும்
தண்டனையும்' என்றும் உட்பிரிவுகளில் இடம் பெற்றுள்ளன. விசயநகர மரபினர் கால நீதீமுறை
"முதலாம் அரிகரன் காலத்தில் விசய நகர மன்னனின் ஆதிக்கம் தமிழகத்தில் ஏற்பட்டது. மாயூரம் வட்டத்தில் அம்மன்னனுடைய கோமல் தரிசனம் கிடைத்துள்ளது. அம்மன்னன் தமிழகத்தை வென்றவுடன் சிற்றூர் நிருவாகப் பொறுப்பிலிருந்த வேளாண் குடிமக்களையும், பொற்கொல்லர்களையும் அகற்றி விட்டு அவ்விடங்களில் பிராமணர்களை நியமித்தான்" குமார கம்பணன்காலம் முதல் தமிழகம் விசயநகரத்தின் தென்மண்டலமாக்கப்பட்டது. கம்பணன் மகாமண்டலாதிபதியானான். தலசுயாட்சி நிறுவனங்களாகிய சிற்றூர் சபைகளும் நாட்டவைகளும் செயலிழந்தன. மகாமண்டலாகிபதியும் மண்டலாதிபதிகளும் படைமானிய நிருவாக முறையைத் தமிழகத்தில் புகுத்தினர். 'சுற்றூர் மன்றங்களின் தல சுய ஆட்சியை விரும்பாத அவர்கள் 'பிரதானி'களையும், 'தலநாயகர்'களையும்,
பத்திரதாரர்களையும் துணையாகக் கொண்டு நாட்டை நிருவகித்தனர். அதிகாரப்
63
பரவல் தவிர்க்கப்பட்டு, அதிகார மைய ஈர்ப்பு ஏற்பட்டது. மண்டலங்களை நாயக்கத் தானங்களாகப் பிரித்து அதில் நாயங்கார முறையை ஏற்படுத்தினர். மண்டலாதிபதிகள் இடம் விட்டு இடம் மாற்றப்பட்டனர். நாயக்கர்கள் அவ்வாறு மாற்றப்படவில்லை. நாயக்கர்கள் ஊரகச் சொத்தைப் படைமானி௰ச் சொத்தாக மாற்றினார்கள், தமிழகத்தில் நாயக்கர்களின் ஆதிக்கத்தில் வந்தன. நாயக்கர்கள் மன்னனுக்கும் விவசாயிகளுக்கும் நடுவில் செயல்பட்டனர். போர்க்காலங்களில் நாயக்கர்கள் மன்னர்களுக்குப் படையுதவி புரிந்தனர். விசயநகரப் பேரரசில் தமிழகத்தில் நிலவிய இந்த நாயக்காரமுறை அடக்குமுறைக்கு இலக்கணமாகிய முகர்முறை (420103) நிருவாகமாகச் செயல்பட்டது. சிற்றூர்களிலும் புகுத்தினர். அம்முறைப்படி பன்னிரெண்டு பணியாட்கள் கிராம நிருவாகத்தை நடத்தினர்.” 'அவர்களுள் போட்டையில் (1௦811) கர்ணம், தலையாரி, தோட்டி, நீர்கந்தி ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள் ஆவர். போட்டையில் நிதி மற்றும் நீதி நிருவாகியாகவும், கர்ணம் பதிவாளனாகவும், தலையாரி சிற்றூர் மற்றும் கிராமப் பாதுகாவலனாகவும், தோட்டி பயிர்களின் காவலனாசவும், நீர்கந்தி பாசனப் பொறுப்பாளனாகவும் இருந்தனர். இவர்களுக்கு ஊதியம் நிலமானியமாகக் கிடைத்தது. இவர்கள் சிற்றூர்களின் காப்பாளர்களாகக் கருதப்பட்டாலும் கீழ்மட்ட நிருவாகிகளாகவே விளங்கினர். பல சிற்றூர்களுக்கும் கிராமங்களுக்கும் பொதுவாகச் 'சாவடி' என்ற அரசு அலுவலகம் இருந்தது.”
இசுலாமியர் ஆதிக்கத்திற்கு எதிரான ஒரு வலிமை மிக்க அரணாக விளங்கிய விசய நகரப் பேரரசில் வருணாச்சிரம அடிப்படையிலான சமூக அமைப்பு புத்துயிர் பெற்றது. பிராமணர் உயர்வு பெற்றனர். நாயக்கர்கால நீதிமுறை
விசய நகரப் பேரரசின் நிருவாக அமைப்பின் வழி தமிழகத்தில் நாயக்கர்
ஆட்சி தோன்றியது. விசய நகரத்தில் ஏற்பட்ட அரசுரிமைப் போட்டி காரணமாகத்
64
தமிழகத்தில் நாயக்கர்களின் சுயாட்சி ஏற்பட்டது. "விசய நகர மன்னர்கள் தமிழகத்தில் படைமானிய௰ முறையை அறிமுகப்படுத்தினர். அதன் வழியில் தோன்றிய நாயக்கர்கள் பாளையப்ட்டு முறையை அறிமுகப்படுத்தினர். விசுவநாத நாயக்கன் (1529-1564), அரியநாத நாயக்கன் ஆகியோர் நாட்டை 72 பாளையங்களாகப் பிரித்து, அவற்றைப் பாளையக்காரர்களிடம் ஒப்படைத்தனர். பாளையக்காரர்களுக்குரிய பாளையங்கள் மீது முழு நிருவாக உரிமையும் வழங்கப்பட்டது. அமைதிகாப்பதும், நீதி வழங்குவதும் வரி வசூலிப்பதும்
பாளையக்காரர்களின் முக்கியப் பணிகளாகும்.'6
“நாயக்கர் ஆட்சியில் சிற்றூர்கள் கிராமம், மங்கலம், சமுத்திரம், குடி, ஊர், புரம், குலம், குறிச்சி, பட்டி என்னும் பல பெயர்களில் அழைக்கப்பட்டன. சிற்றூர்களில் மக்களால் மதிக்கப்பட்ட நீதி நிருவாக அதிகாரிகள் இருவர் இருந்தனர். நாயக்கர் ஆட்சியில் அதிக அளவு சுயாட்சியும் இருந்தது என்று பேராசிரியர் சத்தியநாதய்யர் குறிப்பிடுகின்றார்.! சிற்றூர்களில் காவல், நீதி, நிருவாகம் ஆகியனவற்றைக் கர்ணம், மணியக்காரன், தலையாரி முதலிய சிற்றூர் அலுவலர்களே நிருவாகத்தினர். சிற்றூர்களில் வரிக்கணக்கு மற்றும் நிலக்கணக்குகளைக் கர்ணம் பராமரித்தார். சிற்றூர்களின் எல்லை, நிலப்பரப்பு, தோட்டங்கள், இறையிலி நிலங்கள், இடுகாடு, கிணறு, வாய்க்கால் முதலியனவற்றின் கணக்குப் பதிவும் வரிவருவாய்க் கணக்குப் பதிவும் கர்ணத்தின் பொறுப்பில் இருந்தன. மணியக்காரர் கர்ணத்தின் துணையுடன் வரி வசூலித்தார். சிற்றூர்களில் வசூலிக்கப்பட்ட வரிகள் சாவடிகளில் செலுத்தப்பட்டன. ஊர்க்காவல்
தலையாரியிடம் இருந்தது. இவர்கள் மூவரும் அரசு அலுவலர்கள் ஆவர்.
"நாயக்கர் ஆட்சியில் நீதி வழங்குவது மன்னனுடைய தலையாய கடமையாக
இருந்தது. மன்னனும், தளவாயும், பிரதானியும் தலைநகரில் நீதி வழங்கினர்.
65
பாளைப்பட்டுக்களில் பாளையக்காரர்களே நீதி வழங்கும் பணியை மேற்கொண்டிருந்தனர். வழக்காறு, ஆவணம், சாட்சி ஆகியனவற்றின் அடிப்படையில் பாளையக்காரர்கள் நீதி வழங்கினர் என்பதைச் சீவில்லிபுத்தூர் சாசனம் (கி.பி.577) குறிப்பிடுகின்றது.*ூ நாயக்கர் ஆட்சியில் அடித்தட்டு மக்கள் நீதியைப் பெறமுடியவில்லை.
ஆங்கிலேயர் கால நீதிமுறை
ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் குழுமத்தினர் உரோமானிய முறையைத் தழுவி நீதி நிருவாகத்தை உருவாக்கிச் செயல்படுத்தினர். பொது நீதி நிறுவனங்கள் மூலம் மக்களின் உரிமைகளைப் பேணும் மரபை உருவாக்கினர். "குற்றவியல், உரிமையியல் என்று சட்டங்களிலும், நீதிமன்றத்திலும், நீதிமன்ற நடைமுறைகளிலும் மாறுபாடுகளை ஏற்படுத்தினர். சென்னையில் வணிக உரிமையைப் பெற்றிருந்த வணிகக் கம்பெனியாள் தங்களுக்கென கி.பி.661க்குப் பின் குற்றவியல் நீதிமன்றத்தை உருவாக்கினர். கம்பெனி ஆளுநரும் அவருடைய ஆலோசனைக்குழு உறுப்பினர்களும் குற்றவியல் நீதிமன்ற நடுவர்களாகச் செயல்பட்டனர். 1687-இல் சென்னை நகராண்மைக் கழகமாக மாற்றப்பட்டது. நகரத்தந்தையை நடுவராகக் கொண்டு நீதிமன்றம் செயல்படத் தொடங்கியது. இம்மன்றம் குற்றவியல், உரிமையியல் வழக்குகள் மீது நீதி வழங்கியது. மேற்கத்திய முறையில் வழக்குரைஞர்கள் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்காக வாதாடினர். இந்த நீதிமன்றங்கள் ஆங்கிலேயர் பொருட்டான வழக்குகளை மட்டுமே ஏற்று நீதி
வழங்கின.”
"1801க்குப் பின்னர் வணிகக் கம்பெனியார் ஆட்சியாளர்களாக மாறினர். மாவட்ட அளவிலான நீதிமன்றத்தின் தேவை ஏற்பட்டது. மாவட்டத்
தலைநகரங்களில் கம்பெனியின் பொறுப்பிலான மாவட்ட நீதிமன்றங்கள் (21118
66
C௦யாt5) தோற்றுவிக்கப்பட்டன. இம்மாவட்ட நீதிமன்றங்கள் குறிறவியல், உரிமையியல் வழக்குகள் மீது நீதி வழங்கின. ஆங்கிலேயர்களே மாவட்ட நீதிபதிகளாகவும் மாவட்ட அமைதிக்காப்பு நடுவர்களாகவும் விளங்கினர்.” இந்நீதிமன்றங்கள் ஆங்கில நீதிமன்ற மரபுகளையும், பல சட்டங்களையும், நடைமுறைகளையும் கையாண்டதால் சாதாரண எளியமக்கள் பல்வேறு நடைமுறைச் சிக்கல்களைச் சந்தித்தனர்.
கல்வெட்டுச் சான்றுகள்
கல்வெட்டுக்களின் காலம் கி.பி.ஏழாம் நூற்றாண்டு ஆகும். அக்கல்வெட்டுக்களில் 'ஊரவை' பற்றியும், ஊரவையினரின் பணிகள் பற்றியும் செய்திகள் காணப்படுகின்றன.
“சங்ககால நீதிமன்றம் 'மன்றம்', 'அவை', 'அவைக்களம்', 'அறக்களம்' எனப் பல பெயர்களில் அழைக்கப்பட்டது. நீதிபதிகளைச் சிலப்பதிகாரம் 'அறக்களத்து அந்தணர்' எனக் குறிப்பிடுகின்றது.''! பல்லவர் காலத்தில் உயர்நீதிமன்றம் 'தர்மாசனம்' எனப் பெயர் பெற்றது. "கிராமங்களில் ஊர் அவைகள் இருந்தன. ஊர் அவையினரே ஊர் வழக்குகளைத் தீர்த்தனர். உரிய தண்டனைகளையும் வழங்கியுள்ளனர். 'யானும் என் மரபினரும் இவருக்கு அடிமை' என்று சுந்தரரின் பாட்டனார் எழுதிக் கொடுத்திருந்தமையால், சுந்தரர் தமக்கு அடிமை என்று வாதிட்ட கிழவேதியர் வழக்கைத் திருவெண்ணெய் நல்லூர்ச் சபையினரே நடுவுநிலையிலிருந்து விசாரித்துத் தீர்த்தனர். இவ்வாறே சிறுவரான விசார தருமர்
செய்த தவற்றுக்கு அவர் தந்ைத விசாரிக்கப்பட்டார். அவர் அவையோரிடம்
மன்னிப்பு வேண்டினார் என்று பெரியபுராணம் பேசுகின்றது."
67
“விசய நகர ஆட்சிக்காலத்தில் பிரதானி (முதலமைச்சன்) நீதிமன்ற உயர் அதிகாரியாக இருந்தான். சில சமயங்களில் அரசனும் பிரதானியும் நீதிபதிகளாக அமர்ந்து வழக்கினைத் தீர்ப்பதுண்டு, மதுரை வீரப்ப நாயக்கர் ஆட்சியில் ஒவ்வொரு கிராமத்திலும் நீதிபதிகள் இருவர் இருந்தனர். அவர்கள் ஊர் மக்களால் மிகவும் மதிக்கப்பட்டனர்,"'” ஒரு நாட்டைச் சேர்ந்த ஒவ்வொரு மாகாணத்திலும் மாகாண ஆளுநர் அல்லது அரசப் பிரதிநிதி மாகாண நீதிமன்றத்தில் தலைமை தாங்கி 'முறை' செய்து வந்தனர். ஊராட்சி மன்றத்தார், கோவில் அதிகாரிகள், சங்கத்தார், சாதித் தலைவர்கள் என்பவர் ஊர் வழக்குகளைத் தீர்த்தனர். இத்தகைய ஊர் மன்றங்கள் முடிவு செய்யும் வழக்குகளில் சில அரசனைத் தலைவனாகக் கொண்ட
7194
உயர்நீதிமன்றத்திற்கும் செல்வது உண்டு.
"திருவதிகைத் திருவீரட்டானேசுவரர் கோவிலைச் சேர்ந்த தானத்தார், மாகேசுவரர் ஆகியோருக்கும் அதிராஜ மங்கலியபுரத்து நகரத்தார்க்கும் எல்லை பற்றிய வழக்கு ஒன்று நடந்தது. வீரபாண்டிய தேவன் காலத்தில் செய்யப்பட்ட முடிலை நகரத்தார் ஒப்புக் கொள்ளவில்லை. இரண்டாவதாகவும் மூன்றாவதாகவும் செய்யப்பட்ட முடிவுகளை மாகேசுவரரும் தானத்தாரும் ஒப்புக் கொள்ளவில்லை. எனவே அரசாங்க அதிகாரிகளான உடையார் காலிங்கராயர், நரசிங்கதேவ முதலியார், திருமஞ்சன மாளிகையார், விசுவநாததேவர் என்பவர்கள் அவ்வழக்கை
17195
விசாரித்து முடிவு செய்தன என்று ஒரு கல்வெட்டு கூறுகின்றது.
"வழக்கினை விசாரித்து முடிவு கூறுவோர் இடத்திற்கேற்பவும் வழக்கிற்கேற்பவும் வேறுபட்டிருந்தனர், உடையார்குடிக் கோயில் வழக்குகளைத் தீர்க்க அக்கோயில் மாகேசுவரர் பல கோயில்களைச் சேர்ந்த அதிகாரிகள், நாட்டின்
பல பகுதிகளைச் சேர்ந்த யாத்ரிகர், உடையார் குடியில் இருந்த கைக்கோள
68
முதலிகள் முதலியோர் நடுவர்களாக இருந்தனர் என்று ஒரு கல்வெட்டுக்
11196
கூறுகின்றது.
"இத்தகைய வழக்கு முடிவுகளில் அமைதி பெறாதவர், மண்டலத் தலைவனுக்கோ அல்லது அரசனுக்கோ விண்ணப்பம் செய்து கொள்ளலாம். அவர்கள் தாமாகவே முடிவுகூற முடியாதபோது, சுற்றுப்புற ஊர்களைச் சேர்ந்த மகாசனங்கள் வழக்கை விசாரித்து முடிவு செய்வார்கள்; விசய நகர ஆட்சிக் காலத்தில் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த ஆரகனூர் சிவன் கோவில் வழக்கு ஒன்று
மேற்கொள்ளப்பட்ட முறையில் தீர்த்து வைக்கப்பட்டுள்ளது,''”
“கொலை, களவு, கோரம், மாற்றுக் கையெழுத்திடுதல் முதலியவை குற்ற வழக்குகளைச் (ர்க!) சேர்ந்தவை. இக்குற்றங்களைச் செய்தவர் அரசாங்க வேலைக்குத் தகுதியற்றவர் என்றும் தீர்மானிக்கப்பட்டது என்பதையும் ஒரு கல்வெட்டுக் குறிப்பிடுகின்றது.”£ ஏனைய வழக்குகளைப் போலவே கடும் தண்டனைக்குரிய வழக்குகளும் ஊர் மன்றங்களிலும் நாட்டு மன்றங்களிலும் விசாரித்து முறை வழங்கப்பட்டுள்ளன. தேவை ஏற்படின் அரசனும் அமைச்சனும்
நேரில் விசாரித்து நீதி வழங்கியுள்ளனர்,
"அதிகாரிகள் முன்னிலையில் குற்றவாளிகளே தம்முள் ஒரு முடிவுக்கு வருதலும் உண்டு. புதுக்கோட்டைச் சீமையைச் சேர்ந்த தெற்குப் பகுதி மக்களுக்கும் வடக்குப் பகுதி மக்களுக்கும் மாறுபாடும் மோதலும் உண்டானது; அதனால் பல கொலைகள் நிகழ்ந்தன. வட பகுதியினர் மிக்க அட்டூழியம் செய்தனர். அதனால் அவர்கள் தங்கள் மக்களில் சிலரைத் தெற்குப் பகுதியினரிடம் ஒப்படைத்தனர். அவர்கள் கோவில் அதிகாரிகள் முன்னிலையில் ஓர் ஒப்பந்தம் செய்து கொண்டனர்.
அதன்படி இரு திறத்தாரும் ஒருவருக்கொருவர் தீங்கிழைக்கலாகாது என்றும், இதற்கு
69
மாறாக நடந்தால் இரு திறத்தாரும் கூடித்தீமை செய்பவர் நிலங்களைச் கைப்பற்றிக் கோவிலுக்குத் தானமாக விடலாம் என்றும், அங்ஙனம் தானமாக விடப்பட்ட நிலங்களுக்கும் அந்தக் குற்றவாளிகளே வரி செலுத்த வேண்டுமென்றும், இவற்றோடு ஊரவைக்கும், அரசனுக்கும் அவன் தண்டனை செலுத்தவும் நேரலாம் என்றும் ஒப்பந்தம் செய்தனர்"? அரசத் துரோகம் செய்தவர் சொத்து அரசாங்கத்தினரால் கைப்பற்றப்பட்டது. அத்துரோகிகள் சில சமயங்களில்
கொல்லப்பட்டனர். அவர்கள் நிலம் ஏலம் விடப்பட்டன.''290
“குடுமியான் மலைக்கோயில் கருவறையிலிருந்து விலையுயர்ந்த நகை களவாடப்பட்டுவிட்டது. ஐயுறப்பட்ட சிவப்பிராமணரைப் பக்கத்துச் சிற்றரசர்கள், பேரூர்கள், நாடுகள் இவற்றினைச் சேர்ந்த தலைவர்கள் கூடி விசாரித்தனர். பெரிய பட்டர்களையும் கலந்து ஆலோசித்தனர். அம்மண்டலத்தலைவன் முன்னிலையில் இவ்விசாரணை நடைபெற்றது. குற்றவாளிகள் காய்ச்சிய இரும்பினைப் பிடிக்கும் படி கட்டளையிடப்பட்டனர். நால்வர் கைகளில் காயம்பட்டது. மற்றொரு குற்றவாளி தன் குற்றத்தை ஒப்புக்கொண்டான். குற்றவாளிகள் அனைவரும் 'சிவத்துரோகிகள்' எனத் தீர்மானிக்கப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களுடைய நிலங்களும் பிற உடைமைகளும் 'திருநாமத்துக்காணி' என்ற பெயரில் கோவிலுக்குச் சேர்க்கப்பட்டன. அச்சொத்துக்கள் மீது முன்பே பணம் கொடுத்தவர்களுக்குக் கோவிலிலிருந்து பணத்தைப் பெற்றுக் கொண்டு, தங்கள் அடமானத்தை விடும்படிக் கட்டளை பிறப்பிக்கப்பட்டது.''”! "சிலப்பதிகாரம் கல்வெட்டுக்களிவிருந்து கோவில் அதிகாரிகளும் ஊர் அவையினரும் திருட்டு முதலிய குற்ற வழக்குகளை விசாரிக்கும் உரிமை பெற்றிருந்தனர் என்பதை அறியமுடிகின்றது. ஒரு கோவில் திருட்டு வழக்கில் குற்றவாளியின் சொத்து
பறிமுதல் செய்யப்பட்டது; அவனது ஒரு கை வெட்டப்பட்டது; அவன்
70
கிராமத்திலிருந்து விரட்டப்பட்டான்.””” இவ்வாறு கல்வெட்டுக்களில் 'ஊரவை' மற்றும் ஊரவையினரின் பணிகள், செயற்பாடுகள் பற்றிய செய்திகள் குறிப்பிடப்பட்டுள்ளன. சிற்றூர்களில் ஊர்க்காவலர்
"சிற்றூர்களில் 'ஊர்க்காவலர்' காவலர் (Police) வேலைகளைச் செய்து வந்துள்ளனர். இவ்வாறே 'நாடு' என்னும் பெரும்பிரிவினை 'நாட்டுக் காவலர்! காத்து வந்துள்ளனர். இவர்கள் முறையே 'பாடிகாவலர்' என்றும் 'நாடுகாவலர்' என்றும் கல்வெட்டுக்களில் பெயர் பெற்றனர், இவர்களுக்கு ஊரைச் சேர்ந்த ஒவ்வொரு வீட்டாரும் ஆண்டுக்கு இவ்வளவு நெல் என்று கொடுத்து வந்துள்ளனர். பல ஊர்களில் 'ஊரவையினர்' இவர்களுக்கென்று நிலத்தைச் சொந்தமாக விட்டிருந்தனர். ஊர்க்காவலும், நாடுகாவலும் பரம்பரை வேலையாக இருந்து வந்துள்ளது. அக்காவலர்கள் அரசத்துரோகம் செய்தால் அவர்களின் வேலை பறிக்கப்படும். நிலமும் பறிக்கப்படும். ஊரார் காவலருக்குக் கொடுப்பது நெல் மட்டுமன்று. பராக்கிரம பாண்டியன் காலத்தில் நெல்விளையும் ஒவ்வொரு 'மா' நிலத்திலும் ஒரு கலம் நெல்லும். ஒவ்வொரு பாக்கு மரத்திற்கும் வீசம் பணமும், கரும்பு, மருக்கொழுந்து, இஞ்சி, வாழை விளையும் ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஐந்து பணமும், ஓவ்வொரு வீட்டிற்கும் இரண்டு பணமும் ஊர்க்காவலருக்குக் 11203
கொடுக்கப்பட்டன என்று ஒரு கல்வெட்டுக் கூறுகின்றது. ஊரின் அளவுக்குத்
தக்கபடி ஊர்க்காவலர் சிலராகவும் பலராகவும் இருந்து வந்துள்ளனர்.
+ 11204
திருவொற்றியூரில் நாற்பத்தெட்டு காவல்காரர்கள் பணியாற்றி வந்துள்ளனர்.
"நாடு என்னும் பெரும்பரப்பை ஆண்டு வந்தான் 'நாடாள்வான்'
எனப்பட்டான். அவன் தன்கீழ்க் காவலர் பலரைத் 'தலையாரிகள்' என்ற பெயரில்
71
நியமித்து நாடுகாவல் வேலையைக் கண்காணித்து வந்துள்ளான். முன்னர் குறிப்பிட்ட முறையில் வரும் நாடுகாவல் வருமானம் அவனைச் சேர்ந்தது. அவன் அத்தொகையிலிருந்து தன் ஆட்களுக்குத் திங்கள் தோறும் பணமாகவோ, நெல்லாகவோ ஊதியம் கொடுத்து வந்தான். விசய நகரத்துப் பாளையக்காரர்கள் ஆட்சியில் நகரத்தில் திருட்டும் கொள்ளையும் நடந்தால் ஊர்க்காவலர்களே கடுமையாகத் தண்டிக்கப்பட்டுள்ளனர்."'””” பெரு நாட்டில் சிறப்புப் பகுதிகளில்- எல்லைப்புறப் பகுதிகளில் அரசாங்க நிலைப்படைகள் வைக்கப்பட்டிருந்தன. அவர்கள் அப்பகுதிகளில் நாடுகாவற் பணியைச் செய்து வந்துள்ளனர். இவையாவும் கல்வெட்டுக்கள் தரும் செய்திகளாகும்.
சோழர் காலக் கல்வெட்டுக்களில் கிராமச் சபைகளின் அமைப்பு முறைகளும் அதன் செயற்பாடுகளும் விரிவாகச் சொல்லப்பட்டுள்ளன. அவற்றுள் உத்தரமேரூர்க் கல்வெட்டுக்கள் குறிப்பிடத்தக்கதாகும். இக்கல்வெட்டுகளிலிருந்து பின்வரும் செய்திகள் வெளிப்படுகின்றன. உத்தரமேரூர்க் கிராமம் முப்பது தொகுதிகள் அல்லது 'குடும்பு' களாகப் பிரிக்கப்பட்டிருந்தது, இக்குடும்புகள் ஒவ்வொன்றும் கிராம சபைக்குத் தேர்ந்தெடுப்பதற்கான தகுதியுடையவர் ஒருவரை நியமனம் செய்யவேண்டும். அவர்கள் குறைந்த அளவு கால்வேலி நிலத்துக்காவது உரிமை கொண்டிருக்க வேண்டும். அவர்கள் குடியிருந்த வீட்டுமனை அவர்களுக்கே சொந்தமானதாக இருக்க வேண்டும். அவர்களுடைய வயது முப்பத்தைந்துக்குக் குறைந்திருக்கக் கூடாது. எழுபதுக்கு மேற்பட்டிருக்கக் கூடாது. அவர்கள் வேதத்துடன் தொடர்புடைய மந்திர பிராமணங்களைக் கற்றிருக்க வேண்டும். . . . . ஏதேனும் ஒரு சபை அல்லது வாரியத்தில் மூன்றாண்டுகள் ஒருவர் உறுப்பினராக இருந்திருந்தால் அவர் மீண்டும் உறுப்பினராக நியமனம் பெறும் உரிமையை இழந்தவர் ஆவார். ஏற்கனவே ஒரு குழு அல்லது வாரியத்தில் உறுப்பினராக
இருந்து ஒழுங்காகக் கணக்குக் காட்டத் தவறியவர்களும் அவர்களுடைய
72
சுற்றத்தார்களும் பிறருடைய உரிமைகளைப் பறித்துக் கொண்டவர்களும் இழிந்த ஒழுக்கமுடையவர்களும் நியமனம் பெற உரிமையற்றவர்கள் ஆவார்கள். குடும்புகளால் நியமனம் செய்யப்பட்டவர்கள் அனைவரும் கூடிக் குடும்புக்கு ஒருவராக மொத்தம் முப்பது உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பார்கள். இக்காலத்தைப் போலவே அக்காலத்திலும் வாக்குப் பதிவு முறையொன்று பிராமணர் கிராமங்களில் கையாளப்பட்டது. அம்முறைக்குக் 'கடவோலை முறை' என்று பெயர். இக்குடவோலை முறையில்தான் கிராமச் சபையின் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களுள் ஆண்டிலும் அறிவிலும், அனுபவத்திலும் முதிர்ச்சியடைந்தவர்களான பன்னிருவர், ஏற்கனவே தோட்ட வாரியம், ஏரி வாரியம் ஆகியனவற்றின் உறுப்பினராக இருந்து அனுபவம் பெற்றவர்களாயின் வாரியத்துக்கு உறுப்பினராக அமர்த்தப்படுவார்கள். ஏனையோர் அனுவர் ஏரி வாரியத்துக்கும் பன்னிருவர் தோட்ட வாரியத்துக்கும் நியமனம் செய்யப்படுவார்கள். பஞ்சவார வாரியம், பொன்வாரியம், உதாசீன வாரியம் என வேறு வாரியங்களும் அமைக்கப்பட்டிந்தன. 'மகாசபைக்குப் 'பெருங்குறி' என்றும், வாரிய உறுப்பினர்களுக்கு 'வாரியப் பெருமக்கள்' என்றும் பெயர், சபைகளும் வாரியங்களும் பொதுவாகக் குளத்தங்கரைகளிலும் மரத்தடிகளிலும் கூடுவது வழக்கம். கிராமப் புறம்போக்கு நிலங்களையும் கண்காணிக்கும் உரிமை இச்சபைகளுக்கு இருந்தன. அரசாங்கம் ஏற்பாடு செய்த நில விற்பனை, நிலதானம் போன்ற உரிமை மாற்றங்கள் ஒழுங்காக முடிவு பெறுவதற்கு இச்சபைகள் துணைபுரிந்தன. நிலங்களின் வருமானத்தைக் கணக்கிடுதல், வரிவிகிதங்களை அறுதியிடுதல், வரி தண்டுதல், வரி செலுத்தத் தவறியவர்களின் நிலங்களைக் கைப்பற்றி விற்று விற்பனைத் தொகையைக் கொண்டு வரி நிலுவைக்கு ஈடுகட்டிக் கொள்ளுதல் ஆகிய பணிகள் கிராம
சபையினரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தன. காடுகொன்று நாடாக்குதல், தரிசு
73
நிலங்களை உழவு நிலங்களாக மாற்றுதல், குடி மக்களின் நிலவுரிமைகள், பாசன உரிமைகள் ஆகிய வேளாண்மை உரிமைகளை அறுதியிடுதல், குடிமக்களின் வழக்குகளைத் தீர்த்து வைத்தல் ஆகிய பணிகளையும் இம்மகாசபைகள் புரிந்து வந்தன. நில அளவைகளை மத்திய அரசாங்கமே மேற்கொண்டதெனினும், நில அளவையின் போது ஆய்ந்து அறிந்து கொள்ள வேண்டிய நிலவளம், நிலத்தரம் ஆகியவற்றிற்கு இச்சபையின் உடன்பாட்டை மத்திய அரசாங்கம்''£?$ பெற்றாக வேண்டும்.
உறையூரில் உள்ள கல்வெட்டில்,
“மறங்கெழு சோழர் உறந்தை யவையத்து
அறம்நின்ற நிலை யிற்றா கலன்" (புறம்.39) என்ற குறிப்புக் காணப்படுகின்றது. "உத்தரமேரூர், திருப்பனந்தாள், தஞ்சை மாவட்டம் தழையனூர் ஆகிய இடங்களில் காணப்படும் கல்வெட்டுக்கள், 'சிற்றூர் அவை பற்றி விளக்குகின்றன. ஊரவை கூடும் இடம் அவை, மண்டபம், மன்றம், மரநிழல் எனவும், முரசு அறைந்தும் கொம்பு ஊதியும் ஊரவை கூடுவதைத் தெரிவிப்பார்கள் எனவும் கல்வெட்டுக்கள் கூறுகின்றன. பகல், இரவு எனத் தேவை ஏற்பட்ட போதெல்லாம் ஊரவை கூட்டப்பட்டுள்ளது என நாகபட்டினக் கல்வெட்டுக் கூறுகின்றது. இக்கல்வெட்டுக்கள் மூலம் பாண்டியர், சோழர் ஆட்சிக் காலங்களில் சிற்றூர் வழக்கு மன்றங்கள் சிறப்பாக நடைபெற்றுள்ளன? என்பதை அறியலாம்.
இக்கல்வெட்டுக்களின் வாயிலாக ஊரவை உறுப்பினர்கள் தேர்வு
செய்யப்பட்ட முறையினையும் அவர்களின் பணிகள் பற்றிய செய்திகளையும் அறிய
முடிகின்றது. பண்டைய தமிழக மன்னர்கள் அறம் தழுவி அரசு புரிந்த
74
முறைமையினையும், அறங்கூறவையத்தின் நடைமுறைகளையும், ஊரவையின் செயல்முறைகளையும் இக்கல்வெட்டுச் சான்றுகள் தெளிவுப்படுத்துகின்றன. தொகுப்புரை
“பஞ்சாயத்து என்பது 'சிற்றூர் வழக்கு மன்றம்' என்றும், 'கிராம வழக்கு மன்றம்' என்றும் அழைக்கப்படுகின்றது. அது குறைந்தது ஐந்திற்கும் மேற்பட்ட நடுநிலையான ஊர்ப்பெரியவர்கள் கூடி விவாதிக்கும் 'நியாய சபை'யாகும். ஒரே பண்பாட்டு இயல்புடைய சிற்றூரைச் சேர்ந்தவர்கள் அவர்களுக்குள் தோன்றும் சிக்கல்களைத் தீர்க்க ஏற்படுத்தப்பட்ட அமைப்பு 'சிற்றூர்ப் பஞ்சாயத்து' ஆகும். அது கிராமத்துப் பெரியவர்களின் வழக்காடு மன்றமாக அமைந்திருப்பதனால் அதனைக் 'கிராம வழக்கு மன்றம்' எனக் குறிப்பிடலாம்.
பழங்காலத்தில் மனிதன் நாடோடிகளாகக் காடுகளில் வேட்டைத் தொழிலை மேற்கொண்டு வாழ்ந்து வந்தான். பின்னர் அவன் நீர்நிலைகளைக் கொண்ட செழிப்பான ஆற்றுப் பகுதிகளை நாடி ஓரிடத்தில் நிலையாகத் தங்கி வாழத் தொடங்கினான். இவ்வாறு மனிதர்கள் கூட்டம் கூட்டமாக வாழத் தொடங்கிய வாழ்க்கை முறையினையே வரலாற்று ஆய்வாளர்கள் 'இனக்குழு வாழ்க்கை முறை' எனச் சுட்டிக்காட்டியுள்ளனர். இனக்குழுச் சமூக வாழ்க்கையில் மனிதன் தமக்கென்று வீடு கட்டிக்கொண்டு வாழத் தலைப்பட்டான். இவ்வாறு ஓரிடத்தில் நிலையாக வாழ்ந்த இனக்குழுவே பின்னர் கிராமமாகப் பரிணாம வளர்ச்சிப் பெற்றது.
'வழக்கு மன்றம்' என்ற அமைப்பு முறை கிராமம் என்ற அமைப்புத் தோன்றி மனிதன் கூடிவாழத் தலைப்பட்ட போது தோன்றியிருக்க வேண்டுமென்றும்,
அம்மன்றங்கள் கிராம மக்களிடையே ஏற்பட்ட சிறு சிறு சிக்கல்களையும், கிராமக்
75
குழுக்களிடையே ஏற்பட்ட ஒட்டு மொத்தமான சிக்கல்களையும் கருத்தில் கொண்டும் தோன்றியது என்பதனையும் அறியமுடிகின்றது.
சங்ககாலப் பொதுவாழ்வியல் மன்னராட்சியில்தான் அடங்கியிருந்தது. மன்னனே வலிமை மிக்கவன்; அவனைக் கட்டுப்படுத்தியதாகக் கூறப்படும் கட்டுப்பாடுகள் கொள்கையளவிலேயே இருந்தன; வரி இறுத்தற்காகவும் பொது அமைதியைக் காப்பதற்காகவும் மன்னன் தனது அரசின் எல்லாப் பகுதிகளோடும் தொடர்பு கொண்டிருந்தான்; இருப்பினும் சிற்றூர்களில் மக்கள் தங்கள் ஊர்ப்பொதுக் காரியங்களைத் தாங்களே கவனித்துக் கொண்டனர். மன்னனால் எல்லா விதத்திலும் கவனிக்க முடியாத நிலையில் கிராமத்திலுள்ளோர் தமது ஊரிலுள்ள செல்வந்தர், அனுபவமுடையோர், செல்வாக்குடையோர், அறிஞர் என்போர் வாயிலாகத் தங்களைத் தாங்களே ஆண்டு கொண்டனர். இலையே அக்காலக் கிராம சுயாட்சிக்கு அடிப்படையாகும்.
சங்க இலக்கியங்களில் 'மன்றம்', 'பொதியில்', 'அம்பலம்!, 'அவை'. 'அறங்கூறவையம்' போன்ற சொற்கள் இடம் பெற்றுள்ளன. இவை கிராம வழக்கு மன்றங்களைக் குறிக்கும் ஒருபொருள் குறித்த பல சொற்களாகும். ஊரில், ஊர்ப் பெரியவர்கள் ஒன்றாகக் கூடும் பொது இடத்திற்கு 'மன்று' அல்லது 'மன்றம்' என்பது பெயராகும். இச்சொல் வழக்கு சங்க இலக்கியங்களில் பரவலாகப் பயின்று வந்துள்ளது. பொதுச் சபையில் வழக்கினை எடுத்துப் பேசுவோர்க்கும் வழக்கினைத் தீர்ப்பவர்க்கும் 'மன்றாடி' என்றும், 'அவை'யாகிய மன்றத்தில் அமர்ந்து வழக்குகளை ஆராய்ந்து தீர்ப்பு வழங்குபவர் 'மன்றாடி' என்றும் பெயர்பெறுகின்றனர். கருத்து மாறுபாடுற்றுப் பிணக்குக் கொண்டவர்களைச் சேர்த்து வைப்பவர் 'சேர்வை' எனக் கொள்ளலாம். பொதுவில் யாரும் வழிபடுவதற்குரிய இடம் 'பொதியில்' ஆகும்.
நாலடியாரில் வழிப்போக்கர்கள் தங்கும் இடமாக 'வேதிகை' குறிக்கப்பட்டுள்ளது.
76
பொதியில் என்பது மரத்தடியில் அமைந்திருந்தது. கிராமங்களில் எழுந்த சிறுசிறு தகராறுகளையும் பிரச்சினைகளையும் கிராம நிறுவனங்களான மன்றமும் பொதியிலும் தீர்த்து வைத்துள்ளன.
'ஊர்' என்பது நகரமாகும், பெரிய கிராமம் 'பேரூர்' என்றும், சிறிய கிராமம் 'சீறூர்' என்றும், பழைய கிராமம் 'மூதூர்' என்றும் அழைக்கப்பட்டுள்ளன. பண்டைய தமிழகத்தில் நீதியை நிருவாகம் செய்வதற்கு மன்னர்களுக்கு உறுதுணையாக ஐம்பெருங்குழுவினரும் எண்பேராயத்தினரும் இருந்துள்ளனர். ஐம்பெருங்குழு, எண்பேராயம் ஆகியனவற்றை நச்சினார்க்கினி௰ர், அடியார்க்கு நல்லார் போன்ற உரையாசிரியர்கள் கூறியிருப்ப தனால் அவற்றை ஏற்றுக்
கொள்ளலாம்.
'அம்பலம்' என்னும் சொல்லிற்கு ஊரவை, கற்றோரவை, பலர் கூடும் வெளியிடம், சிற்றூர் அலுவல்வகை முதலான பொருள்கள் உள்ளன. ஊரவையில் அமர்ந்து தம் நுண்மாண் நுழைபுலத்தால் மற்றவர்களுடைய வழக்குகளை ஆராய்ந்து நீதிவழங்கியவரே 'அம்பலகாரர்' எனப்பட்டார். அம்பலகரார் என்னும் இப்பட்டப் பெயர் கள்ளர், வலையர் முதலிய சாதியாரிடத்து இன்று மிகுதியாகக் காணப்படுகின்றது.
தொல்காப்பியர் புறத்திணையியல் வாகைத் திணையைப் பற்றிக் குறிப்பிடும் போது குடிப்பிறப்பு, கல்வி, ஒழுக்கம், வாய்மை, தூய்மை, நடுவுநிலைமை, அழுக்காறின்மை, அவாவின்மை என்னும் எண்வகைக் குணங்களைக் கொண்ட அவைக்கண் முந்தியிருப்போர் வெற்றியையும் குறிப்பிட்டுள்ளார். 'அவையம்' பொதுவாக அக்காலத்தில் நீதி மன்றங்களாகவே செயல்பட்டு வந்துள்ளன. பக்தி நெறி மேலோங்கிய பல்லவர் காலத்தில் கோயில்கள் நீதிமன்றங்களாகச்
செயல்பட்டுள்ளன.
77
தலைநகரத்தில் அறங்கூறவையத்திற்கு மன்னனே தலைமை தாங்கினான். அவையத்திடம் தொடர்ந்த வழக்கு 'குறை' எனவும், வழங்கிய நியாயம் 'முறை' எனவும் அழைக்கப்பட்டன. சாட்சி கூறியவன் 'கரி' அல்லது 'கரியோன்' என்றமைக்கப்பட்டான். வயதும் அனுபவமுமே அறங்கூறவையத்தில் நீதிபதிகளுக்குரிய தகுதிகளாகும். அவையத்தாரிடையே 'காவிதிப் பட்டம்' பெற்ற அமைச்சர்களும் இருந்துள்ளனர். அவர்கள் அறத்தை அறிந்தமைக்கு அறிகுறியாக அவர்களுக்கு இப்பட்டம் வழங்கப் பெற்றுள்ளது.
பண்டைய தமிழகத்தில் குற்ற வழக்குகளே மிகுந்திருந்தன. சங்ககாலத்தில் ஐயப்பட்ட குற்றவாளிகளும் கொடிய முறையில் தண்டிக்கப்பட்டுள்ளனர். சோழர் கால ஆட்சியில் நீதி வழங்கும் பொறுப்பு ஊர்ச்சபையினரிடமும், குலப்பெரிய தனக்காரரிடமும் ஒப்படைக்கப்பட்டிருந்தது. கரணத்தான் துணையுடன் நீதி மன்றங்கள் செயல்பட்டுள்ளன.
சோழர் காலத்தில் நாட்டாட்சி முறையில்-கிராம தலசுய ஆட்சி முறையில் கிராம நிருவாகத்துக்குச் சிறப்பிடம் கொடுப்பட்டது. கல்வெட்டுக்களின் காலம் கி.பி.ஏழாம் நூற்றாண்டு ஆகும். அக்கல்வெட்டுக்களில் 'ஊரவை' பற்றியும் ஊரவையினரின் பணிகள் ற்கு செய்திகள் காணப்படுகின்றன.
இலக்கியச் சான்றுகளைக் கொண்டும் கல்வெட்டுச் சான்றுகளைக் கொண்டும் நோக்கும் பொழுது '(கிராம) சிற்றூர் வழக்கு மன்றங்கள், மன்றம், அவை, அவையம், அறங்கூர்அவையம், அறக்களம் முதலான பல்வேறு பெயர்களில் சங்ககாலம் முதல் சோழர்காலம் வரையில் தொடர்ந்து இருந்து வந்துள்ளமையை அறியலாம். சிற்றூர் வழக்கு மன்றங்கள், நீதி மன்றங்கள் பெருகியுள்ள
தற்காலத்திலும் மக்களின் நம்பிக்கையைப் பெற்றிருப்பது சுட்டத்தக்கதாகும்.
78
பாண்டியர் நிருவாகத்தில் 'ஊாச்சபையார்', 'நாட்டதிகாரிகள்', 'கோயில் கண்காணிப்பாளர்! ஆகியோர் முக்கியப் பங்கு பெற்றிருந்தனர். நாட்டதிகாரிகள் சிற்றூர் வழக்குகளைத் தீர்த்து வைத்துள்ளனர். சிற்றூர்கள் நாட்டதிகாரிகளின் மேற்பார்வையிலும், பேரூரான நகரங்கள் மன்னனது நேரடிக் கண்காணிப்பிலும் இருந்தன. ஊர்ச்சபைகள் 'ஊர்வாரியத்தினர்' உரிமை வழக்கு, குற்ற வழக்கு ஆகிய இருவகை வழக்குகளையும் தீர்த்து வைக்கவும், குற்றவாளிகளைத் தண்டிக்கவும் முழு அதிகாரம் பெற்றிருந்தனர். அவர்களால் தீர்க்க முடியாத வழக்குகளும் தீர்த்த வழக்குகளின் மேல்முறையீடுகளும் மன்னனிடம் கொண்டு செல்லப்பட்டன. தலைநகரிலிருத்த அறங்கூர் அவையத்தில் பொதுவகையான வழக்குகளை அவ் அவையத்தாரே தீர்த்து வைத்துள்ளனர். பாண்டிய மன்னன் இம்மன்றத்திலிருந்து நீதி வழங்கியுள்ளான்.
பல்லவர் காலத்தில் 'கோட்டம்', 'நாடு', 'ஊர்' என்னும் நாட்டுப்பிரிவுகள் காணப்பட்டன. பல்லவப் பெரு நகரங்களில் அறங்கூர் அவையங்கள் இருந்தன. அவை 'அதிகரணங்கள்' எனப் பெயர் பெற்றன. சிற்றூர்களில் சான்றோர் அறங்கூர் அவையத் தலைவர்களாக இருந்தனர். பல்லவ மன்னனே நீதியின் தலைவனாகச் செயல்பட்டான். கோட்டங்களிலும் சிற்றூர்களிலும் நீதி மன்றங்கள் இயங்கி வந்தன. காஞ்சிபுரத்தில் இருந்த நீதிமன்றம் 'அதிகரணம்' என்று பெயர் பெற்றது. கோட்ட நீதிமன்றங்கள் விதித்த தண்டனை 'அதிகரண தண்டம்' என்றும், சிற்றூர் நீதி மன்றங்கள் விதித்த தண்டனை 'கரண தண்டம்' என்றும் அழைக்கப்பட்டன. 'நாடு' என்னும் பகுதிக்கு உரிய சான்றோர் 'நாட்டார்' எனப்பட்டார். ஊரை ஆண்ட அவையினர் 'ஆள்வார்' எனப்பட்டார். ஊர் அவையினர் 'பெருமக்கள்'
எனப்பட்டனர். அவர்கள் சிற்றூர் வழக்கு மன்றங்களில் நீதி வழங்கி வந்தனர்.
79
விசய நகர மன்னர் ஆட்சியில் தல சுய ஆட்சி நிறுவனங்களாகிய சிற்றூர் சபைகளும் நாட்டவைகளும் செயலிழந்தன. மகாமண்டலாதிபதியும், மண்டலாதிபதிகளும் 'படைமானிய நிருவாக முறையை'ப் புகுத்தினர். இம்முறைப்படி பிரதானிகள், தனநாயகர்கள், பத்திரதாரர்கள் ஆகியோர் நாட்டை நிருவகிக்கும் 'நாயங்காரமுறை' ஏற்படுத்தப்பட்டது. சிற்றூர்களில் 'ஆயகர் முறை' ஏற்பட்டது. 'போட்டையில்' என்னும் பணியாளர் சிற்றூர்களில் நீதி வழங்கினார். கர்ணம், தலையாரி, தோட்டி, நீர்கந்தி ஆகிய பணியாட்கள் சிற்றூர்களின் காப்பாளர்களாக விளங்கினர். சிற்றூர் வழக்கு மன்றமாகிய 'சாவடி' அரசு அலுவலகமாகச் செயல்பட்டது.
நாயக்க மன்னர்கள், விசய நகர ஆட்சியின் 'படைமானிய முறையை ப் பின்பற்றித் தமிழகத்தில் 'பாளையப்பட்டு முறையை' அறிமுகப்படுத்தினர். அம்முறைப்படி, நாயக்க மன்னர்கள் நாட்டைச் சிறுசிறு பாளையங்களாகப் பிரித்து அவற்றைப் பாளையக்காரர்களிடம் ஒப்படைத்தனர், பாளையங்கள் மீது பாளையக்காரர்களுக்கு முழு நிருவாக உரிமையும் வழங்கப்பட்டது. நாட்டில் அமைதி காப்பதும், நீதி வழங்குவதும் பாளையக்காரர்களின் முக்கியப் பணிகளாகும்.
தலை நகரில் மன்னனும், தளவாயும், பிரதானியும் நீதி வழங்கினர்,
ஆங்கில நீதிமன்ற மரபுகளையும், பல சட்டங்களையும், சட்ட நடைமுறைகளையும், வழக்குரைஞர்களின் வாதங்களையும் அடிப்படையாகக் கொண்ட இக்கால நீதிமன்றங்களின் தோற்றத்திற்கும், அதன் வளர்ச்சிக்கும், ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் குழுமத்தினர் வித்திட்டனர். அவர்கள் உரோமானியச் சட்ட நடைமுறையைத் தழுவிட நீதிமன்றங்களையும், நீதி நிருவாகத்தையும்
ஏற்படுத்திச் செயல்படுத்தினர்.
80
குறிப்புகள்
. Tamil-English Dictionary, p.646. . Tamil Lexicon, Vol.IV, p.2414, . பெ. தங்கராஜ், பள்ளர் யார்? பள்ளர் வரலாறு, ப.65.
. இலி. ஆந்திரயெவ், ஏங்கெல்சின் குடும்பம், தனிச்சொத்து, அரசு
ஆகியவற்றின் தோற்றம், ப.238.
. ஆர். ராமானுஜாசாரி, பிளேட்டோவின் குடியரசு, ப.75. . இ.லி. ஆந்திரயெல், மு.நூ., ப.239,
தொல்.பொருள். புறம்: 17:17. திருமுராகு:426. நச்சி (உரை.ஆ.), மலைபடுகடாம், 492,
. மதுரைக்:16], அவை:அம்பலம்.
புறம்: 390.
நச்சி (உரை.ஆ.), பட்டினப்பாலை, 246-289.
. புறம்: 37.
. புறம்: 76, 79, 371.
. அகம்: 77.
. K.A.N. Sastri, Stuides in Chola History and Administration, p.76. . குறள்: 728.
. பழமொழி நானூறு, 206.
நாலடி: 96.
20.குறள்: 773.
2.
நாலடி: 24], 384.2.
22 சிலப்: Xxvi: 38-4],
81
2ல். மணிமே: 1; 17. 24, பெருங்கதை: 11: 5-6. 2. சேக்கிழார், பெரியபுராணம், தடுத்தாட் கொண்ட புராணம், செ:48:2.
26.ந. சுப்ரமண்யன், சங்ககால வாழ்வியல் (சங்கத் தமிழரின் அரசு முறையும் சமூக வாழ்வும்), ப/35.
27. V.R. Ramachandra Dikshiter, Studies in Tamil Literature and History, p.17. 28. குறுந்:262, பல வீடுகள் சேர்ந்தது ஒரு சேரியாகும். 29, மதுரைக்:161, அவை:அம்பலம்.
30. திருமுருகு:426. ௧.௮. நீலகண்ட சாஸ்திரி மன்றத்தை ஒரு கூடம் என்கிறார். K.A. Nilakanta Sastri, Cholas, p.70.
ல]. மலைபடு:492; நச்சி, உரை.
32. புறம்:௮87.
லல, மதுரைக்:61.
4, பெரியாழ்வார் திருமொழி, 11-2-2-12,
லூ. புறம்:70.1], 1-2,
56. புறம்:76.11, 4-6.
27. தமிழ்ப்பேரகராதி, தொகுதி-॥, ப.3127.
38. செ. இராசு, செந்தமிழ் வேளிர் எம்.ஜி.ஆர்-ஒரு வரலாற்று ஆய்வு, ப.28. 39, சேக்கிழார், பெரியபுராணம், தடுத்தாட் கொண்ட புராணம், செ:48:2. 40.௮. முத்துசாமி, சங்க இலக்கியத்தில் ஆயர், ப.28.
41, ந. சுப்ரமணியன், தமிழக வரலாறு (கி.பி.1565 வரை), ப.220.
42. புறம்: 390,
43. பட்டினப்: 246-289,
44, சிலப்: 11.
45. புறம்: 389.
46. கலி:100; நச்சி.உரை; குறுந்:64.
82
47. நாலடி: 96,
48. பட்டினப்:246-249,
49. புறம்; 275.
20. புறம்: 76, 79, 27,
51. K.A. Nilakanta Sastri, Cholas, ற.71.
௮2. சிலப்: ஸ்ர; 84.
2௮. V.R. Ramachandra Dikshiter, Op.cit., p.222.
54. புறம்: உ.வே.சா. முகவுரை.
௦௮. பெரும்பாண்: 2௦4.
26. சிலப்; 11]: 11.
57. புறம்: 324,
58. சிலப்; ஸர: 38-4],
59. மணிமே: 1: 17.
60. மதுரைக்:508-510.
61. பெருங்கதை: 11: 5-6.
62. கே.கே. பிள்ளை, தமிழக வரலாறு-மக்களும் பண்பாடும், ப.162. 63. V. Kanakasabhai, The Tamils Eighteen Hundred Years Ago, p.109.
64. S. Krishnaswami Iyengar, Evolution of Hindu Administrative Institutions in South India, p.19,
65. Ibid, p.20.
66. Ibid, p.22.
67. V.R. Ramachandra Dikshiter, Op.cit., p.196. 68. V.A. Smith, Early History of India, p.442. 69. மதுரைக்:210.
70. "செம்மை சான்ற காவிதி மாக்களும்”, மதுரைக்:499,
83
71. ந. சுப்ரமண்யன், சங்ககால வாழ்வியல், ப.12. 72. 3. Krishnaswami, Iyengar, Beginnings of South India History, p.139. 73. V.A. Smith, Early History of India, p.71. 74. தொல்.சொல்.நூ.57, நச்சி.உரை. 75. சிலம்.:157, அடியார்க்கு நல்லார் உரை. 76. ந. சுப்ரமண்யன், மு.நூ., ப.112. கே.கே. பிள்ளை, தமிழக வரலாறு-மக்களும் பண்பாடும், ப.165, 77. மதுரைக்:469-470. 78. ந.க. மங்கள முருகேசன், தமிழக ஆட்சிமுறை, ப.6]. 79. இரா. தேவ ஆசீர்வாதம், மூவேந்தர் யார்?, ப.227. 80.ந.மு. வேங்கடசாமி நாட்டார், கள்ளர் சரித்திரம், ப.18.
81. “Caste Titles and Names are However of Recent Origin and Little can be Inferred from them Whatever their Meaning may be Shown to be”
- W, Francis, Census of India 1901, Vol.XB, Part-I Report, p.78.
82. தொல்.சொல்., கிளவி].
84. ஞா. தேவநேயப்பாவாணர், செந்தமிழ் சொற்பிறப்பியல், பேரகர முதலி, ப.248.
84. புறம்: 183.
85. ந; முத்துசாமி, சங்க இலக்கியத்தில் ஆயர், ப./7.
86. தமிழ்நாட்டு வரலாற்றுக் குழு, தமிழ் நாட்டு வரலாறு, ப.ஃ86. 87. மேலது.
88. புறம்: 4:3, கலி140:22.
89. சிலப்: 30:93-94,
90. குறள்: 728.
9]. புறம்: 266:8-9,
92, மலைபடு:7/.
84
93. மதுரைக்:6], 404, 94, அகம்: 256.15-20. 95. தமிழ்நாட்டு வரலாற்றுக் குழு, தமிழ் நாட்டு வரலாறு, பக்.587-588.
96. கு. சுந்தரமூர்த்தி,(பதி.ஆ.), தொல்காப்பியம் பொருளதிகாரம்-அகத்திணையியல் புறத்திணையியல் (நச்சினார்க்கினியர் உரைக்குறிப்புக்களுடன்), ப.227.
97. தொல்.பொருள். புறம்: 17:17. 98. மேலது, நச்சி,உரை. 99. குறள்.772: நாவடி..24.1, 384.2.
100, R. Kasirajan, “Legar Aspects in Perunkatai”, The Legal Heritage of the Tamils, National Seminar Paper, 1994,
101. மா. இராசமாணிக்கம் பிள்ளை, பழமொழி நானூறு, ப.6. 102. வேங்கட கிருஷ்ணய்யங்கார், உரைநடைச் சிலம்பு, ப.206. 103. ௮. சுவாமிநாதன், தமிழ் நாட்டு வரலாறு, ப.156.
104, மு. ஆரோக்கியசாமி, தென்னிந்திய வரலாறு, பக்.182-183. 105. ந. சுப்ரமண்யன், சங்ககால வாழ்வியல், ப.217.
106. V. Kanakasabhai, Op.Cit., p.11].
107. சேக்கிழார், திருத்தொண்டர் புராணம்-மனுநீதி கண்ட புராணம், பா.எண்.27, சிலப்: ௬x, 52-௮2.
108. சிலப்: 30010.
109, சிலப்: 300: 24-29,
110. V. Kanakasabhai, Op.Cit., p.111.
11. சிலப்: ௦045, மன்னனை நேரில் காணவிடாமல் தடுக்கும் வாயிற் காவலரையும் அரண்மனைக் காவலரையும் மீறி மன்னனுக்கு வழக்கின் நிகழ்ச்சியைத் தெரிவிக்க உதவுவதே இந்த ஆராய்ச்சி மணியன் நோக்கமாக இருந்திருக்க வேண்டும்.
112. பழமொழி நானூறு, 24.
113. சிலம்.., அடியார்க்கு நல்லார் உரை.
84
983. மதுரைக்:61, 404, 94. அகம்: 256.15-20. 95. தமிழ்நாட்டு வரலாற்றுக் குழு, தமிழ் நாட்டு வரலாறு, பக்.587-588.
96. கு. சுந்தரமூர்த்தி, (பதி.ஆ., தொல்காப்பியம் பொருளதிகாரம்-அகத்திணையியல் புறத்திணையியல் (நச்சினார்க்கினியர் உரைக்குறிப்புக்களுடன்), ப.227.
97. தொல்.பொருள். புறம்: 17:17, 98. மேலது, நச்சி.உரை. 99. குறள்.773: நாலடி.24.1, 384.2,
100. R. Kasirajan, “Legar Aspects in Perunkatai”, The Legal Heritage of the Tamils, National Seminar Paper, 1994,
101. மா. இராசமாணிக்கம் பிள்ளை, பழமொழி நானூறு, ப.85. 102. வேங்கட கிருஷ்ணய்யங்கார், உரைநடைச் சிலம்பு, ப.206, 1038. ௮. சுவாமிநாதன், தமிழ் நாட்டு வரலாறு, ப.156.
104. மு. ஆரோக்கியசாமி, தென்னிந்திய வரலாறு, பக்./82-183. 105. ந. சுப்ரமண்யன், சங்ககால வாழ்வியல், ப.217.
106. V. Kanakasabhai, Op.Cit., p.111.
107. சேக்கிழார், திருத்தொண்டர் புராணம்-மனுநீதி கண்ட புராணம், பா.எண்.27, சிலப்: ௦0 22-24.
108. சிலப்: ௬:10.
109. சிலப்: XX: 24-29,
110. V. Kanakasabhai, Op.Cit., p.111.
111. சிலப்: 5௦:45, மன்னனை நேரில் காணவிடாமல் தடுக்கும் வாயிற் காவலரையும் அரண்மனைக் காவலரையும் மீறி மன்னனுக்கு வழக்கின் நிகழ்ச்சியைத் தெரிவிக்க உதவுவதே இந்த ஆராய்ச்சி மணியன் நோக்கமாக இருந்திருக்க வேண்டும்.
112. பழமொழி நானூறு, 24,
113. சிலம்.., அடியார்க்கு நல்லார் உரை.
86
. புறம்:15], . குறுந்:292. . பழமொழி நானூறு, 93,
மேலது.
. 137. Mahalingam, South Indian Polity, p.203.
. சிலம், வேட்டுவரி-'துடியொடுசிறுபறை'-எனத் தொடங்கும் பாடலில்
'அடிதொட்டுச் சூளுறல்' என்னும் தொடர் வருகின்றது.
. குறுந்:184, கவி;24, 10. . சிலம்:0 78.
. சிறுபஞ்ச:9, "கொடுங்கரி போவான் நாச்சாம்,”
நற்:196.
. குறன்:௦5ஆம் அதிகாரம். . புறம்:£4், . குறள்:110.
நாலடி:91,
. புறம்:47, . பெருங்: 1:40; 271-272.
. சேக்கிழார், பெரியபுராணம், தடுத்தாட் கொண்ட புராணம், இப்புராணத்தின்
ஆசிரியரான சேக்கிழார் இரண்டாம் குலோத்தூங்க சோழன் காலத்தவர்,
. T.V. Mahalingam, Op.Cit., pp.215-216.
, மணிஃஞ்டச்2-42,
புறம்:46,
. ந. சுப்ரமண்யன், சங்ககால வாழ்வியல் (மேற்கோளாக ஆளப்பட்டது),
ப.227
. V.R. Ramachandra Dikshiter, Op.cit., p.221. . பெரும்பாண்: 443-444.
161,
162. 163.
164.
183.
87
புறம்:ல3].
அகம்:256:15-21, கே.கே. பிள்ளை, தமிழக வரலாறு-மக்களும் பண்பாடும், ப.301. மேலது, பக்.201-302.
உ K.A. Nilakanta Sastri, A History of South India, pp.202-204. . Ibid, p.205.
. Ibid, pp.205-206.
. EP.Ind.xxii.No.3.
. கே.கே. பிள்ளை, தமிழக வரலாறு-மக்களும் பண்பாடும், பக்.303-304,
ஞா. தேவநேயன், பழந்தமிழாட்சி, ப.115.
ஞா. தேவநேயன், மு.நூ., பக்.16-117.
மேலது, ப.117.
மேலது, ப.72.
தேவநேயபாவாணர், பழந்தமிழர் அரசியல் கோட்பாடுகள், ப.82. தேவநேயபாவாணர், மு.நூ., 0.84,
ஞா. தேவநேயன், மு.நூ., ப72.
பரஞ்சோதி முனிவர், திருவிளையாடற் புராணம், மாமனாக வந்து வழக்குரைத்தப் படலம், பா.எண்.28, 30, வி.
ஞா. தேவநேயன், மு.நூ., ப.76.
மா. இராசமாணிக்கம் பிள்ளை, பல்லவர் வரலாறு, ப.224,
. C.K. Subramania Mudaliar’s “Sekkilar” (Madras University Lectures),
pp.68-72.
C. Minakshi’s Administration and Social Life Under the Pallavas, pp.53-55.
. ௩ Gopalan, Pallavas of Kanchi, pp.154-156.
K.A.N. Sastry, History of South India, p.254.
p.225.
. Ibid, p.191.
. வே.தி. செல்லம், தமிழக வரலாறும் பண்பாடும், ப.38. . S. Sathiyanatha Iyer, History of Nayaks of Madura, p.241. . வேதி. செல்லம், மு.நூ., ப382. . மேலது, பக்.460-46].
. மேலது, ப.462.
சிலப்,22:6,
சண்டேசுவரர் புராணம், பா.எண்.40-43.
மா. இராசமாணிக்கம் பிள்ளை, தமிழக ஆட்சி, ப.82. . 137 Mahalingam, South Indian Polity, p.208.
. 380 of 1914; 69 of 1924; 51. Polity, p.214.
. 570 of 1920; A.R.E. 1921, Para 40.
. 413 of 1913; A.R.E. 1914, Para 26.
. A.RLE. 1899, Para 63.
Inscription of Pudukkottai State 683.
. 112 of 1911; 246 of 1917; 506 of 1918; 279 of 1927.
Inscription of Pudukkottai State, 691.
. Ibid, 867. . 407 of 1921, A.R.E. 1921. . 240 of 1912, A.R.E.1912. . T.V. Mahalingam, South Indian Polity. pp.244-247. . S.J.J. VL. No.295. ஆ. இராமகிருஷ்ணன், தமிழக வரலாறும் பண்பாடும், ப.228.
88
. T.V. Mahalingam, Administration and Social Life Under Vijayanagar, Part-II,
. சேக்கிழார், பெரியபுராணம், தடுத்தாட் கொண்ட புராணம், பா.எண்.469;
இயல்--2 சிவகங்கை மாவட்டக் கிராம வழக்கு மன்றப் பஞ்சாயத்துக்களின் வகைகள்
89
இயல்-2
சிவகங்கை மாவட்டக் கிராம வழக்கு மன்றப் பஞ்சாயத்துக்களின் வகைகள்
சிவகங்கை மாவட்டக் கிராம மக்களிடையே ஏற்படும் பல்வேறு வழக்குச் சிக்கல்களை இம்மாவட்டக் கிராமங்களிலுள்ள பஞ்சாயத்து அமைப்புக்கள் நன்கு ஆராய்ந்து அலசிப் பார்த்து அவற்றிற்குத் தக்க தீர்ப்புகளை வழங்கி வருகின்றன. இம்மாவட்டக் கிராம வழக்கு மன்றப் பஞ்சாயத்துக்களின் வகைகளையும் அவற்றின் அமைப்பு முறைகளையும் விளக்குவது இவ்வியலின் நோக்கமாகும். இவ் ஆய்விற்குக் களமாக அமைந்த இம்மாவட்டக் கிராமங்களில் நிகழ்ந்து வருகின்ற கிராம வழக்கு மன்றங்களின் அமைப்புக்கள் (11011௦) அக்கிராமங்களில் வாழும் பல்வேறு இனமக்களின் மக்கள் தொகை, அதன் காரணமாக அவர்கள் அக்கிராமங்களில் பெற்று வருகின்ற செல்வாக்குப் போன்றவற்றைப்
பொறுத்ததாகவே அமைகின்றன.
அமைப்பு விளக்கம்
வடிவமும் அமைப்பும் (1௦01 and Structue)என்ற சொல் இலக்கியத் திறனாய்வில் அடிக்கடி விவாதிக்கப்படுகின்ற சொல்லாகும். இச்சொல்லிற்குப் பல்வேறு விதமான பொருள்களும் கொடுக்கப்படுகின்றன. இந்தச் சொல்லைப் பெரும்பாலும் குறுகிய பொருளில் பயன்படுத்தப்படும் போது அது ஓர் இலக்கிய வகையைத் தன்னுணர்ச்சி பாடல், காப்பிய வகைகள் போன்றவற்றையோ அல்லது எதுகை, மோனை, வரிகள் அமைக்கப்படும் பாங்கினையோ (செய்யுள், பாடல், பத்தி போன்றவற்றினையோ) குறிக்கும். ஒரு நூலின் வடிவம் என்பது அதனை
உருவாக்கும் அடிப்படை விதியாகும்.
90
வடிவம் என்பது ஒரு நூலின் நுவல் பொருளை (8ப0/6௦4 Matter) இட்டு வைக்கும் வெறும் கொள்கலம் அன்று என ஆய்வாளர்கள் அனைவரும் ஒப்புக் கொள்கின்றனர், பதினெட்டாம் நூற்றாண்டைச் சார்ந்த பல இலக்கியத் திறனாய்வாளர்கள் ஒரு நூலின் வடிவம் என்பது அதனுடைய பல உறுப்புகளின் கூட்டுத்தொகுதியாகும் என்று கருதினர். இதனுடைய அடிப்படைக் கொள்கையினை ' மரபு ஒழுங்கு (Decorum) என்றழைக்கலாம். ஏனெனில் அரிஸ்டாடில் காலத்திலிருந்தே ஓர் இலக்கிய நூலின் கட்டமைப்பு மனித உடலின் அமைம்பைப் போல் ஒழுங்கு முறைக்கு உள்ளடக்கியது என்றே நம்பப்பட்டு வருகின்றது.” இலக்கிய வடிவின் கோட்பாட்டை மிகச் சிறந்தமுறையில் மெய்ப்பொருள் அடிப்படையில் விளக்கியவர் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்த ஆங்கிலக் கவிஞரும் இலக்கியத் திறனாய்வாளருமான கோல்ரிட்ஜ் ஆவார். உருவம் அல்லது கட்டமைப்பினை அவர் பின்வரும் இரண்டு வகையாகப் பிரித்து விளக்கியுள்ளார்.
அவை, 1. செய்கை அமைப்பு
2. இயற்கை அமைப்பு என்பனவாகும். களி மண்ணில் ஓர் உருவத்தை உண்டாக்குவதற்கு அதனை ஓர் அச்சில் (17௦014) வார்க்கின்றோம். களி மண்ணால் ஆன உருவம் களி மண்ணிலிருந்து வந்தது அன்று, அது ஏற்கனவே அச்சில் உள்ள உருவம் ஆகும். ஆதலால் களி மண்ணின் உருவம் என்பது ஒரு செயற்கை அமைப்பாகும். கோல்ரிட்ஜின் கூற்றுப்படி இயற்கை அமைப்பு செயற்கை அமைப்பிலிருந்து முற்றிலும் மாறுபட்டதாகும். அவர் கவிதை இயற்கை அமைப்பினைக் கொண்டது எனக் கூறுகின்றார். ஏனென்றால் ஒரு கவிதையின் உருவமே அதன் உயிர்
நாடியாகும். அவ்வுருவத்திலிருந்துதான் கவிதை அங்கம் அங்கமாகப் பிறக்கின்றது.
91
ஒரு கவிதையின் உள்ளமைப்பு வெளி அமைப்பு ஒன்றே ஆகும். வெளி அமைப்பு உள்ளமைப்பைப் பிரிதிலிக்கின்றது. மேலும் கோல்ரிட்ஜ் ஒரு நல்ல கவிதையை நன்றாக வளரும் செடிக்கு ஒப்பிடுகின்றார். தன்னகத்தே உள்ள ஒரு சக்தியால் உந்தப்பட்டுச் செடி வளர்வது போலக் கவிதையும் வளர்கின்றது. ஆதலினால் செடியின் அமைப்பினைப் போல், கவிதையும் கற்பனைச் சக்தியின் மூலம் வளர்கின்றது. எனவே கவிதையின் உருவம் அதன் உயிர்ப்பின் ஒருமையே
(Organic Unity) ஆகும்.”
வடிவம் (10110), கட்டமைப்பு (££பயாளண்ற இரண்டு சொற்களையும் அமெரிக்கப் புதுத்திறனாய்வாளர் குழு ஒரே பொருளில் பயன்படுத்திய போதும், 'கட்டமைப்பு' என்ற சொல்லை அவர்கள் மிகுதியும் விரும்பிக் கையாளுகின்றனர். இவர்களின் திறனாய்வுக் கொள்கைப்படி கட்டமைப்பு என்பது ஒரு கவிதையின் வெளி அமைப்பைக் குறிப்பதன்று. ஒரு கவிதையில் பயன்படுத்தப்படும் பலதரப்பட்ட சொற்களும்,உருவங்களும் (108268) முரண்குறிப்பு (௦) மூலமும், முரணுரை (Paradox) மூலமும் ஓர் இழுவிசையினை (121௦0) உண்டாக்கி, அந்த இழுவிசையே கவிதையில் ஒரு சமநிலையை ஏற்படுத்துகின்றது. ஒரு கவிதை கற்பனை நயத்தினாலும், பொருள் மயக்கத்தினாலும் பல பொருள்களைப் பல்வேறு படிநிலைகளில் கொண்டுள்ளது. ஆனால் இந்தப் படிநிலைகள் எல்லாம் ஒன்றுக்கொன்று இணைந்து ஒரு முழு அமைப்பாகவும் தோன்றுவதற்குக் காரணம் இழுவிசை மூலம் ஏற்படும் சமநிலையே ஆகும். ஆகையால், ஒரு: கவிதையில் முழுப்பொருண்மைக்கு (T௦tality of Meaning) இந்தச் சமநிலையே அடிப்படை என்று புதுத்திறனாய்வாளர்கள் கருதுகின்றார்கள்.” மூலப்படிவ (Archetype) இலக்கியத்
திறனாய்வாளர்கள் ஓர் இலக்கிய நூலின் அமைப்பு புராணம், மதச் சடங்கு, கனவு
92
ஆகியனவற்றில் மீண்டும் மீண்டும் தோன்றும் அடிப்படையான மனித அனுபவக்
கூற்றிலிருந்தே வருவதாகக் குறிப்பிடுகின்றனர்.
'வடிவம்' பற்றிய அரிஸ்டாட்டிலின் கருத்திற்குப் புத்துயிர் கொடுத்து அதனை விரிவுபடுத்தியவர் சிக்காக்கோ குழுவின் தலைவரான ஆர்.எஸ்.கிரேன் (R.5,Crane) ல்ல அவர் வடிவம், கட்டமைப்பு இவற்றினிடையேயுள்ள வேறுபாட்டை நுட்பமாக உணர்த்தியுள்ளார். ஒவ்வொரு இலக்கிய நூலும் வாசகர்களிடையே ஒவ்வொரு வித உணர்ச்சியை ஏற்படுத்துகின்றது. இந்த உணர்ச்சி ஆற்றலே அவ்விலக்கிய நூலினை உருவாக்கும் கோட்பாடாகும். உருவம் பற்றிய இக்கோட்பாடு ஒரு இலக்கிய நூலின் அமைப்பைக் கட்டுப்படுத்தி இணைக்கின்றது. அதன் எல்லாப் பகுதிகளையும் இணைத்துச் சீர்படுத்திப் பொருள்படும் வகையில் அமைத்து ஒரு முழுமையான எழில்சேர் படைப்பாகச் செய்கின்றது. இயற்கையோ, செயற்கையோ, வடிவமானது கட்டமைப்பு உடையதாகவோ அல்லது இழையோட்டத்துடனோ (721பா௦) இருக்க வேண்டும். முன்னது, விரிவானது, காரணம் அது புற அமைப்பாகும். பின்னது குறுகியதாகும். அது கலைஞனின் மனநோக்கினால் உருவாகும் அக அமைப்பாகும். கட்டமைப்பு என்பது அதன் அடிப்படைப் பொருளில் ஒரு நூலின் எலும்புக் கூடாகும். இழையோட்டம் என்பது
அதன் அடிப்படைப் பொருளில் எலும்பின் போர்வையாக அமையும் தோல் ஆகும்.
கட்டமைப்பு என்பது 'ஒழுங்குபடுத்துதல்' என்பதால், நூலின் அடக்கத்தைக் காலத்திற்குக் கட்டுப்படும்படி சீர்படுத்துவதையும் அது குறிக்கும். எந்த ஒரு இலக்கியப் படைப்பும் கால, இட, வரம்புகளுக்குக் கட்டுப்பட்டதேயாகும். இலக்கியத்தின் கட்டமைப்புப் பற்றிய இத்தகைய விளக்கங்கள் அமைப்புச் சார்ந்த
அனைத்திற்கும் பொருந்தக் கூடியதாகும்.
93
அமைப்பு ($11001072) அல்லது வடிவம் (Fo) என்பது தனிப்பட்ட ஒன்றல்ல. அது ஒன்றுக்கு மேற்பட்ட பல கூறுகளின் (110618) ஒட்டுமொத்தமாகும். பல கூறுகள் சேர்ந்து செயல்படும் கூட்டு அமைப்பில் ஏதேனும் ஒரு கூறு சரிவர இயங்காமல் போனால் அது ஒட்டுமொத்த அமைப்பையே பாதிக்கும்.” என்றும் வெ.சாமிநாதசர்மா அமைப்பைப் பற்றிய விளக்கத்தினைத் தந்துள்ளார். அமைப்புப் பற்றிப் பல்வேறு அறிஞர்கள் பல்வேறு விளக்கங்களைத் தந்துள்ளனர்.
ஒன்றில் பல உறுப்புக்கள் இருக்கும். அவை தமக்குள் ஒன்றோடொன்று எவ்வாறு முழுமையோடு இணைகின்றன? என்பதே அமைப்பியல் என்பார்
விளாடிமிர் பிராஃப்.
அமைப்பு என்பது ஒரு குறிப்பிட்ட அமைப்பின் இயல்புகளை வெளிக்காட்டுவது என்றும், அது பலவற்றின் சேர்க்கையால் உருவானது என்றும் கிளாடு லெவிஸ்திராஸ் என்னும் அறிஞர் குறிப்பிடுகின்றார்.” சிவகங்கை மாவட்டக் கிராம வழக்கு மன்றங்களின் பஞ்சாயத்து வகைகளும் அவற்றின் அமைப்பு முறைகளும் இந்த அமைப்புப் பற்றிய விதிகளுக்கும் விளக்கங்களுக்கும் உட்பட்டதேயாகும், கீராம வழக்கு மன்றங்களின் பஞ்சாயத்து வகைகள்
கிராம வழக்கு மன்றங்களின் பஞ்சாயத்தைப் பின்வரும் நான்கு வகைகளாகப் பிரித்துக் கொள்ளலாம். அவை,
1. கிராமப் பஞ்சாயத்து
2. ஊர்ப் பஞ்சாயத்து
ல். சாதிப் பஞ்சாயத்து
4, குடும்பப் பஞ்சாயத்து
என்பனவாகும்.
94
1. கிராமப் பஞ்சாயத்து
கிராமப் பஞ்சாயத்து என்பது ஒன்றுக்கும் மேற்பட்ட சிற்றூர்களைக் கொண்டு விளங்கும் கட்டமைப்புடைய ஒன்றாகும். அது கிராமங்கள் ஏற்படுகின்ற ஒட்டு மொத்தமான சிக்கல்களையும் தீர்த்துக் கொள்வதற்காக பல சிற்றூர்களிலும் உள்ள பஞ்சாயத்துக்கள் சேர்ந்து ஏற்படுத்திக் கொள்கின்ற பஞ்சாயத்து அமைப்பு முறையாகும், ஒவ்வொரு தலைக் கிராமத்திலும் ஒன்றுக்கும் மேற்பட்ட சிற்றூர்கள் (குக்கிராமங்கள்) அடங்கியுள்ளன. ஒவ்வொரு கிராமத்திலும் பல்வேறு இனத்தவர்களும் வாழ்ந்து வருகின்றனர். அத்தலைமைக் கிராமத்திலுள்ள அனைத்துச் சிற்றூர்களிலும் ஏற்படுகின்ற அடிப்படையான பொதுச் சிக்கல்களையும் பிரச்சனைகளையும் ஆராய்ந்து தீர்த்து வைக்கும் அமைப்பு முறையே 'கிராம பஞ்சாயத்து' ஆகும், சிவகங்கை மாவட்டத்தில் பெரும்பான்மையான கிராமங்களில்
கிராமப் பஞ்சாயத்து அமைப்பு முறையே பிரதானமாகக் காணப்படுகின்றன.
கிராமப் பஞ்சாயத்து அமைப்பில் அக்கிராமத்திற்குச் சொந்தமான அனைத்துச் சிற்றூர்களிலும் வாழும் அனைத்துச் சாதியைச் சேர்ந்தவர்களும் பங்கேற்கும் ஒரு முறையினைக் காணமுடிகின்றது. இந்த அமைப்பு முறையில் சிற்றூர்களிலுள்ள அனைத்துச் சாதித் தலைவர்களுக்கும் பெரியவர்களுக்கும் சமமான முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றன. அவர்கள் கிராமப் பஞ்சாயத்து அமைப்பு முறையில்
பங்கேற்றுத் தங்களுடைய கருத்துக்களைப் பரிமாற்றம் செய்து கொள்கின்றனர்.
இந்த அமைப்பில் கிராமத்திலுள்ள ஒட்டுமொத்தமான சிக்கல்களும் விவாதிக்கப்படுகின்றன. கிராமங்களுக்கிடையே நீர் பங்கீடு, உறவு, சாதிச் சிக்கல்கள், வாக்குச் சாவடி அமைத்தல், ஊராட்சி மன்றத் தலைவரைத் தேர்வு செய்தல், கிராமத்திற்குக் குடிநீர்த் தொட்டி அமைத்தல், ஊராட்சி மன்றக் கட்டிடம் கட்டுதல், பொது நூலகம் அமைத்தல், தொலைக்காட்சிப் பெட்டி வைக்க ஏற்பாடு
செய்தல், கிராமத்திற்குச் சாலை வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தல், கோயில்
95
திருவிழாக்களை நடத்துதல், சிறுதொழில் கூடங்களை அமைத்தல், மின்சார வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தல் முதலான பொதுப் பிரச்சனைகள் கிராமப் பஞ்சாயத்து அமைப்பு முறையில் விவாதிக்கப்படுகின்றன.
கிராமப் பஞ்சாயத்து அமைப்பு முறையில் அனைத்துச் சிற்றூர்களிலும் வாழும் மக்கள் கலந்து கொள்வதால் இது ஒரு பெரிய பஞ்சாயத்து அமைப்பு முறையாகக் கருதப்படுகின்றது. பெரிய அளவிலான விவாதங்களும் சர்ச்சைகளும் ஏற்படக் கூடிய வாய்ப்பும் உள்ளது. பெரும்பாலும் கிராமப் பஞ்சாயத்து அமைப்பு பகல் நேரங்களிலேயே கூடுகின்றது. அனைத்து ஊர்களுக்கும் பொதுவான இடமாகிய ஊராட்சி மன்ற அலுவலங்களின் முன்பாகவோ அல்லது மந்தைத் திடல்களின்
முன்பாகவோ கோயில் அல்லது வேறு ஒரு பொதுவான இடத்திலேயோ கூடும்.
கிராமப் பஞ்சாயத்து அமைப்பு
கிராம அனைத்துச் சாதிப் பஞ்சாயத்து அமைப்புத் தலைவர்கள்
| | ்
பெரியவர்கள் காலாடி வாரியன் அல்லது ஒடும்பிள்ளை வாதி பிரதிவாதி பொதுமக்கள்
கிராமப்பஞ்சாயத்து அமைப்பு முறையின் எல்லைக்கு உட்பட்ட அனைத்துச் சிற்றூர்களிலும் வாழும் அனைத்துச் சாதிப் பொது மக்களும் இதன் தீர்ப்புகளுக்குக் கட்டுப்பட்டவர்கள் ஆவர். இது பொதுநலனைக் கருத்தில் கொண்டே செயல்பட்டு
வருகின்றது.
96
2. ஊர்ப் பஞ்சாயத்து
ஊர்ப் பஞ்சாயத்து என்பது அனைத்துச் சாதிகளைச் சார்ந்த மக்கள் வாழும் ஓர் ஊரில் ஏற்படும் ஒட்டுமொத்தமான சிக்கல்களையும், அவ் ஊரில் வாழும் பெரியவர்களும் முக்கியத் தலைவர்களும் ஒன்றுகூடி இணைந்து விவாதித்துத் தீர்ப்புக்களை வழங்கும் அமைப்பு முறையாகும்.
ஒவ்வொரு ஊரிலும் ஒன்றுக்கு மேற்பட்ட சாதிகளைச் சார்ந்த மக்கள் வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் அனைவருக்கும் சேர்த்து ஏற்படுத்தப்படுகின்ற பஞ்சாயத்து அமைப்பு முறையே 'ஊர்ப்பஞ்சாயத்து' என அழைக்கப்படுகின்றது. இதில் ஊரிலுள்ள அனைத்துச் சாதியைச் சேர்ந்த தலைவர்களும், பெரியவர்களும், பொது மக்களும், பங்கு கொள்கின்றனர். ஊர்ப் பொதுப் பிரச்சனைகள் விவாதிக்கப்படுகின்றன. இம்முறையில் சாதிகள் மேலாதிக்கம் செலுத்துகின்றன. சாதிக்கலவரங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதால் பங்கேற்கும் அனைவரும் விழிப்புணர்வுடனும் முன்னெச்சரிக்கையுடனும் செயல்பட்டு வருகின்றனர்.
ஊருக்குப் பொதுவான கோயில் அல்லது அனைத்துச் சாதியினருக்கும் பொதுவான இடமாகப் பார்த்துப் பஞ்சாயத்தைக் கூட்டுகின்றனர். சிவகங்கை மாவட்டக் கிராமங்களிலுள்ள ஊர்களில் இது நாள் வரையில் பெரும்பாலும் ஊர்ப் பஞ்சாயத்துக் கூட்டங்கள் மேல்சாதிக்காரர்களுக்குச் சொந்தமான இடங்களிலேயே நடைபெற்று வருகின்றன. தாழ்த்தப்பட்டவர்கள் வாழும் இடங்களில் பெரும்பாலும் நடைபெறுவதில்லை. இரவு நேரங்களைக் காட்டிலும் பகல் நேரங்களிலேயே அதிகமாக நடைபெற்று வருகின்றன. தீர்ப்புகள் அனைத்துச் சாதித் தலைவர்களால் ஒரு மனதாகக் கூடி இணைந்து நன்கு விவாதிக்கப்பட்டுத் தீர்மானிக்கப்படுகின்றன. தீர்ப்புகளுக்கு ஊரின் அனைத்துச் சாதிகளைச் சேர்ந்த மக்களும் கட்டுப்பட்டவர்கள்
ஆவர்,
97
ஊர்ப் பஞ்சாயத்து அமைப்பு
அனைத்துச் சாதிக் தலைவர்கள்
i: பண்ட வாரியன் அல்லது
(பெரியவர்கள்) ஒடும்பிள்ளை
வாதி பிரதிவாதி
மட்ட 4 த்க் தல
8. சாதிப் பஞ்சாயத்து
கிராமங்களிலுள்ள ஒவ்வொரு ஊரிலும் குறிப்பிட்ட ஒவ்வொரு சாதியினரும் தங்களுக்குள் ஏற்படுகின்ற சிக்கல்களைத் தீர்த்துக் கொள்வதற்காகத் தங்கள் சாதிக்குள்ளேயே ஏற்படுத்திக் கொள்கின்ற அமைப்பு முறையாகும்.
ஊர்களில் வாழும் ஒன்றுக்கும் மேற்பட்ட சாதிகளைச் சேர்ந்தவர்களும் தங்களுக்குள் ஏற்படுகின்ற பல்வேறு சிக்கல்களைத் தீர்த்துக் கொள்வதற்காகவும், சாதிகளின் நன்மைகளைப் பேணுவதற்காகவும் தங்கள் தங்கள் சாதிகளுக்குள்ளேயே ஏற்படுத்திக் கொண்டிருக்கும் பஞ்சாயத்து அமைப்பு முறையே சாதிப்பஞ்சாயத்து அமைப்பு முறையாகும்.
சாதியம்
இந்தியாவில் சாதியென்பது சமயத் தொடர்பானது. அது நாடு முழுவதும் தன் ஆதிக்கத்தை நிலைநாட்டி வந்துள்ளது. சாதி, ஒவ்வொருவருக்கும் உரிய 'தர்மம்' என்றும் அது சமயத்தோடும் கர்ம வினையோடும் இரண்டறக் கலந்து
கிடக்கின்றது என்றும் நெடுங்காலமாக மக்களால் நம்பப்பட்டு வருகின்றது.
98
இறைவனால் படைக்கப்பட்டதாகக் கூறப்படும் நான்கு வர்ணாசிரமங்களே சாதிப்பிரிவுகளுக்கு அடிப்படை என்றும் 'புருஷார்த்தம்' கூறுகின்றது.” இந்தியாவில் நடைபெறும் மரபுத் திருமணங்கள் சாதியின் அழுத்தத்தைப் புலப்படுத்துகின்றன.? இந்தியச் சமுதாயத்தில் தங்களுக்குள் கொள்வினை, கொடுப்பினைகளை ஏற்படுத்திக் கொள்ளும் அமைப்பே சாதியாகும். ஒரு குழு மற்றொரு குழுவிலிருந்து மாறுபட்டுத் தனக்கென்று சில தனித்த பின்னணிகளைக் கொண்டு இயங்குகின்றது." இக்கூற்று சாதியை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் கிராமச் சமுதாய அமைப்பிற்கும் ஏற்புடையதாகும்.
'சாதி' என்ற சொல்லுக்கு 'குலம்' என்றும் Caste, class, 1806 என்றும், Attribute common to a class ஓரினப் பொருள்களின் பொதுவாகிய தன்மை என்றும், சாதியரும்
2
பந்துக்களும் Fellow members of a caste relatives” என்றும் தமிழ் அகராதி விளக்கம்
கூறுகின்றது. 'சாதி' பொதுமக்களின் ஆன்மாவைக் கொல்கின்றது. அது சமுதாயத்தில் பிறரிடம் காட்டும் அன்பையும் கருணையையும் அழிக்கின்றது. பொது மக்களின் ஒருமித்த கருத்து வெளிப்பாட்டிற்கும் ஒற்றுமையுணர்ச்சிக்கும் தடைக்கல்லாக நிற்கின்றது. இந்தியச் சமுதாயத்தின் அனைத்துக் கூறுகளும் சாதியை அடிப்படையாகக் கொண்டு திகழ்கின்றன. இந்துக்களின் வாழ்க்கை நம்பிக்கைகள் அவர்களது சாதியுணர்வின் அடிப்படையில் நிர்ணயிக்கப்படுகின்றன. மனித வாழ்க்கையின் உயீரிய கூறுகளான சீரிய பண்பு, நல்லொழுக்கம் ஆகிய * அனைத்தும் சாதி அபிமானத்துடன் பிணைக்கப்பட்டுள்ளன. என சாதியத்தால் ஏற்படும் சிக்கலைச் சுட்டிக்காட்டியுள்ளார் அம்பேத்கார்.
சாதி பிறப்படிப்படையான செயற்கைச் சமுதாயம் பிரிவு தனி வாழ்வுடைய வகுப்பு என்று தமிழ்- ஆங்கில அகராதி விளக்கம் கூறுகின்றது. இக்கருத்திணை
உறுதிப்படுத்தும் வகையில், ''உபநிஷத்துக் காலமுதற் கொண்டு இதுவரையில்
99
எங்களுடைய சமயச்சாரிகள் சாதிச் சுவர்களை இடித்துத் தள்ள விரும்பி இருக்கின்றார்கள். அவர்கள் தகர்க்கப் பார்த்தது ஆதியில் ஏற்பட்ட வர்ணாச்சிரமம் அன்று அவர்கள் அகற்ற விளைந்தது அழுகிக் கெட்டுப்போன ஒன்றே". என்று விவேகானந்தர் கருத்துரைத்துள்ளார். அவர் இந்து சமயத்தின் ஆணிவேராகக் கருதப்படும் வர்ணாச்சிரமம் தர்மத்தைக் குலைத்துவிடாமல் சாதியைப் போக்க விரும்பினர்.
எதையும் காரணகாரிய அடிப்படையில் எண்ணிப் பார்க்காமல் பரம்பரையாகச் சொல்லப்பட்டு வந்த கருத்துக்களை அவ்வாறே ஏற்றுக் கொள்வது நம்பிக்கையாகும். இதுவே எல்லா மதத்திற்கும் அடிப்படையாகும். இந்தியாவில் சமயத்தில் பிரிக்க முடியாத கூறாகச் சாதி இடம் பெற்றுள்ளது. இந்தியாவில் மூவாயிரத்திற்கும் மேற்பட்ட சாதிப்பிரிவுகள் உள்ளன! இத்தகைய சாதியை அடிப்படையாகக் கொண்ட கிராமங்களில் சாதிப் பஞ்சாயத்து அமைப்பு முறையே பெரிதும் வழக்கில் காணப்படுகின்றது.
சாதிப்பஞ்சாயத்து அமைப்பு முறையில் ஒரே சாதிக்குள் வரும் பிரச்சனைகளை விவாதித்துத் தீர்ப்புக்களை வழங்கி வருகின்றனர். சில ஊர்களில் வெவ்வேறு சாதிகளைச் சார்ந்த குடும்பங்களிலேயே ஏற்படக்கூடிய சிக்கல்களாக இருந்தாலும் சாதிப்பஞ்சாயத்து அமைப்புக் கூடி விவாதிக்கின்றது. இப்பஞ்சாயத்து அமைப்பிற்கு முக்கியமாக அந்தந்தச் சாதிகளைச் சார்ந்த அனுபவம் மிக்க மூத்தவர்கள் தலைவர்களாக இருக்கின்றனர். கலந்து கொள்ளும் சாதிக்காரர்கள் "பஞ்சாயத்து தலைவர்' என்றும் 'உறுப்பினர்கள்' என்றும், 'வாரியன்' என்றும் அழைக்கின்றனர்.
பள்ளர் இனத்தில் பஞ்சாயத்துத் தலைவர் 'குடும்பன்' என்றும் 'காலாடி'
எனவும் அழைக்கப்படுகின்றனர். கள்ளர், தேவர், மறவர், அகமுடையர், கோனார்,
100
வெள்ளாளர், போன்ற சாதிய இனங்களில் பஞ்சாயத்துத் தலைவர் 'அம்பலம்' என்றும் 'பெரிய அம்பலக்காரர்' என்றும், 'நாட்டமைக்காரர்' என்றும் அழைக்கப்பட்டுவருகின்றனர். இப்பட்டம் ஒரு சாதியைச் சேர்ந்த ஒரு குடும்பத்திற்குப் பரம்பரை பரம்பரையாகத் தொடர்ந்து வரக்கூடிய மரியாதைப் பதவியாகும். இந்தப் பதவியில் இருந்து தீர்ப்புகளைச் சொல்லும் இவர்களுக்கு ஊதியம் கிடையாது. இந்தப் பதவி அந்தந்தச் சாதிக்காரர்களாகப் பார்த்துத் தரக்கூடிய ஒரு மரியாதை நியமனப் பதவியாகும். இதனைப் போன்றே உள்ளூர்க் கோயில்களில் பூசாரிகளாக விளங்குபவர்கள் 'ஊர்ப் பூசாரிகள்' என்றும், பிள்ளையார், அய்யனர், கோயில்களில் பூசாரிகளாக இருப்பவர்கள் 'பண்டாரம்' என்றும் அழைக்கப்பட்டு வருகின்றனர். இதுவும் ஊர் மக்களாகப் பார்த்துத் தரக்கூடிய பதவியே ஆகும்.
சாதிப்பஞ்சாயத்து அமைப்பு முறையில் 'ஒடும்பிள்ளை' அல்லது 'வாரியன்' என்னும் பதவி கிராமத்தின் சாதிக்காரர்கள் அனைவரும் சேர்ந்து தாழ்த்தப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்த ஒரு நபருக்குக் கொடுக்கக் கூடிய பதவியாகும். கிராமங்களில் பறையர் இனத்தைச் சார்ந்தவர்கள் இப்பதவியைப் பரம்பரையாகப் பெற்று வருகின்றனர். சில கிராமங்களில் ஐடும்பிள்ளையைத் 'தோட்டி' எனவும் அழைக்கின்றனர். சில கிராமங்களில் தாழ்த்தப்பட்ட சாதியினரான பொதர வண்ணான் இனத்தவர்களும் இப்பதவியை அனுபவித்து வருகின்றனர். இவருடைய வேலை ஊரைச் சாட்டுவதாகும். 'ஊரைச் சாட்டுவது' என்பது வாதி, பிரதிவாதி ஆகிய இவர்களது பெயர்களையும் குறிப்பிட்டு இன்றைக்கு இன்ன இடத்தில் இவர்களது வழக்குத் தொடர்பான பஞ்சாயத்துக் கூட்டம் நடைபெறும். அனைவரும்
கூட்டத்திற்கு வருக என்று தெருத்தெருவாகச் சென்று தெரியப்படுத்துவதாகும்.
101
இச்செய்தியைச் சில கிராமங்களில் பறையடித்தும், சில கிராமங்களில் வாயாலே
சத்தம் போட்டும் தெரியப்படுத்தி வருகின்றனர்.
'ஒடும்பிள்ளை'இதனைத் தவிர பருவப்பெண்கள் யாராவது பூப்படைந்தாலும், பெண்களுக்குப் பரிசம் போடுதல், ஊர்த் திருவிழா போன்ற சுபகாரியங்களையும், இறப்பு, இழவு, கருமாதி போன்ற துக்கச் செய்திகளையும் ஊர்மக்களுக்கு அறிவிக்கின்றார். இந்தச் செய்திகளை இரவு 6.30 மணிக்கு மேல் தெரிவிக்கின்றார். இச்செய்திகளைக் கேட்டு ஊர்ப்பொதுமக்களும் பெரியவர்களும் இரவு உணவு முடித்த பின்னர் 9.00 மணிக்கு மேல் ஊர்ப்பொதுவிடத்தில் கூடுகின்றனர். ஓடும்பிள்ளை கூட்டத்திற்கு வராத பெரியவர்களையும் மற்றும் முக்கியப் புள்ளிகளையும் அவரவர்கள் வீட்டிற்குத் தனித்தனியே சென்று கூட்டம் நடக்கும் இடத்திற்குக் கூட்டிக்கொண்டு வர வேண்டும். ஓடும்பிள்ளை கூட்டம் முடியும்வரை நின்றுகொண்டே இருக்க வேண்டும். சில கிராமங்களில் ஓடும்பிள்ளை இருவராகக் கூட இருப்பர். ஓடும்பிள்ளையானவர் வாதி மற்றும் பிரதிவாதிகளுக்குத் தலைவர் இடும் கட்டளையை நிறைவேற்றுமாறு சொல்லுகின்றார். வாதியும் பிரதிவாதியும் கூட்டத்தில் முறி வைப்பது (நடுவுப்பணம் அல்லது மண்டுப்பணம்) மேலாடையைக் களையச் சொல்வது, கிராம வழக்கு மன்றச் சபையாரைக் கும்பிட்டு விழுந்து வணங்கச் சொல்வது ஆகிய வேலைகளையும் ஓடும்பிள்ளையே நிறைவேற்றச் சொல்லுகின்றார். சில வேளைகளில் ஒரே சாதியைச் சேர்ந்த வெல்வேறு ஊரைச் சேர்ந்தவர்களானால் இரண்டு ஊரிலுள்ள முக்கியச் சாதித் தலைவர்களும், பெரியவர்களும், ஊர்ப் பொது மக்களும் கலந்து கொள்கின்றார்கள்.
சாதிப்பஞ்சாயத்து அமைப்பிற்கு வரக்கூடிய வழக்குகள் பெரும்பாலும் குடும்பச் சிக்கல்கள், கணவன்-மனைவி மணவிலக்கு, பாகப்பிரிவினைச் சிக்கல்கள், பெண்ணை ஏமாற்றிக் காதலித்துத் திருமணம் செய்து கொள்ள மறுத்தல், சாதிப் பொதுக் காரியங்களான குலதெய்வத்தைக் கும்பிடுதல், கோயிலைப் புதுப்பித்தல்,
102
ஊருக்குப் பொதுவிடமாகிய மந்தை கட்டுதல், இட ஒதுக்கீடு, நீர்ப்பங்கீடு, சாதி நன்மைக்காக அரசாங்கத்தை அணுகுதல், திருட்டு வழக்குப் போன்ற வழக்குகள்
விவாதிக்கப்பட்டு வருகின்றன.
சாதிப்பஞ்சாயத்து சாதித்தலைவர் காலாடி வாரியன் அல்லது ஓடும்பிள்ளை வாதி பிரதிவாதி
ட. அ கண்டித்த
மேற்கூறப்பட்ட அமைப்பு சாதிப்பஞ்சாயத்து அமைப்பு முறையில் எல்லாச் சாதிகளுக்கும் பொதுவாகக் காணப்படுகின்றது. 3. குடும்பப் பஞ்சாயத்து
குடும்பப் பஞ்சாயத்து அமைப்பு முறை என்பது குடும்பத்தினர் அனுபவமும் அறிவும் முதிர்ந்த மூத்த குடும்பத் தலைவரைக் கொண்டு, குடும்பத்தில் ஏற்படுகின்ற சிறு சிறு பிரச்சனைகளையும் தகராறுகளையும் தீர்த்து வைக்கும் பஞ்சாயத்து அமைப்பு முறையாகும். சிவகங்கை மாவட்டத்திலுள்ள கிராமங்களில் இத்தகைய குடும்பப் பஞ்சாயத்து அமைப்பு முறையைக் காண முடிகிறது. குழு' என்ற சொல்லிலிருந்தே 'குடும்பம்' என்ற சொல்லாட்சி உருவாகியிருக்க வேண்டும். 'குடும்பம்' என்ற சொல்லுக்கு உறவு, ஒருகுடியில் உள்ளார், மனைவி, வீடு, சமுசாரம், உறவினர், குலம், குடி, இனத்தார், ஒரு
குடிசையிலுள்ளோர் என்று அகராதிகள் பொருளுரைக்கின்றன.” குடும்பமாவது
103
ஒருவனைச் சூழ்ந்த அகச்சுற்றம் என்றும் குலம் என்பது புறச்சுற்றம் என்றும் நுட்பமான உரைவேறுபாடும் சுட்டிக் காட்டப்படுகின்றது.” சங்ககாலத்தில் 'குடி' என்ற சொல்லே 'குடும்பம்' என்ற பொருளில் கையாளப்பட்டுள்ளது.” முதன் முதலில் திருக்குறளில் குடும்பம் என்ற சொல் ஓரிடத்தில் பயின்று வந்திருப்பினும்” 'குடி' என்ற சொல்லே திருக்குறளில் மிகுதியான இடங்களில் பயின்று வந்திருக்கின்றது. திருக்குறள் காலத்திற்குப் பின்னர்தான் 'குடும்பம்' என்ற சொல் செல்வாக்குப் பெற்றது எனக் கருதலாம்,
நடைமுறை வாழ்க்கையில் ஒரு வீட்டில் வாழ்ந்துவரும் இரத்த உறவுடைய உறவினர்கள் அனைவரையும் குறிக்கக் 'குடும்பம்' என்ற சொல் பயன்படுத்தப்படுகின்றது. 'ஒரு வாழ்விடத்தில் ஒருவனைச் சார்ந்து வாழும் அகச்சுற்றம்' என்று இச்சொல்லுக்குப் பொருள் விளக்கம் தருவது பொருத்தமுடையதாகும்.
"குடும்பம் என்பது இயக்கமுள்ள சித்தாந்தத்தையே குறிக்கின்றது. அது என்றைக்கும் இயங்காதிருப்பதில்லை. சமுதாயம் கீழ் நிலையிலிருந்து மேல்நிலைக்கு முன்னேற முன்னேற அதுவும் கீழான நிலையிலிருந்து மேலான வடிவத்திற்கு முன்னேறிச் செல்கின்றது.” என்பார் எங்கெல்ஸ்.
"வரலாற்றுக் காலத்தில் குடும்பம் அடைந்துள்ள பரிமாண வளர்ச்சி இருபாலருக்கிடையே பொதுமணம் நிலவிய வட்டம் இடையறாது குறுக்கிக் கொண்டே வந்ததில்தான் அடங்கியிருக்கிறது. ஆரம்பத்தில் குலம் முழுவதுமே இவ்வட்டத்திற்குள் இருந்தது. முதலில் நெருங்கின உறவனர்களையும் பிறகு மேலும் மேலும் தூரமான உறவினர்களையும் ஒருவர் பின் ஒருவராக விலக்கி வைத்தும்
குழுமணத்தின் ஒவ்வொரு வடிவமும் நடைமுறையில் சாத்தியமற்றுப் போகும்படிச்
104
செய்யப்பட்டது. முடிவில் எஞ்சியது ஒரேயொரு தாம்பத்ய ஜோடிதான்'?? என்று வரலாற்று அடிப்படையில் குடும்பங்களின் வளர்ச்சி நிலைகளை விளக்கிச் செல்கின்றனர்.
“குடும்பம் என்பது ஒரே இரத்த உறவுடைய திருமணத்தால் கட்டுப்பட்டமாந்தர் குழுவாகும்". அவர்கள் ஒரே வீட்டில் வாழ்பவராக இருப்பர். ஒத்த செயலுடையவராக இருப்பர். சமுதாயத்தில் கணவன், மனைவி, தாய், தந்தை, மகன், மகள், உடன்பிறந்தவர்கள் என்ற உறவுடனும் பொதுவான பண்பாட்டுடனும் வாழ்வர்“ என்பர் ச. சண்முக சுந்தரம். தமிழ் இலக்கியங்கள் குடும்பத்தைக் குடி, குலம், குலன் என்ற சொற்களால் குறிப்பிடுகின்றன. கூடி வாழ்வதால் 'குடும்பம்'
* எனலாம்.
என்ற சொல் பிறந்தது.”
'குடும்பம்' என்ற சொல்லுக்கு House hold, family including husband, wife and சேரா என்று தமிழ்ப் பேரகராதி விளக்கம் அளிக்கின்றது” ஆளுமையை அடிப்படையாகக் கொண்டு குடும்பங்களைத் தாய்வழிக்குடும்பம் (Matrilineat) தந்தைவழிக் குடும்பம் (1111௦6) என இரண்டாகப் பிரிக்கலாம். தமிழகத்தில் குறிப்பாகச் சிவகங்கை மாவட்டக் கிராமங்களில் தந்ைத வழிக் குடும்பங்களே காணப்படுகின்றன.
குடும்ப அமைப்புக்களைப் பற்றி ஆராய்ச்சி செய்யும் ஆய்வாளர்கள் தத்தம் ஆய்வுக் களத்தின் தன்மைகளுக்கேற்பத் தனிக்குடும்பம் (Nuclear family), இணைக் குடும்பம் (Compound family), கூட்டுக் குடும்பம்( 1௦04 fil), விரிவாக்கக் குடும்பம் (Extended family) எனக் குடும்பத்தின் வகைப்பாடுகளைக் கூட்டியும் குறைத்தும்
தந்துள்ளனர்.”
105
கூட்டுக்குடும்பம்
"ஓரே மரபு வழிச் சார்ந்த இரத்த உறவுடைய (Lineally related kinsotk) இருவரோ அல்லது அதற்கு மேற்பட்டவர்களோ ஒரே வீட்டில் ஒரே தலைமையின் கீழ் தங்கள் மனைவியர்களுடனும் குழந்தைகளுடனும் கூடி வாழ்தலையே கூட்டுக்
குடும்பம் ?
என்பர். ஒருவன் தன் மனைவியுடனும் மணமான மகன்கள், அவர்தம் மனைவியர், அவர்தம் குழந்தைகள் ஆகியோருடனும் ஒரே வீட்டில் ஒன்றாக நீண்டகாலம் வாழ்ந்து வருதலை இத்தகைய கூட்டுக் குடும்பத்திற்குச் சான்றாகக் கொள்ளலாம். கிராமங்களில் பல தலைமுறைகளைச் சேர்ந்த முப்பது நாற்பது பேர் ஒரே வீட்டில் கூட்டாக வாழ்ந்து வருவதும் உண்டு, இத்தகைய குடும்ப அமைப்பைத் 'தந்தை வழிக்குடும்பச் சமூகம்' என்றழைக்கின்றனர். தமிழகத்தில் பல தலை முறைகள் சேர்ந்து வாழும் 'குடும்பச் சமூகங்கள் மிக மிக அருகிய நிலையிலேயே காணப்படுகின்றனர். குடும்பச் சமூகங்களைப் பெரிய கூட்டுக் குடும்பங்கள்' என்று கொண்டால் தமிழகக் கிராமங்களில் மிகுதியாகக் காணப்படும் கூட்டுக் குடும்பங்களைச் 'சிறிய கூட்டுக் குடும்பங்கள்' என்று கொள்ளலாம். இத்தகைய கூட்டுக் குடும்ப அமைப்பில் தாய், தந்ைத, மணமான, மணமாகாத மகள்கள், மகன்கள், பேரப்பிள்ளைகள் போன்றோர் வாழ்ந்து வருகின்றனர். தனிக்குடும்பம்
குடும்பத்தின் மூலக்கூறுகளான கணவன், மனைவி, ஆகிய இருவரோடு அவர் தம் பிள்ளைகளைக் கொண்ட குடுபத்தைத் தனிக் குடும்பம் என்று அழைக்கலாம்.” கூட்டுக் குடும்பத்தின் சிதைவில் தனிக்குடும்பம் தோன்றுகின்றது. இக்குடும்பத்திலுள்ள ஆண் குழந்தைகள் வளர்ந்து அவர்கள் மணந்து கொள்ளும்
வரை தனிக்குடும்பம் நிலைக்கின்றது. அவர்கள் மணந்து கொண்ட பின் கூட்டுக்
106
குடும்பம் உருவாகின்றது. அக்குடும்ப அமைப்பில் பூசல்கள் ஏற்பட்டு மீண்டும் தனிக்குடும்பம் தோன்றுகிறது. இவ்வாறு மாறி மாறி கூட்டுக் குடும்ப அமைப்பும் பின்னர் தனிக்குடும்ப அமைப்பும் தமிழகக் கிராமங்களில் நடைபெற்று வருகின்றன.
கூட்டுக் குடும்பம் பொருளாதார மேம்பாடுடையவர்களிடமும் தனிக்குடும்பம் உடைமையற்ற எளிய மக்களிடமும் மிகுதியாகக் காணப்படுகின்றன. குடும்பத்திலுள்ள இளைய உறுப்பினர்கள் வளர்ந்து உழைக்கும் தகுதியைப் பெறும் வரை அல்லது அனைவர்க்கும் மணமாகும்வரை இத்தகைய கூட்டுக் குடும்பங்கள் சிதைந்து விடாமல் தடுக்கக் குடும்ப மூத்த உறுப்பினர்கள் முயல்வர். இம்முயற்சியின் விளைவால் போராட்டப் பூசல்களோடு பல கூட்டுக் குடும்பங்கள் உடையாமல் நிலைத்திருத்தலைக் காணலாம். குடும்பத்தின் பொதுக் கடமைகள் நிறைவேறும் வரை மட்டுமே இது சாத்தியக் கூறாகும். அதற்கு மேல் கூட்டுக் கும்ம்பங்கள் உடைவதைப் பற்றிக் குடும்ப உறுப்பினர்கள் யாரும் வருத்தப்படுவதில்லை. ஏனெனில் கூட்டாக வாழ்வதிலுள்ள நடைமுறைச் சிக்கல்களை உணர்ந்துள்ளனர். கூட்டுக்குடும்பங்கள் ஒற்றுமையாகச் சிதையாமல் இருப்பது சிரமமிக்கது. என்ற பொருளில் தான்' கூடிக்குடியிருந்துபார், கூட்டுப்பயிர் இட்டுப்பார், என வழங்கும் பழமொழியும் தோன்றியுள்ளது எனலாம். இவ்வாறு கூட்டுக் குடும்பங்கள் சிதைந்து தனிப்பட்ட குடும்பங்களை நோக்கிச் செல்லும் நிலை, சமுதாயத்தில் மிகுதியாகக் காணப்படுவதால் தான் கூட்டுக் குடும்ப நன்மையையும் அவசியத்தையும் உணர்ந்து 'கூடிவாழ்ந்ததால் கோடி நன்மை' போன்ற பழமொழிகளும் தோன்றின.
குடும்பத்தில் ஏற்படுகின்ற சிறு சிறு பிரச்சனைகளையும் தகராறுகளையும் குடும்பப் பஞ்சாயத்து அமைப்பு முறை தீர்த்து வைக்கும். ஒரே சாதியைச் சேர்ந்த பெண்ணைக் கூட்டிக் கொண்டு உடன்போக்குத் திருமணம் செய்து கொள்ளல்,
பெண்ணின் திருமணத்தை முறைமாமன் தடுத்தல், காதலித்த பெண்ணைத் திருமணம்
107
செய்து கொள்ள மறுத்தல், கணவன் மனைவி குடும்பத் தகராறு, பிரிந்து வாழ்தல், கணவன், மனைவி நடத்தை ஒழுகலாறுகளில் ஐயுறவு கொள்ளல், கணவன் குடித்துவிட்டு வந்து தன் மனைவியைக் கொடுமைப்படுத்துதல், மாமியார் மருமகளைக் கொடுமைப்படுத்துதல், திருமணத்திற்குப் பின்னர் கணவன்- மனைவியிடம் வரதட்சிணை கேட்டல், தகாத பாலுறவுச் சிக்கல், குடும்பப் பெண் நடத்தை கெட்டவளாக இருத்தல், கணவன் மற்றொரு பெண்ணுடன் தொடர்பு வைத்திருத்தல், மணமுறிவு வேண்டல், அண்ணன்-தம்பி பிரச்சனை, தந்தை-மகன் பிரச்சனை, பாகப்பிரிவினைத் தகராறு, சொத்துப்பிரச்சனை, வரப்புச் சண்டை, நீர்ப்பாய்ச்சுதலில் ஏற்படும் தகராறு போன்ற சிறுசிறு பிரச்சனைகளைத் தீர்த்து
வைக்கும் அமைப்பு குடும்பப் பஞ்சாயத்து அமைப்பு முறையாகும்.
குடும்பப் பஞ்சாயத்து அமைப்பு ஒரு மிகச் சிறிய அமைப்பாகும். இது சிற்றூர்ப் பஞ்சாயத்தின் அடிப்படை அமைப்பாகும், தலைவராக வயதிலும் அனுபவத்திலும் முதிர்ந்த அந்த வீட்டிற்குப் பெரியவர் ஒருவர் இருக்கின்றார். வயதிலும் அனுபவத்திலும் முதிர்ச்சிபெற்றவர் என்ற காரணத்தினாலும் அந்தக் குடும்பத்தைப் பற்றி நன்றாகவும் குறிப்பாகவும் அறிந்தவர் என்ற காரணத்தினாலும் அவர்தான் முக்கியமானவராகக் கருதப்படுகின்றார். அந்த வீட்டிற்குப் பக்கத்து வீடுகளில் வாழும் இரண்டு மூன்று குடும்பங்களின் பெரியவர்களும், மேலும் அக்குடும்பத்துடன் அதிக நட்புகொண்ட வேறு வேறு சாதிகளைச் சேர்ந்த குடும்பத்தலைவர்களும் பங்கு கொள்கின்றனர். முழுக்க முழுக்க இரண்டு மூன்று
பெரியவர்களைக் கொண்ட சிறிய அமைப்பாகவே அமைகின்றது.
குடும்பப் பஞ்சாயத்து அமைப்பு முறையில் வாதி, பிரதிவாதி, ஆகியோரும் இடம்பெறுவர். தண்டனைகள் நிலையாக இராது. முழுக்க முழுக்கக் குடும்பப் பெரியவர்கள் வழக்கினை விவாதித்துத் தீர்த்து வைக்கின்றனர். முழு அதிகாரம்
அக்குடும்பத்தைச் சேர்ந்த பெரியவருக்கே உண்டு. பொதுவாகத் தாழ்த்தப்
108
பட்டவர்கள் குடும்ப பஞ்சாயத்துக்களில் வேறு சாதிக்காராகள் யாரும் பங்கு கொள்வது கிடையாது. சில நேரங்களில் நட்பின் காரணமாகவும், உயர்ந்த
சாதிக்காரன் என்ற அடிப்படையிலும் மேல்சாதிக்காரர்கள் பங்கேற்பதுண்டு,
மேல்சாதிக்காரர்களுக்குள் குடும்ப பஞ்சாயத்து வழக்குகள் நடைபெறும்போது தாழ்த்தப்பட்டவர்களை அவர்கள் அனுமதிப்பதில்லை. குடும்பப் பிரச்சனைகளை அவர்கள் சாதிக்காரர்களுக்குள்ளேயே பேசி முடிவெடுத்துக் கொள்கின்றார்கள். குடும்பப் பஞ்சாயத்துக்கள் பெரும்பாலும் மந்தைதிடல், ஊர்ப்பொதுவிடம், கிராம வழக்கு மன்றங்களில் நடைபெறுவதில்லை, வீடு, திண்ணை என்ற அளவிலேயே இருக்கும்.
குடும்பப் பஞ்சாயத்து அமைப்பு முறையில் குடும்ப ஒற்றுமை சிதையாமல் பேணிக்காக்கப்படுகின்றது. குடும்ப உறுப்பினர்களுக்கிடையே ஏற்படும் சிறு சிறு பிரச்சனைகள், நெருடல்கள், மணவருத்தங்கள், கூட எளிதாகவும் அமைதியாகவும் தீர்த்து வைக்கப்படுகின்றன. குறிப்பாகக் குடும்பச் சண்டை காரணமாகப் பிரிந்து
வாழும் கணவன் மனைவியரைச் சேர்த்து வைக்கின்றது.
குடும்பப் பஞ்சாயத்து அமைப்பு
குடும்பத் தலைவர்
உயர்சாதிப் பெரியவர்கள் பெரியவர்கள் உறவுக்காரர்
வாதி பிரதிவாதி
109
சிவகங்கை மாவட்டக் கிராமங்களில் குடும்பப் பஞ்சாயத்து அமைப்பு அனைத்துச் சாதிகளிலும் காணப்படுகின்றது. தவிர சிவகங்கை மாவட்டக் கிராம வழக்கு மன்றப் பஞ்சாயத்துக்களில் நாட்டுப் பஞ்சாயத்து, நாட்டார் பஞ்சாயத்து, அல்லது நாட்டுக்கூட்டம், நகரத்தார் பஞ்சாயத்து முதலான பஞ்சாயத்து வகைகளும் நடைமுறையில் காணப்படுகின்றன. நாட்டுப் பஞ்சாயத்து
சிவகங்கை மாவட்டத்தில் கள்ளர், அகமுடையர், மறவர், முதலான இனத்தவர்கள் மிகுதியாக வாழும் கிராமங்களில் நாட்டுப் பஞ்சாயத்து அமைப்பு முறை காணப்படுகின்றது. இந்த வகைப் பஞ்சாயத்து அமைப்பு முறையில் மேற்குறிப்பிட்ட சாதியர்களுள் செல்வாக்குப் பெற்ற ஒரு சாதியைச் சேர்ந்தவர் வழக்கு மன்றத் தலைவராக இருப்பார். இவ் உரிமை மரபு வழிப்பட்ட பரம்பரையானதாகும்.
நாட்டுப் பஞ்சாயத்துத் தலைவரை மக்கள் 'அம்பலம்' 'அம்பலக்காரர்', 'பெரிய அம்பலக்காரர்' 'நாட்டாமை' என்றும் மரியாதையுடன் அழைக்கின்றனர். தலைவராகிய அம்பலக்காரர், நாட்டாமை கூறும் தீர்ப்பே இறுதியானதாகும். அவருக்குத் துணையாக ஐந்துக்கும் மேற்பட்ட பஞ்சாயத்து உறுப்பினர்கள் உள்ளனர். பஞ்சாயத்துத் தலைவராகிய நாட்டாமையின் தீர்ப்புகளுக்கு வாதி, பிரதிவாதி, ஆகியோரும் கிராமப் பொதுமக்களும் கட்டுப்பட்டவர்கள் ஆவர், தலைவரின் தீர்ப்புகளை மீறுபவர்கள் ஊரைவிட்டு ஒதுக்கி வைக்கப்படுவார்கள், அல்லது ஊரைவிட்டே வெளியேற்றப்படுவார்கள், இது மிகவும் கடுமையான தண்டனையாகும்.
நாட்டுப் பஞ்சாயத்து சிவகங்கை மாவட்டத்தில் சிவகங்கை ஒன்றியம்,
அரசனூர், படமாத்தூர், மதகுபட்டி, கண்டாங்கிபட்டி, தமராக்கி, குமாரபட்டி, ஆகிய
110
கிராமங்களிலும் கல்லல் ஒன்றியம் பாகனேரியிலும், காளையார்கோவில் ஒன்றியம் கட்டாணி, மானாமதுரை ஒன்றியம் வேம்பத்தூர், மாத்தூர், பச்சேரி, சிங்கம்புணரி, ஒன்றியம் பிராண்மலை, திருபத்தூர் ஒன்றியம் பிள்ளையார் பட்டி, திருப்புவனம் ஒன்றியம் ஏனாதி, பூவந்தி, லாடனேந்தல், ஆகிய கிராமங்களிலும் மிகவும் சிறப்பான முறையில் செயல்பட்டு வருவதைக் காணமுடிகிறது. நாட்டுப் பஞ்சாயத்து அமைப்பு முறை ஒரு வலிமைமிக்க அமைப்பாகும். தலைவர்கள் கூறும் தீர்ப்புகள், நீதிமன்றத் தீர்ப்புகளுக்கு இணையான மதிப்புடையவையாக மக்களால் போற்றப்படுகின்றன. நாட்டார் பஞ்சாயத்து அல்லது நாட்டுக் கூட்டம்
'நாட்டார்" என்னும் சொல் வழக்கு கள்ளர், சமுதாயத்தினரையே குறிக்கும் நாட்டார் பஞ்சாயத்து அல்லது நாட்டுக்கூட்டம் என்ற பஞ்சாயத்து அமைப்பு முறையும் நாட்டுப் பஞ்சாயத்து அமைப்பு முறையும் ஒன்று போலவே காணப்படுகின்றன. நாட்டார். பஞ்சாயத்து அல்லது நாட்டுக்கூட்டம் என்ற பஞ்சாயத்து அமைப்பு முறையில் 'கள்ளர்' சமுதாயத்தினர் மட்டுமே பஞ்சாயத்துத் தலைவராகவும், பெரிய அம்பலக்காராகவும், நாட்டாமையாகவும் இருந்து வழக்குகளில் தீர்ப்புகளை வழங்கி வருகின்றனர், இந்த உரிமை மரபு வழிப்பட்டதாகும். சிவகங்கை மாவட்டத்தில் கல்லல் ஒன்றியம் கல்லல், வெளியாத்தார், ஆகிய கிராமங்களில் இப்பஞ்சாயத்து அமைப்பு முறை சிறப்பான முறையில் செயல்பட்டு வருகின்றது. காரைக்குடி அருகேயுள்ள கோவிலூரைச் தலைமையிடமாகக் கொண்டு தொண்ணூற்று ஆறு ஊர் நகரத்தார் பஞ்சாயத்து மிகவும் சிறப்பான முறையில் செயல்பட்டு வருவதைக் காணலாம், நகரத்தார் பஞ்சாயத்து
'நகரத்தார்' என்னும் சொல் வழக்கு செட்டியார் சமுதாயத்தினரைக் குறிக்கும்.
நகரத்தார் பஞ்சாயத்து அமைப்பு முறையில் செட்டியார் சமுதாயத்தினர் மட்டுமே
111
பஞ்சாயத்துத் தலைவராகவும், பெரிய அம்பலக்காரராகவும், நாட்டாமையாகவும், இருந்து வழக்குகளில் தீர்ப்புகளை வழங்கி வருகின்றனர். இந்த உரிமை பரம்பரையானதாகும். கல்லல் ஒன்றியம் கல்லலிலும் நகரத்தார் பஞ்சாயத்து அமைப்பு முறை செயல்பட்டு வருகின்றது.
கொகுப்புரை
சிவகங்கை மாவட்டக் கிராமங்களில் நிகழ்ந்து வருகின்ற கிராம வழக்கு மன்றப் பஞ்சாயத்துக்களின் அமைப்புகள் அவ்வக் கிராமங்களில் வாழும் பல்வேறு இன மக்களின் மக்கள் தொகை, அதன் காரணமாக அவர்கள் அவ்வக் கிராமங்களில் பெற்று வருகின்ற சமூகச் செல்வாக்குப் போன்றனவற்றைப் பொறுத்ததாக அமைகின்றன.
வடிவமும் கட்டமைப்பும் பற்றிய மேலை நாட்டுத் திறனாய்வாளர்களின் கோட்பாடுகள் சுட்டப்பட்டுள்ளன. 'வடிவம்' என்பதை அதனுடைய பல உறுப்புக்களின் கூட்டுத்தொகையாகும் என விளக்கம் தந்துள்ளனர். இயற்கையாகவோ, செயற்கையாகவோவடிவம் என்பது கட்டமைப்பு உடையதாகும்; 'கட்டமைப்பு' என்பது 'ஒழுங்குபடுத்துதல்' ஆகும், கவிதை முதலான இலக்கியத்தின் கட்டமைப்புப் பற்றிய இத்தகைய விளக்கங்கள் அமைப்புச் சார்ந்த கிராம வழக்கு மன்றப் பஞ்சாயத்துக்களின் வகைகளுக்கும் பொருந்தும்.
அமைப்பு அல்லது வடிவம் என்பது ஒன்றுக்கு மேற்பட்ட பல கூறுகளின் கூட்டுதொகுதியாகும். பல கூறுகள் சேர்ந்து செயல்படும் கூட்டு அமைப்பில் ஏதேனும் ஒரு கூறு சரிவர இயங்காமல் போனாலும் அது ஒட்டுமொத்த அமைப்பையும் பாதிக்கும். பஞ்சாயத்துத் தலைவர் வழக்குமன்ற உறுப்பினர்கள், வாதி, பிரதிவாதி, சாட்சிகள், பொது மக்கள் என்ற படிநிலையான அமைப்புக்களைக் கொண்ட கிராம
வழக்கு மன்றத்திற்கும் அவை ஒன்றோடொன்று இணைந்து செயல்படும் முழுமைத்
112
தன்மையே அமைப்பியலாகும். இவற்றில் ஏதேனும் ஒரு கூறு சரிவர இயங்காமல் போனாலும் அது வழக்கு மன்றத்தின் ஒட்டுமொத்தமான அமைப்பையும் பாதிக்கக் கூடியதாக அமையும்.
ஒரு கிராமம் என்பதில் ஒன்றுக்கும் மேற்பட்ட சிற்றூர்கள் அடங்கியுள்ளன. கிராமப் பஞ்சாயத்து என்பது ஒன்றுக்கும் மேற்பட்ட சிற்றார்களைக் கொண்டு விளங்கும். கிராமங்களில் ஏற்படுகின்ற ஒட்டுமொத்தச் சிக்கல்களையும் தீர்த்துக் கொள்வதற்காக அனைத்துச் சிற்றூர்களிலுமுள்ள அனைத்துச் சாதிக்காரர்களும் ஏற்படுத்திக் கொண்ட பஞ்சாயத்து அமைப்பு முறையாகும். இவ்வமைப்பில் அனைத்துச் சாகிக்காரர்களும் பங்கேற்கின்றனர்.
ஊர்ப்பஞ்சாயத்து என்பது சாதிகள் வாழும் ஓர் ஊரில் ஏற்படுகின்ற ஒட்டுமொத்தமான பிரச்சனைகளைத் தீர்ப்பதற்காண அமைப்பாகும், அந்த ஊரில் வாழ்கின்ற அனைத்துச் சாதிப் பெரியவர்களும் ஒன்று கூடி விவாதிக்கின்ற பஞ்சாயத்து அமைப்பு முறையாகும்.
சாதிப்பஞ்சாயத்து என்பது ஒவ்வொரு கிராமத்திலும் வாழ்ந்து வருகின்ற குறிப்பிட்ட ஒவ்வொரு சாதியினரும் தங்களுக்குள் ஏற்படுகின்ற பிணக்குகளைத் தீர்த்துத் கொள்வதற்காகத் தங்கள் இனப் பெரியவர்களைக் கொண்டு ஏற்படுத்திக் கொள்கின்ற சாதிய அமைப்பாகும்.
குடும்பப் பஞ்சாயத்து அமைப்பு என்பது அந்தந்தக் குடுபங்களின் தலைவர்களைக் கொணடு குடும்பங்களில் ஏற்படுகின்ற சிறு சிறு பிரச்சனைகளைத் தீர்த்து வைத்துக் குடும்ப ஒற்றுமையைக் காக்கும் பஞ்சாயத்து அமைப்பு முறையாகும்.
தாழ்த்தப்பட்டவர்களின் குடும்பப் பஞ்சாயத்து வழக்குகளில் நட்பின்
காரணமாகவும், உயர்ந்த சாதிக்காரர் என்ற அடிப்படையிலும் மேல்சாதிக்காரர்கள்
113
பங்கேற்கின்றனர். ஆனால் மேல்சாதிக்காரர்களின் குடும்ப வழக்குகளில் தாழ்த்தப்பட்டவர்கள் யாரும் அனுமதிக்கப்படுவதில்லை.
நாட்டுப் பஞ்சாயத்து அமைப்பு முறையில் கள்ளர், அகமுடையர், மறவர், முதலான இனத்தவர்கள் முக்கியத்துவம் பெறுகின்றனர். நாட்டுக் கூட்டம் அல்லது நாட்டார் பஞ்சாயத்து அமைப்பு முறையில் கள்ளர் சமுதாயத்தினர் மட்டுமே வழக்கு மன்றத் தலைவராகச் சிறப்புப் பெறுகின்றனர். நகரத்தார் பஞ்சாயத்து அமைப்பு முறையில் செட்டியார் இனத்தவர் வழக்கு மன்றத் தலைவராகச் சிறப்புப் பெறுகின்றனர்.
சிவகங்கை மாவட்டக் கிராம வழக்குமன்றப் பஞ்சாயத்துக்களின் அமைப்புகள்
மரபு வழிபட்டதாகும்.
ர்
ச்
19.
114
குறிப்புக்கள்
வை.சச்சிதானந்தன், மேலை இலக்கியச் சொல்லகராதி, ப.93.
வை. சச்சிதானந்தான், மூ.நூ.,ப.02.
W.P.Ker Form and Style in Poetry. pp.32-33.
வை. சச்சிதானந்தான், மூ.நூ.,ப.94.
R.S. Crane, The Languages Criticism and the Structure of Poerty. pp.88-89. வெ.சாமிநாத சர்மா, பிளேட்டோவின் அரசியல் (இரண்டாம் பாகம்) ப.87, ஆ.தே.லூரார்து நாட்டார் வழக்காற்றில் ஆய்வுகள், தொகுதி-! ப.26.
Claude Levistrauss, Structual Anthropology, pp.279-280.
கில்பர்ட் பாஸ்கல், சமூகவியலின் அடிப்படைக் கோட்பாடுகள், ப.456,
. 0.5. Ghurye, Caste, and Religion in India, p.17.
. Andrew Beterlee, Caste, Old and New, p.125.
. Tamil Lexion, vol, III, part-II, p.1369.
. P. Thangaraj (Editor) Selected Thought of Dr.Ambedkar, p.9.
. A.C. Chettiar, English- Tamil Dictionary, p.153.
. சுவாமி விவேகாந்தர், ஞானதீபம், சுடர், 8 ப.396.
. K.M.Panickkar, Hindu Society at Gross Roads, p.13.
. தமிழ்ப் பேரகரதி, சென்னைப் பல்கலைகழக வெளியீடு, ப.ல4-9.
புலவர் இளங்குமரன், (தொகு.ஆ) உரையாசிரியர்கள் கண்ட சொற்பொருள்
நுண்மை விளக்கம், 'குடி' ப.118.
புறம்:183.
20. குறள்:1029.
௮,
எங்கல்ஸ், குடும்பம் தனிச்சொத்து அரசு ஆகியவற்றின் தோற்றம், ப.48.
22. மேலது, ப.76.
115
22. ச. சண்முகசுந்தரம், திருநெல்வேலி மாவட்ட நாட்டுப்புறப் பாடல்களில் சமுதாய அமைப்பு, ப.109.
24. மேலது, ப.10.
25. Tamil Lexicocn,vol. III, part-II, p.1367.
26. Kathleen Heasman, The Study of Society, p.31.
27. International Encyclopedia of the Social Sciences, vols.5-6 p.998.
28. International Encyclopedia of Social Sciences, vol.5-6, p.999,
இயல-3
கிராம வழக்குகளின் வகைகள்
116
இயல்-3
கிராம வழக்குகளின் வகைகள்
களஆய்வில் தரவுகளைத் தொகுத்தலும் அவற்றை வகைப் படுத்தலும் இன்றியமையாததாகும். சிவகங்கை மாவட்ட 'கிராம வழக்குகளின் வசைகள்' என்னும் இவ்வியலில் ஆய்வாளர் களத்தில் (71௦14 Study) சேகரித்த வழக்குகள் வகைதொகைப்படுத்தி விளக்கப்படுகின்றன. வழக்குகளின் (0௦585) உள்ளடக்கச் செய்திகளையும் அடிக்கருத்துக்களையும் அடிப்படையாகக் கொண்டு அவற்றை உரிமையியல் வழக்குகள், குற்றவியல் வழக்குகள், குடும்ப வழக்குகள், பொதுப்பிரச்சனைகள் தொடர்பான வழக்குகள் என வகைப்படுத்தலாம், உரிமையியல் வழக்குகள்
இல் வழக்குகளைச் சொத்து, கொடுக்கல்-வாங்கல் வழக்குகள் எனக் கூறலாம். கிராம வழக்குகளில் இடம் பெறும் அனைத்துப் பிரச்சினைகளும் உரிமையியல் சிக்கல்களாக இடம்பெற்றுள்ளன. அ) சொத்து வழக்குகள்
சொத்து வழக்குகளில் நடைபாதைத் தகராறு, இடப்பிரச்சனை, நிலப்பிரச்சனை,
பாகப்பிரிவினை, வீட்டுமனைப் பிரச்சனை முதலான உரிமையியல் சிக்கல்கள் அடங்கும். நடைப்பாதைத் தகராறு
கிராம உரிமையியல் வழக்குகளில் நடைபாதைத் தகராறு பற்றிய ஒரு வழக்கு உள்ளது.” பனையூர் கிராமத்தைச் சேர்ந்த கருப்பசாமி என்பவர் தன்னுடைய
இடத்தில் ஊர்மக்கள் நடப்பதாகவும், நடைபாதையாக இருந்த இடத்தை நாடியான்
117
என்பவர் அடைத்துவிட்டதாகவும் இதனைக் கேட்டு நீதி வழங்க வேண்டுமெனவும் 1999 ஆம் ஆண்டு வைகாசிமாதம் 20ம் தேதி பனையூர் கிராமப் பஞ்சாயத்துத் தலைவரிடம் வழக்குத் தொடர்ந்தார். கருப்பசாமியிடமும் நாடியானிடமும் பஞ்சாயத்தார் விசாரித்தனர். மூப்பர் இனத்தவர் அனைவரும் கலந்து பேசினர். விசாரனையில் கருப்பசாமி, நாடியான் ஆகிய இருவர் இடத்திற்குமிடையே நடைபாதை இருந்தது தெரியவந்தது. குழாய் தண்ணீரும் கழிவுநீரும் அங்குவந்த தேங்கியதால் நாடியான் தன்னுடைய இடத்தை அடைத்துப் பாதைவிட மறுத்துவிட்டார். இதனையறிந்த பஞ்சாயத்தார் குழாய்க் கழிவுநீர் செல்ல இருவர் இடத்திற்கும் நடுவிலும் சிறுவாய்க்கால் போட்டுப் பொது மக்கள் நடைபாதையாகப் பயன்படுத்த இருவரும் சமமாக இடத்தை விட்டுக் கொடுக்க வேண்டுமெனத் தீர்ப்புக் கூறினர். அத்தீர்ப்பினை இருவரும் ஏற்றுக்கொண்டனர்,
இடப்பிரச்சனை
கிராம உரிமையியல் வழக்குகளில் இடப்பிரச்சனை பற்றியவைகளாக எட்டு வழக்குகள் கிடைத்துள்ளன.” சிவகங்கை ஒன்றியம் மேலப்பூங்குடி கிராமத்தில் பறையர் இனத்தைச் சேர்ந்த மாயாண்டி, முணியாண்டி ஆகிய இருவரது இடத்தினையும் அதே ஊரில் வாழும் கள்ளர் சமுதாயத்தைச் சேர்ந்த இராக்கன் என்பவர் ஆக்கிரமித்துக் கொண்டதால் மேலப்பூங்குடிப் பஞ்சாயத்துத் தலைவரிடம் 1995 ஆம் ஆண்டு ஆடி மாதம்27ஆம் தேதி வழக்குத் தொடர்ந்தனர். மாயாண்டியும் முணியாண்டியும் பஞ்சாயத்தார்களிடம் தங்கள் வீட்டுமனையை இராக்கன் என்பவர் எடுத்துக்கொண்டு தங்களை மிரட்டுவதாகவும், பஞ்சாயத்தார் எப்படியாவது தங்களுடைய இடத்தினை மீட்டுத் தரவேண்டுமென்றும் முறையிட்டு வேண்டிக் கொண்டனர். இராக்கன் என்பவர் பஞ்சாயத்தார்களிடம் தான் ஐந்து வருடங்களாக அந்த இடத்தை அனுபவிப்பதாகவும் அந்த இடம் தனக்குத்தான்
சொந்தம் என்றும் வாதாடினார். பஞ்சாயத்தார் அந்த இடத்தை நேரில்
118
பார்வையிட்டனர். அந்த இடம் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தது தெளிவாகப் புலனாகியது.” பஞ்சாயத்தார் அந்த இடத்தில் கல் ஊன்றி மாயாண்டிக்கும் முணியாண்டிக்கும் அவ்விடத்தை மீட்டுக் கொடுத்தனர்.
காளையார்கோவில் ஒன்றியம் செங்குளம் கிராமத்தைச் சேர்ந்த ஆரோக்கியத்தாய் என்பவர் அதே ஊரைச் சேர்ந்த இருதயசாமி என்பவருக்குச் சொந்தமான இடத்தில் தேநீர் கடை நடத்தி வந்தார். பின்னர் அவ்விடத்தைப் புறம்போக்கு இடம் எனப்பட்டாப் போட்டு ரசீதும் பெற்றுவிட்டார். இருதயசாமி தனக்குச் சொந்தமான அந்த இடத்தை மீட்டுத்தர வேண்டுமென்று 1997 ஆம் ஆண்டு மார்கழி மாதம் 11 ஆம் தேதி செங்குளம் கிராமப் பஞ்சாயத்துத் தலைவரிடம் வழக்குத் தொடர்ந்தார். பஞ்சாயத்தார் இருதயசாமிக்குச் சொந்தமான அவ்விடத்தை ஆரோக்கியத்தாய் விட்டுக் கொடுக்க வேண்டுமென்று தீர்ப்புக் கூறினர். ஆரோக்கியத்தாய் பஞ்சாயத்தார் தீர்ப்பினை ஏற்றுக்கொள்ளமல் காவல் நிலையம் சென்றார். பஞ்சாயத்தாரீடம் விசாரித்த காவல்துறையினர் அந்த வழக்கினை ஊர்ப் பஞ்சாயத்தில் தீர்த்துக்கொள்ளுமாறு அனுப்பிவிட்டனர். பஞ்சாயத்தார் தமது தீர்ப்பில் இருதயசாமி இடத்தினை ஆக்கிரமித்ததும், ஊர்க்கட்டுப்பாட்டை மீறிக் காவல்துறையினரிடம் சென்றமைக்காக ஆரோக்கியத்தாய்க்கு ரூபாய் இருநூறு அபராதம் விதித்தனர். அந்த இடத்தை மீட்டு இருதயசாமியிடம் ஒப்படைத்தனர்.” காவல்துறையினரிடம் சென்ற வழக்கு இறுதியில் கிராம வழக்கு மன்றத்திலேயே தீர்க்கப்பட்டுள்ளது என்பது சுட்டத்தக்கது.
காளையார்கோவில் ஒன்றியம் செம்பனூர்க் கிராமத்தைச் சேர்ந்த கேசவன் என்பவர் மீது பங்காளிகள் நிலத்தை அதிகமாக எடுத்துக் கொண்டுவிட்டதாக பங்காளிகளில் ஒருவரான ஆர்.இராமச்சந்திரன் என்பவர் செம்பனூர் பஞ்சாயத்துத் தலைவரிடம் 1997 ஆம் ஆண்டு சித்திரை மாதம் 20ஆம் தேதி வழக்குத் தொடர்ந்தார்.
கேசவன் அதனை மறுத்தார். நிலத்தை நேரடியாகப் பார்வையிட்ட பஞ்சாயத்தார்
119
சர்வேயரைக் கூட்டி வந்து அளந்து பங்காளிகளுக்குச் சமமாகப் பிரித்துக் கொடுத்தனர்.” இளையான்குடி ஒன்றியம் திடியமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த கருப்பையா என்பவர் அதே ஊரைச் சேர்ந்த பாண்டி என்பவருக்கும் தனக்குமுள்ள இடப்பிரச்சனையைத் தீர்த்து வைக்க வேண்டுமென்று 10.3.98 இல் திடியமங்கலம் பஞ்சாயத்துத் தலைவரிடம் வழக்குத் தொடர்ந்தார். அவர்கள் இருவரும் பங்காளிகள், ஆதலால் பஞ்சாயத்தார் பொது இடம், பொது வீடு இரண்டையும் அளந்து சமமாகப் பகிர்ந்து கொடுத்துத் தீர்ப்பு வழங்கினர். மறுநாள் மீண்டும் சண்டையிட்டுக் கொண்டனர். மீண்டும் கிராமப் பஞ்சாயத்துக் கூட்டப்பட்டது. சீட்டுப்போட்டுக் குலுக்கி எடுத்துப் பஞ்சாயத்தார் அவர்கள் பிரச்சனையைத் தீர்த்து வைத்தனர்.” இருவரும் பஞ்சாயத்தார் தீர்ப்பை முழுமனதாக ஏற்றுக் கொண்டனர்.
கல்லல் ஒன்றியம் கட்டக்கான்பட்டிக் கிராமத்தைச் சேர்ந்த மாதவன் என்பவர் மனைவியை இடப்பிரச்சனையில் அதே ஊரைச் சேர்ந்த முத்தையா என்பவர் அடித்து மண்டையை உடைத்துவிட்டரா என்று கட்டக்கான்பட்டி கிராமப் பஞ்சாயத்துத் தலைவரிடம் 2000ஆம் ஆண்டு ஆவணி மாதம் 7ஆம் தேதி வழக்குத் தொடர்ந்தார். வழக்கினை விசாரித்த பஞ்சாயத்தார் இடப்பிரச்சனையில் ஆணாகிய முத்தையா பெண்ணை (மாதவன் மனைவியை) அடித்தது தவறு என்று கூறி; முத்தையாவுக்கு ரூபாய் நூறு அபராதம் விதித்து இனிமேல் இவ்வாறு நடந்து கொள்ளக்கூடாது என அறிவுரையும் கூறினர்.” சிங்கம்புணரி ஒன்றியம் காளாப்பூர் கிராமத்தைச் சேர்ந்த மு.மு.சின்னழகு என்பவர் தனது இடத்தை அதிகமாக எடுத்துக்கொண்டு தகராறு செய்வதாகப் பிச்சை என்பவர் மீது காளாப்பூர் பஞ்சாயத்துத் தலைவரிடம் 18.6.2000இல் வழக்குத் தொடுத்தார். வழக்கை விசாரித்த பஞ்சாயத்தார் இடத்தின் பட்டா மற்றும் பத்திரங்களைச் சரிபார்த்து
யாருக்கு எவ்வளவு இடம் என முடிவு செய்து ஒர் ஆசாரியைக் கூட்டி வந்து
120
அளந்து இடத்தின் முன்பக்கத்தை மு.மு.சின்னழகுவிற்கும் பின்பக்கத்தைப் பிச்சைக்கும் பிரித்துக் கொடுத்துத் தீர்ப்புக்கூறினர்..
சிங்கம்புணரி ஒன்றியம் மருதிப்பட்டிக் கிராமத்தைச் சேர்ந்த காளமேகம் என்பவர் இடம் விற்பனையில் (நிலம்) தன்னை ஏமாற்றிவிட்டதாகப் பொன்னையா என்பவர்மீது மருதிப்பட்டிக் கிராமப் பஞ்சாயத்துத் தலைவரிடம் 1999 ஆம் ஆண்டு வைகாசி மாதம் 7ஆம் தேதி வழக்குத் தொடர்ந்தார். நிலத்தை ஒருவருக்கு ஒத்திப்பத்திரம் எழுதிக் கொடுத்துவிட்டு பின்னர் அதே நிலத்தை மற்றொருவரிடம் கிரையம் செய்து கொடுத்து விட்டார் என்பதே இவ்வழக்கின் முக்கியப் பிரச்சனை ஆகும். குற்றம் சாட்டப்பட்ட பொன்னையா தன்னுடைய குற்றத்தை ஒப்புக் கொண்டார். பஞ்சாயத்தார் ஒத்தி வைத்த நிலத்தை அவருக்குத் தெரியாமல் ஏமாற்றி விட்டு மற்றொருவரிடம் கிரையம் செய்தது குற்றம் என்று பொன்னையாவிற்கு ரூபாய் ஆயிரம் அபராதம் போட்டு மூன்றுமாதத்திற்குள் ஒத்திப்பணம் முழுவதையும் ஒரே தவணையில் கட்ட வேண்டுமென்றும் தீர்ப்புக் கூறினர்.” பஞ்சாயத்தாரின் இத்தீர்ப்பினைப் பொன்னையா ஏற்றுக் கொண்டார். இவ்வாறு இடப்பிரச்சனை தொடர்பான பல வழக்குகளைச் சிவகங்கை மாவட்ட கிராம வழக்கு மன்றங்கள் அமைதியான முறையில் தீர்த்து வைத்துள்ளமையைக் காண முடிகிறது.
நிலப்பிரச்சனை
நிலப்பிரச்சனை குறித்த ஐந்து வழக்குகள் கிடைத்துள்ளன." இளையாண்குடி ஒன்றியம் லெட்சுமிபுரம் கிராமத்தைச் சேர்ந்த முருகவேல் என்பவர் தன்னுடைய நிலத்தை அதே ஊரைச் சேர்ந்த வில்லப்பன் என்பவர் உழவிடாமல் அபகரித்துக் கொண்டார் எனவும், அந்நிலத்தை மீட்டுத்தர வேண்டுமெனவும் லெட்சுமிபுரம் கிராமபஞ்சாயத்துத் தலைவரிடம் 1996 ஆம் ஆண்டு கார்த்திகை மாதம் 9ம் தேதி
குற்றஞ்சாட்டினார். வில்லப்பன் முருகவேலின், தாய்மாமன் ஆவார். அவருடைய
[21
மகளுக்கும் முருகவேலுக்கும் பொருத்தம் சரியில்லாத காரணத்தால் முருகவேல் வேறு பெண்ணைத் திருமணம் செய்து கொண்டார். வில்லப்பன் தன் மகளை வேறிடத்தில் மணம்முடித்துக் கொடுத்தார். இருபது வருடங்களாக வில்லப்பன் அந்நிவத்தை அனுபவித்து வந்துள்ளார். வழக்கினை விசாரித்த பஞ்சாயத்தார் நிலத்தை அளந்து 70 செண்ட் நிலத்தை வில்லப்பன் முருகவேலிடம் ஒப்படைக்க வேண்டுமெனத் தீர்ப்புக் கூறினர்.” கிராமப் பஞ்சாயத்தார் தீர்ப்பினை வில்லப்பன் ஏற்றுக் கொண்டார். திருப்புவனம் ஒன்றியம் லாடனேந்தல் கிராமத்தைச் சேர்ந்த மணி என்பவர் தன்னுடைய அண்ணன் ஞானகுரு அதிகமாக நிலத்தை எடுத்துக் கொண்டார் எனவும் சமமாகப் பகிர்ந்து கொடுக்க வேண்டுனெமவும் 2000 ஆம் ஆண்டு ஆனிமாதம் 5ஆம் தேதி வழக்குத் தொடர்ந்தார். லாடனேந்தல் நாட்டார் பஞ்சாயத்துத் தலைவர் முன்னிலையில் கிராமப் பஞ்சாயத்துக் கூட்டப்பட்டது, பஞ்சாயத்தார் நிலங்கள் அனைத்தையும் சரியாக அளந்து சமமாகப் பிரித்துக் கொடுத்து, எல்லையில் கல்லை ஊண்டித் தீர்த்து வைத்தனர்.” இன்று அவர்கள்
சமாதானமாக விவசாயம் செய்து வருகின்றனர் என்கின்றனர்.
மானாமதுரை ஒன்றியம் வி.புதுக்குளம் கிராமத்தைச் சேர்ந்த சமயத்துரை என்பவர் உ.மலைச்சாமி என்பவரிடம் ஒத்திக்கு வாங்கிய நிலத்தைத் தனக்கே கிரையத்திற்குத் தரவேண்டுமென வி. புதுக்குளம் கிராமப் பஞ்சாயத்துத் தலைவரிடம் 25.02.1998 இல் வழக்குத் தொடர்ந்தார், இரு தரப்பு வாதங்களையும் கேட்ட பஞ்சாயத்துத் தலைவர், ஒத்திக்கு வாங்கியவருக்கே நிலத்தைக் கிரையம் கொடுக்க வேண்டுமென்ற அவசியம் இல்லை. ஆதலால் சமயத்துரை ஒத்திப் பணத்தைப் பெற்றுக் கொண்டு நிலத்தை விட்டு வெளியேற வேண்டுமெனத் தீர்ப்புக் கூறினர்,” இவ்வாறே சிங்கம்புணரி ஒன்றியம் வையாபுரிப்பட்டியைச் சேர்ந்த போஸ் என்பவர் தன்னுடைய நிலத்தை ஆக்கிரமிப்புச் செய்திருப்பதாக அதே ஊரைச் சேர்ந்த
பெரியண்ணன் மீது வையாபுரிப்பட்டிக் கிராமப் பஞ்சாயத்துத் தலைவரிடம் 1999
122
ஆம் ஆண்டு ஆடிமாதம் 15ஆம் தேதி வழக்குத் தொடர்ந்தார். வழக்கினை விசாரித்த பஞ்சாயத்தார் நிலத்தை நேரில் பார்வையிட்டனர். பல வருடங்களாக சாகுபடி செய்யாமல் இருந்த அந்நிலத்தில் போஸ் வரிசையாகக் கல்த்தூண்களை ஊண்டியிருந்தார். பஞ்சாயத்தார் அந்தக் கல்த்தூண்களை உடனே பிடுங்கிப் போஸ் அவரது நிலத்திற்குள் ஊண்ட வேண்டுமென்றும், தவறினால் பஞ்சாயத்தார் நடவடிக்கை மேற்கொண்டு அபராதம் விதிப்பார்கள் என்றும் தீர்ப்புக்கூறினர்.* போஸ் ஒரு வாரத்திற்குள் அந்தக் கல்லுக்கால்களை அகற்றி விட்டார். இவ்வாறு நிலப்பிரச்சனை தொடர்பான வழக்குகளையும் வழக்கு மன்றங்கள் தீர்த்து
வைத்துள்ளமையைக் காணமுடிகின்றது,
சிவகங்கை ஒன்றியம் கொட்டக்குடிக் கிராமத்தில் ஒரு தந்தையின் சொத்தைப் பங்கிடுவதில் அவருடைய மூத்த மகனுக்கும் நான்கு இளைய மகன்களுக்கும் பிரச்சினை ஏற்பட்டது. மூத்த மகன் முத்து என்பவர் தன்னுடைய தந்தையின் சொத்தை சமமாகப் பங்கிட்டுத் தருமாறு பஞ்சாயத்துத் தலைவரிடம் 1989 ஆம் ஆண்டு ஆடி மாதம் 10ஆம் தேதி முறையிட்டார். முத்துவின் தந்ைத பதினைந்து வருடங்களுக்கு முன்னர் இறந்துவிட்டார். அவர் எழுதி வைத்த உயிலில் மூத்தவன் படித்துவிட்டு அரசாங்க வேலை பார்ப்பதால், மூத்தமகன் முத்துவிற்குச் சமமாகச் சொத்தைப் பங்கிட வேண்டாம் எனக் குறிப்பிட்டிருந்தார். பாகம் பிரிவினை தொடர்பாக முத்துவின் தந்ைத எழுதி வைத்திருந்த உயில் மற்றும் பத்திரத்தின் படியே வழக்கு மன்றத்தார் தீர்ப்பை வழங்கினர்.” வழக்கு மன்றத்தாரின் அந்தத் தீர்ப்பினை முத்துவும் அவருடைய நான்கு சகோதரர்களும் ஏற்றுக் கொண்டனர்.
அதே கொட்டக்குடிக் கிராமத்தைச் சேர்ந்த சுந்தரம், கனகு, இருசகோதரர்களும் அவர்களது தம்பிமகன் சுப்பன் இறந்து விட்டதால் ஆண் வாரிசு
இல்லாத அவர்களது பெரியப்பாவின் சொத்துக்கள் அனைத்தும் அவர்களுக்கே
123
சொந்தம் என்று கொட்டக்குடிக் கிராமப் பஞ்சாயத்துத் தலைவரிடம் 1990 ஆம் ஆண்டு ஆணி மாதம் 20ஆம் தேதி வழக்குத் தொடர்ந்தனர். ஆனால் சுப்பன் இறப்பதற்கு முன்னரே அவருடைய சொத்துக்கள் அனைத்தையும் அவருடைய ஒரே மகளான சாரதாவின் பெயரில் பதிவு செய்து வைத்துவிட்டார். கொட்டக்குடிக் கிராமப்பஞ்சாயத்துத் தலைவரும் பத்திரப் பதிவு அலுவலகத்திற்குக் சென்று கையெழுத்துப் போட்டுள்ளார். இதனைக் கேட்ட வாதிகளான சுந்தரமும் கனகும் பஞ்சாயத்துத் தவைரிடம் அது செல்லாது என்று வாதிட்டனர். உடனே பஞ்சாயத்தார், 'பெண்ணுக்கும் சொத்துரிமையுண்டு, ஆதலால் அவருடைய சொத்துக்கள் அனைத்தும் அவருடைய ஒரே மகள் சாரதாவிற்கே சொந்தம்.” எனத் தீர்ப்புக் கூறினர்.
மானாமதுரை ஒன்றியம் மானம்பாக்கிக் கிராமத்தைச் சேர்ந்த ஜெயக்குமார், மாரி ஆகிய இருவரும் அண்ணன் தம்பியர். அவர்களுக்குள் நிலம், வீடு ஆகிய சொத்துக்களைப் பாகப்பிரிவினை செய்வதில் பிரச்சனை ஏற்பட்டதால், ஜெயக்குமார் 10.051995 இல் மானம்பாக்கிப் பஞ்சாயத்துத் தலைவரிடம் வழக்குத் தொடர்ந்தார். ஊர்ப்பஞ்சாயத்தார் நிலங்களைப் பாகப்பிரிவினை செய்யும் போது கோயிலில் சீட்டுக் குலுக்கிப்போட்டு எடுத்தனர். வீடு பாகப் பிரிவினை செய்யப்பட்ட போது மூத்தவனான ஜெயக்குமாருக்கு மேற்குப் பக்கத்தையும் இளையவனான மாரிக்குக் கிழக்குப் பக்கத்தையும் பஞ்சாயத்தார் பிரித்துக் கொடுத்தனர்.” அவர்கள் இருவரும் பஞ்சாயத்தார் தீர்ப்பை ஏற்றுக்கொண்டனர்.
கல்லல் ஒன்றியம் கள்ளம்பட்டிக் கிராமத்தைச் சேர்ந்த பஞ்சவர்ணம் என்பவர் தன் கணவன் தன்னுடைய சொத்தில் பாதியைத் தருவதாகக் கூறித் தன்னை இரண்டாம்தரமாகத் திருமணம் செய்து கொண்டார். தற்பொழுது தர மறுக்கின்றார். என்று தன்னுடைய கணவன் ஆண்டிக்காளை மீது கள்ளம்பட்டிப் பஞ்சாயத்துத்
தலைவரிடம் 1995 ஆம் ஆண்டு வைகாசி மாதம் 10 ஆம் தேதி வழக்குத்
124
தொடர்ந்தார். பஞ்சாயத்தாரிடம் ஆண்டிக்காளையின் மூத்ததாரத்தின் நான்கு பெண்களும் இரண்டாம்தாரமாகிய பஞ்சவர்ணத்திற்குச் சொத்து இல்லை என்று வாதிட்டனர். பின்னர் பஞ்சாயத்தார் கலந்து பேசி ஆண்டிக்காளை சொத்தில் பங்கு தருவதாகக் கூறியே பஞ்சவர்ணத்தை இரண்டாம்தாரமாக மணந்து கொண்டார் என்பதால், அவருடைய நான்கு பெண்களுடன் பஞ்சவர்ணத்தையும் சேர்த்து நிலம், வீடு உள்ளிட்ட அனைத்தையும் ஐந்து பங்காகப் பிரிவினை செய்து கொடுத்தனர். இத்தீர்ப்பினை ஆண்டிக்காளையின் நான்குபெண்களும் பிள்ளையில்லாத அவருடைய இரண்டாம் தாரமாகிய பஞ்சவர்ணமும் ஏற்றுக் கொண்டனர்.
பாகப்பிரிவினை
உரிமையியல் வழக்குகளில் பாகப்மிரிவினைப் பிரச்சனை குறித்தவைகளாக ஏழு வழக்குகள் கிடைத்துள்ளன.”? கொட்டக்குடிக் கிராமத்தைச் சேர்ந்த அடக்கி என்பவர் தன் கணவன் கருப்பன் இறந்ததும் அவர் சொத்துக்கள் அனைத்தும் தனக்கே சொந்தமென்று 1990 ஆம் ஆண்டு ஐப்பசி மாதம் 19ஆம் தேதி வழக்குத் தொடர்ந்தார். பஞ்சாயத்தாரில் பலர் கருப்பனின் மூத்ததாரத்து மகள் வள்ளிக்குத்தான் சொத்துக்கள் உரியது என்றனர். கருப்பனின் இளையதாரமாகிய அடக்கி ஏற்கனவே திருமணமாகி ஒரு பெண் குழந்தையுடன் இருந்தார். அடக்கியைத் திருமணம் செய்து கொண்டான். இந்த விவரம் பஞ்சாயத்துத் தலைவருக்குத் தெரியுமாகையால், கருப்பனின் சொத்துக்களை இரண்டு பாகங்களாகப் பிரித்து அடக்கியின் மகள், வள்ளி ஆகிய இருவர் பெயரிலும் எழுதி அதில் இருபதுபேர்களிடம் கையெழுத்தும் வாங்கிக் கொடுத்தார்.” பஞ்சாயத்தார் தீர்ப்பை அடக்கியும் வள்ளியும் ஏற்றுக் கொண்டனர்.
திருப்புவனம் ஒன்றியம் திருப்பாச்சேத்தி கிராமத்தைச் சேர்ந்த எம்.சச்சிதானந்தம் பிள்ளையும் நாராயணபிள்ளையும் நிலம், வீடு ஆகியனவறிறைத்
தன்னுடைய அண்ணன் கோட்டைச்சாமி என்பவர் அதிகமாக எடுத்துக் கொண்டு
125
விட்டார் எனவும், சரியாகப் பாகப்பிரிவினை செய்து வைக்க வேண்டுமெனவும் திருப்பாச்சேத்தி பஞ்சாயத்துத் தலைவரிடம் 1999 ஆம் ஆண்டு ஆடிமாதம் 14 ஆம் தேதி முறையிட்டனர். பஞ்சாயத்தார் வீட்டையும் நிலத்தையும் மூன்று பங்காகப் போட்டுச் சரியாக அளந்து சமமாகப் பாகப்பிரிவினை செய்து கொடுத்தனர். அதன் பின்னரும் இரண்டு வருடங்களாக அண்ணன் தம்பியர் சண்டையிட்டுக் கொண்டிருந்தனர். தற்பொழுது சமாதானமாக வாழ்ந்து வருகின்றனர். திருப்புவனம் ஒன்றியம் வாவியாரேந்தல் கிராமத்தைச் சேர்ந்த ௧. பெரியகருப்பன் என்பவர் தனக்கும் சி.பாண்டிக்கும் இருபது வருடங்களாக உள்ள நிலத் தாவாவினைத் தீர்த்துச் சமமாகப் பாகப் பிரிவினை செய்ய வேண்டுமென்று வாவியாரேந்தல் பஞ்சாயத்துத் தலைவரிடம் 1998 ஆம் ஆண்டு ஆடிமாதம் 21 ஆம் தேதி வழக்குத் தொடர்ந்தார். நிலப்பிரச்சனையில் சம்மந்தப்பட்ட ௧. பெரிய அடைக்கலம் உள்ளிட்ட நான்கு பேர்களையும் பஞ்சாயத்துத் தலைவர் விசாரித்து நிலத்தை அவர்கள் நான்கு பேர்களுக்கும் சமமாகப் பாகப் பிரிவினை செய்து கொடுத்தார்.” இருபது வருடங்களாகத் தீராத நிலப் பிரச்சனைகளும் கிராமப் பஞ்சாயத்துக்களில் தீர்க்கப்பட்டதன் மூலம் இதன் வலிமையை உணரலாம், மானாமதுரை ஒன்றியம் பச்சேரி கிராமத்தைச் சேர்ந்த துரைராசு, அம்மாப்பிள்ளை ஆகியோரின் மூன்று மகன்களும் தாங்கள் வாங்கி வைத்திருந்த வங்கிக் கடனையும் வட்டிக் கடனையும் கட்டாமல் 4% ஏக்கர் நிலத்தையும் எடுத்துக் கொண்டார்கள் என்று பச்சேரிக் கிராமப் பஞ்சாயத்துத் தலைவரிடம் 16.03.1998 குற்றஞ் சாட்டினர். பஞ்சாயத்தார் விசாரணையில் அவர்களது மூன்று மகன்களும் கடனைக் கட்ட மறுத்துவிட்டனர். மூன்று மகன்களில் ஒருவர் கூட இருந்த ஒரு ஏக்கர் நிலத்தை எடுத்துக் கொண்டு ரூபாய் 60,000 கொடுக்க மறுத்துவிட்டதாலும், கிராமத்தார்களில் யாரும் ஒரு ஏக்கர் நிலத்தை விலைக்கு வாங்க முன்வராததாலும்,
பச்சேரிக் கிராமப்பஞ்சாயத்துத் தலைவரே ஒரு ஏக்கர் நிலத்தை எடுத்துக் கொண்டு
126
ரூபாய் 60,000த்தைக் கொடுத்து அவர்களது கடனைக் கட்டினார். மீதமுள்ள நிலத்தில் ஒரு ஏக்கரையும் மோட்டார் கிணரையும் அவர்களது பெற்றோர்கள் உயிருடன் இருக்கும் வரையில் அவர்களுக்குச் சொந்தமெனவும் தீர்ப்புக்கூறினர்.” தன்னிடம் நீதி கேட்டு வருபவர்களின் துயரங்களைத் தீர்த்து வைக்கும் பஞ்சாயத்துத் தலைவர்களையும் கிராமங்களில் காணமுடிகின்றது.
திருப்பத்தூர் ஒன்றியம் சிறுகூடல்ப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த வீரப்பணின் முதல் மனைவியாகிய லெட்சுமிக்கும் இரண்டாம் மனைவியாகிய மருதிக்கும் பாகப் மிரிவினை செய்வதில் ஏற்பட்ட பிரச்சனையைச் சிறுகூடல்ப்பட்டி பஞ்சாயத்துத் தலைவர் தீர்த்து வைத்துள்ளார்.” கல்லல் ஒன்றியம் வெற்றியூர் கிராமத்தைச் சேர்ந்த எஸ்.பி.ஆதப்பன், எஸ்.பி, வெள்ளைச்சாமி ஆகிய இருவரும் சகோதரர்கள். இவர்களில் அண்ணனாகிய எஸ்.பி ஆதப்பன் தனது சொத்துக்களைப் பாகப்பிரிவினை செய்து கொடுக்க வேண்டுமென்று வெற்றியூர் கிராமப் பஞ்சாயத்துத் தலைவரிடம் 2000 ஆம் ஆண்டு பங்குனி மாதம் 28ஆம் தேதி முறையிட்டார். பஞ்சாயத்தார் தீர்ப்பின்படி அவர்களது அனைத்துச் சொத்துக்களும் இரண்டு பாகங்களாகப் பிரிக்கப்பட்டது.” பின்னர் சீட்டுப் போட்டுக் குலுக்கி எடுத்து நிலம், வீடு ஆகியனவற்றைம் பிரித்துக் கொண்டனர். பாகப்பிரிவினை தொடர்பான வழக்குகளையும் கிராம வழக்கு மன்றங்கள் தக்க முறையில் தீர்த்து வைத்துள்ளமையைக் காணமுடிகின்றது.
வீட்டுமனைப் பிரச்சனை
கிராம உரிமையியல் வழக்குகளில் வீட்டுமனைப் பிரச்சனை குறைந்தவைகளாக மூன்று வழக்குகள் கிடைத்துள்ளன.” திருப்புவனம் ஒன்றியம் திருப்பாச்சேத்திக் கிராமத்தைச் சேர்ந்த காந்தி, ரெங்கன் ஆகிய இருவரும் தங்களது
வீட்டுமனையில் வீடு கட்டவிடாமல் அதே ஊரைச் சேர்ந்த சங்கரலிங்கம் என்பவர்
127
அடிதடி, சண்டையில் ஈடுபட்டுத் தடுப்பதாக திருப்பாச்சேத்திக் கிராமப் பஞ்சாயத்துத் தலைவரிடம் 1997 ஆம் ஆண்டு ஆடி மாதம் 20ஆம் தேதி வழக்குத் தொடர்ந்தனர். பஞ்சாயத்துத் தலைவர் சங்கரலிங்கத்தை விசாரித்த பின்னர் வீட்டடிமனை அமைந்திருந்த இடத்தைநேரில் பார்வையிட்டார். பின்னர் பஞ்சாயத்தார் இடத்தைப் பிரித்துக் குச்சி அடித்து இனிமேல் சண்டை, அடிதடியில் ஈடுபட்டால் கிராமப் பஞ்சாயத்தார் கண்டிப்பான முறையில் மேல் நடவடிக்கை எடுப்பார்கள் எனச் சங்கரலிங்கத்தை எச்சரித்து.” அறிவுரை சொல்லி இருவரிடமும் எழுதி வாங்கிக் கொண்டு அந்த வீட்டுமனைப் பிரச்சனையைத் தீர்த்து வைத்துள்ளனர்.
திருப்பாச்சேத்திக் கிராமத்தைச் சேர்ந்த எஸ். சகாதேவன், ராமு ஆகிய இருவரும் வீடு கட்ட வானம் தோண்டிய பொழுது, அவர்களது பக்கத்து இடத்துக்காரரான தனசேகரன் என்பவர் பிரச்சனை செய்து அவர்களை வீடு கட்டவிடாமல் நிறுத்திவிட்டார். இருபத்தைந்து வருடங்களுக்குப் பின்னர் இவ்வழக்கினைத் தீர்த்து வைக்க வேண்டுமென்று எஸ்.சகாதேவனும் ராமும் பஞ்சாயத்துத் தலைவரிடம் 1999 ஆம் ஆண்டு ஆடி மாதம் வழக்குத் தொடர்ந்தனர். வழக்கினை விசாரித்த பஞ்சாயத்தார் இடத்தினை நேரில் பார்வையிட்டு வாதி, பிரதிவாதிகளின் பட்டாக்களை வாங்கிச் சரிபார்த்து, இடத்தைச் சமமாக அளந்து இடையில் பாதைக்கு இடம்போட்டு இனி இருதரப்பினரும் வீடு கட்டிக் கொள்ளலாம் எனத் தீர்ப்புக் கூறினர்.” இன்று அவர்கள் வீடு கட்டிக் கொண்டு பிரச்சனை இல்லாமல் வாழ்ந்து வருகின்றனர்.
திருப்பத்தூர் ஒன்றியம் இரணியூர்க் கிராமத்தைச் சேர்ந்த இராமகிருஷ்ணன் என்பவர் கிராமத்திற்குச் சொந்தமான பொது இடத்தில் ஊர்ப் பெரியவர்கள் தடுத்தும் கேட்காமல் வீடு கட்டியதால், அவரைக் கிராமத்தார் ஊரை விட்டு ஒதுக்கி வைத்து விட்டனர். 1996 ஆம் ஆண்டு இராமகிருஷ்ணன் மகள் திருமணத்தில் ஊாரர்
128
யாரும் கலந்து கொள்ளக் கூடாது எனக் கிராமத்தார் முடிவெடுத்தனர். இராமகிருஷ்ணனின் வேண்டுதலால் 1996 ஆம் ஆண்டு ஐப்பசி மாதம் 13ஆம் தேதி கிராமப் பஞ்சாயத்துக் கூட்டப்பட்டது. இராமகிருஷ்ணன் பஞ்சாயத்தாரிடம் தான் ஊர்ப் பொது இடத்தில் மூன்று அடியை ஆக்கிரமித்து வீடு கட்டியிருப்பது தவறு என்றும், தன்னை மன்னித்து அனைவரும் தன் மகள் திருமணத்திற்கு வரவேண்டுமெனவும் பஞ்சாயத்தார் முன்னிலையில் கும்பிட்டு விழந்தார், பஞ்சாயத்தார் அவருக்கு 1001 ரூபாய் அபராதம் விதித்தனர். பின்னர் கிராமத்தார் அனைவரும் இராமகிருஷ்ணன் மகள் திருமணத்தில் கலந்து கொள்ளலாம் எனத் தீர்ப்பு கூறினர். இவ்வாறு வீட்டுமனைப் பிரச்சனை குறித்த வழக்குகளையும் சிவகங்கை மாவட்ட கிராம வழக்கு மன்றங்கள் தக்க முறையில் தீர்த்து வைத்துள்ளமையைக் காணமுடிகின்றது.
கொடுக்கல் வாங்கல் வழக்குகள்
பணம் கொடுக்கல்-வாங்கல் பிரச்சனை பற்றியவைகளாக நான்கு வழக்குகள் கிடைத்துள்ளன.” சிவகங்கை ஒன்றியம் இலுப்பக்குடி கிராமத்தைச் சேர்ந்த அடகன் என்பவர் தன் மூத்த மனைவியின் மகன் கோபால் வெளிநாடு செல்வதற்காக வெளியில் வட்டிக்கு வாங்கி ரூபாய் 60,000 கொடுத்துள்ளார். அந்தப் பணத்தைத் தன் மகன் திருப்பித்தர மறுக்கவே கோபாலிடமிருந்து வாங்கித் தரவேண்டுமெனவும் 1990 ஆம் ஆண்டு ஆடி மாதம் 10ஆம் தேதி இலுப்பக்குடி பஞ்சாயத்துத் தலைவரிடம் வழக்குத் தொடர்ந்தார். பஞ்சாயத்தாரிடம் கோபால் தான் பணம் வாங்கியது உண்மையென்றும், தனக்குச்சரியான வேலை கிடைக்காததால் திரும்பிவிட்டதாகவும் தன்னிடம் தற்பொழுது பணம் இல்லை என்றும் கூறினர்.” பஞ்சாயத்தார் கலந்து பேசி கோபால் வீட்டையும் 50 செண்ட் நிலத்தையும் கடனுக்காகக் எழுதி வாங்கி,
அதனை விற்றுக் கடனை அடைக்குமாறு அடகனிடம் ஒப்படைத்தனர்.
129
கல்லல் ஒன்றியம் செம்பனூர் கிராமத்தைச் சேர்ந்த மூர்த்தி என்பவர் வெளிநாட்டில் தங்கி வேலைபார்த்து வந்தார். அவர் தன் பங்காளியான காசி மகன் தட்சிணாமூர்த்தியிடம் ரூபாய் 1/4 லட்சத்தைக் கொடுத்து அதனைத் தன் தந்தையிடம் கொடுக்குமாறு அனுப்பினார். அந்தப் பணத்தைத் தச்சிணாமூர்த்தி ஆறுமுகத்திடம் கொடுக்கவில்லை. இதனையறிந்த ஆறுமுகம் செம்பனூர்க் கிராமப் பஞ்சாயத்துத் தலைவரிடம் 2000 ஆம் ஆண்டு மார்கழி மாதம் 19ஆம் தேதி வழக்குத் தொடர்ந்தார். பஞ்சாயத்தாரிடம் தச்சிணாழுர்த்தி பணம் கொடுத்தது உண்மை யென்றும் ரூ.7,000 கொடுத்தனுப்பினார் என்றும் கூறினார் ஆறுமுகம் மூர்த்தியின் கடிதத்தைக் காட்டி ரூபாய் 1/4 லட்சம் தச்சிணாமூர்த்தி தர வேண்டும் என்றும் கூறினார். பஞ்சாயத்தார் தற்பொழுது தச்சிணாமூர்த்தி ஒத்துக்கொண்ட ரூ.72,000த்தையும் உடனே கட்டியாக வேண்டுமென்று தீர்ப்புக்கூறினர். தச்சிணாமூர்த்தி பணத்தைக் கொடுக்க இயலாததால் அவருடைய இடம், புஞ்சை ஆகியவைகளை ஈடாக எழுதிக் கையெழுத்து வாங்கி இருவருக்கும் ஆளுக்கொரு பிரதியைக் கொடுத்து வழக்கை முடித்தனர்.
கல்லல் ஒன்றியம் உலுகமங்கலம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கருப்பையா என்பவர் வெளிநாடு சென்று வேலை செய்வதற்காகச் சுப்பிரமணியன் என்பவரிடம் பணம் கொடுத்தார், அவர் கருப்பையாவை வெளிநாட்டுக்கு வேலைக்கு அனுப்பாததால் தான் கொடுத்த பணத்தை மீட்டித்தருமாறு கருப்பையா உலுகமங்கலம்பட்டி கிராமப் பஞ்சாயத்துத் தலைவரிடம் 2000 ஆம் ஆண்டு மார்கழி மாதம் 10 ஆம் தேதி வழக்குத் தொடர்ந்தார். சுப்பிரமணியன் பஞ்சாயத்தாரிடம் கருப்பையாவிடம் பணம் வாங்கிய உண்மையை ஒப்புக் கொண்டார். பஞ்சாயத்துத் தலைவர் தமது தீர்ப்பில் ஒரு வார காலத்திற்குள் சுப்பிரமணியன் கருப்பையாவிடம் வாங்கிய பணத்தைக் திருப்பித்தர வேண்டுமெனக் கூறினார். தவறினால் 3
அப்பணத்திற்கு வட்டிபோட்டு வசூலிக்கப்படும் என்றார்.” பஞ்சாயத்தார் தீர்ப்பினை
130
ஏற்றுச் சுப்பிரமணியன் பணத்தைக் கட்டிவிட்டார். பணம் கொடுக்கல்-வாங்கல், பண மோசடி குறித்த வழக்குகளையும் கிராம வழக்கு மன்றங்கள் உரிய முறையில் தீர்த்து வைத்துள்ளமையைக் காணமுடிகிறது. குற்றவியல் வழக்குகள் கிராம வழக்கு மன்றங்களில் குற்றவியல் வழக்குகளும் தீர்த்து வைக்கப்படுகின்றன. ஆய்வில் சேகரித்த குற்றவியல் வழக்குகளை, ௮) திருட்டு வழக்குகள் ஆ) வெட்டுக் குத்து வழக்குகள் இ) அடிதடி, சண்டை வழக்குகள் ஈ) வாய்க்கால், ஊற்றுக்கால் தகராறு வழக்குகள் உ) தோட்ட வேலைத் தகராறு வழக்குகள் ஊ) முன்விரோத வழக்குகள் எ) மானஇழப்பு வழக்குகள் ஏ) தீ வைப்பு வழக்குகள் ஐ) சாராய விற்பனை வழக்குகள் ஒ? கொலை வழக்குகள் ஓ) விபத்துப் பற்றிய வழக்குகள் ஒள) பெண்ணைக் கடத்தல், பாலியல் வன்முறை பற்றிய வழக்குகள், ௦௦) குடித்துவிட்டுத் தகராறு செய்தல் பற்றிய வழக்குகள் என வகைமைப்படுத்தி ஆராயலாம். நீதிமன்றங்களில் குற்றவியல் வழக்குகளில் இடம்பெறும் அனைத்துப் பிரச்சனைகளும் கிராம வழக்குகளில் குற்றவியல் சிக்கல்களாக இடம் பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. திருட்டு வழக்குகள் குற்றவியல் வழக்குகளில் கோழித்திருட்டு, கடையை உடைத்துத் திருட்டு,
பெட்டிக்கடையை உடைத்துத் திருட்டு, தண்ணீர் இறைக்கும் மோட்டார் திருட்டு,
131
வாழைக்காய்த் திருட்டு, மிளகாய்த் திருட்டு, நாற்றுத் திருட்டு, தென்னங் கன்று திருட்டு, மாடு திருட்டு, மீன் திருட்டு, பணம் திருட்டு. முதலான திருட்டுக்கள் பற்றியவைகளாகப் பன்னிரெண்டு திருட்டு வழக்குகள் கிடைத்துள்ளன.” சிவகங்கை ஒன்றியம் கொட்டக்குடிக் கிராமத்தைச் சேர்ந்த தொத்தன் என்பவர் தன்னுடைய கோழியைக் கருப்பன் என்பவர் திருடித்தின்றுவிட்டதாகக் கொட்டக்குடிக் கிராமப்பஞ்சாயத்துத் தலைவரிடம் 1997 ஆம் ஆண்டு பங்குனி மாதம் 5-ஆம் தேதி வழக்குத் தொடர்ந்தார். கருப்பன் தான் தொத்தன் கோழியைத் திருடவில்லை என்று பஞ்சாயத்தார் முன்னிலையில் தகராறு செய்தான். பஞ்சாயத்தார் கருப்பனிடம், நீ கோழியைத் திருடவில்லையென்றால் முனியாண்டி கோவிலில் வெள்ளைச் சேவலை அறுத்து இரத்தப் பொட்டு வைத்துத் திருட வில்லை எனச் சத்தியம் செய்தால் போதும்.” என்றனர். அதன் பின்னர் கருப்பன், தொத்தன் கோழியைத் திருடிய உண்மையை ஒத்துக் கொண்டான். பஞ்சாயத்தார் ரூபாய் 500 கருப்பனுக்கு அபராதம் விதித்தனர். கருப்பன் தன்னை மன்னிக்க வேண்டுமெனவும் பஞ்சாயத்தாரிடம் கும்பிட்டு விழுந்தான். பஞ்சாயத்தார் ரூபாய் 100 கிராமத்திற்கும் ரூபாய் 100 கோழிக்காரனுக்கும் செலுத்த வேண்டுமெனத் தீர்ப்புக் கூறினர். இளையாண்குடி ஒன்றியம் ஆமையனேந்தலைச் சேர்ந்த கருப்பையா என்பவர் தன்னுடைய கடையை உடைத்து நடுவலசைக் கிராமத்தைச் சேர்ந்த முனியாண்டியும் கடும்பலைக் கிராமத்தைச் சேர்ந்த கன்னியப்பனும் திருடிவிட்டதாக நடுவலசைக் கிராமப் பஞ்சாயத்துத் தலைவரிடம் 1995 ஆம் ஆண்டு மாசி மாதம் 18ஆம் தேதி வழக்குத் தொடர்ந்தார். பஞ்சாயத்தார் திருடிய இருவருக்கும் தலா முந்தூறு ரூபாய் அபராதம் விதித்தனர். சிங்கம்புணரி ஒன்றியம் பட்டமங்கலம் கிராமத்தார்கள் தமது கிராமத்திலுள்ள பொருள்களும் தண்ணீர் இறைக்கும் மோட்டாரும் திருடு போய்விட்டது என 1966 ஆம் ஆண்டு ஆனி மாதம் 25ஆம் நாள்
பட்டமங்கலம் கிராமப்பஞ்சாயத்துத் தலைவரிடம் வழக்குத் தொடர்ந்தனர்.
132
விசாரனையில் பிரான்மலை நாட்டைச் சேர்ந்த ஒருவன் அவற்றைத் திருடி ஆற்றில் புதைத்து வைத்துள்ளான் என்பது தெரியவந்தது. பிரான்மலை நாட்டுக்குப் பஞ்சாயத்தார் ஒலையெழுதி அனுப்பி விசாரித்தனர். குற்றவாளி குற்றத்தை ஒத்துக் கொண்டான்.” பஞ்சாயத்தார் திருடிய பொருள்களை மீட்டு அவற்றை உரியவர்களிடம் ஒப்படைத்தனர். ஆதலால், அவனை மன்னித்துத் திருந்தி வாழ வேண்டுமென அறிவுரை கூறிப் பஞ்சாயத்தார் அனுப்பி வைத்தனர். சிவகங்கை ஒன்றியம் அரசனூர் கிராமத்தைச் சேர்ந்த பொன்னப்பன் என்பவர் தன்னுடைய வயலிலுள்ள வாழைக்காயை ரமேஷ் திருடிவிட்டான் என்று அரசனூர் கிராமப் பஞ்சாயத்துத் தலைவரிடம் 1998 ஆம் ஆண்டு கார்த்திகை மாதம் ஐந்தாம் தேதி வழக்குத் தொடர்ந்தார். வழக்கினை விசாரித்த பஞ்சாயத்தார் ஆடுமேய்க்கும் ரமேஷ் சிறுவன் என்பதால் அவனை மன்னித்து” அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர். மானாமதுரை ஒன்றியம் புதுக்குளம் கிராமத்தைச் சேர்ந்த நாகராசு; கருப்பையா என்பவர் தன்னுடைய மிளகாய் மூட்டையைக் திருடிவிட்டார் எனப் புதுக்குளம் பஞ்சாயத்துத் தலைவரிடம் 21.04.1999 இல் முறையிட்டார். கருப்பையா நாகராசுவின் மிளகாயைக் திருடியது உண்மை என்பது சாட்சியுடன் நிரூபிக்கப்பட்டது. பஞ்சாயத்தார் கருப்பையா செய்தது தவறு என்றும், அவர் நாகராசுக்கு ரூபாய் 100 செலுத்த வேண்டுமென்றும் தீர்ப்புக்கூறினர்.” திருப்புவனம் ஒன்றியம் லாடனேந்தல் கிராமத்தைச் சேர்ந்த தென்னந் தோப்புக்காரர்கள் தென்னங்கன்றுகளைப் பல நாட்களாகத் திருடி வந்த வெள்ளைக்குட்டியைத் தண்டிக்க வேண்டுமென்று 1997 ஆம் ஆண்டு சித்திரை மாதம் 20ஆம் தேதி வழக்குத் தொடுத்தனர்.” வெள்ளைக்குட்டியை விசாரித்தனர். அவரும் தன் தவற்றை ஒப்புக் கொண்டார். பஞ்சாயத்தார் மூன்று மாதங்களுக்கு அவரை ஊரைவிட்டு ஒதுக்கி
வைப்பதாகப் தீர்ப்புக் கூறினர்.
133
திருப்புவனம் ஒன்றியம் லாடனேந்தல் கிராமத்தைச் சேர்ந்த சுந்தரம் என்பவர் தன்னுடைய மாட்டை வேலாங்குளம் கிராமத்தைச் சேர்ந்த சிலர் திருடிவிட்டார்கள் என்று லாடனேந்தல் நாட்டுப்பஞ்சாயத்துத் தலைவரிடம் 1998 ஆம் ஆண்டு பங்குனி மாதம் 10 ஆம் தேதி வழக்குத் தொடர்ந்தார். வேலாங்குளம் கிராமத்தைச் சேர்ந்த வடிச்சதண்ணியும் அவனது மகனும் பஞ்சாயத்தாரால் விசாரிக்கப்பட்டனர். அவர்கள் சுந்தரம் மாட்டைத் தாங்கள் திருடியது உண்மையென்றும் அம்மாடு தஞ்சாவூரில் நிற்கின்றது என்றும் ஒத்துக் கொண்டனர்.” பஞ்சாயத்தார் அவர்களை உடன் அழைச்சுச் சென்று தஞ்சாவூலிருந்து மாட்டை மீட்டு வந்தனர்.
சிங்கம்புணரி ஒன்றியம் செலநீர் கண்மாயில் மீன்பிடித்ததாக அக்கிராமத்தார் எஸ்.வி.மங்களம் கிராமத்தைச் சேர்ந்த மூன்று பேர்கள் மீது எஸ்.வி. மங்களத்தைச் சேர்ந்த ஐந்து ஊர்ப் பஞ்சாயத்துத் தலைவரிடம் 1999 ஆம் ஆண்டு ஆனி மாதம் 18 ஆம் தேதி வழக்குத் தொடுத்தனர். பஞ்சாயத்தார் மீன் பிடித்த மூன்று பேர்களுக்கும் தலா ரூபாய் 191 அபராதம் விதித்தனர்.” அவர்கள் அபராதத் தொகையைக் கட்டி விட்டுக் கிராமத்தார்கள் முன்னிலையில் கும்பிட்டு விழுந்து மன்னிப்புக் கேட்டனர்.
கல்லல் ஒன்றியம் நரியங்குடிக் கிராமத்தைச் சேர்ந்த முத்து என்பவர் மீது தன்னுடைய 10,000 ரூபாய்ப் பணத்தைத் திருடிவிட்டார் என்று அதே கிராமத்தைச் சேர்ந்த சோணை என்பவர் பஞ்சாயத்துத் தலைவரிடம் 1998 ஆம் ஆண்டு சித்திரை மாதம் 19ஆம் தேதி முறையிட்டார். பஞ்சாயத்தார்களிடம் முத்து பணத்தைத் திருடியதை ஒத்துக்கொண்டார்.” முத்தரையர் இனத்தைச் சேர்ந்த முத்துவும் சோணையும் நெருங்கிய உறவினர்கள் என்பதால் பஞ்சாயத்தார் முத்துவுக்கு அபராதம் போடாமல் ரூபாம்.10,000தெதையும் சோணைக்கு வாங்கிக் கொடுத்ததனர். முத்துவிற்கு அறிவுரைகூறிக் கண்டித்தனர். குற்றவியல் திருட்டு வழக்குகளையும் மாவட்ட கிராம மன்றங்கள் தக்க முறையில் தீர்த்து வைத்துள்ளமைக்கு
இவ்வழக்குகள் சான்றுகளாகும்.
134
வெட்டுக்குத்து
கிராமத்தார் சிலர் உணர்ச்சி வசப்படும் நிலையில் தங்களிடமுள்ள ஆயுதங்களைக் கொண்டு எதிரியைத் தாக்குவதுண்டு. இத் தாக்குதல்களினால் பாதிக்கப்பட்டோர் நியாயம் வேண்டி இவ் வழக்கு மன்றங்களை நாடுவதுமுண்டு, வெட்டுக்குத்து வழக்குகளில் மனிதனின் கையை வெட்டுதல், கால் நடைகளை வெட்டுதல். பற்றிய வழக்குகள் கிடைத்துள்ளன.” திருப்பாச்சேத்திக் கிராமத்தைச் சேர்ந்த சுப்பன் மகன் காந்தி என்பவரை அதே ஊரைச் சேர்ந்த முத்தையா என்பவர் முன்விரோதம் காரணமாகக் கையை வெட்டிவிட்டார். காந்தி இதனைக் கேட்டுக் கொடுக்க வேண்டுமென திருப்பாச்சேத்திப் பஞ்சாயத்துத் தலைவரிடம் 2000 ஆம் ஆண்டு சித்திரை மாதம் 10 ஆம் தேதி வழக்குத் தொடுத்தார். வழக்கு விசாரணையில் முத்தையா குற்றத்தை ஒப்புக் கொண்டு, பஞ்சாயத்துத் தலைவரிடம் காவல் நிலையத்திற்குச் செல்ல வேண்டாம் எனக் கேட்டுக் கொண்டார், பின்னர் பஞ்சாயத்துத் தலைவர் முத்தையாவை இனிமேல் இவ்வாறு நடந்து கொள்ளக்கூடாது என எச்சரித்து முத்தையாவுக்கு ரூபாய் 3000 அபராதம் விதித்துத் தீர்ப்புக்கூறினர்."” பஞ்சாயத்தார் அந்தப் பணத்தைப் பாதிக்கப்பட்ட காந்தியிடம் கொடுத்தனர்.
மானாமதுரை ஒன்றியம் சூரக்குளத்தைச் சேர்ந்த முத்துக்கருப்பன் என்பவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த வெள்ளை என்பவருக்கும் முன் விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் முத்துக் கருப்பன் நான்கு ஆடுகளும் வெள்ளை என்பவரின் நெல் வயலில் மேய்ந்ததால், வெள்ளை மூப்பன் முத்துக்கருப்பனின் கால்களை வெட்டிவிட்டார். இதற்கு நியாயம் கேட்டுத் தருமாறு முத்துக்கருப்பன் சூரக்குளம் பஞ்சாயத்துத் தலைவரிடம் 0311.2000-த்தில் முறையிட்டார். பஞ்சாயத்தார் வெள்ளை மூப்பனுக்கு ரூபாய் 500 அபராதம் விதித்தனர்.” ஆனால்
முத்துக்கருப்பன் தனக்குப் பணம் வேண்டாம் என்றும், வெள்ளை மூப்பன்
135
திருந்தினால் போதுமென்றும் கூறியதால், அந்தப்பணத்தைக் கோயில் உண்டியலில் சேர்க்கும்படி பஞ்சாயத்தார் தீர்ப்புக் கூறினர்.
சிங்கம்புணரி ஒன்றியம் எஸ்.வி.மங்களத்தில் அனைத்து இனமக்களாலும் வணங்கப்படும் கருப்பு அய்யனார் கோயில்மாட்டை அடையாளம் தெரியாத யாரோ ஒருவர் வெட்டியதால் எஸ்.வி,மங்களம் பஞ்சாயத்துத் தலைவரிடம் பொது மக்கள் 1995 ஆம் ஆண்டு ஆவணி மாதம் 12ஆம் தேதி வழக்குத் தொடுத்தனர். கண்மாயில் கருவேல் நெற்று எடுத்துக் கொண்டிருந்த திருமணமாகாத இரண்டு பெண்கள் குற்றம் சாட்டப்பட்டனர். அவர்கள் கோயில் மாட்டைத் தாங்கள் வெட்டவில்லை என்று அழுதனர். பின்னர் கோயில் பூசாரியின் சாட்சியத்தின்படி ஆடுமேய்த்துக் கொண்டிருந்த சிங்காரம் என்பவன் கோயில்மாட்டை வெட்டிய உண்மை புலனாகியது.”” பஞ்சாயத்தார் சிங்காரத்திற்கு அபராதம் போட்டனர். அவன் அடுத்த ஆண்டில் இறந்து விட்டான்.
காளையார்கோவில் ஒன்றியம் சாத்தரசன் கோட்டையைச் சேர்ந்த கருணாகரன் என்பவர் வெட்டிவிட்டதாக 1997 ஆம் ஆண்டு வைகாசி மாதம் மூன்றாம் நாள் சாத்தரசன் கோட்டைப் பஞ்சாயத்துத் தலைவரிடம் வழக்குத் தொடர்ந்தார். பஞ்சாயத்தார்களிடம் கருப்பையா, கருணாகரனின் மாடு தன்னுடைய வைக்கோல் போரில் மேய்ந்த போது அடித்து விரட்டியதாகவும், தான் வெட்டவில்லையென்றும் கூறினார். பஞ்சாயத்தார் கருப்பையாவிடம் ஆடு, மாடு, கோழி, ஆகிய விலங்குகளுக்கு வேண்டியவன், சண்டைக்காரன் என்ற பாகுபாடு தெரியாது என்றும் அவற்றை அடிப்பதும் வெட்டுவதும் தவறு என்றும் அறிவுரை கூறினர்.” பின்னர் கருப்பையாவை இனிமேல் இவ்வாறு செய்தால் அபராதம்
போடுவோம் என எச்சரித்து, இருவரையும் சமாதானம் செய்து அனுப்பிவைத்தனர்.
இதுபோன்ற வெட்டுக்குத்துத் தொடர்பான வழக்குகளையும் கிராம வழக்கு
மன்றங்கள் அமைதியான முறையில் தீர்த்து வைத்துள்ளமையைக் காணலாம்.
136
அடிதடி சண்டை
கிராமக் குற்றவியல் வழக்குகளில் இரண்டு ஊர்களுக்கிடையே நடைபெற்ற அடிதடி சண்டை பற்றி ஒரு வழக்குக் கிடைத்துள்ளது. மானாமதுரை ஒன்றியம் முக்குளம் கிராமத்தார்கள் தாங்கள் ஊர்க்காரர்களைப் பச்சேரிக் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் அவர்கள் ஊரில் நடைபெற்ற நாடகத்தன்று அடித்து விட்டார்கள் என்றும், தங்கள் ஊர்க்காரர்களின் கடிகாரம், துண்டு, சால்வைகளைப் பிடுங்கிக் கொண்டார்கள் என்றும் பச்சேரிக் கிராமப் பஞ்சாயத்துத் தலைவரிடம் 08.06.1995 இல் வழக்குத் தொடர்ந்தனர். பச்சேரிக் கிராமத்திற்குச் சார்பாகப் பல ஊர்களைச் சேர்ந்த நாட்டுத் தலைவர்கள் கலந்து கொண்டனர். பஞ்சாயத்துத் தலைவர் இரண்டு கிராமத்தார் செய்த தவறுகளையும் விளக்கிப் பேசினார். பல நாட்களாக மாணவர்கள் படிக்கச் செல்லும் போது செய்த தகராறு தான் இரண்டு ஊர்ப் பிரச்சனையாக மாறியது தெரிய வந்தது.” பஞ்சாயத்தார் இரண்டு கிராமத்தார்களும் செய்தது தவறு என்றும், இரண்டு ஊர்க்காரர்களும் சமாதானமாகக் செல்ல வேண்டுமென்றும், மந்தையம்மன் கோயிலுக்கு விளக்கேற்ற இரண்டு கிராமத்தார்களும் தலா இருபத்தைந்து ரூபாய் செலுத்த வேண்டுமென்றும் பஞ்சாயத்துத் தலைவர் தீர்ப்புக்கூறினர். இரண்டு கிராமத்தார்களும் பஞ்சாயத்துத் தலைவர் தீர்ப்பினை ஏற்று அமைதியாகவும் சமாதானமாகவும் சென்றனர்.
வாய்க்கால் ஊற்றுக்கால் தகராறு
வாய்க்கால், ஊற்றுக்கால் தகராறுகள் பற்றியவைகளாக இரண்டு வழக்குகள் கிடைத்துள்ளன. மானாமதுரை ஒன்றியம் வேம்பத்தூரைச் சேர்ந்த முத்துச்சாமி என்பவர், அதே ஊரைச் சேர்ந்த அய்யாவு என்பவர் தனக்கு வாய்க்கால் விட மறுக்கின்றார் என வேம்பத்தூர் பஞ்சாயத்துத் தலைவரிடம் 19.01.1994 இல் வழக்குத் தொடர்ந்தார். முத்துச்சாமி பஞ்சாயத்துத் தலைவரிடம் தன் வயலுக்குத் தண்ணீர்
செல்ல வாய்க்கால் இல்லையென்றும் அய்யாவு வயலில் சென்றால் தான் தண்ணீர்
137
பாயும் என்றும் கூறினார். பஞ்சாயத்தாரிடம் அய்யாவு தன் வயலின் வழியாகத் தண்ணீர் விட முடியாது என்றார்." பஞ்சாயத்தார் அய்யாவு நிலத்தில் 1% அடி அகலத்தில் சுற்றுப்பாதையில் வாய்க்கால் தோண்டி முத்துச்சாமி நிலத்திற்குத் தண்ணீர் பாய்ச்ச வேண்டுமென்றும் இதை இருவரும் மீறக்கூடாது எனவும் இருவரிடமும் எழுதி வாங்கிக் கொண்டு தீர்ப்புக் கூறினர். திருப்புவனம் ஒன்றியம் கானூர் வைகை ஆற்றில் ஊற்றுக்கால் வெட்டி நீர் பாய்ச்சியதைப் புதுக்குளம் கிராமத்தார் தடுத்தனர். இப்பிரச்சனையைத் தீர்த்து வைக்குமாறு கானூர் கிராமத்தார் லாடனேந்தல் நாட்டார் பஞ்சாயத்துத் தலைவரிடம் 15.01.2001 இல் முறையிட்டனர். அக்கூட்டத்தில் இரண்டு கிராமத்தார்களும் விசாரிக்கப்பட்டனர், லாடனேந்தல் நாட்டுப் பஞ்சாயத்துத் தலைவர் கானூர்க் கிராமம் ஊற்றுக்கால் வெட்டி நீர்ப்பாய்ச்சுவதைப் புதுக்குளம் கிராமம் தடுக்கக் கூடாது எனத் தீர்ப்புக் கூறினர்.” தீர்ப்பினை ஏற்றுக்கொண்ட புதுக்குளம் கிராமத்தார் அமைதியாகக் கலைந்து சென்றனர். விவசாயம் சார்ந்த வாழ்வியல் சூழலில் வாய்க்கால், ஊற்றுக்கால், தொடர்பான வழக்குகளையும் கிராம வழக்கு மன்றங்கள் நடத்தி பகைமையை வளரவிடாமல் அமைதியான முறையில் தீர்த்து வைத்துள்ளமையைக்
காணலாம். தோட்ட வேலைத் தகராறு
தோட்ட வேலைத் தகராறு பற்றியதாக ஒரு வழக்குக் கிடைத்துள்ளது. மானாமதுரை ஒன்றியம் முடிகண்டம் கிராமத்தைச் சேர்ந்த கள்ளர் இனமக்களும், மாத்தூர் கிராமத்தைச் சேர்ந்த அகமுடையார் இனமக்களும் தோட்டவேலைக்குச் சென்ற இடத்தில் மோதிக் கொண்டனர். இந்த மோதல் பெரும் சாதிக்கலவரமாக மாறியது. முடிகண்டம் கிராமத்தார் 10.04.1988 இல் நான்கு ஊர் நாட்டுத் தலைவரிடம் வழக்குத் தொடுத்தனர். நான்கு ஊர் நாட்டுப்பஞ்சாயத்தார்
இருதரப்பினரையும் அழைத்து விசாரித்து” பின்னர் இருதரப்பினரும் அடைந்த
138
இழப்பிற்கு அவரவர்களே பொறுப்பு என்றும், இனிமேல் அவர்களுக்குள் பகைமையும் விரோதமும் வேண்டாம் என்றும் சமாதானம் செய்து அவர்களை அமைதிப்படுத்தினர். சமாதானத்ததை இரு கிராமத்தாரும் ஏற்றுக்கொண்டனர். முன்விரோதம்
முன் விரோதம் காரணமாகத் தகராறு நடந்தது பற்றி ஒரு வழக்குக் கிடைத்துள்ளது. காளையார்கோயில் ஒன்றியம் கள்ளிக்குடியைச் சேர்ந்த சுந்தராசன் என்பவர் தன்னைக் கோபாலும் அவருடைய சம்பந்தியும் சேர்ந்து அடித்து வீட்டையும் நொறுக்கி விட்டதாகக் கள்ளிக்குடிப் பஞ்சாயத்துத் தலைவரிடம் 1995 ஆம் ஆண்டு கார்த்திகை மாதம் 4ஆம் தேதி வழக்குத் தொடர்ந்தார். சுந்தராசன் பஞ்சாயத்தாரிடம் கோபால் தன்னுடைய தங்கையின் கணவன் என்றும், அவர்தன் அக்கா மகளைப் பெண் கேட்டபோது தாய்மாமன் என்ற முறையில் அதனை மறுத்ததாகவும், ஆதலால் கோபால் தன் மீது முன்விரோதம் கொண்டார் எனவும் விளக்கினார். பின்னர் பஞ்சாயத்தார் கோபாலையும் ஊரில் நேரில் கண்ட சாட்சிகளையும் விசாரித்தனர்.” தவறு கோபால் மீது இருப்பதை உறுதி செய்து ரூ. 800 அபராதம் விதித்தனர். அதில் ரூபாய் 500 சுந்தராசனுக்கு இழப்புத் தொகையாகத் தரப்பட்டது. முந்நூறு ரூபாயைக் கிராமம் எடுத்துக்கொண்டது. மான இழப்பு
மான இழப்புத் (செருப்பால் அடித்தல்) தொடர்பான வழக்கு ஒன்றும் கிடைத்துள்ளது. திருப்பத்தூர் ஒன்றியம் ஆத்திரம்பட்டியைச் சேர்ந்த வெள்ளைச்சாமி என்பவர், தன்னைச் செருப்பால் அடித்துவிட்டதாக வடகளத்தூர்க் கிராமத்தைச் சேர்ந்த விசயன் என்பவர் மீது வடகளத்தூர்ப் பஞ்சாயத்துத் தலைவரிடம் 1998 ஆம் ஆண்டு வைகாசி மாதம் 10ஆம் தேதி முறையிட்டுள்ளார்.
விசயன் பஞ்சாயத்தாரிடம் வெள்ளைச்சாமி தன்னுடைய மைத்துனன் மனைவியைக்
139
கூட்டிக்கொண்டு சென்றதால், தான் அவரைச் செருப்பால் அடித்ததாகக் கூறினார். வெள்ளைச்சாமி பஞ்சாயத்தாரிடம், கணவனிடம் கோபித்துக் கொண்டு அவளது
தாயார் வீட்டிற்கு சென்ற அந்தப் பெண்ணைப் பாதுகாப்பாக அழைத்துச்
சென்றதாகக் கூறினர்.” பின்னர் விசயன் உண்மை தெரியாமல் வெள்ளைச்சாமியைச் செருப்பால் அடித்துவிட்டதாகப் பஞ்சாயத்தார் முன்னிலையில் கும்பிட்டு விழுந்து மன்னிப்புக் கேட்டார். பஞ்சாயத்தார்
விசயனுக்கு ரூபாய் 201 அபராதம்விதித்து இனிமேல் ஆழ்ந்து யோசிக்காமல் எந்தக் காரியத்தையும் செய்யாதே என அறிவுரை கூறி அனுப்பினர்.
தீ வைப்பு
வைக்கோல் போரில் தீ வைத்த வழக்கு ஒன்றும் கிடைத்துள்ளது. இளையான்குடி ஒன்றியம் பெரும்பாளைக் கிராமத்தைச் சேர்ந்த முத்துச்சாமி என்பவர் தனது வைக்கோல் போரில் அதே ஊரைச் சேர்ந்த சகாதேவனின் தாயார் தீ வைத்துவிட்டார் எனவும், அதனைக் கேட்டுத்தர வேண்டுமென்றும் பெரும்பாளைக் கிராமப் பஞ்சாயத்துத் தலைவரிடம் 1995 ஆம் ஆண்டு ஆடி மாதம் 10ஆம் தேதி வழக்குத் தொடர்ந்தார். பஞ்சாயத்தாரிடம் சகாதேவனின் தாயார் தனது குற்றத்தை மறுத்தார். ஆனால், சாட்சிகள் அவர் தீ வைத்ததை உறுதிப்படுத்தினர்..£ பின்னர் பஞ்சாயத்தார் சகாதேவன் தாயாருக்கு ரூபாய் 200 அபராதம் விதித்துத் தீர்ப்புக் கூறினர். சாராய விற்பனை
'சாராய விற்பனை' பற்றிய வழக்கு ஒன்றும் கிடைத்துள்ளது. திருப்புவனம் ஒன்றியம் வாவியாரேந்தல் கிராமத்தைச் சேர்ந்த மூத்து என்பவர் அதே ஊரைச் சேர்ந்த இராமையா என்பவர் பல நாட்களாகச் சாராயம் காய்ச்சி விற்று
வருவதாகவும், அதைத் தடை செய்ய வேண்டுமென்றும் வாவியாரேந்தல்
140
பஞ்சாயத்துத் தலைவரிடம் 2000 ஆம் ஆண்டு புரட்டாசி மாதம் 10ஆம் தேதி வழக்குத் தொடர்ந்தார். சாராயம் விற்கக் கூடாது என்றும், கிராமக் கட்டுப்பாட்டை மீறிச் சாராயம் விற்றால் ஊரைவிட்டு வெளியேற்றுவோம் என்றும் தீர்ப்புக்கூறினர்.”” இராமையா இன்று திருந்தி வாழ்ந்து வருகின்றார். கொலை
'கொலை' பற்றிய வழக்கு ஒன்றும் கிடைத்துள்ளது. சிவகங்கை ஒன்றியம் குமாரப்பட்டியைச் சேர்ந்த மாயழகு என்பவர் தன்னுடைய சகோதர்களை அடித்துக் கொன்ற நல்லுச்சாமி மீது கொலைக் குற்றம் சுமத்திக் குமாரபட்டிப் பஞ்சாயத்துத் தலைவரிடம் 1967 ஆம் ஆண்டு ஆனிமாதம் 5 ஆம் தேதி வழக்குத் தொடர்ந்துள்ளார். மாயழகு பஞ்சாயத்தார்களிடம் ஆட்டுக் கிடையில் படுத்திருந்த தன்னுடைய சகோதர்களை நல்லுச்சாமி கட்டையால் அடித்துக் கொலை செய்து விட்டுத் தன்னையும் கொல்ல வரும்போது தான் தப்பித்து ஒடி வந்ததாகக் கூறினர். மேலும் விசாரணையில் நல்லுச்சாமி அவருடைய தந்தையையும் வீட்டு வேலைக்காரனையும் கொலை செய்து விட்டார் என்பதும் தெரியவந்தது. கொலையாளி மனநிலை சரியில்லாதவர் (பைத்தியம்) என்பதால் நல்லுச்சாமி குடும்பத்தார் குற்றத்தை ஏற்றுக் கொண்டனர்.” பின்னர் பஞ்சாயத்தார் 'பலித்தீர்ப்பு' என்ற முறையில் மாயழகுவிற்கு நல்லுச்சாமியின் ஒரு ஏக்கர் நிலத்தை எழுதி வாங்கிக் கொடுத்தனர். நல்லுச்சாமி நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டார், நீதிமன்றமும் மனநோயாளி என அவரை விடுதலை செய்தது. இங்கு வழக்கை விசாரிப்பவர்கள் நீதிமன்றத்திற்கு வழக்கை மேல்முறையீடு செய்தமை நோக்கத்தக்கது. விபத்து
மாட்டுவண்டிமீது டிராக்டர் மோதியதால் ஏற்பட்ட விபத்து, சைக்கிள் மீது டிராக்டர் மோதியதால் ஏற்பட்ட விபத்து, வான்கோழியை டிராக்டர் அடித்துக்
கொண்டது ஆகிய விபத்துக்கள் பற்றிய மூன்று வழக்குகள் கிடைத்துள்ளன.
141
மானாமதுரை ஒன்றியம் ஆவாரம்பட்டியைச் சேர்ந்தவர் டிராக்டர் தங்கராசு. அவர், பச்சேரிக் கிராமத்தைச் சேர்ந்த மாட்டு வண்டி மீது டிராக்டரை மோதச் செய்துவிட்டார். இதனால் மாட்டின்கால் முறிந்துவிட்டது. மாட்டுவண்டிக்காரர் தனக்கு நியாயம் கேட்டுத்தர வேண்டுமென 10.02.2002 இல் பச்சேரிக் கிராமப்பஞ்சாயத்துத் தலைவரிடம் முறையீடு செய்தார். வழக்கினை விசாரித்த பஞ்சாயத்துத் தலைவர் மாடு ரூபாய் 9500 க்கு வாங்கியது என்பதையும் மாட்டின்கால் ஒடிந்துவிட்டதால் மாட்டுக்காரரின் பிழைப்பிற்கு வழியில்லை என்பதையும் விளக்கினார்? டிராக்டர் தங்கராசு மாட்டுவண்டிக்காரக்கு ரூபாய் 2500 இழப்பீடு தரவேண்டுமென்று தீர்ப்புக் கூறினர். திருப்புவனம் ஒன்றியம் திருப்பாச்சேத்தியைச் சேர்ந்த கோபி என்பவர் தான் சாலையில் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது சிறுகுடி விலத்திப்பிள்ளையின் டிராக்டர் ஒட்டுநர் டிராக்டரைத் தனது சைக்கிளில் மோத விட்டதால். தனது சைக்கிள் நொறுங்கி விட்டது என்று 1999 ஆம் ஆண்டு புரட்டாசிமாதம் 4ஆம் தேதி திருப்பாச்சேத்திப் பஞ்சாயத்துத் தலைவரிடம் வழக்குத் தொடர்ந்தார். வழக்கினை விசாரித்த பஞ்சாயத்தார் கோபியின் சைக்கிளுக்காகச் சிறுகுடி விலத்திப்பிள்ளை ரூபாய் 2000 இழப்புத் தொகை கொடுக்க வேண்டுமென்று தீர்ப்புக் கூறினர்.
சிங்கம்புணரி ஒன்றியம் முறையூரைச் சேர்ந்த பன்னையா என்பவர் தன்னுடைய வான்கோழியை மாதவன் என்பவர் டிராக்டரில் அடித்துக் கொன்று விட்டதாக முறையூர் பஞ்சாயத்துத் தலைவரிடம் 1995 ஆம் ஆண்டு ஐப்பசி மாதம் 10ஆம் தேதி முறையீடு செய்தார். வழக்கினை விசாரித்த பஞ்சாயத்துத் தலைவர் வாதி, பிரதிவாதி ஆகிய இருவரையும் சமாதானம் செய்ய முயன்றார்.” பன்னையா சமாதானத்தை ஏற்றுக்கொள்ளாததால், பஞ்சாயத்தார் வான்கோழியின் விலைமதிப்பு ரூபாய் 250 என்றும் அத்தொகையை மாதவன் பன்னையாவிற்குக்
கொடுத்துவிட வேண்டுமென்றும் தீர்ப்புக் கூறினர்.
142
பாலியல் வன்முறை
பெண்ணைக் கடத்தல், பாலியல் வன்முறை பற்றிய வழக்குகள் கிடைத்துள்ளன.” கல்லல் ஒன்றியம் பாகனேரியைச் சேர்ந்த மணிவாசகம் பம்பாய்க்குப் பிழைக்கச் சென்ற பொழுது பம்பாயைச் சேர்ந்த ஹேமலதா என்ற வயசுக்கு வராத பெண்ணைக் கடத்திப் கொண்டு வந்துவிட்டார். அப்பெண்ணின் பெற்றோர்கள் பாகனேரி சாதிப்பஞ்சாயத்துத் தலைவரிடம் 1990 ஆம் ஆண்டு வைகாசி மாதம் 6 ஆம் தேதி வழக்குத் தொடுத்தனர். மதகுப்பட்டியில் சாதிப் பஞ்சாயத்து நடைபெற்றது. பஞ்சாயத்தார்களிடம் மணிவாசகம் வயசுக்கு வராத ஹேமலாதவை அவள் சம்டிசத்துடன் தான், அழைத்து வந்ததாகக் கூறினார். ஹேமலதா பஞ்சாயத்தார்களிடம் 'தான் இங்கு வந்த ஒரு வாரத்தில் பெரிய பெண்ணாக ஆகிவிட்டதாகவும் மணிவாகத்துடன் தான் வாழ்வேன்' என்றும், தன் பெற்றோர்களுடன் செல்ல விரும்பவில்லை என்றும் கூறினாள். பஞ்சாயத்தார் அவர்கள் இருவருக்கும் திருமணம் செய்து வைத்தனர். சாதிப் பஞ்சாயத்தின் வலிமையை உணர்ந்த ஹேமலதாவின் பெற்றோர் காவல் நிலையத்திற்குச் செல்ல விரும்பவில்லை.
கல்லல் ஒன்றியம் கட்டக்கான்பட்டியில் முத்தரையர் இனத்தைச் சேர்ந்த முத்தாயி என்ற பெண்ணை அதே ஊரைச் சேர்ந்த முத்தையாக் கோனார் கெடுக்க முயன்றார் என அப்பெண் கட்டக்கான்பட்டி பஞ்சாயத்துத் தலைவரிடம் 2000 ஆம் ஆண்டு ஆடி மாதம் 25 ஆம் தேதி குற்றம் சாட்டினாள். வழக்கினை விசாரித்த பஞ்சாயத்தார் முத்தையாக் கோனார், பாலியல் வன்முறையில் ஈடுபட்டுக் கெடுக்க மூயன்றார் என்ற உண்மை தெளிவாகத் தெரிகின்றது என்றும், ஆதலால் அவருக்கு ரூபாய் 5000 அபராதம் விதிக்கப்படுகின்றது என்றும் தீர்ப்புக் கூறினார்.”
பஞ்சாயத்தார் சிங்கப்பூரிலிருந்த முத்தாயியின் கணவனுக்கும் இந்தத் தகவலைத்
143
தெரிவித்து வரவழைத்து அவனைச் சமாதானம் செய்து முத்தாயியுடன் வாழ வைத்தனர்.
திருப்புவனம் ஒன்றியம் கொத்தங்குளத்தைச் சேர்ந்த மோகன் என்பவர் தன் மனைவி வள்ளி மாடு மேய்க்கும்பொழுது, அதே ஊரில் வாழும் பறையர் இனத்தைச் சேர்ந்த அர்ச்சுனன் என்பவர் அவள் கையைப் பிடித்து இழுத்துத் தகாதமுறையில் நடந்து கொண்டார் என்று கொத்தங்குளம் பஞ்சாயத்துத் தலைவரிடம் 1998 ஆம் ஆண்டு கார்த்திகை மாதம் 25ஆம் தேதி வழக்குத் தொடுத்துள்ளார். வழக்கினை விசாரித்த பஞ்சாயத்தார் அருச்சுனனுக்கு ரூபாய் 5000 தண்டத்தொகை விதித்தனர்.” அவன் கிராமப் பஞ்சாயத்துச் சபையில் கும்பிட்டு விழந்து தாங்காது என்றும், கிராமம் தன்னை மன்னிக்க வேண்டும் என்றும் மன்றாடினான். பஞ்சாயத்துத் தலைவர் இறுதியாக ரூபாய் 1500 கட்டிவிட வேண்டுமென்று தீர்ப்புக் கூறினர். பெண்ணைக் கடத்தல், பாலியல் வன்முறை தொடர்பான வழக்குகளில் கூடுதலான அபராதத் தொகையை விதித்துக் கடுமையாகக் குற்றவாளிகளைத் தண்டித்திருப்பதைக் காண முடிகின்றது. குடி
குடித்து விட்டுத் தகராறு செய்தது பற்றி ஒரு வழக்குக் கிடைத்துள்ளது. இளையான்குடி ஒன்றியம் மறக்குளத்தைச் சேர்ந்த வெள்ளைச்சாமி என்பவர், கொண்ணக்குளத்தைச் சேர்ந்த கணேசன் என்பவர் இரவில் தான் சைக்கிளில் வந்து கொண்டிருந்த பொழுது குடிபோதையில் தன்னை அடித்து உதைத்துத் தன்னுடைய சைக்கிளையும் பிடுங்கிச் சென்றுவிட்டதாக மறக்குளம் பஞ்சாயத்துத் தலைவரிடம் 1995 ஆம் ஆண்டு சித்திரை மாதம் 8-ஆம் தேதி குற்றம் சாட்டியுள்ளார். பறையர் இனத்தைச் சேர்ந்த கணேசன் குடித்துவிட்டு யாருக்கும் கட்டுப்படாமல் பேசினார். பஞ்சாயத்தார் அவரைப் பஞ்சாயத்திற்குக் கட்டுப்படாமல் இருந்தால்
காவல்துறையில் ஒப்படைத்து விடுவோம் என எச்சரித்தனர். அவர்
144
பஞ்சாயத்தாரிடம் நடந்த உண்மையை ஓத்துக் சொண்டு, குடிபோதையில் தெரியாமல் செய்து விட்டேன் எனக் கும்பிட்டு விழுந்து மன்னிப்புக் கேட்டார். பஞ்சாயத்தார் அவருக்கு ரூபாய் 3000 அபராதம் போட்டனர். அவர் 'தாங்காது' எனப் பலமுறை கும்பிட்டு விழுந்தார், இறுதியில் ரூபாய் 800 அபராதம் கட்ட வேண்டுமெனத் தீர்ப்புக் கூறினர்.
இவ்வாறு காலங்காலமாகக் கிராமப் பஞ்சாயத்துக்கள் மதிக்கப்பட்டு வருவதும், பஞ்சாயத்தார் அபராதமாக அதிகத் தொகையினை முதலில் விதிப்பதும், பின்பு அபராதம் செலுத்த வேண்டியவர் 'தாங்காது' என்று பஞ்சாயத்தார் காலில் விழுவதும் பின்பு பஞ்சாயத்தார் அபராதத்தைக் குறைப்பதும் சுட்டத்தக்கது. குடும்ப வழக்குகள்
சமூக அமைப்பின் அடிப்படை நிறுவனம் குடும்பம், கிராமத்தில் விவசாயம் போன்ற கூட்டுச் சார்ந்த தொழில்களைச் செய்யும் சூழலில் கூட்டுக் குடும்ப முறை பெரிதும் உள்ளது. இக்குடும்ப உறுப்பினர்களிடையே சில சமயங்களில் போட்டி மனப்பான்மை, பொறாமை போன்றவற்றால் பிரச்சனைகள் எழுவதுண்டு. இது முற்றி, சண்டை, சச்சரவுகளாக மாறி குடும்பத் தகராறுகளாக மாறுவதுண்டு. இவ்விதத் தகராறுகள் வழக்கு மன்றங்களுக்கும் வருவதுண்டு.
கிராம வழக்கு மன்றங்களில் இத்தகைய குடும்பத் தகராறுகள் பற்றிய வழக்குகளும் தீர்த்துவைக்கப்படுகின்றன. சிவகங்கை மாவட்டத்தில் ஆய்வாளர் சேகரித்த குடும்ப வழக்குகளை அவ்வவற்றின் உள்ளடக்கச் செய்திகளை அடிப்படையாகக் கொண்டு,
திருமணச் சிக்கல்கள் வரதட்சிணைப் பிரச்சனை நடத்தையில் சந்தேகம்
pa
. மாமியார் மருமகள் மோதல்,
145
வாழ விருப்பமின்மை ஆண், பெண்களின் ஒழுங்கீனம் சோம்பேறித்தனம்
ஊதாரித்தனம்
oN
குழந்தை இன்மை 10. பாலியல்
11, மண முறிவுகள் என வகைமைப்படுத்தி ஆராயலாம். 1. திருமணச் சிக்கல்கள்
கிராம வழக்கு மன்றங்களில் வரும் குடும்ப வழக்குகளில் காதல், காதல் திருமணம், திருமணச் சிக்கல்கள் தொடர்பான வழக்குகள் கிடைத்துள்ளன.” திருப்புவனம் ஒன்றியம் திருப்பாச்சேத்தியைச் சேர்ந்த ஜெயபாரதி என்ற பெண்ணைத் திருமணம் செய்து கொள்ளுவதாக வாக்குக் கொடுத்துக் காதலித்து ஏமாற்றித் திருமணம் செய்து கொள்ள மறுத்துவிட்டார் கல்யாண குமார் என்ற இளைஞர். பாதிக்கப்பட்ட ஜெயபாரதி தனக்கு நியாயம் வழங்குமாறு திருப்பாச்சேத்திப் பஞ்சாயத்துத் தலைவரிடம் 2000 ஆம் ஆண்டு பங்குனி மாதம் 2ஆம் தேதி முறையிட்டார். கல்யாணகுமார் குடும்பத்தார் ஜெயபாரதி- கல்யாணகுமார் காதலை ஏற்றுக் கொள்ள மறுத்தனர். பஞ்சாயத்தார் இருகுடும்பத்தார்களையும் சமாதானப்படுத்தியும் அவர்கள் திருமணத்திற்கு ஒத்துக்கொள்ளவில்லை..£ பின்னர்பஞ்சாயத்தார் கல்யாணகுமாரிடம் அந்தப் பெண்ணுடன் எந்தத் தொடர்பும் வைத்துக் கொள்ளக்கூடாது என எச்சரித்து அந்தப் பெண்ணை அவமானப் படுத்தப்பட்டுவிட்டதால் கல்யாணகுமார் அந்தப் பெண்ணிற்கு ரூபாய் 10,000 கொடுக்க வேண்டுமென்று தீர்ப்புக் கூறினர். இரு குடும்பத்தாரும் பஞ்சாயத்தார் முன்னிலையில் எழுதிக் கொடுத்தனர்.
மானாமதுரை ஒன்றியம் வேலூரைச் சேர்ந்த கருப்பையா என்பவரின் மகள்
சின்னப் பொண்ணு காதலித்துத் திருமணம் செய்து கொண்டார். சின்னப்
146
பொண்ணுவின் தந்தை கருப்பையா அக்காதல் திருமணத்தை ஏற்றுக் கொள்ள முடியாது என்று 04.03.1999 இல் வேலூர் பஞ்சாயத்துத் தலைவரிடம் தெரிவித்தார். காதல் திருமணத்தை இருவர் குடும்பத்தார்களும் எதிர்த்தனர். இந்நிலையில் காதலர்கள் இருவரும் பஞ்சாயத்தார் மூன்னிலையில் கும்பிட்டு விழுந்து நீங்கள் தான் எங்கள் காதலை ஏற்றுக் கொண்டு திருமணத்தை நடத்தி வைக்க வேண்டுமென்று வேண்டிக் கொண்டனர்.” பஞ்சாயத்தார் அவர்கள் இருவருக்கும் கோவிலில் திருமணம் செய்து வைத்தனர், ஆறுமாதங்களுக்குப் பின்னர் இரு குடும்பத்தார்களும் ஒன்று சேர்ந்து கொண்டனர்.
கல்லல் ஒன்றியம் மேல்குடியைச் சேர்ந்த வண்ணார் இனப்பெண் அமிர்தம் தங்கள் காதல் திருமணத்தைக் கண்டரமாணிக்கம் கள்ளர் இன இளைஞனின் பெற்றோர்கள் (காதலனின் பெற்றோகள்) எதிர்ப்பதாக நடுவிக்கோட்டை கீழயூர் பஞ்சாயத்துத் தலைவரிடம் 1999 ஆம் ஆண்டு புரட்டாசி மாதம் 23 ஆம் தேதி வழக்குத் தொடர்ந்தார். பஞ்சாயத்துத் தலைவர் இருசாதித் தலைவர்களையும் அழைத்துப் பேசினார். மாப்பிள்ளை வீட்டார் பெண்ணைத் தீர்த்து வைத்துவிடுமாறு வேண்டினர். பெண் வீட்டார் அப்பெண்ணிற்கு வாழ்வு வேண்டுமெனக் கூறி அழுதனர்.” பின்னர் பஞ்சாயத்தார் கலந்து பேசி காதல் திருமணம் செய்து கொண்ட இருவரையும் ஊரைவிட்டுச் சென்று பிழைத்துக் கொள்ளுமாறு தீர்ப்புக் கூறினர். இங்கு காதல் திருமணத்திற்குச் சாதி தடையாக இருப்பதைக் காணமுடிகின்றது.
தாழ்ந்த சாதி, ஏழைப்பெண் போன்றவர்களை உயர்சாதி. இளைஞர்கள் ஆசை காட்டிக் கெடுப்பதும், பின் அவர்களை ஏற்றுக் கொள்ள மறுக்கும் நிலையில் பாதிக்கப்பட்டோர் வழக்கு மன்றங்களை நாடுவதுமுண்டு. பஞ்சாயத்தார் இவ்வகையான சாதியச் சிக்கல்கள் நிறைந்த வழக்குகளில் சில வேளைகளில்
அளிக்கும் தீர்ப்பு ஆதிக்க மனப்பான்மையை வெளிப்படுத்துகின்றது. ஒரு சில
147
பஞ்சாயத்துக்களில் சாதியம் பஞ்சாயத்தின் சிறப்பைக் குறைத்து விடுவதையும் காண முடிகின்றது.
சிவகங்கை ஒன்றியம் பொன்னாகுளத்தைச் சேர்ந்த பாப்பாள் என்ற பறையர் இனப்பெண்ணை அதே ஊரைச் சேர்ந்த வளையர் இன இளைஞன் ஊரைவிட்டுக் கடத்திச் சென்று திருமணம் செய்து கொண்டான். இதனைக் கேட்டுத்தர வேண்டுமென்று பொன்னாகுளம் ஊர்ப்பொதுமக்கள் அனைவரும் சாதிப்பஞ்சாயத்துத் தலைவரிடம் 1990 ஆம் ஆண்டு வைகாசி மாதம் 6 ஆம் தேதி முறையிட்டு; ஊர்க் கெளவரத்தைச் காப்பற்ற அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கவேண்டுமென்று வேண்டினர். பஞ்சாயத்துத் தலைவர் சாதிய வழக்குப்படி ஊர்ப்பொது மக்கள் கருத்தைக் கேட்டுக் கொண்டு முத்து, பாப்பாள் ஆகிய இருவரையும் பிரியும் படிக் கூறினர்." அவர்கள் இருவரும் மறுத்தனர். பஞ்சாயத்துத் தலைவர் சட்டப்படி அவர்கள் பதிவுத்திருமணம் செய்து கொள்ள வேண்டுமெனத் தீர்ப்புக் கூறினார். இருவரும் அதனையேற்றுப் பதிவுத் திருமணம் செய்து கொண்டனர்.
தற்பொழுது சில வழக்குகள் காவல்நிலையம், பதிவு அலுவலகம், வட்டாட்சியர் அலுவலகம், மாவட்ட ஆட்சியர், நீதிமன்றம் போன்றவற்றிற்கும் பஞ்சாயத்தாரால் பரிந்துரைக்கப்படுவதையும் காணமுடிகின்றது.
காளையார் கோவில் ஒன்றியம் கீரனூரைச் சேர்ந்த தனம் என்ற இடையர் இனப்பெண் அதே ஊரைச் சேர்ந்த பறையர் இளைஞனை ஊரைவிட்டுக் கூட்டிச் சென்றுப் பதிவுத் திருமணம் செய்து கொண்டார். அப்பெண்ணின் பெற்றோர்கள் தன் சாதிக்காரர்கள் துணையுடன் 1990 ஆம் ஆண்டு ஐப்பசி மாதம் 10 ஆம் தேதி கட்டாணிக் கிராமம் பஞ்சாயத்துத் தலைவரிடம் அவர்களைக் கூட்டி வந்தனர். தனம்,
நாட்டுப்பஞ்சாயத்துத் தலைவரிடம் 'தான் கர்ப்பமாக இருப்பதாகவும், தனக்குத் தன்
148
கணவன் தான் வேண்டுமென்றும், தாய் தந்தையார் தேவையில்லை என்றும் கூறினாள்'. தனத்தின் பெற்றோர்களும், சாதிக்காரர்களும் நாங்கள் கர்ப்பத்தைக் களைத்துக் கொள்கிறோம், தாழ்ந்த சாதிக்காரனிடம் எங்கள் பெண் வாழக்கூடாது என்றனர்.” பின்னர் பஞ்சாயத்தார் கலந்து பேசி பெண் அவள் பெற்றோர்களுடன் செல்ல மறுப்பதால் அவர்களை யாரும் தொந்தரவு செய்யக்கூடாது அவர்கள் சேர்ந்து வாழட்டுமெனத் தீர்ப்புக் கூறினர். இதுபோன்ற தீர்ப்புகளும் வழங்கப்பட்டு வருகின்றன. மதகுபட்டியைச் சேர்ந்த மணிவாசகம் என்ற பறையர் இளைஞன் கோமதி என்ற ஆசாரி இனப்பெண்ணைக் காதலித்துப் பதிவுத்திருமணம் செய்துகொண்ட வழக்கிலும் கிராம வழக்கு மன்றம் இதுபோன்ற தீர்ப்பினை வழங்கியுள்ளது.”
பஞ்சாயத்துக்களில் காதல் திருமணத்திற்கும், கலப்புத் திருமணத்திற்கும் சாதி : பெரிதும் தடையாக இருப்பதை அறிய முடிகின்றது. குடும்ப வழக்குகளில் பெண்ணைக் கூட்டிக்கொண்டு ஒடித் திருமணம் செய்து கொண்டது பற்றியதாக எட்டு வழக்குகள் கிடைத்துள்ளன.”
சிவகங்கை ஒன்றியம் கொட்டக்குடியைச் சேர்ந்த கருப்பையா என்பவர் மகள் லெட்சுமியைப் பாண்டி என்பவர் கூட்டிக் கொண்டு ஓடிவிட்டார். இதனைக் கேட்டுத்தருமாறு கருப்பையா, கொட்டக்குடி பஞ்சாயத்துத் தலைவரிடம் 1989 ஆம் ஆண்டு பங்குனி மாதம் 20 ஆம் தேதி முறையிட்டார், கருப்பையா தன் மகளைத் தன்னிடம் ஒப்படைக்க வேண்டுமென்று பஞ்சாயத்தார்களிடம் வேண்டினர். லெட்சுமி பஞ்சாயத்தார்களிடம் தான்தன் தந்தையுடன் செல்ல விருப்பமில்லை என்றும், பாண்டியுடன் வாழவே விருப்பம் என்றும் கூறினாள். பாண்டியன் பெற்றோர்கள் அவ்விருவரையும் ஏற்றுக் கொள்ள மறுத்துவிட்டனர். லெட்சுமியின்
பெற்றோர் பாண்டியைக் கொலை செய்யத் திட்டமிட்டனர்.” இதனால்
149
பஞ்சாயத்தார் பாண்டி ,லெட்சுமி ஆகிய இருவரையும எங்காவது ஓடிச்சென்றுப் பிழைத்துக் கொள்ளுங்கள் என அனுப்பி வைத்தனர்.
மதுரை மாவட்டம் கோவளம்பட்டியில் இருந்த தன்மகள் வெள்ளையம்மாளைச் சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி ஒன்றியம் காலாப்பூரைச் சேர்ந்த அழகு என்பவன் கூட்டிக்கொண்டு ஓடிவிட்டதாகக் காலாப்பூர் பஞ்சாயத்துத் தலைவரிடம் வெள்ளையம்மாளின் தந்ைத 18.6.2000-த்தில் வழக்குத் தொடர்ந்தார். பஞ்சாயத்துத் தலைவர் முதலில் பெண்ணின் வயதைக் கேட்டறிந்தார். வெள்ளையம்மாள் பஞ்சாயத்தாரிடம் தன் காதலன் அழகுடன் வாழவே தனக்கு விருப்பம் என்றாள்.” பஞ்சாயத்தார் கலந்து பேசி பெண்ணைத் தந்தையுடன் அனுப்ப முடியாது என்று கூறி பஞ்சாயத்தார்களே அவர்களுக்குத் திருமணம் செய்து வைத்தனர்.
கல்லல் ஒன்றியம் ௧. கோவில்பட்டியைச் சேர்ந்த ரஜினி என்பவர் தன்மகள் செல்வியைக் கூட்டிக்கொண்டு ஓடிவிட்டார் என்று செல்வியின் தந்தை கோவில்பட்டிப் பஞ்சாயத்துத் தலைவரிடம் 205.2000 அன்று வழக்குத் தொடர்ந்தார். செல்வி பஞ்சாயத்தாரிடம் 'தனக்குத் தன் கணவன்தான் வேண்டும்' என்றும் தன் தந்தையுடன் செல்ல முடியாது என்றும் கூறினாள்.” பின்னர் பஞ்சாயத்தார் கலந்து பேசி செல்விக்கும் அவள் கணவன் ரஜினிக்கும் பஞ்சாயத்தார் பாதுகாப்புத் தருவார்கள். இருவரும் கிராமத்தார் முன்னிலையில் திருமணம் செய்து கொள்ள வேண்டும் எனத் தீர்ப்பளித்தனர். இதே போன்று சிங்கம்புணரி ஒன்றியம் சூரக்குடியைச் சேர்ந்த வெள்ளைக்காளை என்பவர் தன் மகள் அரசியை முத்து என்பவன் கூட்டிக்கொண்டு ஓடி விட்டதாகக் கிராமப் பஞ்சாயத்துத் தலைவரிடம் 1999 ஆம் ஆண்டு ஆவணி மாதம் 5ஆம் தேதி வழக்குத் தொடர்ந்தார்.”
விசாரணையில் முத்துவை விரும்பித்தான் வெள்ளைக்காளையின் மகள் அரசி
150
சென்றுள்ளாள் என்பதைத் தெரிந்துகொண்ட பஞ்சாயத்தார் அவர்கள் இருவருக்கும் கிராமத்தார் முன்னிலையில் திருமணம் செய்து வைத்தனர்,
சிங்கம்புணரி ஒன்றியம் செண்பகம்பேட்டைக் கிராமத்தைச் சேர்ந்த கள்ளர் இன இளைஞன், இரணியூர் கிராமத்தைச் சேர்ந்த மறவர் இனப்பெண்ணைக் கூட்டிக்கொண்டு ஓடிவிட்டான். இதன் காரணமாக, 1992 ஆம் ஆண்டு ஆவணி மாதம் 20 ஆம் தேதி கிராமப் பஞ்சாயத்துக் கூட்டப்பட்டது. பஞ்சாயத்தார் முன்னிலையில் செண்பகம்பேட்டைக் கிராமத்தார் வேறு சாதியப் பெண்ணைத் தங்கள் கிராமத்து இளைஞன் கூட்டிக்கொண்டு ஓடியது தவறு என ஒப்புக் கொண்டனர்.” பின்னர் பஞ்சாயத்தார் அப்பெண்ணும் இளைஞனும் ஊருக்குள் இருக்கக்கூடாது எனத் தீர்ப்பளித்தனர். மாப்பிள்ளையின் பெற்றோர் ரூபாய் 100 அபராதம் செலுத்த வேண்டுமெனவும் தீர்ப்பளித்தனர்.
கல்லல் ஒன்றியம் எழுமாப்பட்டியைச் சேர்ந்த சோதி என்பவள் தன்னைத் தன் காதலன் வீரனுடன் சேர்த்து வாழவைக்க வேண்டுமென்று எழுமாப்பட்டிப் பஞ்சாயத்துத் தலைவரிடம் 1999 ஆம் ஆண்டு மார்கழி மாதம் 25ஆம் தேதி வழக்குத் தொடர்ந்தாள். சோதி, வீரன் ஆகிய இருவரின் பெற்றோர்களும் அவர்களது காதல் திருமணத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர், பஞ்சாயத்தார் ஊர்ப்பஞ்சாயத்துக் கூட்டத்தில் அவர்கள் இருவருக்கும் திருமணம் செய்து வைத்தனர்.” அவர்களை யாரும் எந்தத் தொந்தரவும் செய்யக்கூடாது எனவும் பஞ்சாயத்தார் கேட்டுக்கொண்டனர்.
கல்லல் ஒன்றியம் செவரக்கோட்டையைச் சேர்ந்த சித்ரா என்பவள் அதே ஊரைச் சேர்ந்த கருப்பையா என்ற இளைஞனுடன் ஊரைவிட்டு ஓடிவிட்டாள். அவர்கள் தங்கள் ஊருக்குள் நுழைய முடியாத சூழ்நிலையில் 2000 ஆம் ஆண்டு தை மாதம் 24ஆம் தேதி கிராமப் பஞ்சாயத்துத் தலைவரிடம் முறையிட்டார்."
151
பஞ்சாயத்தில் சித்ரா, கருப்பையா, ஆகிய இருவருக்கும் பஞ்சாயத்தார் முறைப்படி திருமணம் செய்து வைத்தனர்.
மானாமதுரை ஒன்றியம் பச்சேரிக் கிராமம் பள்ளர் இனத்தைச் சேர்ந்த காந்தி என்பவர் தன்னுடைய மகளை அதே ஊரைச் சேர்ந்த அகமுடையார் இனத்தைச் சேர்ந்த செகநாதன் என்பவர் கூட்டிக் கொண்டு ஓடிவிட்டார் எனவும் அவர்களைச் சேர்த்து வாழவைக்க வேண்டுமெனவும் பச்சேரிக் கிராமம் பஞ்சாயத்துத் தலைவரிடம் 15.051995 இல் வழக்குத் தொடுத்தார். காந்தி பள்ளர் இனத்தைச் சேர்ந்தவர். செகநாதன் ஏற்கனவே திருமணமானவர். அகமுடையர் இனத்தைச் சேர்ந்தவர். செகநாதன் மனைவியும் அவர்கள் குடும்பத்தாரும் இத்திருமணத்தை ஒத்துக் கொள்ள மறுத்தனர். பஞ்சாயத்தார் செகநாதன் ஏற்கனவே திருமணமானவர் எனத் தெரிந்தும் இந்தப் பெண் அவனுடன் சென்றது தவறு என்றும், எனவே, செகநாதன் இந்தப் பெண்ணிற்கு ரூபாய் 50,000 தந்துவிட வேண்டுமென்றும், இந்தப் பணத்தைக் கொண்டு அந்தப் பெண்ணை வேறிடத்தில் மணம் முடித்துக் கொடுக்க வேண்டும் என்றும் கூறினர்.” இந்தத் தீர்ப்பினைப் பெண் வீட்டார் ஏற்றுக் கொள்ளவில்லை. இன்று வரை பணத்தையும் பெற்றுக் கொள்ளவில்லை. தற்பொழுது அந்தப் பெண் காவல்துறையில் பணியாற்றி வருகின்றாள்.
இந்த வழக்கின் தீர்ப்பு ஏற்புடையதே ஆகும், திருமணமான ஆடவனுடன் பெண் ஓடியது தவறாகும். செகநாதன் ஏற்கனவே திருமணமானவர் எனத் தெரிந்தும் இந்தப் பெண் அவனுடன் சென்றுள்ளாள். பஞ்சாயத்தார் மனிதாபிமான அடிப்படையில் அந்தப் பெண்ணிற்கு ரூபாய் 50,000 இழப்பீடு வழங்க உத்தரவிட்டுள்ளனர், வேறிடத்தில் அந்தப் பெண்ணை மணம் முடித்துக் கொடுக்கவும் வழிவகை செய்து கொடுத்துள்ளனர். இந்த வழக்கின் தீர்ப்பைப் பெண் வீட்டார் ஏற்றுக் கொள்ளவில்லை, இழப்பீட்டுத் தொகையும்
பெற்றுக்கொள்ளவில்லை. அந்தப் பெண் இன்றுவரை திருமணம் செய்து
152
கொள்ளாமல் காவல் துறையில் பணியாற்றி வருகின்றாள். இதற்கு அந்தப் பெண் மற்றும் பெண் வீட்டாரின் தன் முனைப்பே காரணமாகும். இவ்வாறு பஞ்சாயத்தார் தீர்ப்பை ஏற்றுக் கொள்ளாமல் காலம் தாழ்த்துபவர்களையும் காண முடிகின்றது. திருமணத்தடை
தாய்மாமன் உறவுமுறை கொண்டாடிப் பெண்ணின் திருமணத்தைத் தடை செய்த வழக்கு ஒன்றும் கிடைத்துள்ளது. சிற்றூர்களில் பெண்களின் திருமணத்திற்குத் தாய்மாமன் ஒப்புதல் மிகவும் இன்றியமையாததாகும்.
சிவகங்கை ஒன்றியம் கொட்டக்குடிக் கிராமத்தைச் சேர்ந்த ஆனந்தம் என்பவர் தன்னுடைய மகள் முத்துலெட்சுமியின் திருமணத்தை முத்துலெட்சுமியின் மாமன்மகன் தடுப்பதாக 1985 ஆம் ஆண்டு மாசி மாதம் 17 ஆம் தேதி பஞ்சாயத்துத் தலைவரிடம் தெரிவித்தார். முத்துலெட்சுமி ஏற்கனவே திருமணமாகி விவாகரத்துப் பெற்றவள். அவளுக்குக் குழந்தையில்லை, முத்துலெட்சுமியின் மாமன்மகன் ஏற்கனவே திருமணம் ஆகிக் குடும்பமாக இருப்பவன் எனத் தெரிந்தும் முத்துலெட்சுமி அவனுடன் தொடர்பு வைத்திருந்ததாகவும், அவர்கள் இருவரும் யாருக்கும் தெரியாமல் மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் திருமணம் செய்து கொண்டதாகவும் தற்பொழுது முறைப்படி நடைபெறவுள்ள திருமணத்தைத் தடுத்து நிறுத்த வேண்டுமெனவும் முத்துலெட்சுமியின் மாமன் மகன் பஞ்சாயத்தாரிடம் கூறினாள். பஞ்சாயத்தார் அவனிடம் திருமணம் செய்து கொண்டதற்கான ஆதாரத்தைக் கேட்டனர். அதற்கு அவன் பதில் அளிக்கவில்லை. பஞ்சாயத்தார் தீர்ப்பில் முத்துலெட்சுமியின் மாமன்மகனிடம் திருமணமான நீ இந்தத் திருமணத்தில் தலையிடக்கூடாது என்றும், அப்படி மீறி நீ தலையிட்டால் பஞ்சாயத்தார்கள் கட்மையாகத் தண்டிப்பார்கள் என்றும் எச்சரித்து முத்துலெட்சுமியின் திருமணத்திற்கு உதவினர். உறவுமுறை தொடர்பான வழக்குகளிலும் பஞ்சாயத்தார் தக்க தீர்ப்புகளை
வழங்கி வந்துள்ளதை அறிய முடிகின்றது.
153
காதலியைத் திருமணம் செய்து கொள்ள மறுத்து ஏமாற்றுதல்
கிராம வழக்கு மன்றங்களில் வரும் குடும்ப வழக்குகளில் காதலியைத் திருமணம் செய்து கொள்ள மறுத்தல்/ஏமாற்றுதல் பற்றியவைகளாக ஐந்து வழக்குகள் அமைந்துள்ளன.
சிவகங்கை ஒன்றியம் வீழனேரியைச் சேர்ந்த ராக்கு என்பவள் அதே ஊரைச் சேர்ந்த ஆனந்து என்பவர் தன்னைக் காதலித்து ஏமாற்றிவிட்டுத் திருமணம் செய்து கொள்ள மறுக்கின்றார் எனச் சாதிப்பஞ்சாயத்துத் தலைவரிடம் 1995 ஆம் ஆண்டு மார்கழி மாதம் 16 ஆம் தேதி வழக்குத் தொடர்ந்தாள். பஞ்சாயத்தார்களிடம் ராக்கு தான் கர்ப்பமாக இருப்பதாகவும், தன்னை ஆனந்து திருமணம் செய்து கொள்ள மறுக்கின்றார் எனவும் தன்னை ஆனந்துக்கு மணம் முடித்து வைக்க வேண்டுமெனவும் அழுதாள். ஆனந்து அவளுடைய கர்ப்பத்துக்குத் தான் காரணமில்லை என்றான். பஞ்சாயத்தார் ஊர்க்காரர்களை விசாரித்ததில் ராக்கும் ஆனந்தும் காதலித்தது உண்மை என்று புலனாகியது.. பின்னர் பஞ்சாயத்தார் கலந்து பேசி ஆனந்து ராக்குவைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும் எனவும் வேறு யாரும் அவனுக்குப் பெண் கொடுக்கக்கூடாது எனவும் தீர்ப்புக் கூறி ராக்குவை ஆனந்துக்குத் திருமணம் முடித்து வைத்தனர்.
சிவகங்கை ஒன்றியம் கண்டாங்கிப்பட்டியைச் சேர்ந்த இராமன் மகள் சாந்தி என்பவள், பழனி என்பவர் தன்னைத் திருமணம் செய்து கொள்வதாகக் கூறி காதலித்து ஏமாற்றிவிட்டார் என்று பஞ்சாயத்துத் தலைவரிடம் 1992 ஆம் ஆண்டு வைகாசி மாதம் 27 ஆம் தேதி வழக்குத் தொடர்ந்தார். சாந்தி பஞ்சாயத்தார்களிடம் பழனி என்னைத் திருமணம் செய்துகொள்வதாகக் சத்தியம் செய்தார். அன்று முதல் என்னுடன் உறவும் வைத்துக் கொண்டார். என்னைக் கர்ப்பிணி ஆக்கி விட்டுத் திருமணம் செய்து கொள்ள மறுக்கின்றார் என்று அழுதாள், குற்றம் சாட்டப்பட்ட
பெரியகருப்பன் மகன் பழனி கர்ப்பிணிப் பெண் சாந்தியை மணந்து கொள்ள
154
முடியாது என்றான்.” பின்னர் பஞ்சாயத்தார் கலந்து பேசி பக்கத்திலுள்ள கோவிலில் இருவருக்கும் திருமணம் செய்து வைத்தனர்.
சிற்றூர்களில் திருமணம் செய்து கொள்வதாகச் சத்தியம் செய்து, இளம் பெண்களை இளைஞர்கள் கர்ப்பிணி ஆக்கிவிட்டுப் பின் திருமணம் செய்து கொள்ள மறுப்பதும் உண்டு. அவ்வாறு பாகிக்கப்பட்ட இளம்பெண்கள் வழக்கு மன்றத்தை நாடும் போது பஞ்சாயத்தார் சிற்றூர் கோவில்களில் அவர்களுக்குத் திருமணம் செய்து வைக்கின்றனர். அப்பெண்களின் வாழ்க்கைக்குப் பாதுகாப்புக் கொடுக்கின்றனர்.
காளையார் கோவில் ஒன்றியம் நெடுங்குளத்தைச் சேர்ந்த அந்தோணி அம்மாள் என்பவள்; பாஸ்கரன் என்பவர் தன்னைக் காதலித்து ஏமாற்றிவிட்டதாக நெடுங்குளம் பஞ்சாயத்துத் தலைவரிடம் 1998 ஆம் ஆண்டு மார்கழி மாதம் 8ஆம் தேதி வழக்குத் தொடர்ந்தாள். பஞ்சாயத்தார்களிடம் பாஸ்கரன் அந்தப் பெண்ணுக்கும் தனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று கூறினான். சாட்சியாக வந்த சிறு பையன் அவர்கள் உறவை வெளிப்படுத்தினான்..! பஞ்சாயத்தார் அவர்களுக்குத் திருமணம் செய்து வைத்தனர். பின்னர் ஒருவாரம் கழித்து வேறு பஞ்சாயத்தாரை வைத்துப் பாஸ்கரன் அந்தோணி அம்மாளைத் தீர்த்து விட்டுச் சிங்கப்பூர் சென்று விட்டான். கர்ப்பமான அந்தப் பெண் வேறு ஆடவனைத் திருமணம் செய்து கொள்ளவில்லை.
மானாமதுரை ஒன்றியம் மேலப்பிடாவூரைச் சேர்ந்த பஞ்சு என்பவள் வேலைக்குச் சென்ற இடத்தில் சேகர் என்பவர் அவளைக் காதலித்து ஏமாற்றிவிட்டார். பாதிக்கப்பட்ட பஞ்சு 05.10.2000 அன்று மேலப்பிடாவூர் பஞ்சாயத்துத் தலைவரிடம் தனக்கு நியாயம் கிடைக்க வேண்டுமென்று முறையிட்டாள். சேகர் பஞ்சாயத்தார் முன்னிலையில் பஞ்சுவைக் காதலித்தது
உண்மையென ஒத்துக் கொண்டார்.” பஞ்சாயத்தார் அவர்கள் இருவரையும்
155
மானாமதுரை 'ஆனந்தவள்ளி அம்மன்' கோவிலுக்கு அழைத்துச் சென்று திருமணம் செய்து வைத்தனர். வரதட்சிணை
கிராம வழக்கு மன்றங்களில் கணவன் மனைவியிடம் வரதட்சிணை கேட்டது பற்றி மூன்று வழக்குகள் கிடைத்துள்ளன. காளையார் கோவில் ஒன்றியம் சித்தாலங்குடியைச் சேர்ந்த பஞ்சவர்ணம் என்பவள் தன்னுடைய கணவன் செல்லப்பாண்டி தன்னிடம் வரதட்சிணை கேட்டுக் கொடுமைப்படுத்துவதாகப் பஞ்சாயத்துத் தலைவரிடம் 1997 ஆம் ஆண்டு ஆனிமாதம் 10ஆம் தேதி முறையீடு செய்தாள். செல்லப்பாண்டி பஞ்சாயத்தார்களிடம் தன் மனைவி அடிக்கடி உறவினர் வீடுகளுக்குச் சென்று விடுவதாகவும், தன்னுடன் வாழ அவளுக்கு விருப்பமில்லை என்றும் தெரிவித்தார். பஞ்சவர்ணம் கணவன்-மனைவியர் தகராறைப் பயன்படுத்திக் கொண்டு அடிக்கடி உறவினர் வீடுகளுக்குச் சென்ற உண்மையைப் பஞ்சாயத்தார் அறிந்தனர்.” பஞ்சாயத்தார் தமது தீர்ப்பில் அன்றிலிருந்து பஞ்சவர்ணம் ஆறுமாதங்களுக்கு யார் வீட்டுக்கும் செல்லக்கூடாது என்று உத்தரவு போட்டனர். அத்துடன் அவள் கணவன் சொல்லைக் கேட்டு நடந்துகொள்ள வேண்டுமென அறிவுரையும் கூறினர். கணவனுக்கும் இனிமேல் மனைவியை அடித்து விரட்டக்கூடாது எனவும், சீர் கொண்டு வரவில்லை எனப் பேசக்கூடாது எனவும் கட்டளையிட்டுக் கண்டித்தனர்.
இளையாண்குடி ஒன்றியம் சீத்தூரணியைச் சேர்ந்த பஞ்சவர்ணம் என்பவள் தன்னுடைய கணவன் மகேஸ்வரன் திருமணமாகிப் பத்து வருடத்திற்குப் பின்னரும் தன்னிடம் சொத்தும் பணமும் கேட்டுத் துன்புறுத்துகின்றார் எனப் பஞ்சாயத்துத் தலைவரிடம் 1997 ஆம் ஆண்டு ஆனிமாதம் 6ஆம் தேதி வழக்குத் தொடர்ந்தாள்.” குற்றச்சாட்டு உண்மையெனத் தெரிந்து கொண்ட பஞ்சாயத்தார் கணவன்
மகேஸ்வரனிடம் இனிமேல் வரதட்சிணை கேட்டு மனைவியை அடிக்கக்கூடாது
156
எனவும், அவ்வாறு செய்தால் அவனைக் காவல் நிலையத்தில் கிராமத்தார் ஒப்படைப்பார்கள் எனவும் எச்சரித்துத் தீர்ப்புக் கூறினர்.
சிற்றூர்களில் குற்றவாளிகள் காவல்துறையினரைக் கண்டுப்பெரிதும் அச்சமடைகின்றனர். உண்மையில் கிராம வழக்குமன்றத்தினர் சில வழக்குகளில் இவ்வாறு காவல் துறையைச் சுட்டிக்காட்டிக் குற்றவாளியை மிரட்டும் போக்கும் உண்டு. ஆதலால் காவல் நிலையம் பஞ்சாயத்தை விட உயர்ந்த மன்றம் எனப் பொருள்படுகின்றது.
சிவகங்கை ஒன்றியம் வைரம்பட்டியைச் சேர்ந்த லெட்சுமி என்ற பெண் கோவானூரைச் சேர்ந்த பாண்டி என்பவரை மணந்தாள். பாண்டி, லெட்சுமியிடம் வரதட்சணை கேட்டுத் துன்புறுத்தியதால் லெட்சுமி கோவானூர் பஞ்சாயத்துத் தலைவரிடம் 1999 ஆம் ஆண்டு மாசி மாதம் 5ஆம் தேதி முறையீடு செய்தாள்.” பஞ்சாயத்துத் தலைவர், லெட்சுமியின் குடும்பம் ஏழ்மையான தென்றும், அவர்களால் ஒன்றும் செய்ய முடியாது என்றும் பாண்டியிடம் கூறினர். பாண்டி லெட்சுமியுடன் வாழ விருப்பமில்லை என்றார். பஞ்சாயத்தார் இருவரும் பிரிந்து சென்று வேறுதிருமணம் செய்து கொள்ளலாம் எனத் தீர்ப்புக் கூறினர். அவர்கள் இருவரும் பிரிந்துவிட்டனர். நடத்தையில் சந்தேகம்
மனைவி நடத்தையில் கணவனும், கணவன் நடத்தையில் மனைவியும் சந்தேகம் கொள்வதனால் குடும்ப அமைப்புச் சிதைவடைவதைக் காணமுடிகின்றது.
திருப்புவனம் ஒன்றியம் வாவியாரேந்தல் பூமாரி என்பவள் மூன்று குழந்தைகளுக்குத் தாயானபின்னர் தன் கணவன் மனோகரனுடன் சேர்ந்து வாழ முடியாது என்று 2000 ஆம் ஆண்டு வைகாசி மாதம் 27 ஆம் தேதி வாவியாரேந்தல் பஞ்சாயத்துத் தலைவரிடம் முறையிட்டாள்.” பஞ்சாயத்தார் விசாரணையில் பூமாரி
நடத்தை கெட்டவள் என்பது தெரிந்தது. பஞ்சாயத்தார் அப்பெண்ணைக்
157
கண்டித்துப் பிள்ளை பெற்ற பின்னும் இவ்வாறு நடந்து கொள்ளக்கூடாது என
எச்சரித்து அவர்களைச் சமாதானம் செய்து வாழவைத்தனர்.
கல்லல் ஒன்றியம் செம்பனூரைச் சேர்ந்த நாடிமுத்து என்பவள் தன் கணவன் வேலாயுதம் தன் நடத்தையில் சந்தேகப்பட்டுக் கொடுமைப்படுத்துகின்றான் என பஞ்சாயத்துத் தலைவரிடம் 2001 ஆம் ஆண்டு சித்திரை மாதம் 20ஆம் தேதி வழக்குத் தொடர்ந்தாள்.” பஞ்சாயத்தார். அவர்களுக்குப் பிள்ளைகள் இருப்பதால் வேலாயுதம் மனைவியைச் சந்தேகப்பட்டுக் கொடுமைப்படுத்துவது தவறு என்று அறிவுரை சொல்லி அவர்களைச் சமாதானப்படுத்தி வாழவைத்தனர்.
சிங்கம்புணரி ஒன்றியம் முறையூரைச் சேர்ந்த பீர்முகமது என்பவர் தன் மனைவியின் நடத்தையின் மீது ஐயப்பட்டு அடிக்கடி சண்டை போட்டார். இதனால் அவர் மனைவித் தாய் வீட்டிற்குச் சென்றுவிட்டாள். பீர்முகமது தன் மனைவி தன்னுடன் வந்து வாழ வேண்டுமென முறையூர் பஞ்சாயத்துத் தலைவரிடம் 1998 ஆம் ஆண்டு புரட்டாசி மாதம் 5 ஆம் தேதி முறையிட்டார். வழக்கினை விசாரித்த பஞ்சாயத்துத் தலைவர் சத்தியமூர்த்தி, பீர்முகமது ஒரு சந்தேகப் பேர் வழி என்பதைத் தெரிந்து கொண்டார்.” பஞ்சாயத்துத் தலைவர், பீர்முகமது இனிமேல் ஒழுங்காகக் குடும்பம் நடத்த வேண்டுமென்றும், மீறினால் தீர்த்து வைத்துவிடுவோம் என்றும் அவருக்கு அறிவுரை சொல்லி அவர்களைச் சேர்ந்து வாழ வைத்தனர்.
சிங்கம்புணரி ஒன்றியம் சூரக்குடியைச் சேர்ந்த இருளி என்பவளின் கணவன் வெள்ளையன் அவளுடைய நடத்தையில் ஐயப்பட்டு அவளை அடித்துத் துன்புறுத்தினான். வெள்ளையன் மனைவி சுருளி பஞ்சாயத்துத் தலைவரிடம் 1991 ஆம் ஆண்டு ஆடிமாதம் 10 ஆம் தேதி தனக்கு நியாயம் வேண்டுமென முறையிட்டாள். வெள்ளையன் தனது குற்றத்தைப் பஞ்சாயத்தாரிடம் ஒப்புக்
கொண்டான்.” குற்றவாளி தனது குற்றத்தை ஒப்புக் கொண்டதால் பஞ்சாயத்தார்
156
அவரை மன்னித்து, இனிமேல் இருவரும் சேர்ந்து வாழ வேண்டுமென்று
அவர்களுக்கு அறிவுரை கூறி அவர்களைச் சேர்ந்து வாழ வைத்தனர்.
சிவகங்கை ஒன்றியம் பாப்பாகுடியைச் சேர்ந்த அழகி என்பவள் தான் தன் கணவனுடன் வாழ விரும்பவில்லை என்றும், விவாகரத்துச் செய்து வைக்கும்படியும் 1995 ஆம் ஆண்டு வைகாசி மாதம் 5ஆம் தேதி முறையிட்டாள். அழகியின் கணவன் இராமன், பஞ்சாயத்தார்களிடம் தன் மனைவி தன்னுடன் ஒழங்காக வாழவில்லை, அடிக்கடி அவள் அப்பன் வீட்டிற்குச் சென்று விடுகின்றாள் என்று கூறினான். அழகி பஞ்சாயத்தார்களிடம் அவர் என்னைச் சந்தேகப்படுகின்றார். அடித்துக் கொடுமைப்படுத்துகின்றார். நான் அவருடன் வாழ விரும்பவில்லை என்றாள். வழக்கினை விசாரித்த பஞ்சாயத்தார் ரூ.2,000 பெண்ணிற்குத் தீர்வை வாங்கிக் கொடுத்து அப்பெண்ணை விவகாரத்துச் செய்து வைத்தனர்.
கல்லல் ஒன்றியம் நரியங்குடி செல்வராசு என்பவர் தன்னுடைய மனைவி பாண்டியம்மாளின் நடத்தை சரியில்லையென 1999 ஆம் ஆண்டு வைகாசி மாதம் 6 ஆம் தேதி வழக்கு மன்றத்தில் முறையீடு செய்தார். விசாரணையில் பாண்டியம்மாள் அவள் கொழுந்தனுடன் தொடர்பு வைத்திருந்தது தெரிய வந்தது.” பஞ்சாயத்தார் அவள் கொழுந்தனை வெளிநாட்டிற்கு வேலைக்கு அனுப்பி வைத்தனர். தற்பொழுது பாண்டியம்மாளும் அவள் கணவன் செல்வராசும்
மகிழ்ச்சியாகக் குடும்பம் நடத்தி வருகின்றனர்.
கணவன், மனைவியின் நடத்தையில் ஐயப்படுவதும், மனைவி கணவனின் நடத்தையில் ஐயப்படுவதும், கணவர்-மனைவி குடும்பச் சண்டைக்குக் காரணமாக அமைந்துள்ளன. கிராம வழக்கு மன்றத்தார் அவர்களைச் சமாதானப்படுத்திக் கண்டித்தும் தக்க அறிவுரை வழங்கியும் சேர்த்து வாழ வைக்கின்றனர். தவிர்க்க
இயலாத சில காரணங்களினால் மட்டுமே விவகாரத்துச். செய்து வைக்கின்றனர்.
159
மாமியார், மருமகள் மோதல்
கணவன்-மனைவியைச் சேர்ந்து வாழவிடாமல் மாமியார்-மருமகளைக் கொடுமைப்படுத்துவதும் கணவன்-மனைவி சண்டைக்குக் காரணமாக வெளிப்படுகின்றது.
கல்லல் ஒன்றியம் வஞ்சிணிப்பட்டியைச் சேர்ந்த அஞ்சலை என்பவள் தன்னுடைய கணவனுடன் தன்னை நிம்மதியாக வாழவிடாமல் தன் மாமியார் கொடுமைப் படுத்துவதாக பஞ்சாயத்துத் தலைவரிடம் 1999 ஆம் ஆண்டு பங்குனி மாதம் 28ஆம் தேதி முறையிட்டார். பஞ்சாயத்துத் தலைவர் அஞ்சலையின் கணவன் மற்றும் மாமியாரை அழைத்து விசாரித்ததில் அஞ்சலையின் குற்றச்சாட்டு உண்மையானது என்று தெரிந்து கொண்டார்.” அஞ்சலையின் மாமியாரைக் கண்டித்து அஞ்சலையையும் அவள் கணவனையும் இரண்டு மாதங்களுக்குத் தனியாக வெளியூருக்கு அனுப்பி வைத்தனர். பின் அவர்கள் நன்றாக வாழ்ந்தனர்,
லாடனேந்தலைச் சேர்ந்த ஆறுமுகம் மகள் கொத்தங்குளம் முருகன் என்பவருக்கு
வாழ்க்கைப்பட்டாள். அவள் தன்னைத் தன்னுடைய மாமனாரும் மாமியாரும் வாழவிடாமல் கொடுமைப்படுத்துவதாக லாடனேந்தல் பஞ்சாயத்துத் தலைவரிடம் 1998 ஆம் ஆண்டு ஆடி மாதம் 20ஆம் தேதி முறையிட்டார். வழக்கினை விசாரித்த பஞ்சாயத்தார் ஆறுமுகம் மகள் மாமனார்-மாமியாரைக் கண்டித்து அறிவுரை கூறினர். கணவன் மனைவியைச் சேர்த்து வாழ வைத்தனர்.
கல்லல் ஒன்றியம் கண்டரமாணிக்கம் தெய்வேந்திரன் என்பவர் தன்னுடைய மனைவி தன் தாயாரை மதிப்பதில்லை என்றும், மண விலக்குச் செய்து வைக்க வேண்டுமென்றும் 1990 ஆம் ஆண்டு ஐப்பசி 20ஆம் தேதி வழக்குத் தொடர்ந்தார். பஞ்சாயத்தார் விசாரணையில் தெய்வேந்திரன் மனைவியுடன் சேர்ந்திருப்பது தெய்வேந்திரன் தாயாருக்குக் பிடிக்கவில்லை எனவும், தெய்வேந்திரன் தன் தாயார்
160
சொல்கின்றபடி நடப்பவர் என்பதும் தெரிய வந்தன. வழக்கினை விசாரித்த பஞ்சாயத்தார் முதலில் தெய்வேந்திரன் மனைவியை அவள் மாமியார் காலில் விழந்து வணங்கும்படிச் செய்தனர். அதே போல் தெய்வேந்திரன் தாயும், நான் இனிமேல் என் மருமகளை மகளாக மதிப்பேன், இது சத்தியம் என்றாள். பிரச்சனை அத்துடன் முடிந்தது. இக்குடும்பம் நிம்மதியாக வாழ்ந்து வருகின்றது.
வாழ விருப்பமின்மை
கணவன்-மனைவி குடும்பச்சண்டைக்கு வாழ விருப்பமின்மையும் காரணமாக அமைகின்றது. மானாமதுரை ஒன்றியம் முருகப்பஞ்சான் கிராமத்தைச் சேர்ந்த வசந்தி என்பவள் தன்னுடைய கணவன் தினகரன் தன்னுடன் வாழ விருப்பமில்லாமல் கொடுமைப்படுத்துகின்றான் எனப் பஞ்சாயத்துத் தலைவரிடம் 2000 ஆம் ஆண்டு ஆனி மாதம் 15 ஆம் தேதி முறையீடு செய்தாள். தினகரன் பஞ்சாயத்தார்களிடம் தான் தன் மனைவி வசந்தியுடன் வாழவிரும்புவதாகவும், ஆனால் அவள் ஒழுங்காக நடந்துகொள்வதில்லை; அடிக்கடி அவள் தாயார் வீட்டிற்குச் செல்கிறாள் என்றும் கூறினான்.” பஞ்சாயத்தார் வசந்தி அவள் தாயார் வீட்டிற்கு அடிக்கடி செல்லக்கூடாது எனவும் அப்படிச் செல்வதானால் அவள் கணவனுடன்தான் செல்ல வேண்டுமெனவும் தீர்ப்புக் கூறினர். பஞ்சாயத்தார் அவர்களிடம் எழுதியும் வாங்கிக் கொண்டனர்.
கிராம வழக்கு மன்றங்களில் குடும்பச் சண்டை காரணமாகக் கணவன் மனைவியைப் பிரிந்து வாழ்வதையும், பஞ்சாயத்தார் அவர்களைச் சேர்த்து வாழ வைத்ததையும் பற்றிய வழக்குகளும் கிடைத்துள்ளன.
மானாமதுரை ஒன்றியம் வேம்பத்தூரைச் சேர்ந்த விசயா என்பவள் தன்னுடைய கணவனுடன் சேர்ந்து வாழாமல் இரண்டு வருடம் தாயார் வீட்டில்
தனியாக இருந்தாள். விசயாவின் கணவன் தன்னுடைய மனைவியைச் சேர்த்து
[61
வாழவைக்க வேண்டுமெனப் பஞ்சாயத்துத் தலைவரிடம் 26.09.1997 இல் முறையிட்டான். வழக்கினை விசாரித்த பஞ்சாயத்தார் விசயாவும் அவள் கணவன் கண்ணனும் சாதாரணமான சிறிய கருத்து வேறுபாடு காரணமாத்தான் இரண்டு வருடம் பிரிந்து வாழ்ந்தனர் என்பதைத் தெரிந்து கொண்டனர்.” பஞ்சாயத்துத் தலைவர் கருத்து வேறுபாடுகளை மறந்து இருவரும் சேர்ந்து வாழ வேண்டுமெனத் தீர்ப்புக் கூறினர். அதே வேம்பத்தூரைச் சேர்ந்த தர்மலிங்கம் என்பவர் தன் மனைவி லெட்சுமி தன்னுடன் சேர்ந்து வாழாமல் அவள் தாயார் வீட்டில் இருப்பதாகவும், அவளைத் தன்னுடன் சேர்த்து வாழ வைக்க வேண்டுமெனவும் வேம்பத்தூர் பஞ்சாயத்துத் தலைவரிடம் 25.08.1995 இல் குற்றம் சாட்டினார்.” ஊர்ப் பொதுமக்கள் அனைவரும் லெட்சுமியை அவள் கணவனுடன் சேர்த்து வாழ வைக்க வேண்டுமெனக் கருத்துத் தெரிவித்தனர். பஞ்சாயத்துத் தலைவர் ஒரு வருடம் லெட்சுமி அவள் தாயார் வீட்டில் தங்கியிருந்தது தவறு என்றும், இனிமேல்,
அவள் தன் கணவனுடன் ஒழுங்காக வாழ வேண்டுமெனவும் தீர்ப்புக் கூறினார்.
கணவன்-மனைவியை ஒழுங்காக வாழ வைக்காமையும் குடும்பத்தில் கணவன்-மனைவியர் சண்டைக்குக் காரணமாக அமைகின்றது.
திருப்புவனம் ஒன்றியம் கருப்பட்டியைச் சேர்ந்த வள்ளி என்பவள் தன்னுடைய கணவன் முத்து இரண்டு வருடங்களாகத் தன்னுடன் சரியாக வாழாமல் தான் தன் தாய்வீட்டில் தங்கியிருப்பதாகவும், தன்னைத்தன் கணவனுடன் சேர்ந்து வாழ வைக்க வேண்டுமெனவும் 1999 ஆம் ஆண்டு ஆனி மாதம் 20 ஆம் தேதி கருப்பட்டிப் பஞ்சாயத்துத் தலைவரிடம் குற்றம் சாட்டினாள்.”” பஞ்சாயத்தார் கணவன்-மனைவி இருவரும் அன்பாகவும், ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்தும், சகிப்புத்தன்மையடனும் ஒத்து வாழவேண்டும் என அறிவுரை கூறி அவர்களைச்
சேர்த்து வாழ வைத்தனர்.
162
மானாமதுரை ஒன்றியம் சீரம்பட்டியைச் சேர்ந்த சாந்தி என்பவள் தன்னுடைய கணவன் ரமேஷ் தன்னை அடித்துத் துன்புறுத்தித் தாய் வீட்டிற்கு அனுப்பி விட்டதாகவும், 16 வருடமாகத் தன்னைத் தேட வில்லை என்றும் வேலூர் பஞ்சாயத்துத் தலைவரிடம் 10.02.1997 இல் குற்றம் சுமத்தினாள்.? பஞ்சாயத்தார் விசாரனையில் ரமேஷ் தன் மனைவியை அடிக்க வில்லை என்றான். சாந்தி அதனை மறுத்தாள். பஞ்சாயத்தார் அவர்களை இனிமேல் சண்டையில்லாமல் இருவரும் சேர்ந்து வாழவேண்டுமென அறிவுரை கூறிச் சேர்த்து வைத்தனர்.
நாட்டரசன் கோட்டையைச் சேர்ந்த பிரேமசுந்தரி திருமணமாகி ஒரு குழந்தைக்குத் தாயான பின் மணவிலக்குப் பெற்றவள். அவள் சத்துணவு அமைப்பாளராகப் பணியாற்றி வந்தாள். அப்பொழுது ஆசிரியர் இராம கிருஷ்ண ஐயரைக் காதலித்துத் திருமணம் செய்து கொண்டாள். பன்னிரெண்டு வருடங்கள் இராமகிருஷ்ண ஐயருடன் சேர்ந்து வாழ்ந்த பின்னர் 1999 ஆம் ஆண்டு ஆனி மாதம் 9ஆம் தேதி பாகனேரி நாட்டுப் பஞ்சாயத்துத் தலைவரிடம் தனக்கு மணவிலக்கு வேண்டுமென முறையிட்டாள்.” வழக்கு விசாரணையில் இராமகிருஷ்ண ஐயர் பிரேம சுந்தரியுடன் சேர்ந்து வாழ விருப்பமில்லை என்பது தெரிய வந்தது. பஞ்சாயத்தார் இராமக்கிருஷ்ண ஐயருக்கும் பிரேமசுந்தரிக்கும் குழந்தை இல்லாததால், பிரேமசுந்தரியின் வாழ்க்கைக்கு ஆதாரமாகத் மதுரைத் திருநகரில் இருந்த இராமகிருஷ்ண ஐயரின் வீட்டை பிரேமசுந்தரியின் பெயரில் எழுதி வாங்கிக் கொடுத்துப் பின்னர் அவர்களுக்கு மணவிலக்குச் செய்து வைத்தனர். படித்த கல்வி கேள்விகளில் சிறந்த பிராமண இனத்தவர்களும் கிராமத்தில் வாழும் நிலையில் அப்பஞ்சாயத்துடன் ஒத்துப் போகும் நிலைக்குக் கட்டுப்பட்டுள்ளனர்.
சிங்கம்புணரி ஒன்றியம் மனக்குடியில் பிறந்த சுகந்தி சிவபுரிப்பட்டியில் மணிவண்ணுக்கு வாழ்க்கைப்பட்டாள். அவள் 1992 ஆம் ஆண்டு வைகாசி மாதம்
20ஆம் தேதி பஞ்சாயத்துத் தலைவரிடம் தன் கணவன் மணிவண்ணன் தன்னைக்
163
கொடுமைப்படுத்துவதாகக் குற்றம் சாட்டினாள்.? மணிவண்ணன் பஞ்சாயத்தார்களிடம் தனக்குச் சுகந்தியுடன் வாழ விருப்பமில்லை என்றான். அதற்கான காரணத்தை மணிவண்ணன் சொல்ல மறுத்தான், பஞ்சாயத்தார் சமாதானத்தையும் அவன் ஏற்றுக்கொள்ளவில்லை. ஆதலால் பஞ்சாயத்தார் மணிவண்ணன் சுகந்திக்கு ரூபாய் 30,000 தீர்வைத் தொகைக் கட்டவேண்டுமென்று தீர்ப்புக் கூறினர், அத்தீர்ப்பின்படி மணிவண்ணன் ரூபாய் 80,000 த்தைச் சுகந்திக்குக் கட்டிவிட்டுப் பிரிந்துச் சென்றான்.
கணவன் மனைவி பிரச்சனைக்கு உளவியல் அடிப்படையிலான பிடிவாதம், விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையின்மை, குடும்ப நிலை பேசுதல், குடிப்பழக்கம் போன்ற பல காரணங்கள் சேர்ந்து வாழாமைக்குச் காரணங்களாக
வெளிப்படுகின்றன. ஆண், பெண்களின் ஒழுங்கீனம் கணவன் இரண்டாம் திருமணம் செய்து கொள்ளல், கணவன் மோசமான
குணமும் நடத்தையும் உள்ளவனாக இருத்தல், மனைவி மற்றொரு ஆடவனுடன் ஓடி விடுதல், மனைவியின் தவறான பாலுறவு, கணவனும் மனைவியும் தகாத பாலுறவு
கொண்டிருத்தல் போன்ற ஒழுங்கீனங்களால் குடும்பத்தில் கணவன்- மனைவியருக்கிடையே பிரச்சனைகள் ஏற்படுகின்றன. குடும்ப அமைப்புச் சிதைவடைகின்றன.
கல்லல் ஒன்றியம் செம்பனூர்க் கிராமத்தில் கணவன் தனக்கு முதல் மனைவியும் பிள்ளைகளும் இருக்கும் போது மற்றொரு பெண்ணைச் சேர்த்துக் கொண்டான். இரண்டு மனைவிகளும் கணவன் தங்களுக்குத்தான் சொந்தம் என்று ஆஞ்சூர் நாட்டுப் பஞ்சாயத்துத் தலைவர் நாட்டாமை ௧௫. நாகராசனிடம் 1980 ஆம்
ஆண்டு வைகாசி மாதம் 16ஆம் தேதி வழக்கினை முறையிட்டனர். வழக்கினை
164
விசாரித்த நாட்டாமை தனது தீர்ப்பில், முதல் மனைவியிடம் உள்ளது தான் இரண்டாவது மனைவியிடமும் உள்ளது. முதல் மனைவியை விட்டுவிட்டு இரண்டாவது மனைவியைக் கட்டக்காரணம் கணவனது காமப் பசி ஆதலால் கணவன் தன் இரண்டாவது மனைவியுடன் தான் வாழ வேண்டும் என்றார். ஆனால் அவர் இதுவரை சம்பாதித்த சொத்துக்கள் அனைத்தையும் முதல் மனைவிக்கும் அவளது பிள்ளைகளுக்கும் எழுதிக் கொடுத்து விட வேண்டும். அவர் இரண்டாவது மனைவியுடன் எவ்வித உடைமைகளும் இல்லாமல் தனியாக வெளியேற வேண்டும் என்றார். அதன்படி வீட்டை விட்டுத் தனியாக வெளியேறிய அவர் பிள்ளைப் பெற்றுச் சொத்துக்களையும் சேர்த்து வாழ்ந்து வருகின்றார்£ இந்த வழக்கின் தீர்ப்பு உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ரங்கநாத் மிஸ்ராவால் ஏற்றுக் கொள்ளப்பட்டு பாராட்டபட்டதாகும். தீர்ப்பினை வழங்கிய நாட்டாமை ௧௫. நாகராசனை 18.08.1988 இல் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி
ரங்கநாத் மிஸ்ரா பாராட்டியுள்ளார். (புகைப்பட நகல் இணைக்கப்பட்டுள்ளது)
கல்லலைச் சேர்ந்த தெய்வானை என்பவள் தன் கணவன் சொக்கலிங்கம் தன்னையும் தன் இரு குழந்தைகளையும் விட்டுவிட்டு நாட்டரசன் கோட்டையில் வேறொரு பெண்ணைத் திருமணம் து கொண்டதாகவும், தன் கணவன் தனக்கே சொந்தம் எனவும் கல்லல் நாட்டார் பஞ்சாயத்துத் தலைவரிடம் 1999 ஆம் ஆண்டு சித்திரை மாதம்20 ஆம் தேதி முறையிட்டாள். பஞ்சாயத்தார்களிடம் சொக்கலிங்கம் தன்முதல் மனைவி தெய்வானை இரவில் தன்னை ஒதுக்குவதாகக் கூறினார். பஞ்சாயத்தார் பின்னர் நாட்டரசன் கோட்டைக் கிராமத்தார்களை அழைத்து விசாரித்தனர். சொக்கலிங்கத்திற்கு இரண்டாவதாகப் பெண் கொடுத்த பெண்ணின் பெற்றோர்கள் தெரியாமல் தங்கள் பெண்ணைக் கொடுத்து விட்டதாகவும், தங்கள் பெண்ணை வாழவைக்க வேண்டுமெனவும் பஞ்சாயத்தாரிடம்
வேண்டினர். அதனைப் பஞ்சாயத்தார் ஏற்கவில்லை. நாட்டராசன் கோட்டைப்
165
பெண்ணைத் திருமணம் செய்து கொண்டதற்காகச் சொக்கலிங்கத்திற்கு ரூபாய் 90,000 அபராதம் போட்டு அந்தப் பணத்தை நாட்டரசன் கோட்டைப் பெண்ணிற்குக் கொடுத்து அந்தப் பெண்ணைத் தீர்த்து வைத்தனர். பின்னர் தெய்வாணைக்கு அறிவுரை கூறி அவர்களைச் சேர்த்து வைத்தனர்.
கல்லல் ஒன்றியம் கண்டரமாணிக்கத்தைச் சேர்ந்த ஜானகி என்பவள் தன் கணவன் சுப்பிரமணியன் தன்னை ஏமாற்றிவிட்டு வோறொரு பெண்ணைத் திருமணம் செய்து கொண்டதாகவும், தனக்கு ஒரு வழி சொல்ல வேண்டுமெனவும் பஞ்சாயத்துத் தலைவரிடம் 1982 ஆம் ஆண்டு ஆண்டு வைகாசி மாதம் 6 ஆம் தேதி வழக்குத் தொடர்ந்தாள். சாணார் இனப்பெண்ணாகிய ஜானகி, வளையர் இனத்தை சேர்ந்த சுப்பிரமணியனைக் காதலித்துத் திருமணம் செய்து கொண்டாள்; வழக்கினை விசாரித்த பஞ்சாயத்தார் ஜானகிக்கு வாழ்க்கைப் பாதுகாப்புத் தொகையாக ரூபாய் 10,000த்தைச் சுப்பிரமணியன் கொடுக்க வேண்டுமெனத் தீர்ப்புக் கூறினர்.
செம்பனூர் ராஜேஸ்வரி பி.ஏ பட்டதாரி, மூன்றாண்டுகளுக்கு முன்னர் காரைக்குடி கோவிந்தன் செட்டியார் மகனைத் திருமணம் செய்து கொண்டாள், இரண்டு நாள் அவனுடன் வாழ்ந்த அவள் அவன் ஒழுகலாறுகளைக் கவனித்து அவனுடன் தான் வாழ முடியாது எனக் கல்லல் நகரத்தார் தலைவரிடம் 1988 ஆம் ஆண்டு வைகாசி மாதம் 8 ஆம் தேதி வழக்குத் தொடர்ந்தாள்.” வழக்கினை விசாரித்த பஞ்சாயத்தார்; கோவிந்தன் செட்டியார் மகன் ஆண்மையில்லாதவன் என்றும், கோவிந்தன் செட்டியார் மனைவி தன் மகனுக்குப் பல பெண்களை ஏமாற்றிக் கட்டி வைத்த உண்மையும் தெரிய வந்தது. பஞ்சாயத்தார் தீர்ப்பில் திருமணத்தில் வரதட்சிணையாகக் கொடுத்த ரூபாய் 10,000 த்தையும், மாமியார் சீதனத்திற்காக ரூபாய் 90,000 மும் கோவிந்தன் செட்டியார் மகன் கொடுக்க வேண்டுமெனக் கூறினர். கோவிந்தன் செட்டியார் மனைவியிடமிருந்து சீதனப்
166
பொருட்களையும், சீதனப் பணத்தையும் அப்பெண்ணிற்கு வாங்கிக் கொடுத்து அப்பெண்ணைக் தீர்த்து வைத்தனர்.
கல்லல் ஒன்றியம் தவகியேந்தல் பட்டியைச் சேர்ந்த மெய்யப்பன் ஆசிரியர் தன் மனைவி சோதி தன்னையும் தன்னுடைய இரண்டு குழந்தைகளையும் விட்டுவிட்டு வேறொருவனைக் கூட்டிக் கொண்டு ஓடிவிட்டாள் என்று பஞ்சாயத்துத் தலைவரிடம் 19.92 ஆம் ஆண்டு மார்கழி மாதம் 22 ஆம் தேதி குற்றம்
சாட்டினார்.”
சோதி பஞ்சாயத்தார்களிடம் தான் மெய்யப்பனுடன் வாழ முடியாது என்றாள். பஞ்சாயத்தார் கலந்து பேசி சோகிக்கு ரூபாய் 30,000 அபராதம் போட்டு அந்தப்பணத்தை மெய்ப்பனிடம் கொடுத்தனர். மெய்ப்பனிடமிருந்து சோதியை விலக்கி வைத்தனர். குழந்தை இரண்டும் சோதியைச் சேர்ந்தது என்றும் அவள் விருப்பப்பட்ட காதலனை சோதி மணந்து கொண்டு வாழலாம் என்றும் பஞ்சாயத்தார் தீர்ப்புக் கூறினர்.
காளையார்கோயில் ஒன்றியம் பாவாகுடி இராமலிங்கம் என்பவர் தன் மனைவி விசயலெட்சுமி கருப்பையா என்பவரிடம் பாலுறவு வைத்திருந்ததைத் தானும் தன் குடும்பத்தாரும் நேரடியாகப் பார்த்ததால் தன் மனைவியை விவாகாரத்துத் செய்து தர வேண்டுமென்று 1998 ஆம் ஆண்டு மார்கழி மாதம் 23ஆம் தேதி பஞ்சாயத்துத் தலைவரிடம் முறையிட்டார். பஞ்சாயத்தார் முன்னிலையில் கருப்பையா தன் குற்றத்தை ஒப்புக் கொண்டார், பஞ்சாயத்தார் கருப்பையாவைக் கண்டித்து விசயலெட்சுமியைத் திருந்தி வாழவேண்டுமென்று அறிவுறுத்தி மீண்டும் கணவன்-மனைவியைச் சேர்த்து வாழவைத்தனர். அதன் பின்னர் இராமலிங்கமும் விசயலெட்சுமியும் மகிழ்ச்சியாக இன்றுவரை சேர்ந்து வாழ்ந்து வருகின்றனர்.
சிவகங்கை ஒன்றியம் கண்டாங்கிப்பட்டி உமாராணி என்பவள் தன் கணவன்
அதே ஊரைச் சேர்ந்த சாணார் இனப்பெண்ணுடன் பாலுறவு வைத்திருப்பதாக 1990
167
ஆம் ஆண்டு மாசிமாதம் 10 ஆம் தேதி பஞ்சாயத்துத் தலைவரிடம் குற்றம் சாட்டினாள். உமாராணியின் கணவன் பாண்டி பஞ்சாயத்துத் தலைவரிடம்; உமாராணி சிவகங்கையில் தையல்காரன் ஒருவனுடன் தொடர்பு வைத்திருப்பதால் அவளுடன் வாழ முடியாது என்றான். உமாராணியும் பாண்டியும் தங்கள் குற்றங்களைப் பஞ்சாயத்தார் முன்னிலையில் ஒத்துக் கொண்டனர்." வழக்கினை விசாரித்த பஞ்சாயத்தார் கணவன்-மனைவி இருவரும் தவறாகவும் ஒழுக்கக் கேடாகவும் நடந்திருக்கின்றார்கள். இனிமேலும் அவர்கள் இவ்வாறு நடந்து கொண்டால் இருவருக்கும் தண்டனை கிடைக்கும். இனிமேல் இருவரும் திருந்தி வாழ வேண்டுமென்று அவர்களைச் சேர்த்து வைத்து அறிவுரை கூறிச் சமாதானம் செய்து வைத்தனர்.
ஆண், பெண்களின் ஒழுங்கீனம், தவறான நடத்தைகள், கணவன் இரண்டாம் திருமணம் செய்து கொள்ளல், மனைவி மற்றொரு ஆடவனுடன் ஓடிவிடுதல் போன்ற காரணங்களினால் குடும்பத்தில் பிரச்சனைகள் தோன்றுகின்றன என்பதை பஞ்சாயத்திற்கு வரும் வழக்குகள் வழி அறிய முடிகிறது.
சோம்பேறித்தனம்
கணவன் வேலைக்குச் செல்லாமல், மனைவி அன்றாடம் உழைத்துச் சம்பாதிக்கும் பணத்தையும் எடுத்துக் குடித்து விடுவதால் குடும்பத்தில் பிரச்சனை ஏற்படுகின்றது. இதற்குக் கணவனின் சோம்பேறித்தனமே காரணமாகும்.
இளையான்குடி ஒன்றியம் திருவள்ளூரைச் சேர்ந்த காளியம்மை என்பவள், தன்னுடைய கணவன் ஒழுங்காக வேலைக்குச் செல்லாமல் தினமும் குடித்துவிட்டு வந்து தன்னைக் கொடுமைப்படுத்துவதாகத் திருவள்ளூர்ப் பஞ்சாயத்துத் தலைவரிடம் 1991 ஆம் ஆண்டு மார்கழி மாதம் 2 ஆம் தேதி குற்றம் சாட்டினாள்.
பஞ்சாயத்தார்களிடம் காளியம்மை தன்னுடைய கணவன் பஞ்சவர்ணம் தினமும்
168
குடித்துவிட்டு வந்து தன்னை அடித்துக் கொடுமைப்படுத்தித் தகாத முறையில் நடந்து கொள்வதாகவும், தான் அன்றாடம் உழைத்துச் சம்பாதிக்கும் பணத்தையும் எடுத்துக் குடித்து விடுவதாகவும் ஒழுங்காக வேலைக்குச் செல்வதில்லை என்றும் முறையிட்டார்.” பஞ்சவர்ணம் தன்னுடைய சோம்பேறித்தனத்தையும் குற்றத்தையும் ஒப்புக் கொண்டு பஞ்சாயத்தார் முடிவுக்குக் கட்டுப்படுவதாகக் கூறிக் கும்பிட்டு விழந்தான். பஞ்சாயத்தார் தீர்ப்பில் பஞ்சவர்ணம் நாள் ஒன்றுக்கு ரூபாய் 20 தன் மனைவியிடம் கொடுக்க வேண்டும் எனவும், வேலையில்லாத நாட்களில் பணம் கொடுக்கத் தேவையில்லை எனவும், பஞ்சவர்ணம் இனிமேல் தன் மனைவியை அடிக்கவும் கூடாது, குடிக்கவும் கூடாது எனவும் அறிவுரை கூறிக் கண்டித்து அனுப்பினர். அன்றிலிருந்து பஞ்சவர்ணம் ஒழுங்காக வேலைக்குச் சென்றான்.
ஊதாரித்தனம்
கணவனின் மதுப்பழக்கமும், ஊதாரித்தனமும், மனைவியை அடித்துத் துன்புறுத்துதற்கும் கணவன்-மனைவியர் குடும்பச் சண்டைகளுக்கும் காரணங்களாக அமைகின்றன. நாட்டரசன் கோட்டையைச் சேர்ந்த பிச்சையன் மனைவி ரெத்தினம் என்பவள், தன்னுடைய கணவன் குடித்துவிட்டு வந்து கொடுமைப்படுத்துவதால் தனக்கு மணவிலக்கு வேண்டுமென்று நாட்டரசன் கோட்டைப் பஞ்சாயத்துத் தலைவரிடம் 1996 ஆம் ஆண்டு வைகாசி மாதம் £ ஆம் தேதி வேண்டினாள். ரெத்தினம் பிச்சைக்கு இரண்டாவது மனைவியாவாள். பஞ்சாயத்தார் பிச்சையின் குடிப்பழக்கத்தைக் கண்டித்து கணவன்-மனைவி இருவரும் ஒற்றுமையாக வாழவேண்டுமெனச் சமாதானம் செய்து வைத்தனர்.
திருப்பத்தூர் ஒன்றியம் கீழச்செவல்பட்டியைச் சேர்ந்த விசயா என்பவள் ஒரு பெண் குழந்தைக்குத் தாயான பின்னர் தன்னுடைய கணவன் பெரிய குடிகாரன் என்றும் அவனுடன் தான் வாழமுடியாது என்றும் கூறிக் கணவனை
விட்டுப் பிரிந்து பதினைந்து வருடங்களாகத் துவரங்குறிச்சியில் தன்னுடைய தந்ைத
169
வீட்டில் வாழ்ந்து வந்தாள். விசயா-கண்ணன் ஆகியோரின் மகள் பெரிய பெண் ஆன பின்னர் கணவனும் மனைவியும் சேர வேண்டுமென அவர்களின் உறவினர்கள் கேட்டுக்கொண்டதற்கு இணங்க 1999 ஆம் ஆண்டு மார்கழி மாதம் 20 ஆம் தேதி கீழச்செவல்பட்டியில் கிராமப் பஞ்சாயத்துக் கூட்டப்பட்டது.” கண்ணன் திருந்தி விட்டான் என்றும் இனிமேல் குடிக்க மாட்டான் என்றும் பஞ்சாயத்தார் விசயாவிற்கு உறுதி வழங்கி அவர்களைச் சேர்த்து வைத்தனர். கணவனின் குடிப்பழக்கம் மற்றும் ஊதாரித்தனத்தினால் மனைவி பல வருடங்கள் பிரிந்து வாழ்வதையும் அறியமுடிகின்றது.
திருப்புவனம் ஒன்றியம் லாடனேந்தலைச் சேர்ந்த அன்னபூர்ணம் என்பவள் தன்னுடைய கணவன் தினந்தோறும் குடித்துவிட்டு வந்து தன்னைக் கொடுமைப்படுத்துவதாக 2000 ஆம் ஆண்டு கார்த்திகை மாதம் 19 ஆம் தேதி லாடனேந்தல் பஞ்சாயத்துத் தலைவரிடம் குற்றம் சாட்டினாள். பஞ்சாயத்தார்களிடம் அன்னபூர்ணம் தன் கணவன் முருகேசன் குடித்துவிட்டு வந்து தன்மைப் பெல்ட்டால் அடித்துத் துன்புறுத்துவதாகக் கூறினாள்." பஞ்சாயத்தார் முருகேசனைக் கடுமையாகக் கண்டித்தனர். இனிமேல் இவ்வாறு நடந்துகொள்ளக் கூடாது என்று அவனை எச்சரித்து அனுப்பினர்.
சிங்கம்புணரி ஒன்றியம் எஸ்.வி.மங்களத்தைச் சேர்ந்த சரசு தன் கணவன் சுப்பையா தினந்தோறும் குடித்துவிட்டு வந்து தன்னைக் கொடுமைப்படுத்துவதாகப் பஞ்சாயத்துத் தலைவரிடம் 1995 ஆம் ஆண்டு மார்கழி மாதம் 10 ஆம் தேதி குற்றம் சாட்டினாள். அவர்களுக்கு 42 படிக்கும் ஒரு மகனும் இரண்டு பெண் குழந்தைகளும் இருந்தனர். 42 படிக்கும் அவர்களது மகன் தங்களுக்குத் தந்தை வேண்டாம் என்றும், அவர் தங்களுடன் தங்கியிருக்கக் கூடாது என்றும் பஞ்சாயத்தார்களிடம் கூறினான். சரசுவும் தன் கணவனைத் தீர்த்து வைத்துவிடுமாறு அழுதாள்.”
வழக்கினை விசாரித்த பஞ்சாயத்தார் அன்றிலிருந்து சுப்பையா துணிகள் தேய்க்கும்
170
வருமானத்தை அப்படியே தன் மனைவி சுரசுவிடம் தந்துவிட வேண்டும். நாளொன்றுக்கும் பத்துரூபாய் மட்டும் பெற்றுக் கொள்ள வேண்டும். இனிமேல் குடிக்குக்கூடாது என்று தீர்ப்புக் கூறினர். அன்று முதல் சரசுவின் கணவன் திருந்தி பொறுப்பாகக் குடும்பத்தைக் கவனித்து வருகின்றான்,
இளையான்குடி ஒன்றியம் சிறுவாளையைச் சேர்ந்த ராக்கு என்பவள் தன்னுடைய கணவன் நடத்துநர் செல்வம் குடும்பப் பொறுப்பில்லாமல் தன்னை அடித்துத் துன்புறுத்துவதாக மேலச் சூரவந்திப் பஞ்சாயத்துத் தலைவரிடம் 1997 ஆம் ஆண்டு ஐப்பசி மாதம் 19ஆம் தேதி குற்றம் சாட்டினாள். பஞ்சாயத்தார் விசாரணையில் நடத்துநர் செல்வம் ஒரு பேராசைக்காரன் ஊதாரித்தனமாகச் செலவு செய்பவன், அவன் தன் மனைவியைக் கொடுமைப்படுத்தியது உண்மைதான் எனத் தெரிந்து கொண்டனர். பஞ்சாயத்தார் தீர்ப்பால் நடத்துநர் செல்வத்திடம் இனிமேல் அவன் தன் மனைவியிடம் அன்பாக நடந்து கொள்ள வேண்டும். மாட்டை அடிப்பது போல் அப்பெண்ணை அடிக்கக் கூடாது, மீறி அப்பெண்ணைக் கொடுமைப்படுத்தினால் பஞ்சாயத்தார் கடுமையான நடவடிக்கை எடுப்பார்கள் என்று கூறினர். மூன்று வருடங்கள் கணவனுடன் வாழாமல் இருந்த ராக்குவைக் கணவனுடன் சேர்த்துப் பஞ்சாயத்தார் வாழ வைத்தனர். அதே இளையான்குடி ஒன்றியம் பெரும்பாளையைச் சேர்ந்த மாரியம்மாள் தன்னுடைய கணவன் ரமேஷ் தன்னை அடித்துத் துன்புறுத்துவதாகவும், தன்னைத் தன்னுடைய உறவினர்கள் வீடுகளுக்குச் செல்ல அனுமதிப்பதில்லை எனவும் 1998 ஆம் ஆண்டு புரட்டாசி மாதம் 7 ஆம் தேதி பஞ்சாயத்துத் தலைவரிடம் முறையிட்டாள்.” வழக்கினை விசாரித்த பஞ்சாயத்தார் ரமேஷிடம் ஒழுங்காகவும் அமைதியாகவும் குடும்பம் நடத்த
வேண்டுமென்று அறிவுரை கூறினர்.
171
குழந்தை இன்மை
குழந்தை இன்மையும் கணவன்-மனைவி குடும்பச் சண்டைக்கு முதன்மைக் காரணமாக அமைகின்றது. குழந்தை இல்லாத காரணத்தால் கணவன் மனைவியை மணவிலக்குச் செய்யும் நிலைக்கு வந்துவிடுவதை அறியமுடிகின்றது.
சிவகங்கை ஒன்றியம் பச்சேரிக் கிராமத்தைச் சேர்ந்த கணேசன், தன் மனைவி முத்து தன்னுடன் சேர்ந்து வாழ மறுப்பதாகவும், தங்களுக்குக் குழந்தை இல்லாததால் அவளை மணவிலக்குச் செய்து வைக்க வேண்டுமென்றும் பஞ்சாயத்துத் தலைவரிடம் 07.05.1985 இல் முறையிட்டார். தீர்ப்புச் சொல்லாமல் அரசனூர் நாட்டுப் பஞ்சாயத்துக் கூட்டம் முடிந்தது. பின்னர் பக்கத்து நாட்டுத் தலைவர்கள் தலைமையில் பஞ்சாயத்து நடைபெற்றது.” பஞ்சாயத்தார்களிடம் கணேசன், தன்னுடைய மனைவி முத்து இரண்டு வருடம் அவள் தாய் வீட்டில் தங்கியிருந்துவிட்டுத் தற்பொழுது வந்துள்ளாள். எங்களுக்குக் குழந்தையில்லை; நான் வேறு திருமணம் செய்ய வேண்டும்; அவளைத் தீர்த்து வையுங்கள் என்று முறையிட்டார். பின்னர் பஞ்சாயத்தார்கள் நாட்டுத் தலைவர்கள் முன்னிலையில் அவர்கள் இருவரிடமும் எழுதி வாங்கிக் கொண்டு, அவர்களை விவாகரத்துச் செய்து வைத்தனர். அவர்கள் இருவரும் வேறு திருமணம் செய்து கொள்ளலாம் எனத் தீர்ப்பளித்தனர். பாலியல்
குடும்ப வாழ்க்கைக்கு மிகவும் அவசியமானது பாலியல் உறவாகும். கணவன்- மனைவியரின் தகாத பாலுறவுகள், கள்ளத் தொடர்புகள் ஆகியன ஒற்றுமையையும் சமுதாய ஒழுக்கத்தையும் பெரிதும் பாதிக்கின்றன.
இளையான்குடி ஒன்றியம் திருவள்ளூர் (தெற்கு) இராமாயி தன் கணவன் முருகன் இன்னொரு பெண்ணுடன் தொடர்பு வைத்துத் தம்மையும் தன்னுடைய
இரண்டு பிள்ளைகளையும் ஒதுக்குவதாகவும் தன் கணவனைத் தன்னுடன் சேர்த்து
[72
வாழ வைக்க வேண்டுமென்றும் பஞ்சாயத்துத் தலைவரிடம் 1992 ஆம் ஆண்டு தை மாதம் 10 ஆம் தேதி முறையிட்டாள்.” பஞ்சாயத்தார் விசாரணையில் முருகன் வைத்திருந்த பெண் வீட்டார், எங்கள் பெண் இரண்டாம் தாரமாக வாழ வேண்டும், அல்லது இழப்பீடு வேண்டும், எனக் கேட்டனர், வழக்கினை விசாரித்த பஞ்சாயத்தார். ஏற்கனவே திருமணமாகி இரண்டு பிள்ளைகளுக்குத் தந்தை எனத் தெரிந்தும் அவருடன் தகாத முறையில் பழகித் தொடர்பு வைத்து ஒரு பெண்ணின் குடும்ப வாழ்க்கையைக் செடுத்ததற்காக இந்தப் பெண்ணிற்கு ரூபாய் 500 அபராதம் விதிக்கிறோம். என்று தீர்ப்புக் கூறி அந்தப் பெண்ணை ஒதுக்கிவிட்டு முருகன் இராமாமி இருவரையும் சேர்ந்து வாழ வைத்தனர். பஞ்சாயத்தாரின் இந்தத் தீர்ப்பு குடும்பம் மற்றும் சமுதாய ஒழுக்கத்தைப் பேணும் வகையில் அமைந்திருக்கின்றது.
காளையார்கோவில் ஒன்றியம் நாயனேந்தல் கிராமத்தைச் சேர்ந்த அமிர்தம் தன்னுடைய கணவன் செல்வராசு பல பெண்களுடன் பாலுறவு வைத்துள்ளதால் மணவிலக்கும் செய்து வைக்க வேண்டுமெனப் பஞ்சாயத்துத் தலைவரிடம் 1995 ஆம் ஆண்டு சித்திரைமாதம் 3 ஆம் தேதி முறையிட்டாள்.” பஞ்சாயத்தார் விசாரணையில் செல்வராசு மோசமான நடத்தையும் குணமும் உள்ளவர் என்பதையும் பல பெண்களுடன் அவருக்குத் தொடர்பு உண்டு என்பதையும் தெரிந்து கொண்டனர். தன் குற்றத்தைச் செல்வராசு ஒப்புக் கொண்டதால், பஞ்சாயத்தார் இரண்டு குழந்தைகளுக்குத் தந்தையான அவன் ஒழுக்கமாக நடந்து தன் மனைவியை வாழ வைக்க வேண்டும் இல்லையேல் ஊரைவிட்டுத் தள்ளி வைத்து விடுவோம் என எச்சரித்துத் தீர்ப்புக் கூறினர், அதன் பின்னர் அவன் மனம்திருந்தி ஒழுங்காக வாழ்ந்து வருகின்றான்.
கல்லல் ஒன்றியம் கண்டரமாணிக்கம் ஈஸ்வரியின் கணவன் தன் மனைவி நாச்சியப்பன் என்பவரிடம் கள்ளத் தொடர்பு வைத்துள்ளாள் என்று 1985 ஆம்
ஆண்டு கார்த்திகை மாதம் 25 ஆம் தேதி கண்டரமாணிக்கம் பஞ்சாயத்துத்
173
தலைவரிடம் குற்றம் சாட்டினார். விசாரணையில் நாச்சியப்பன், ஈஸ்வரி கள்ளத் தொடர்பு உண்மை என்பதையும், ஈஸ்வரிக்கு நாச்சியப்பன் கடிதம் எழுதியதையும் ஒத்துக் கொண்டனர்”? பஞ்சாயத்தார் ஈஸ்வரியையும் அவள் கணவனையும் சேர்த்து வைப்பதற்காக நாச்சியப்பனைப் பொய் சொல்லுமாறு வேண்டினர். அதன்படி நாச்சியப்பன், நான் ஈஸ்வரியை விரும்பினேன், ஆனால் அவள் என் விருப்பத்தை மறுத்தாள், அதனால் தான் நான் அவளுக்குக் கடிதம் எழுதினேன், ஈஸ்வரிமேல் தவறு இல்லை, என்னை மன்னித்து விடுங்கள், என்று பஞ்சாயத்தார் முன்னிலையில் கும்பிட்டு விழுந்தான். இதனைக் கண்ட கணவன் ஈஸ்வரியை உத்தமி என்று நம்பினான். பின்னர் பஞ்சாயத்தார் கணவன் மனைவியைச் சேர்த்து வைத்தனர். பஞ்சாயத்தார் குடும்ப நலன் கருதி சில வேளைகளில் வழக்குத் தொடுத்தவர் குற்றம் சாட்டப்பட்டவரைத் தனியாக அழைத்து இது போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்வதும் உண்டு.
கல்லல் ஒன்றியம் தவசியேந்தல்பட்டியைச் சேர்ந்த முத்து தன் மனைவி வேன் ஒட்டுநர் ஒருவனுடன் கள்ளத் தொடர்பு வைத்துள்ளாள் என்று பஞ்சாயத்துத் தலைவரிடம் 2000 ஆம் ஆண்டு வைகாசி மாதம் 9ஆம் தேதி குற்றம் சாட்டினார். முத்து பம்பாயில் தங்கியிருக்கும் போது செங்கல் காளவாயிலுக்கு வேலைக்குச் சென்றார் முத்துவின் மனைவி வீரம்மாள். அங்கு அவளுக்கும் வேன் ஓட்டுநர்க்கும் வ் தொடர்பு ஏற்பட்டது.” வீரம்மாள் நான்கு குழந்தைகளுக்குத் தாயாவாள். வழக்கினை விசாரித்த பஞ்சாயத்துத் தலைவர் வீரம்மாளைக் கடுமையாகக் கண்டித்தார். வேன் ஓட்டுநரையும் கண்டித்தார். வீரம்மாளுக்கு நான்கு பிள்ளைகள் இருப்பதால் முத்து அவளை ஏற்றுக் கொண்டு தொடர்ந்து அவளைக் காப்பற்ற வேண்டுமென்று முத்துவிடம் பஞ்சாயத்தார் கேட்டுக் கொண்டனர். குடும்ப நலன்கருதி பஞ்சாயத்தார் கணவன்மார்களிடம் இவ்வாறு வேண்டிக்
கொள்ளுதலுமுண்டு. அதே ஒன்றியம் நடுவிக்கோட்டை மேலயூர் பாக்கியராசு தன்
174
மனைவி லெட்சுமி செங்கல் காளவாயிலில் மதுரை லாரி ஓட்டுநருடன் கள்ளத் தொடர்பு வைத்துள்ளாள் என்று 1998 ஆம் ஆண்டு ஆடி மாதம் 25ஆம் தேதி பஞ்சாயத்துத் தலைவரிடம் குற்றம் சாட்டினார்.” பஞ்சாயத்தார் லெட்சுமியை இரண்டு குழந்தைகளுக்குத் தாயான பின்னர் இவ்வாறு ஒழுக்கமில்லாமல் நடந்து கொள்ளக் கூடாது எனக் கண்டித்தனர். லாரி ஒட்டுநரையும் அடித்துக் கண்டித்தனர். கணவனும் மனைவியும் சேர்ந்து வாழ வேண்டுமெனவும் லெட்சுமி இனிமேல் ஒழுக்கமாக இருக்க வேண்டுமெனவும் பஞ்சாயத்தார் தீர்ப்புக் கூறினர்.
கல்லல் கிராமத்தைச் சேர்ந்த சொக்கலிங்கம் என்பவர் தன் மனைவியின் நடத்தை சரியில்லையென்றும், அவளுடன் வாழ விரும்பவில்லை என்றும் கல்லல் நாட்டார் கண்ணப்பா வள்ளிப்பாவிடம் 1979 ஆம் ஆண்டு வைகாசி மாதம் 5 ஆம் தேதி வழக்குத் தொடர்ந்தார். இந்தப் பஞ்சாயத்து சொக்கலிங்கம் செட்டியார் வீட்டில் நடைபெற்றது.” விசாரணையில் சொக்கலிங்கம் மனைவி நடத்தை தவறுவதற்குச் சொக்கலிங்கமே காரணம் என்று தெரியவந்தது. வழக்கினை விசாரித்த கல்லல் நாட்டார் இரண்டு பெண்குழந்தைகளும் சொக்கலிங்கத்திடம் வளரட்டும் என்றும், அவரது மனைவி அவளது பெற்றோர்களிடம் வாழட்டும் என்றும் அவர்களைப் பிரித்து வைத்துத் தீர்ப்புக் கூறினர்.
கல்லல் ஒன்றியம் ஆராவயல் வள்ளி என்பவள் வீட்டு வேலை (சித்தாள்) செய்வதற்காகக் கல்லலில் இராமய்யா வீட்டிற்குப் பக்கத்தில் தங்கி இருந்தாள். இராமய்யாவிற்கும் வள்ளிக்கும் தொடர்பு ஏற்பட்டது. இராமய்யாவிற்குப் பாகனேரியில் பெண் பார்ப்பது தெரிந்ததும், ஆராவயல் வள்ளி தான் கர்ப்பமாக இருப்பதாகவும், தனக்கு ஒரு வழி சொல்ல வேண்டுமெனவும் 1995 ஆம் ஆண்டு பங்குனி மாதம் 4ஆம் தேதி கல்லல் பஞ்சாயத்துத் தலைவரிடம் வழக்குத் தொடர்ந்தாள்.” ஆராவயல் நாட்டார், கல்லல் நாட்டாரிடம் அப் பெண்ணை
அழைத்துக் கொண்டு வந்தனர். பஞ்சாயத்தார் விசாரணையில் வள்ளி ஏற்கனவே
175
திருமணம் ஆனவள் என்பதும் அவள் கணவன் ஆராவயலில் இருக்கிறான் என்பதும் தெரிய வந்தது. ஆராவயல் நாட்டார் தங்களுடைய தவறை உணர்ந்து இராமய்யா
பாகனேரியில் திருமணம் செய்து கொள்ளத் தடையில்லை எனத் தீர்ப்புக் கூறினர். மணமுறிவுகள்
கணவன் ஆண்மையில்லாதவனாக இருத்தல், குடும்ப உறவிற்குத் தகுதி இல்லாதவனாக இருத்தல் ஆகியன மணமுறிவுக்கு முக்கியக் காரணங்களாக அமைகின்றன. கணவன் ஆண்மை இல்லாதவனாக இருப்பதால் மனைவி அவனுடன்
சேர்ந்து வாழ மறுத்து மணமுறிவு கேட்கின்றாள்.
கோவினிப்பட்டியைச் சேர்ந்த கன்னையா தன் மனைவி தன்னுடன் சேர்ந்து வாழ மறுக்கின்றாள், அவளைத் தன்னுடன் சேர்ந்து வாழ வையுங்கள் எனச் சாதிப் பஞ்சாயத்துத் தலைவரிடம் 1991 ஆம் ஆண்டு மாசி மாதம் 5 ஆம் தேதி முறையிட்டார்.” கன்னையாவின் மனைவி அன்புக்கரசி பஞ்சாயத்தார்களிடம் கன்னையா ஆண்மை இல்லாதவர் என்றும், பஞ்சாயத்தார் பிரித்து வைக்காவிட்டால் தான் செத்து விடுவதாகவும் கூறினாள். பஞ்சாயத்தார் அன்டுக்கரசியிடம் கன்னையாவிற்கு இ.ழப்புத் தொகை ரூபாய் 20000 வாங்கிக் கொடுத்துப் பிரித்து வைத்தனர்.
இளையான்குடி ஒன்றியம் கோதுக்குடியைச் சேர்ந்த கோமதி என்பவள் தனக்கு விவாகரத்து வேண்டி பஞ்சாயத்துத் தலைவரிடம் 1993 ஆம் ஆண்டு மாசி மாதம் 25 ஆம் தேதி முறையிட்டாள்.” அப்பொழுது கோமதி ஆறுமாதக் கர்ப்பமாக இருந்தாள். பஞ்சாயத்தார்களிடம் தன் கணவன் ஆண்மை இல்லாதவன் என்றும், தன்னுடைய கர்ப்பத்திற்கு அவன் காரணமில்லை என்றும் கூறினாள். பஞ்சாயத்து ஐந்து முறை நடந்தது. ஆறாவது முறை கூடிய பஞ்சாயத்தில் கோமதியின் கணவன் காளிமுத்து ரூபாய் 500 தீர்வைத் தொகை கட்ட வேண்டும். அவன்தான் ஆண்மை
176
இல்லாதவன் எனத் தெரிந்திருந்தும் ஒரு பெண்ணைத் திருமணம் செய்தது குற்றமாகும் எனப் பஞ்சாயத்தார் தீர்ப்புக் கூறினர். கணவன் ஆண்மை இல்லாதவன் என்பதைத் தெரிந்து கொண்ட கோமதி மற்றொரு ஆடவனுடன் பாலுறவு கொண்டாள், கர்ப்பம் அடைந்தாள். அதை கமுக்கமாக அவள் பஞ்சாயத்தார்களிடம் ஒப்புக் கொண்டதால் அவள் கர்ப்பமாக இருப்பதற்கு யார் காரணம்? என விசாரிக்கவில்லை. பஞ்சாயத்தார் அப்பெண்ணிற்கு விவாகரத்துக் கொடுத்தனர்.
காளையார் கோயிலில் சத்துணவுப் பொறுப்பாளராகப் பணியாற்றிய ராக்கு தன் கணவன் நந்தன் குடும்ப உறவிற்குத் தகுதி இல்லாதவர்; அவரை விவாகரத்துச் செய்து வையுங்கள் எனப் பஞ்சாயத்துத் தலைவரிடம் 1995 ஆம் ஆண்டு மாசி மாதம் 20 ஆம் தேதி வழக்குத் தொடர்ந்தாள்.” நந்தனும் ராக்கும் காதலித்துத் திருமணம் செய்து கொண்டவர்கள். திருமணத்திற்குப் பின்னர்தான் அவன் ஆண்மையற்றவன் என்ற விவரம் ராக்குவிற்குத் தெரிய வந்தது. ராக்குப் பிடிவாதமாக மணவிலக்குக் கோரியதால் அவள் நந்தனுக்கு ரூபாய் 5000 கொடுத்து விட்டுப் பிரிந்து செல்லலாம் எனப் பஞ்சாயத்தார் தீர்ப்புக் கூறினர்.
கல்லலைச் சேர்ந்த ராதா என்பவள் தன் கணவர் ஆண்மை இல்லாதவர். இதை வெளியே சொன்னால் என்னைக் கொன்று விடுவதாக மிரட்டுகிறார் எனப் பஞ்சாயத்துத் தலைவரிடம் 1999 ஆம் ஆண்டு ஆனிமாதம் 15 ஆம் தேதி முறையிட்டாள்.” கல்லல் நாட்டார் பஞ்சாயத்துத் தலைவரிடம் ராதா தன் கணவன் நாச்சியப்பன் ஆண்மை இல்லாதவன் என்றும், அவன் அந்த உண்மையை வெளியே சொன்னால் தன்னைக் கொன்று விடுவதாக மிரட்டுவதாகவும், சென்னையிலிருந்து அவனிடம் தப்பித்து வந்ததாகவும் கூறினாள். பின்னர் பஞ்சாயத்துத் தலைவர் நாச்சியப்பனிடம் ரூபாய் 80,000 அபராதமும், மாமியார் சீதனத்திற்காக ரூபாய் 30,000மும் பெற்று அந்தப் பெண்ணிடம் கொடுத்தனர். சீதனப் பொருட்களையும்
177
அப்பெண்ணிற்கு வாங்கிக் கொடுத்து அந்தப் பெண்ணை மணவிலக்குச் செய்து வைத்தனர். பொதுப்பிரச்சனைகள் தொடர்பான வழக்குகள்
இரண்டு கிராமத்தார்களுக்கிடையே நிலவிவந்த கோயில் பிரச்சனைகள், கோயிலில் முதல் மரியாதை, மூப்பு அடிப்படையில் 'அம்பலக்காரர்' என்ற முதல் மரியாதை வேண்டல், கோயில் பிரச்சனையில் மோதிக் கொள்ளல், கோயில் திருவிழாவைத் தடை செய்தல், கோயிலில் உரிமைப் பிரச்சனை, கோயில் மாட்டுப் பிரச்சனை, மஞ்சு விரட்டுத் தகராறு, இரண்டு கிராமங்களுக்கிடையே மோதல், கண்மாயில் மீன் பிடித்தலில் பிரச்சனை, ஊரை விட்டு ஒதுக்கி வைத்தல் போன்ற பொதுப்பிரச்சனைகள் தொடர்பான வழக்குகளையும் சிவகங்கை மாவட்ட கிராம வழக்கு மன்றங்களில் காண முடிகிறது. இத்தகைய வழக்குகளையும் சிவகங்கை
மாவட்ட கிராம வழக்கு மன்றங்கள் தீர்த்து வைத்துள்ளன. இரண்டு கிராமத்தார்களுக்கிடையே நிலவிவந்த கோயில் பிரச்சனைகள்
திருப்பத்தூர் ஒன்றியம் அம்மாபட்டி, செண்பகம் பேட்டை ஆகிய இரண்டு கிராமங்களுக்கும் அய்யனார் கோயில் சொந்தமானதாகும். அக் கோயில் பூசாரியாகச் செண்பகம் பேட்டை வேளாளர் இருந்து வருகின்றார், அம்மாப்பட்டிக் கிராமத்தார் அக்கோயிலுக்குக் குதிரையெடுப்புத் திருவிழா நடத்தக் கூடாது என்று செண்பகம் பேட்டைக் கிராமத்தார் 1999 ஆம் ஆண்டு வைகாசி மாதம் 25 ஆம் தேதி வழக்குத் தொடர்ந்தனர்.” வழக்கு விசாரணையில் செண்பகம் பேட்டைக் கிராமத்தார்கள் தாங்கள் தான் முதல் மரியாதைக் குரியவர்கள் என்று
கூறினர். அம்மாப்பட்டிக் கிராமத்தார்களும் தாங்கள் தான் மரியாதைக் குரியவர்கள்
என்றனர். வழக்கினை விசாரித்த பஞ்சாயத்தார் இரண்டு கிராமத்தார்களும்
176
தனித்தனியாக வேறு வேறு தேதிகளில் குதிரையெடுப்பு நடத்திக் கொள்ளலாம் எனத் தீர்ப்புக் கூறினர்.
கல்லல் ஒன்றியம் வெளியாத்தூர்க் கிராமத்திற்கும் நயினார்பட்டிக் கிராமத்திற்கும் அம்பலகாரர் ஒருவரே, அதன் தலைமையிடம் வெளியாத்தூர் ஆகும். வெளியாத்தூர்க் கிராமத்திற்கும் நயினார்பட்டி அரசப்பனுக்கும் பஞ்சாயத்துத் தேர்தலில் இருந்து முன் விரோதம் இருந்து வந்தது, இதன் காரணமாக வெளியாத்தூர் நயினார் கோயில் திருவிழா தடைப்பட்டு வந்தது. இக்கோயில் திருவிழாவை உடனே நடத்த வேண்டுமென வெளியாத்தூர் கிராம மக்கள் அனைவரும் பட்டமங்கலம், கண்டரமாணிக்கம், நாட்டார்கள் தலைமையிடம் 2000 ஆம் ஆண்டு கார்த்திகை மாதம் 17 ஆம் தேதி வழக்குத் தொடுத்தனர்,” பஞ்சாயத்தார்கள் விசாரணையில் நயினார்பட்டி அரசப்பன் நாடகத்தில் முதல் மரியாதை கேட்டும், கண்மாய் ஏலத்தில் ஆள் வைத்து அடிதடி நடத்தியும், நயினார் கோயில் திருவிழாவைத் தடுத்தும் வந்தது தெரிந்தது. பஞ்சாயத்தார்களிடம் அரசப்பன் தனக்கும் வெளியாத்தூர் குடியுரிமை வேண்டும் என்றார். இதனை வெளியாத்தூர்க் கிராமத்தார் ஏற்றுக் கொள்ளவில்லை. பின்னர் பஞ்சாயத்தார் இருதரப்பினரையும் சமாதானம் செய்து நயினார் கோயில் திருவிழாவினை நடத்த ஏற்பாடு செய்தனர்.
கோயிலில் முதல் மரியாதை வேண்டல்
கல்லல் ஒன்றியம் நரியங்குடிக் கிராமத்தார் தங்களுக்குச் சொந்தமான கருப்பர்கோயில் திருவிழாவில் பக்கத்துக் கிராமமான கட்டக்கான்பட்டிக்கு மரியாதை கொடுத்து வந்தனர். இதைக் காரணம் காட்டிக் கட்டக்கான்பட்டிக் கிராமத்தார் கருப்பர்கோயில் திருவிழாவில் தங்களுக்கு முதல் மரியாதை வேண்டுமெனக் கேட்டனர், இதனை நரியங்குடிக் கிராமத்தார் மறுத்ததால் 1999 ஆம் ஆண்டு பங்குனி மாதம் 23 ஆம் தேதி கிராமப் பஞ்சாயத்துக் கூட்டப்பட்டது.” நரியங்குடிக்
179
கிராமத்தார் தங்களுக்குச் சொந்தமான கருப்பர்கோயிலில் 'நாட்டார்' என்ற அடிப்படையில் கட்டக்கான்பட்டிக்கு மரியாதை கொடுத்ததாகக் கூறினர். இதனைக் கட்டக்கான்பட்டிக் கிராமத்தார் ஏற்றுக் கொண்டனர்.
சிங்கம்புணரி ஒன்றியம் எஸ்.வி. மங்களம் ஆலடி கருப்புக்கோயில் ஆறுகரையைச் சேர்ந்த குடும்பர்களால் வணங்கப்பட்டு வருவதாகும். அக்கோயிலில் முதல் கரையினர் பூசாரியாக இருந்து பூசைகளைச் செய்து வந்தனர். சாமி வீட்டிற்குள் முதல் கரையினர் மட்டும்தான் செல்ல வேண்டும். வழக்கத்திற்கு மாறாக இரண்டாம் கரையினர் தங்களுக்கும் உரிமையுண்டு எனக் கோயில் வீட்டிற்குள் நுழைந்ததால் முதல் கரையினர் 10.05.2000 இல் பஞ்சாயத்துத் தலைவரிடம் வழக்குத் தொடுத்தனர்.” பஞ்சாயத்துத் தலைவர் அக்கோயில் தெய்வத்தையே நம்பித் தீர்ப்புக் கூறினர். மூன்று நாட்கள் அக்கோயிலிலேயே உறங்கினார். அவர் கண்ட கனவின்படி முதல் கரையினர் பூசாரியாகவும், மற்ற கரையினர் அவர்களுக்கு உதவியாகவும் இருக்க வேண்டுமென முடிவு செய்யப்பட்டது.
இளையான்குடி ஒன்றியம் நெம்மேனியைச் சேர்ந்த மறவர் இனப் பொது மக்கள் அதே ஊரைச் சேர்ந்த இடையர் இனப்பொதுமக்களிடம் அவ்வூர்க் கோயில் விழாவில் முதல் மரியாதை தங்களுக்குத்தான் தரப்படவேண்டுமென்று நெம்மேனியைச் சேர்ந்த பத்துஊர் நாட்டுப் பஞ்சாயத்துத் தலைவரிடம் 1999 ஆம் ஆண்டு வைகாசி மாதம் 10ஆம் தேதி வழக்குத் தொடுந்தனர்.”” வழக்கினை விசாரித்த பஞ்சாயத்தார் இருசமுதாயத்திலும் இருவரைத் தேர்ந்தெடுத்துச் சமமாக முதல் மரியாதை வழங்கப்பட வேண்டுமென்று தீர்ப்புக் கூறினர். அத்தீர்ப்பின் படி நெம்மேனியில் இருபது வருடங்களுக்குப்பின்னர் அய்யனார் கோயில் திருவிழா
நடைபெற்றது.
180
மூப்பு அடிப்படையில் அம்பலகாரர் முதல்மரியாதை வேண்டல்
சிவகங்கை ஒன்றியம் மீனாட்சிபுரத்தை்௪ சேர்ந்த ஊர் அம்பலக்காரர் மகன் சேதுசேர்வை தன் தந்தைக்குப் பின்னர் தான் தான் 'அம்பலகாரர்' என்று 1976 ஆம் ஆண்டு ஆடிமாதம் 23 ஆம் தேதி நாலூர் பஞ்சாயத்துத் தலைவரிடம் வழக்குத் தொடுத்தார். வழக்கினை விசாரித்த பஞ்சாயத்தார் சேதுசேர்வை, துரை ஆகிய இருவரையும் அழைத்துப் பேசினர். சேதுசேர்வை பரம்பரையாக மூத்தவன் தான் அம்பலகாரர் என்றார். பஞ்சாயத்தார்கள் அண்ணன், தம்பி ஆகிய இருவரும் வருடத்திற்கு ஒருவர் அம்பலகாரராக இருந்து கொள்ளுமாறு தீர்ப்புக் கூறினர். கோயில் பிரச்சனையில் மோதிக் கொள்ளல்
திருப்புவனம் ஒன்றியம் லாடனேந்தலைச் சேர்ந்த பாண்டி தலைமையில் 25 ஆட்களும் நாகராசு தலைமையில் 24 ஆட்களும் லாடனேந்தல் அம்மன் கோயில் பிரச்சனையில் மோதிக் கொண்டு காவல் நிலையத்தில் அகப்பட்டுக் கொண்டனர், ஊர்க்காரர்கள் காவல் நிலையத்திலிருந்து அவர்களை அழைத்து வந்து 1999 ஆம் ஆண்டு பங்குனி மாதம் 5ஆம் தேதி நாட்டுப் பஞ்சாயத்துத் தலைவர் முன்னிலையில் கிராமப் பஞ்சாயத்தைக் கூட்டினர். பாண்டி, நாகராசு ஆகிய இரு குழுவினரும் ஒரே சாதியைச் சேர்ந்தவர்கள், உறவினர்கள், கோயில் விழாவில் மரியாதை பெறுவதில் யார் பெரியவன் என்பதைக் காட்டுவதற்காக இரு குழுவினரும் மோதிக் கொண்டனர். பஞ்சாயத்தார் பாண்டி, நாகராசு ஆகிய இருவரும் பகைமை பாராட்டக் கூடாது எனவும், இரு குழுவினரும் ஒற்றுமையாக இருந்து வருடா வருடம் சாமிகும்பிட உதவவேண்டுமெனவும் சமாதானம் செய்து வைத்துத் தீர்ப்புக் கூறினர், கோயிலில் உரிமைப் பிரச்சனை
சிங்கம்புணரி ஒன்றியம் குமாரபேட்டை அழகிய நாச்சியம்மன் கோயிலை
உடைத்து அக்கோயிலின் பொருட்களை வெங்கலப்ப நாயக்கர் வாரிசு விற்பதற்கு
181
ஏற்பாடு செய்ததால் குமாரப்பேட்டைக் கிராமத்தார் அவர் மீது 1980 ஆம் ஆண்டு கார்த்திகை மாதம் 10 ஆம் தேதி வழக்குத் தொடர்ந்தனர். அம்மாப்பேட்டைக் கிராமத்தார், நாயக்கர் கோயிலை உடைத்தது தவறு என்றனர். நாயக்கர் தனக்குச் சொந்தமான கோயில் என்றார், வழக்கினை விசாரித்த பஞ்சாயத்தார் அக்கோயில் வெங்கலப்ப நாயக்கரால் கட்டப்பட்டதாதலால் அவரது வாரிசாக நாயக்கர் இருந்து முதல் மரியாதையை ஏற்றுக் கொள்ள வேண்டுமென்று கூறினர். கோயிலை அனைவரும் சேர்ந்து பணம் வசூலித்துப் புதுப்பித்துப் பல்வேறு தடைகளையும் எதிர்ப்புகளையும் தாண்டி 1997 இல் கும்பாபிசேகம் செய்தனர்.
சிங்கம்புணரி ஒன்றியம் கள்ளாப்பேட்டைக் கிராமத்தார் ஆவணிப் பட்டியிலுள்ள ஆகாசக் கருப்பர் கோயில் தங்களுக்குத்தான் சொந்தமானது என்று கள்ளாப் பேட்டைக் கிராமப் பஞ்சாயத்துத் தலைவரிடம் 2000 ஆம் ஆண்டு ஆனி மாதம் 22 ஆம் தேதி வழக்குகள் தொடுத்தனர். பஞ்சாயத்துத் தலைவர் முத்தையா கூட்டத்திற்குத் தலைமை தாங்கினார்.” வழக்கினை விசாரித்த பஞ்சாயத்துத் தலைவர் 1962 இல் தயாரிக்கப்பட்ட பத்திரத்தைக்காட்டி, இரண்டு கிராமத்தார்களுக்கும் அதனை விளக்கி இரண்டு கிராமத்தார்களும் தனித்தனியாகப்
பூசை போடலாம் என்றும், திருவிழா நடத்தலாம் என்றும் தீர்ப்புக் கூறினார். கோயில் மாட்டுப் பிரச்சனை
சிங்கம்புணரி ஒன்றியம் சிவபுரிப்பட்டிக் கிராமத்தார் மாட்டிக்கரைப் பட்டியிலுள்ள கருப்பர் கோயிலுக்குக் கோயில் மாடு கட்டி வந்தனர். இதனை மட்டிக்கரைப்பட்டிக் கிராமத்தார் ஏற்றுக்கொள்ளாமல் தங்கள் ஊர்க்கோயிலுக்குத் தாங்கள் தான் மாடுகட்டுவோம் எனப் பஞ்சாயத்துத் தலைவரிடம் 1993 ஆம் ஆண்டு ஆனிமாதம் 25 ஆம் தேதி வழக்குத் தொடுத்தனர்.“ சிவபுரிப்பட்டிக் கிராமத்தார் பல ஆண்டுகளாக அக்கோயிலுக்கு முதல் காளையைக் கட்டி வந்துள்ளனர். வழக்கினை
விசாரித்த பஞ்சாயத்தார் இரண்டு கிராமத்தார்களையும் சமாதானப்படுத்தி இரண்டு
182
கிராமத்தார்களும் முதல் காளையைக் கட்டி அவிழ்த்தி விடலாம் எனத் தீர்ப்புக்
கூறினர். மஞ்சு விரட்டுத் தகராறு
திருப்புவனம் ஒன்றியம் பூவந்தியில் நடைபெற்ற மஞ்சு விரட்டில் அரசனூர் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்களுக்கும் சுண்ணாம்பூர் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்களுக்கும் மாடுபிடிப்பதில் மோதல் ஏற்பட்டது. இரண்டு கிராமத்தார்களும் ஒரே சாதியைச் சேர்ந்தவர்கள். இதனைக் கேட்டுக் கொடுக்க வேண்டுமென்று அரசனூர்க் கிராமத்தார் ஐந்து ஊர் நாட்டு நாட்டமையிடம் 1985 ஆம் ஆண்டு பங்குனி மாதம் 5ஆம் தேதி வழக்குத் தொடுத்தனர். பஞ்சாயத்து திருமாஞ்சோலையில் நடைபெற்றது. அஞ்சூர் நாட்டுத் தலைவர்களும் பஞ்சாயத்தில் கலந்து கொண்டனர். அந்தக் கூட்டம் எந்த முடிவினையும் எடுக்காமல் முடிவடைந்தது. இன்றும் இவ்விரு நாட்டுத் தலைவர்களின் பிரச்சனையால் இவ்விரு நாட்டைச் சேர்ந்த கிராம மக்களும் தங்களுடைய சொந்தங்களை இழந்து வாழ்ந்து வருகின்றனர். இரண்டு கிராமங்களுக்கிடையே மோதல்
திருபத்தூர் ஒன்றியம் சாத்தன்குடியைச் சேர்ந்த நாயை நேமத்தம்பட்டியைச் சேர்ந்த ஒருவன் எரிந்துவிட்டதால் ஏற்பட்ட வாய்த் தகராறு அவ்விரண்டு கிராமங்களின் மோதலாக மாறியது. இதன் காரணமாகப் பக்கத்து ஊர் நாட்டார்கள் 2 பேரைக் கொண்ட நாட்டுப்பஞ்சாயத்து 1999 ஆம் ஆண்டு ஆவணி மாதம் 20 ஆம் தேதி பிள்ளையார்பட்டியில் நடைபெற்றது. பஞ்சாயத்தார் இரண்டு கிராமங்களையும் சேர்ந்த முக்கியத் தலைவர்களிடம் விசாரித்தனர்,” பின்னர் பஞ்சாயத்தார் ஒரு நாய்ப் பிரச்சனைக்காக இரண்டு கிராமத்தார்கள்
மோதுவது தவறு என்றும், இனிமேல் பகைமையை மறந்து இரண்டு
183
கிராமத்தார்களும் ஒன்றுபட வேண்டுமென்று தீர்ப்புக் கூறினர். இரண்டு
கிராமத்தார்களையும் அவர்கள் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். கண்மாயில் மீன்பிடித்தலில் பிரச்சனை
சிவகங்கை ஒன்றியம் கண்டாங்கிப்பட்டிக் கிராமத்தார் பக்கத்திலுள்ள புளிக்கண்மாயில் பல வருடங்களாக மீன் பிடித்து வந்தனர். புளிக்கண்மாய்க் கிராமத்தார் திடீரெனத் தங்களுக்குத்தான் மீன்பிடிக்கும் உரிமையுண்டு என்று தமராக்கி நாட்டுப் பஞ்சாயத்தார்களிடம் 1995 ஆம் ஆண்டு ஐப்பசி மாதம் 26 ஆம்
6
தேதி வழக்குத் தொடர்ந்தனர்.“ பஞ்சாயத்தார் புளிக்கண்மாய்த் தலைவர் பெருமாள் மகனை அழைத்து விசாரித்தனர். பின்னர் பஞ்சாயத்தார் கண்மாய்ப் பராமரிப்பு, பாசனம் முதலிய அனைத்தும் பல வருடங்களாகக் கண்டாங்கிப்பட்டிக் கிராமம் செய்து வந்திருப்பதால் மீன் பிடிக்கும் முழு உரிமையும் அக் கிராமத்திற்கே தரப்படுகின்றது என்று தீர்ப்புக் கூறினர். புளிக்கண்மாய்த் தலைவருக்கும் கிராமத் தலைவருக்கும் கண்டாங்கிப்பட்டி கிராமத்தார் மீன் கொடுக்க விரும்பினால் கொடுக்கலாம். ஆனால் யாரும் யாரையும் கட்டாயப்படுத்தும் உரிமையில்லை
எனப் பஞ்சாயத்தார் தெளிவாகத் தீர்ப்பில் கூறினர். ஊரைவிட்டு ஒதுக்கி வைத்தல்
இளையாண்குடி ஒன்றியம் புதுவளவுக் கிராமத்தார் அக்கிராமத்தைச் சேர்ந்த அம்மாச்சி மகள் திருமணத்திற்கு யாரும் செல்லக்கூடாது என்று 1991 ஆம் ஆண்டு புரட்டாசி மாதம் 10 ஆம் தேதி வழக்குத் தொடர்ந்தனர். அம்மாச்சி என்பவள் ஊரில் யாருக்கும் மதிப்புக் கொடுக்காமல் அடங்காபிடாரியாகத் திரிகின்றாள்; அவளை ஊரைவிட்டு ஒதுக்கி வைத்துள்ளோம்; அவள் மகள் திருமணத்திற்கு யாரும் செல்லக்கூடாது எனப் புதுவளவுக் கிராமப் பொதுமக்கள் பஞ்சாயத்துத் தலைவரிடம்
கேட்டுக் கொண்டனர்.” பஞ்சாயத்தார் விசாரணையில் அம்மாச்சி என்பவள்
184
தன்னுடைய தவற்றை உணர்ந்து குற்றத்தை ஒப்புக் கொண்டு மன்னிப்புக் கேட்டாள். பஞ்சாயத்துத் தலைவர் அவளை மன்னித்தும் கண்டித்தும் இனிமேல் வாய்த்துடுக்காகப் பேசக்கூடாது என எச்சரித்து அவள் மகள் திருமணத்தில் ஊர்க்காரர்கள் கலந்து கொள்ளலாம் எனத் தீர்ப்புக் கூறினார்.
கொகுப்புரை
சிவகங்கை மாவட்ட 'கிராம வழக்குகளின் வகைகள்' என்னும் இவ்வியலில் கிராமங்களில் களஆய்வில் சேகரித்த வழக்குகள் வகைதொகைப்படுத்தி விளக்கப்பட்டுள்ளன.
இம்மாவட்ட கிராம வழக்குகளை உரிமையியல். வழக்குகள், குற்றவியல் வழக்குகள், குடும்ப வழக்குகள், பொதுப் பிரச்சனைகள் தொடர்பான வழக்குகள்,
என நான்கு பெரும்பிரிவுகளாக வகைமைப்படுத்தலாம்.
கிராம வழக்கு மன்றங்களில் தீர்த்து வைக்கப்பட்டுள்ள உரிமையியல் வழக்குகளைச் சொத்து வழக்குகள், கொடுக்கல்-வாங்கல் வழக்குகள் என இரு பெரும் பிரிவுகளாக வகைமைப்படுத்தலாம். சொத்து வழக்குகளை நடைபாதைத் தகராறு, இடப்பிரச்சனை, நிலப் பிரச்சனை, பாகப்பிரிவினை, வீட்டுமனைப் பிரச்சனை என அவ்வழக்குகளின் உள்ளடக்கச் செய்திகளையும் அடிக் கருத்துகளையும் அடிப்படையாகக் கொண்டு வகைமைப்படுத்தி விளக்கப்பட்டள்ளது. கொடுக்கல்-வாங்கல் வழக்குகளின் பணம் கொடுக்கல்-வாங்கல் பிரச்சனைகளை அடிப்படையாக கொண்டு பிரிக்கப்பட்டுள்ளது.
குற்றவியல் வழக்குகளைத் திருட்டு, வெட்டுக்குத்து, அடிதடி சண்டை, வாய்க்கால், ஊற்றுக்கால் தகராறு, தோட்ட வேலைத் தகராறு, முன்விரோதம், மான
இழப்பு, தீ வைப்பு, சாராய விற்பனை, கொலை, விபத்து, பெண்ணைக் கடத்தல்-
185
பாலியல் வன்முறை, குடித்து விட்டுத் தகராறு செய்தல் வழக்குகள் என
வகைமைப்படுத்தி விளக்கப்பட்டுள்ளன.
குடும்ப வழக்குகளை அவ்வற்றின் உள்ளடக்கச் செய்திகளை அடிப்படையாகக் கொண்டு திருமணச் சிக்கல், வரதட்சிணைப் பிரச்சனை, நடத்தையில் சந்தேகம், மாமியார்-மருமகள் மோதல், வாழ விருப்பமின்மை, ஆண்,பெண் ஒழுங்கீனம், சோம்பேறித்தனம், ஊதாரித்தனம், குழந்தை இன்மை, பாலியல், மணமுறிவுகள் என பிரித்துக்காணப்பட்டுள்ளன.
சமூக அமைப்பின் அடிப்படை நிறுவனம் குடும்பம், கிராமத்தில் விவசாயம் போன்ற கூட்டுச் சார்ந்த தொழில்களைச் செய்யும் சூழலில் கூட்டுக் குடும்பமுறை பெரிதும் உள்ளது. இக்குடும்ப உறுப்பினர்களிடையே சில சமயங்களில் போட்டி மனப்பான்மை, பொறாமை போன்றவற்றால் பிரச்சனைகள் எழுவதுண்டு. இது முற்றி சண்டை சச்சரவுகளாக மாறி குடும்பத் தகராறுகளாக மாறுவதும் உண்டு, இவ்விதத் தகராறு வழக்கு மன்றங்களுக்கும் வருகின்றன.
கணவன் மனைவி பிரச்சனைக்கு உளவியல் அடிப்படையிலான பிடிவாதம், விட்டுக்கொடுக்கும் மனமின்மை, சகிப்புத்தன்மையின்மை, குடும்ப நிலை பேசுதல், குடி போன்ற பலகாரணங்கள் சேர்ந்து வாழாமைக்குக் காரணங்களாக வெளிப்படுகின்றன. இம்மாவட்டத்தில் கிடைத்துள்ள குடும்ப வழக்குகளில் 'பாலியல்' பற்றிய வழக்குகள் குறிப்பிடத்தக்கதாகும். ஆண், பெண் ஆகிய இருபாலரும் கள்ளத்தொடர்பு வைத்திருப்பதால் குடும்பத்தில் அமைதி கெடுகின்றது.
பிரச்சனைகள் தோன்றுகின்றன. 'மண முறிவுகள்' பற்றிய வழக்குகளில் கணவன் ஆண்மை இல்லாதவனாக
இருத்தல் பிரதானக் காரணமாக அமைகின்றது. ஆண்-பெண் ஆகிய இருபாலரின்
ஒழுங்கீனம், வாழ விருப்பமின்மையும் மண முறிவுக்குக் காரணங்களாக
166
அமைகின்றன. முடிந்த வரையில் நடத்தை தவறிய ஆண், பெண் இருவரையும் கிராம வழக்கு மன்றத்தினர் சேர்த்து வைக்கின்றனர். தவிர்க்க இயலாத
காரணங்களினால் மட்டும் அவர்களுக்கு மணவிலக்கு அளிக்கின்றனர்.
கிராம வழக்கு மன்றங்களில் பொதுப் பிரச்சனைகள் தொடர்பான வழக்குகளும் கிடைத்துள்ளன. கிராமத்தார்களுக்கிடையே கோயில் பிரச்சனைகள், கோயிலில் முதல் மரியாதை வேண்டல், மூப்பு அடிப்படையில் அம்பலகாரர் என்ற முதல் மரியாதை வேண்டல், கோயில் பிரச்சனைகளில் மோதிக் கொள்ளல், கோயில் திருவிழாவினைத் தடை செய்தல், கோயிலில் உரிமைப் பிரச்சனை, கோயில் மாட்டுப் பிரச்சனை, மஞ்சு விரட்டுத் தகராறு, இரண்டு கிராமங்களுக்கிடையே மோதல், கண்மாயில் மீன் பிடித்தலில் பிரச்சனை, ஊரைவிட்டு ஒதுக்கி வைத்தல் போன்ற பொதுப் பிரச்சனைகள் தொடர்பான வழக்குகளையும் கிராம வழக்கு மன்றங்களில் காணலாம். முடிந்த வரையில் பொது அமைதியைக் காப்பதற்கும், கிராமங்களுக்கிடையே ஒற்றுமையை வளர்ப்பதற்கும்
கிராம வழக்கு மன்றத்தினர் பாடுபட்டு வருகின்றனர்.
187
குறிப்புக்கள் சிவகங்கை மாவட்ட கிராம வழக்குகள் பின்னிணைப்பில் வகை தொகைப்படுத்தித் தரப்பட்டுள்ளன. அவ்வழக்குகள் இந்த ஆய்விற்கு முதன்மை ஆதாரங்கள் (Primary Sources) ஆகும். உரிமையியல் வழக்குகள், பேட்டி எண்], நாள்:௮1.7.1999
உரிமையியல் வழக்குகள், பேட்டி எண் :2 2, 4, 5, 6, 7, 8, 9, நாள்:ல1,7.1999, 7.81999, 26.5.1999, 18.7.1999, 2.51999, 5.4,2000.
உரிமையியல் வழக்குகள், பேட்டி எண்:2, நாள்:1.7.1999, உரிமையியல் வழக்குகள், பேட்டி எண்:2, நாள்:7.8.1909. மேலது, பேட்டி எண்:5, நாள்:26.5.1999. மேலது, பேட்டி எண்:6, நாள்:18.7.1999, உரிமையியல் வழக்குகள், பேட்டி எண்:/, நாள்:2.௮.1999,
மேலது, பேட்டி எண்:8, நாள்:.4.2000.
. மேலது, பேட்டி எண்:9, நாள்:18.3.2000.
மேலது, பேட்டி எண்கள்:10, 1), 12, 13, 14, நாள்:1.7.1999, 8.4.2001, 15.8.2001, 13.3.2000.
. உரிமையியல் வழக்குகள், பேட்டி எண்:10, நாள்:௮.7.1999. . மேலது, பேட்டி எண்:11, நாள்:8.4.2001.
. மேலது, பேட்டி எண்:13, நாள்:15.5.200,
. மேலது, பேட்டி எண்:14, நாள்:19.3.2000.
. உரிமையியல் வழக்குகள், பேட்டி எண்:15, நாள்:2.4.1999, . மேலது, பேட்டி எண்:16, நாள்:2.4.1999,
. மேலது, பேட்டி எண்:17, நாள்:8.4.2001.
, உரிமையியல் வழக்குகள், பேட்டி எண்:18, நாள்:19.3.2000.
188
20. மேலது, பேட்டி எண்கள்:19, 20, 21, 22, 23, 24, 25, நான்:2.4,1999, 15.5.2001, 6.5.2001, 19.5.2001, 9.4.2000, 5.2.2000.
21. மேலது, பேட்டி எண்:19, நாள்:2.4.1999.
22. மேலது, பேட்டி எண்:20, நாள்:15.5.2001.
23. உரிமையியல் வழக்குகள், பேட்டி எண்:2], நாள்:6,5.2001.
24. மேலது, பேட்டி எண்:22, நாள்:19.5,2001,
25. மேலது, பேட்டி எண்:2, நாள்:9.4.1999,
26. மேலது, பேட்டி எண்:25, நாள்:5.2.2000.
27. உரிமையியல் வழக்குகள், பேட்டி எண்:26, 27, 28, நாள்:15.5,2001, 9.4.2000. 28. மேலது, பேட்டி எண்:26, நாள்:16.5.2001,
29. மேலது, பேட்டி எண்:27, நாள்:15.5.2001,
20. மேலது, பேட்டி எண்:28, நாள்:9.4.2000,
ல]. உரிமையியல் வழக்குகள், பேட்டி எண்:29, 30, வ, 32, நாள்:27.3,1099, 27.5.1999, 5.2.2000, 8.4,2001,
42. மேலது, பேட்டி எண்:29, நாள்: 27.2.1999, லிம். மேலது, பேட்டி எண்:ல0, நாள்:27...1999, 24, உரிமையியல் வழக்குகள், பேட்டி எண்:22, நாள்:ல.2.2000.
22. குற்றவியல் வழக்குகள், பேட்டி எண்கள்:88, 84, 85, 86, 37, 88, 39, 40,4], 42,43,44, நாள்:2.4,1999, 26.5.1999, 5.2.2000.
26. மேலது, பேட்டி எண்:84, நாள்:2.4.1999, 27. மேலது, பேட்டி எண்:£4, நாள்:21,7.1909. 88. மேலது, பேட்டி எண்:26, நாள்:௦.2.2000. 39. மேலது, பேட்டி எண்:27, நாள்:28.3.1999,
40. குற்றவியல் வழக்குகள், பேட்டி எண்:38, நாள்:14.4.2007.
41, மேலது, பேட்டி எண்:40, நாள்:20,4,2000, 42. மேலது, பேட்டி எண்:42, நாள்:20,4.2000, 43. மேலது, பேட்டி எண்:43, நாள்:25.3.2000.
44, மேலது, பேட்டி எண்:44, நாள்:26.5.1999.
189
45. குற்றவியல் வழக்குகள், பேட்டி எண்கள்:45, 46, 47, 48, நாள்:8.4.2001,
29.4.2000), 5.91999.
46, மேலது, பேட்டி எண்:45, நாள்:8.4.2001,
47. மேலது, பேட்டி எண்:46, நாள்:8.4.2001.
48. மேலது, பேட்டி எண்:47, நாள்:25.3.2009.
49. குற்றவியல் வழக்குகள், பேட்டி எண்:48, நாள்:5.9.1999, ௨0. மேலது, பேட்டி எண்:49, நாள்:19.5,2001,
௮1. மேலது, பேட்டி எண்:20, நாள்:14.4.2001.
52. குற்றவியல் வழக்குகள், பேட்டி எண்:5], நாள்:14,5.2001. ஓல். மேலது, பேட்டி எண்:22, நாள்:19.5.2001.
24, மேலது, பேட்டி எண்:5ல, நாள்:8.8.1999,
௮2. குற்றவியல் வழக்குகள், பேட்டி எண்:54, நாள்:௮.4,2000. 26. மேலது, பேட்டி எண்:22, நாள்:5.4.2000.
௮7. மேலது, பேட்டி எண்:26, நாள்:20.4.2001.
58, குற்றவியல் வழக்குகள், பேட்டி எண்:57, நாள்:2.4,1099, 59. மேலது, பேட்டி எண்:58, நாள்:19.5.2000.
60. மேலது, பேட்டி எண்:29, நாள்:22.,4.2001.
61. குற்றவியல் வழக்குகள், பேட்டி எண்:60, நாள்:18.3.2000.
62. மேலது, பேட்டி எண்கள்:61, 62, 68, நாள்:27.5.1999, 27.5.2000, 20.4.2001.
190
68. மேலது, பேட்டி எண்:61, நாள்;27.5.1920,
64, மேலது, பேட்டி எண்:62, நாள்:27.5.2000,
65. மேலது, பேட்டி எண்:68, நாள்:20.4.2001,
66, குற்றவியல் வழக்குகள்,